https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 256 * சிந்தனையின் சிறை

ஶ்ரீ:



பதிவு : 256 / 343 / தேதி :- 03 டிசம்பர் 2017

* சிந்தனையின் சிறை *


“ ஆளுமையின் நிழல்   ” - 02
கருதுகோளின் கோட்டோவியம் -03



1996 துவக்கத்தில் நிகழ்ந்த ஒன்று நாராயணசாமியின்மாநில அரசியல்பற்றிய  சிந்தனை போக்கை அவர் அறிந்தோ , அறியாமலோ மாற்றி இருக்கலாம் என நினைக்கிறேன் . வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து நான்கு மாதங்களுக்குள்ளாக ஒரு மழைக்காலத்தில், வெள்ள சேதம் பார்வையிடும் பணி , தலைவர் சார்பாக நாராயணசாமி சென்று வருவதாக திட்டம் ஒருங்கப்பட்டது , அதில் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கமும் வந்து உடன் இணைந்து கொண்டார் .

பாராளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நாராயணசாமி முன்னின்று குறைகளை கேட்டபோது , பொதுமக்களுக்கு தன்னை இன்னாரென அடையாளம் தெரியவில்லை என்பதும்; கூடிய கூட்டம் வைத்தியலிங்கத்தை கண்டதும் நாராயணசாமியை விட்டு விலக்கி அவரை நோக்கி நகர்வதும் , உள்ளூர் அரசியலில் இருப்பவர்களுக்கு அந்த மக்கள் மத்தியிலிருக்கும் மதிப்பும் சிறிது நேரம் தாழ்த்தியே நாராயணசாமி புரிந்து கொண்டார் . வைத்திலிங்கம் முன்னிற்க , அதன் பின் அவர் எங்களுடன் இனைந்து பின்தங்கினார்.

மாநில அரசியலின் தனக்கான அடையாளத்தை பற்றிய புதிய புரிதலை அங்கு அடைந்திருக்கலாம். “தலைவரைஅரசியல் தெரிந்தவர்களின் வட்டாரத்தில் அவரையானைஎனச் சொல்வதுண்டு . அது காரணப்பெயர் . எதையும் மறக்காமை , விட்டுக்கொடுக்காமை , பொறுத்துக்கொள்ளாமை . தனது அன்பையும் வண்மத்தை வெளிப்படுத்த எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காமை . அது  எப்போதும் கொடுப்பவரும் பெருபவரும் மட்டுமே அறியக்கூடியதாக இருக்கும்.  
அது அவரது அன்பில் நெகிழ்வாக இருந்தாலும் , வண்மத்தில் பிறர் உதவி  பெற முடியாது தனித்து விடப்படும் போது நிகழும் உள் உடைவுமாக அது இருந்தாலும் .

அந்த அச்சத்தால் அவர் முகம் கோணாது செயல்படுபவர்கள் மட்டுமே அவருக்கு அணுக்கமாக இருந்தனர் . அவர் மனம் கோணும் விஷயங்களை செய்ய யாரும் அஞ்சுவர் . அதனாலேயே தனக்கென யாரையும் அவரின் அனுக்கர்கள் தங்களை சூழ்ந்து எவரையும்  வைத்துக்கொள்வதில்லை . இந்த முறைமை அவருக்கு அணுக்கமான அனைவரிடமும்  இருந்ததுஅதுதான் நாராயணசாமிக்கும் இருந்திருக்க வேண்டும் . பிறருக்கு அச்சமென இருப்பது  , ஒரு காலம் வரை நாராயணசாமிக்கு சுபாவமாக இருந்தது . இப்போது அவர் தனக்கென விதித்துக்கொண்ட தடைகளை கலைக்க நினைத்திருக்கலாம் . அதன் மாற்றங்கள் இயல்பாக நடப்பதற்கு பதிலாக, அவரால் அது திட்டமிடப்பட்டது . அனைத்து முரணுக்கும் அதுவே விதை என்றானது . வெள்ள பார்வையிடல் நிகழ்வு அவருக்கு பெரிய மனமாற்றத்தை கொடுத்துவிட்டது என நான் சொல்லவில்லை . ஆனால் அது தலைவருடனான முரண் முளைவிட்டிருந்த தருணம் . ஆழ்மனதில் அது அவரை மாநில அரசியலில் பார்வை மாறுபாட்டையும் , ஓர் புதிய ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கலாம் , என என்னால் உறுதியாக சொல்லமுடியும்

அரசியல்ஆளுமைஎன்பது குடிமைசமூகத்தில் தன்னை இரண்டற கலந்து வைப்பது. அதுதன்னையறிதல்வழியாக நிகழ்வது . தன்னையறிதல் இரண்டுவகை . ஒன்று; தன்னை தொகுத்துக் கொள்வதனூடாக தான் இதுதான் என தன்னை தெளிவாகப் புரிந்திருத்தல் . ஆனால் அது முழுமையான ஆளுமையாக பரிமளிப்பதில்லை . இரண்டு ; பிறரிதொருவர் தன்னை புரிந்துவைத்திருப்பதில் இருந்து தன்னை முழுமையாக அறிந்து கொள்ளுதல் . இரண்டையும் கலந்து தன்னைப் புரிந்து கொள்வதே ,தன்னை அறிந்து கொள்ளுதல் வழியாக முழு பரிமாணமத்தை அடைதல் . இது நான் தலைவரிடமும் சில வெற்றியடைந்த தனி ஆளுமைகள் இடமிருந்தும் புரிந்து கொண்டது  .

