https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 8 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 260 * காகித பரிமாணம் *

ஶ்ரீ:



பதிவு : 260 / 347 / தேதி :- 07 டிசம்பர் 2017

* காகித பரிமாணம்   *


“ ஆளுமையின் நிழல்   ” - 06
கருதுகோளின் கோட்டோவியம் -03




அரசியலின் நிகழ்வுகளையும், நிகழ்த்துபவர்களையும் வைத்து அதன் எதிர்காலத்தையும் , அது நிகழ காரணமாக இருப்பவரை பற்றிய சரி தவறுகளை அவதானிப்பது முறையல்ல என்பதை அறிந்திருக்கிறேன் . சரியும் தவறும் ,காலம் சூழல் வெக்தியை வைத்து மாறுபாடுகளை அவை எப்போதும் அடைந்தபடி இருப்பவை , எனவே ஒரு விஷயத்தை இப்படித்தான் என முடிவு செய்வதில் பிழையாகும் வாய்ப்புகளே அதிகம். மேலும் தலைவரை நோக்கிய என் மனச்சாய்வை நான்  உணர்ந்திருக்கிறேன். அவரின் அளவுகோளை கொண்டே அரசியலின் சரி தவறுகளை புரிந்து கொள்கிறேன் , அதன்  அடிப்படையில் பிறருடைய நோக்கம் வெளிப்படும் வரை அல்லது வெளிப்பட்டதில் எது சரியாக இருக்கிறதோ அதை ஒப்பு நோக்கி அதில் இருக்கும் நியாயத்தை தெரிந்துகொள்வதும் . சூழலில் மனிதர்களின் நிலையாமையை புரிந்து கொண்டதால்  , அவற்றை இன்னும் அனுகி நின்று அவதானிக்க முடியும் என நினைக்கிறேன் . அவரை நோக்கிய என் மனச்சாய்வு சரிதானா? என அவதானிக்கவும் இந்தப் பதிவுகளை பயன்படுத்திக்கொள்ள முயல்கிறேன் .

அதனாலேயே என் பதிவுகள் யாரையும் எதையும் குறைசொல்ல வந்ததில்லை . நான் என்னை அவதானிக்கும் வழியாக என்னை புரிந்துகொள்ள முற்படுகிறேன் . நிறைய கோட்பாடுகளை உருவாக்கிக்கொண்டு நான் எதிர்கொண்டவற்றை கடந்து வர,  பலகாலம் முயன்றபடி இருந்திருக்கிறேன் . அவை எப்போதும் எனக்குள் எழும் எண்ணங்களை அடிப்படையாகக்கொண்டவை . இலக்கிய வாசிப்பு கொடுக்கும் திறப்புகளை எப்படிப்பட்டவை  என்பதை தெரிந்திருக்காத சூழலில் இருந்து , இன்று இலக்கிய வாசிப்பினூடாக  கிடைக்கும் புரிதலில் அவற்றை என்னுள் மீளவும் நிகழ்த்திப்பார்க்கிறேன் . நான் அன்று அடைந்திருந்த புரிதல்களை என்ன காரணம் என்பதையும் அவற்றை மீளவும் என்னுள் நிகழ்த்தி அதன் நுட்பங்களை அறிந்துகொள்ள முயற்சித்தபடி இருக்கிறேன் .

உண்டாட்டு நிகழ்ந்து கொண்டிருந்த ஹாலில் , நான் நடப்பதை கூர்ந்தபடி இருந்தேன் . அங்கு அதிருப்தி இரு கூறாக இருந்தது . வெளியூர் ஊடகவியலாளர்களின் வரவு உள்ளூர் நிருபர்களுக்கு ஒவ்வாமையும் , தாங்கள் ஒதுக்கப்படுவதாக நினைத்ததிலிருந்து கிளைத்தவை. அவரது அதீத மேல்மட்ட ஊடகவியலாளர் தொடர்பும் அங்கு கூடியிருந்த சிலருக்கு இனந்தெரியாத காழ்பபை உருவாக்கியிருக்க வேண்டும் .அங்கு நிகழ துவங்கி இருக்கும் முரண்  அனைத்திற்கும் தலைவரின் அணுகுமுறையை  முன்னிறுத்தி பார்பதால், எனக்கு இப்போது நிகழும் கட்டற்ற அரசியல் செயல்பாடுகளும் அதிலிருந்து எதிர்காலத்தில் விளையக்கூடியவைகள் பற்றிய கவலை

அவரவர் பார்வையையும் புரிதலையும் பிறிதொருவருக்கு புரியவைப்பது நிகழவே முடியாத ஒன்று . நாராயணசாமி தங்களை புறக்கணிப்பதாக இளம் பத்திரிக்கையாளர்கள் மற்றுமின்றி உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் சிலரின் மத்தியிலும் அது உணரப்பட்டது . நாராயணசாமி ஒவ்வொரு மேஜையாக கடந்து வரும்போது . இளம் பத்ரிக்கையாளர்களில் சிலர் அவர் தங்கள் மேஜைக்கு வருவதை தவிர்ப்பார் என்றனர் . எனக்கு இது தவறான கணிப்பாக தோன்றியது . நான் நிகழ்ந்து கொண்டிருப்பதை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தேன் . ஒரு கணத்தில் அவர்கள் கிசுகிசுத்தது போல இளம்பத்திரிக்கையால் அமர்ந்திருந்த பகுதிக்கு வராமல் அவர் கிளம்பிச்சென்றார்

