https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 19 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 272 * மாற்றமெனும் சுழல்பாதை *

ஶ்ரீ:பதிவு : 272 / 359 / தேதி :- 19 டிசம்பர் 2017

* மாற்றமெனும் சுழல்பாதை *


ஆளுமையின் நிழல்   ” - 18
கருதுகோளின் கோட்டோவியம் -03

நீண்ட காலமாக குடிமை சமூகம், உள்ளூர் ஆளுமைகள் மற்றும் கட்சி தலைமைக்கும் இடையே நீடித்துக் கொண்டிருந்த உட்கட்சி அரசியல் என்கிற இடைவெளி ஒரு முடிவிற்கான அல்லது பிறிதொரு இடைவெளியை இலக்கென கொள்ளும் திசையை நோக்கிய பயணித்துக் கொண்டிருந்தது . திட்டமிட்டதோ ஒரு மாற்றதை எண்ணி . எது நிகழவே முடியாது என நினைந்திருந்தேனோ , அதுவே இங்கு மெல்ல மெல்ல நிகழ்ந்து கொண்டருப்பதை நான் பதட்டமும் , சிலிர்ப்புமாக பார்த்தபடி இருந்தேன்

அங்கு நிழல் நிஜத்தின் முன் பணிவதும் , ஒருபுறமும் நிஜம் நிழலிலிருந்து மறுபுறமாக எழுவதும் என , திடீரென ஆரோக்கியமான உட்கட்சி ஜனநாயகம் எங்கும் திகழ்ந்து கொண்டிருந்தது . அது எங்கிருந்து எழுந்து வந்தது என அறிய இயலாது நான் திகைத்திருத்தேன் . ஆனால் அது நீண்டநாள் அங்குதான் இருந்தது ,என்கிற மாதிரி ஒரு பாசாங்கை எங்கும் பரப்பியிருந்தது ; நான்தான் அதை பாரக்காமல் இருந்தேனோ ? என என்னை நம்பவைக்கும் அளவிற்கு . அது எங்கும் நிறைந்திருந்தது. ஒரு சத்தமில்லாத மாற்றம். அது பல தொகுதிகளில் தொடர் சங்கிலி போல நிகழ்ந்து கொண்டிருந்தது ; ஒன்றை பற்றி பிறிதொன்ரென .

இயல்பாக ஏற்பட்டுக்கொண்டிருந்த மாற்றத்தின் போக்கை இங்கு தலைமை அலுவலகத்தலிருந்து கொண்டு என்னால் நடந்து கொண்டிருப்பதை பார்க்கவும் , அடுத்து நிகழ இருப்பதை அவதானிக்கவும் முடிந்தது . மாற்றத்தை அனைத்து தரப்பினர்களும் ஒரே சமயத்தில் புரிந்து கொண்டதால்  , அது செயல்பாட்டிற்கு வருகிற போது ஏற்படும் ஒத்திசைவுகளை காண்பது அற்புதமான அனுபவமாக இருந்தது. அதுமக்கள் திரளில் யானை நுழையும் போது அதற்கான வழி தானே உருவாகி வருவதுபோல அனைத்து மாற்றங்களும் வழிவிடப்பட்டு எந்த முனுமனுப்பின்றி ஏற்க்கப்பட்டது .

கலந்தாலோசனை கூடுகை நிகழ்வில் ,எந்த சிக்கலும் ஏற்பட்டு விடக்கூடாது என்கிற காரணத்தால் , பல தொகுதிகளிலிருந்து , என்னை அதில்  கலந்து கொள்ள சொல்லி அழைப்பு அனுப்பி வற்புறுத்தியும் ,நான் உறுதியாக மறுத்துவிட்டேன் . இது என்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டிய களமல்ல . இதன் வெற்றி எனக்கு பிறிதொரு தளத்திற்கு தேவைப்படுவது . தொகுதி ஆலோசனைக் கூடுகை பொது இடத்திற்கு மாறியபோதேஅநேகமாக எல்லாம் முடிவாகியிருக்க வேண்டும் . களத்தில் நிகழும் மாற்றத்தை நம்மைவிட நீண்ட காலமாக அதை நிகழவிடாது பார்த்துக்கொண்டவர்களே அதை மிக துல்லியமாக புறிந்திருந்ததார்கள் , அவர்கள் இதை எதிர்நோக்கி அஞ்சியிருந்தே அதன் காரணம் . ஆச்சர்யமாக இளைஞர் அமைப்பினர் எங்கும் எதையும் சொதப்பாதது , நல்ல பலனை கொடுத்தது

