https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 7 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 259 * வளர்ந்ததை அறியாமை *

ஶ்ரீ:



பதிவு : 259 / 346 / தேதி :- 06 டிசம்பர் 2017

* வளர்ந்ததை அறியாமை *


“ ஆளுமையின் நிழல்   ” - 05
கருதுகோளின் கோட்டோவியம் -03




 “கலைச்சொற்கள் இவர்களின் மூளையில் உள்ளன. அவற்றைக்கொண்டு ஆழமான சிந்தனைப்பின்புலத்தில் இருந்து அரசியலை அணுகுவது போல ஒரு பாவனையை இவர்களால் சிறப்பாக உருவாக்க முடியும். ராஜ்தீப் சர்தேசாய் இவர்களுக்கு சரியான முன்னோடி உதாரணம் என்ற எண்ணம் எனக்கு உண்டு." என்கிறார் ஜெயமோகன் தனது சாட்சி மொழி கட்டுரைத் தொகுப்பில்.

பத்திரிக்கையாளர்களின் கட்டுரைகள் , கலைச்சொற்களால் நிரம்பி ஒரு அசல்தன்மையை உருவாக்குபவையாக இருப்பதை பார்த்திருக்கிறேன் . ஊடகவியல் படித்து இந்த துறைக்கு வந்த  மிக சில பத்திரிக்கையார்களையே நான் சந்திருக்கிறேன் . ஆழந்த வாசிப்பும் செய்திகளில் உட்புகும் திறமையும் , அனைத்து அரசியாளருடன் நல்ல தொடர்பிருந்தாலும் , ஒரு இடைவெவெளியுடன்தான் அது பேணப்படுவதையும் , அவர்களின் செய்திகளில் உள்ள நம்பகத்தன்மை , அரசியலை இன்னும் அனுகி பார்க்க வைப்பவை.

புதுவையின் ஒரே ஒரு ராஜ்யசபை சீட்டுக்கான தேர்தல் தில்லி நிருபர்களின் வருகையால் , செய்திகள் அகில இந்திய அளவிலானதாக மாறியது .அதீத விளம்பர அரசியலை வெறுக்கும் தலைவரின் அனுகுமுறைகளை முற்றாக ஒதுக்கி நாராயணசாமி தன் பாணி அரசியலை தொடங்கிய பின் அதை தலைவரால் கட்டுப்படுத்தமுடியாத நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. தலைவரின் கட்சி முற்றதிகாரத்திற்கு அது  ஒரு கால முடிவை சொன்னது .அரசியலின் இவை வளர்சிதை மாற்றம் . தவிர்க்க இயலாத வரலாற்று தருணங்கள் .  

நாராயணசாமி தனது அகில இந்திய பத்திரிக்கையாளர் நல்லுறவை இதில் முழுமையாக பயன்படுத்தி ஒரு விஷயத்தை சொல்ல விழைந்தார் . அது சொல்லபட்டதா ? அதன் வளைவுகள் அடையப்பட்டனவா ? என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை . ஆனால் நடைமுறை நவீன போக்குடன் செயல்படுத்தப்பட்டதால் , நான் ஒருவித பதட்டத்தில் இருந்தேன் . நடப்பது விபரீதம் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது.

பத்திரிக்கையாளர்கள் புதுவையில் வந்து குவிவது இதற்கு முன் நடந்திராதது . இதற்கு பின்னல் உள்ள அரசியல் மிக ஆழமும் நுட்பமும் கூடியவை . அவற்றிற்கு அடுத்த தலைமுறை அரசியலை கட்டமைக்கும் திறனிருப்பது உணரமுடிந்தது . அதைத்தான் சொல்ல விழைந்தார் என நினைக்கிறேன் . மரபான அரசியலிலிருந்து பகட்டானதா மாறிக்கொண்டிருந்தது . கட்சி அரசியலுக்குள் அது செய்யத்துவங்கிய மாற்றம் சில வருடங்களில் முடிந்து புதுவையின் நீண்ட காலம் இருந்த முறைமைகள்  முடிவிற்கு வந்தது. அதனால் விளைந்த பலன் என்ன என்பதை வரலாற்றில் தெரிந்து கொள்ள வேண்டியது. அதன் அவதானிப்பு பிறிதொரு பதிவில் .