அது அவரின் நேரமின்மை காரணமாக அல்லது தற்செயலாக நிகழ்ந்ததாக கூட இருக்கலாம் . ஆனால் அது அவர்கள் அவதானிப்பின் படியே நடந்துவிட்டது . அந்த பகுதியில் சலசலப்பு துவங்கியது , சிலர் விருந்தை நிராகரித்து வெளியேறுவதை பற்றி பேசத்துவங்கி இருந்தனர் . நான் காலம் கடத்தாமல் வால்ராஜிடம் நிலைமையை சொல்லிவிட்டு  திருப்பி சென்று லிபிட்டிற்காக காத்திருந்த நாராயணசாமிக்கிக்கு நிலவரத்தை முழுமையாக சொல்லாமல் சிக்கலை சுருக்கமாக சொல்லி .அவரை திருப்ப அழைத்து வந்ததும் ,அவர் நேராக அந்த முரண்பட்ட பகுதிக்கு சென்று சிறிது நேரம் பேசி பின் அங்கிருந்து கிளம்பி சென்றார் . அவர் செல்வதுவரை அமைதியாக இருந்தவர்கள் அவர் கிளம்பிய அடுத்த நொடி நேரடியாக விருந்தை புறக்கணிக்க போவதாக அறிவித்து பெரும் ரகளையில் ஈடுபட துவங்கினர் .

இதில் நான் செய்யக்கூடியது ஏதுமில்லை . என் தகுதிக்கு அவர்களை சமாளிப்பது நடவாது . வல்சராஜ் எவ்வளவு அடக்க முயன்றாலும் அதை தணிக்க முடியவில்லை . ஒருவாறு அனைவரையும் சமாளித்து அனுப்பிவைத்துவிட்டு , கடும் பசியில் நானும் வல்சராஜும் கீழே ரெஸ்டாரெண்டுக்கு போனபோது இரவு 1:00 மணியை கடந்திருந்தது . வல்சராஜ் என்னிடம் சட்டமன்ற விடுதியில் உள்ள சமயலறையில் ஏதாவது கிடைக்கும் என்றார் . நான் எனக்கு வீடு பக்கம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று வீடு திடும்பினேன் . வீட்டில் நள்ளிரவு இரண்டு தோசை கிடைத்தது கூடவே பூசையும் . ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என யோசித்தபடி இரவு தூங்கப்போனேன் .

சமீபகாலமாகவேரற்றஇளம் ஊடகவியலாளர்களின் ஒரு படை ஊடகங்களை ஊடுருவியிருக்கிறது. இவர்களுக்கு அரசியல்நோக்கு ஏதும் இல்லை. இவர்களின் முன்னுதாரணம் ஆங்கில ஊடகங்கள்தான். ஆங்கில ஊடகங்களின் நோக்குகளும் வழிமுறைகளும் இவர்களை நேரடியாகப் பாதிக்கின்றன. ‘அமைப்பை எதிர்த்து துணிவுடன் குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்என்ற படிமம் இவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதற்கான உடல்மொழி, ஆங்கிலமொழி உச்சரிப்பு எல்லாவற்றையும் அவர்கள் முன்னோடிகளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அரசியல்கோட்பாடுகள் கிடையாது. வரலாற்றுப் பிரக்ஞை கிடையாது. சமூகப்பொறுப்புணர்வு இல்லை. இவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த உயர்நடுத்தர வர்க்கத்துடன் இவர்களுக்கு ஒரு மனச்சாய்வு உண்டு. அத்துடன் அவ்வப்போது மேலை ஊடகங்களில் இருந்து கிடைக்கும் உதிரியான கோட்பாடுகள்" என்கிறார் ஜெயமோகன் தனது சாட்சி மொழி கட்டுரைத்தொகுப்பில்.

அன்று பத்திரிக்கையாளர்களையும் அவர்கள் நடந்து கொண்டதையும் பற்றி நான் பல காலம் சிந்தித்ததுண்டு . அவை பல புரிதல்களை எனக்கு கொடுத்திருக்கின்றன. அந்த துறையில் என் நண்பர்களை தேர்வு செய்வதில் நிதானமாக நடந்து கொள்ள துவங்கினேன். எல்லாவற்றிலும் உள்ளது போல இதிலும் எனக்கு ஆதரவு எதிர்ப்பு என இரு பிரிவு உண்டாகியது. சில நேரங்களில் உலகாயத போக்குடன் ஒத்திசைவதை பற்றிய உள்ளக்குத்தல் , என் சமன்நிலையை பெரிதும் பாதித்ததுண்டு . சுமூக போக்கை ஒட்டி சில சமயம் அவர்களுடன் இயந்து போக முயற்சித்து பார்த்திருக்கிறேன் . அவை நல்ல பலனை ஒருபோதும் தந்ததில்லை . என்னை பற்றிய அவர்களின் மதிப்பீடுகள் வேறுமாதிரி இருந்தன. அவற்றின் உட்புகுந்த அவற்றை சரி செய்வது நடவாது

பல காலம் இது ஒரு மனக்குறையாகவே எனக்குள் தங்கிவிட்ட ஒன்று . இதில் என்பக்கமிருந்த சிலவற்றை எனது தவறாக நான் நினைத்திருந்தேன். ஆனால் சாட்சி மொழி கட்டுரைத்தொகுப்பு அதன் பிறிதொரு எதிரமறை பரிணாமத்தை எனக்கு திறந்து காண்பித்தபிறகு , நான் என் இயல்பின் படியே  நடந்து கொண்டேன் என நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்