ஒரு நிகழ்வு எழும்போது எப்போதும் பிறிதொறு திட்டத்தை  கைமறைத்து வைத்துக்கொண்டேதான் முன்நகர்கிறது போலும் . ஒரு புள்ளியில் சிக்கி சுழன்று கொண்டிருப்பதை எடுத்து விலக்கிவிட்டால் , பின் அது தனது நேர்பாதையைத்தான் தேரும் என்பதற்கு யாதொரு உத்ரவாதமுமில்லை . அது மறுபடியும் பிறிதொரு புள்ளியில் சென்று சிக்கி , இதுவரை சுழன்ற திசைக்கு எதிர்திசையில் சுழலத் துவங்கும் என நான் அன்று அறிந்திருக்கவில்லை . நிகழ்ந்த மாற்றத்தை, நின்று முழுதாக உள்வாங்கும் பொறுமை அனைவருக்கும் காணாமலாகியிருந்தது . உற்சாகமும் கிடைத்த புதிய அடையாளமும் தங்களின் பலத்திற்கு கிடைத்த முதல் வெற்றி இது , என்பதுபோலவும், இனி இதைப்போல வழியெங்கும் தங்களுக்கு காத்திருப்பதாகவும், அதை வெகு விரைவில் அடையவிருப்பதை பற்றிய கனவில் இருந்தார்கள்  .

அவர்களுக்கு முன்பிருந்த நிலை தெரியாது . இப்போது நடந்திருக்கும் மாற்றத்தின் வீரியத்தையும் அவர்கள் முழுமையாக உணரவில்லை , இந்த களத்திற்கு அவர்கள் மிகவும் புதியவர்கள் என்பது முக்கியமான காணமாக இருக்கலாம் . ஆனால் என்னை பொறுத்தவரை அவர்களுக்கு இது ஓர் பேரிழப்பு என்றே நினைத்தேன் . கடந்த காலத்தில் நிகழ்ந்ததையும் அவர்களுக்கு முன்னே இருந்த பலருக்கு அது மறுக்கப்பட்டதையும் அறியாததால், அவர்கள் இப்போது  கிடைத்த அந்த மிகப்பெரிய வெற்றி ஒரு இயல்பானது என  எடுத்துக்கொண்டார்கள். பிற்காலத்தில் அவர்கள் என்னுடன் முரண்பாடுவதறகு  , இதுவே அன்று தனது வழியை திறந்து வைத்திருந்தது போலும்.

தலைவருக்கு  நெடுநாள் திட்டமென சில இருப்பதையும், பலமுறை அது முறியடிக்கப்பட்ட காரணத்தையும், அது நிகழ்ந்திருந்தால் என்ன என்ன மாற்றங்கள் வந்திருக்கக் கூடும் என்பது பற்றியும்  தனது மனக்குறையாக அவர் சொல்வதை நான் அறிந்திருந்தேன் . சில திட்டத்தை அரசியல் நிர்பந்தமாக தானே கைவிட நேர்ந்தது பற்றியும், தன்னை நம்பி அதை முன்னெடுத்தவர்களை தன்னால் கைவிடபட்டதையும் அவர் சொல்லி வருந்தியதுண்டு. அது அவர் பலரிடம் புலம்பியதுதான் . என்னிடம் மட்டும் விசேஷித்து அது சொல்லப்படவில்லை . ஆனால் நான் முன்பிருந்த களத்தில் அவை நிகழ்ந்ததை பார்த்திருக்கிறேன் . அன்று நான் அவருக்கு எதிரான நின்றதால் , அவரின், திட்டமும் ,அதன் முழு பரிமாணம் நான் அப்போது அறிந்திருக்கவில்லை .

அதை சிதைத்த பல அமைப்புகளில்  பாலன் தலைமையிலிருந்த எங்கள்  அமைப்பு ஒன்று . நாங்கள் ஈடுபட்டிருந்தவற்றை பற்றி எங்களுக்கு முழுமையாக சொல்லப்படவில்லை . எங்களுக்கு தெரிந்திருந்ததற்கு சற்று கூடுதலாக பாலனுக்கு அவை புரிந்திருக்கலாம் , அவரும் அதை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன் . ஆனால் பின்னாளில் புதுவை முழுவதும் நான் நிகழ்த்திய சிறு சிறு கூடுகைகளில் அவை மிக விரிவாக பேசப்பட்டது , அவர்களும் அந்த சம்பவங்கள் நிகழும்போது நான் அங்கிருந்ததை உணரவில்லை . அதன் முழு பரிமாணமும் எனக்கு புரிந்த போது , அது முறியடிக்கப்பட்டிருக்க கூடாது என்கிற வருத்தத்தை அடைந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...