உண்டாட்டு நிகழ்ந்து கொண்டிருந்த ஹாலில் , நான் நடப்பதை கூர்ந்தபடி இருந்தேன் .அவர்களில் பலர் எனக்கு அணுக்கமாக உள்ளவர்கள் . அவர்கள் மத்தியில் நாராயணசாமிக்கு எதிரான ஒரு போக்கிருப்பதை நான் அறிந்தது மிக சமீபத்தில்  . அது எனக்கு அங்கு வந்த பிறகு பிறிதொரு பரமாணம் தற்செயலாக தெரியவந்தது . அவர்களின் இந்தப்போக்கு முதலில் கட்சி ரீதியானது என நினைத்தேன் . சிறிது நேரம் அவர்கள் பேசியதிலிருந்து அது தனிப்பட்ட காழ்ப்பு போல ஏதோ ஒன்று  . அது எனக்கு என்னவென்று புரிந்தாலும் , அவர்கள் பேசுவதை பார்த்தபடி இருந்தேன் . ஓரிருவர் என்றால் அது புரிந்து கொள்ளக்கூடியது ஆனால் . ஒரு பிரிவினருக்கு பொதுவில் அப்படி ஒரு ஒவ்வாமை இருப்பது சற்று  வினோதமாக தோன்றியது . நான் அதன் பின்னையை அவதானிக்க துவங்கினேன்

அகில இந்திய அளவில் நாராயணசாமி ஒரு ஆளுமை எனபது அனைவரும் அறிந்தது . அவரது செயல்பாடுகள் எப்போதும் ஒரு இலக்கை நோக்கியபடி இருக்கும் . அதை தவிர வேறு எதுவும் அவருக்கு பிரதானமாக படுவதில்லை . ஆனால் அரசியல் செயல்பாடுகள் அப்படி ஒற்றைப்படையான சிந்தனைகளினால் நிகழ்வதில்லை. அது ஒரு திரளின் மத்தியில் எழுவது . எந்த செயல்பாடும் ஒரேசமயத்தில் கூர்கொள்வது . ஒன்றின் மீதான குவிக்கப்பட்ட கவனம் பிறிதொன்றில் இல்லாதுபோனால் .அந்த கணத்தில் முரண்படுபவர்களை , பின் ஒருபோதும் நமக்கு அணுக்கமாக கொண்டு வருவதெனபது நடவாது . மத்திய அரசியலில் உள்ளவர்களின் போக்கு இதில் பெரிய வித்தியாசத்தை நான் பார்த்திருக்கிறேன்

மத்திய அரசியலில் உள்ளவர்களின் போக்கு ஒருபோதும் மாநில அரசியலில் நிகர்நிலை பற்றிய கவலையற்ற தன்மையுடன் அணுகும். மாநில தலைமை என்பது தொண்டர் அமைப்பில் நிலைகொள்வது . நிர்வாகிகளின் ஏகோபித்த ஆதரைவையும் . சமூகத்தை பொறுப்புடன் அணுகும் போக்கு முக்கியமானது . தலைமை பண்மென்பது இரு வித ஆளுமையாக விலகி நிற்பது . ஒன்றுடன் ஒன்று முழுவதுமாக முரண்பட்டது . ஒன்று;தொண்டர் தலைவருக்கும் இரண்டு;தலைவர்கள்  தலைவருக்கும் அணுகுமுறை அது மாறுபாடுகளைக் கொண்டது .

இந்திய அளவில் பெரும் செல்வாக்குள்ள ஒருவருக்கு . அரசியலென்பது பேரங்களை அடிப்படையாக கொண்டது அதனால் உள்ளூர் சிக்கலெல்லாம் ஒரு பொருட்டாக இருப்பதில்லை . அவை பெருக்குமானால் , எல்லைமீறும் தருணத்தில் அவற்றை சரிசெய்து விட முடியும் என்பது அவரது அரசியலிலிருந்து பெற்ற அனுபவமாக இருந்திருக்கலாம் . ஆனால் சாமான்ய திரள்களின் நிர்வாகமே வேறு . நமக்கு உதவாகரையாக தோன்றும் ஒரு விஷயத்தை அவர்கள் மூச்சை பிடித்துக்கொண்டு பேசுவதை பார்க்கும்போது . எரிச்சல் உண்டு பண்ணக்கூடியது . அவர்களை ஒருநாளும் சமாதானப்படுத்த முடியாது . மத்திய தலைமை அதை ஆறப்போடுவதன் வழியாக ஒரு தீர்விற்கு நகரும் என்பது அவர்களின் கோட்பாடு . ஆனால் மாநில பொறுப்பிலுள்ளவர்கள் . அவை தினம் தன்னைவந்து மோதும்போது ஒத்திவைப்பதை செய்து கொண்டிருக்க முடியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்