தன்னை அறிதல் , தன்னுள்திரும்பி தன்னை அவதானிப்பது . பிரிதொருவர் வழியாகதன்னையறிதல்நிகழ்வது, அவர்களுடனான தொடர் உரையாடல்களின் வழியாக
அரசியலின் முரணியகத்தில் அனைவரும் ஒரு அலகு மட்டுமே. அதை நமது சிறு சிந்தனையை நிகழ்த்தி புரிந்து கொண்டுவிட, ஏனெனில் அது நம்வாழ்வின்  ஒரு அங்கமல்ல . ஆனால் அதன் அகண்ட பாதையில் நாமும் ஒரு நுண்ணிய இழை மட்டுமே , அங்கு நம்மைப்பற்றியும் பேசப்படுகிறது

அடுத்து நிகழ இருப்பதை ஒருவருடைய தனித்த சிந்தனையால் புரிந்து கொள்வதென்பது நடவாது . ஆனால் சந்திக்கும் அனைவரிடமும் நடத்தும் சலியாத உரையாடல் , அவர்களின் சிந்தனைகளூடாக நமக்குள் பல்லாயிரம் புரிதல்களாக அவை திறக்கின்றன , திறனுள்ளவர்கள் சிலர் அதன் வழியாகவே நடக்கவிருப்பதை கண்முன் நடந்ததென கண்டுவிடுகிறார்கள் . அவர்களே நீடித்த பதவியையும் , பிறர் நினைவில் வாழும் புகழையும் தன் செயல்களின் வழியே அடைகிறார்கள் .

நாராயணசாமிக்கு அமைந்திருந்த சூழலை பொறுத்தவரை, இதுவரை அவர் அடைந்திருக்கும் வெற்றிகளும் , இனி அடையிருக்கும் வெற்றிகளும் கூட அவருக்கு ஒன்றுமே இல்லைதென்னகத்தே அசைக்க இயலாத வலுவான ஆளுமைகளின் முதன்மையாக  வரும் வாய்ப்புள்ளவராக அவரைப்பற்றி என் கணிப்பு இருந்தது. தனது நிழலான எண்ணங்களினாலும் , சூழ்தலினாலும் அடையப்படுவதே பதவிகள் என்கிற நிலைப்பாட்டிற்கு அவர் வந்துவிட்டாருந்தார் . அது எப்போதும்புற வாசல்வழி நுழைதலாகவே அது இருக்கும் . எப்போதும் பின் வாசல் வழியாகவே நுழைபவர்களை சமூகம் மாறுபடும் கண்களால் மட்டுமே பார்க்கும் . புரிந்து கொள்ளும் . எட்டி நிற்கும் . ஒருநாளும் அனுக்கமாக நின்று வரவேற்காது . அரசியலில்சூழ்தல்ஒரு வழிமுறை மட்டுமே . அதனாலேயே ஆனதல்ல . அரசியலில் நின்று ஒளிரும் வாய்ப்பை அவர் தவற விட்டார் என்றே நான் நினைக்கிறேன்.

அது இந்த முனைக்கு தன்னை கொண்டு நிறுத்தும் என்பதை அவர் அப்போது அறிந்திருந்ததாக நான் நினைக்கவில்லை . அரசியல் எப்போதும் தன் விழைவு மட்டுமேயான ,தனி ஒருவரின் ஒற்றைப்படையான சிந்தனையில் இருத்து துவங்குவதில்லை . தலைவன் என்பவன் திரளின் தேவைகள் மற்றும் விழவுகளிலிருந்து தனது இலக்கையும் ,அதற்கான பாதையையும் தேரும் சக்தியுள்ளவன். அந்த ஒத்திசைவை பெறுக செய்வதை தவிர்த்து தன்னுடைய முழு பலத்தினால் நிகழ்வதிலிருந்து தனக்கு வேண்டியதை மட்டும் துண்டித்து எடுக்கும் சக்தியுள்ளவர் முழு வெற்றியை அடைந்தவர்களாக பிறரால் நினைக்ப்படுவதில்லை . எதில் அமைந்திருந்தாலும் அது முழுமைபெற்றதல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்