ஶ்ரீ:
பதிவு : 163 / 237 தேதி :- 19 ஆகஸ்ட் 2017
* நானெனும் பார்வை *
மாறியமைந்த முதற்கல்
அடையாளமழித்தல் தொடக்கம்
அம்மா தான் இரவு பார்த்துக்கொள்ளுவதாகவும் சில பொருட்களை சொல்லி எடுத்துவரச்சொன்னார் . நான் என்ன நிகழ்கிறது என்கிற புரியாமையால் பதட்டத்துடன் வீடு சென்று அவர் கேட்ட அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தேன் . என்னை வீட்டிற்கு சென்று நாளை காலை சீக்கிரமாக வரச்சொன்னார் . மறுநாள் பொழுது இயல்பாக விடியவில்லை . என் வாழ்க்கையை சிந்தனையை இருப்பை முற்றாக மாதிரியாமைக்கும் பொழுததாக அந்த ஏப்ரல் 8 துவகிக்கியது .காலம் அனுபவத்தை மனதில் மட்டுமின்றி உடலிலும் பதித்தே செல்கிறது . ஆனால் அனுபவத்திற்கு அனுபவமில்லாத முகமே ஏன் ரசிக்கும் படி இருக்கிறது . இளமையெனதாலா . பின் ஏன் இளமையில் அதை பெரியதாக கொண்டாடியதாகத் தெரியவில்லையே ………
அன்று அது மற்றொரு நாளென கடந்துபோனது. ஆனால் அது நிகழ்வுகளினாலான படிமங்களை ஒரு காணிக்கல்லை ஆழ்ந்து மண்ணிலைறைவதைப்போல, என் மனத்தின் நட்டுச் சென்றது . நான் வாழப்போகும் நாள் முழுவதற்குமாக , நான் என்னை அளந்து,தொகுத்து, நிலைநிறுத்தி, கலைந்துகொள்ள விழையும் ஒவ்வொருமுறையும் நுனி நூல்பிடித்து அளக்க, அதுவே எப்போதும் எனது முதற்புள்ளியானது . இங்கிருந்தே எனது அமைதி,வருத்தம்,புரிதல்,கோபம், வன்மம்,தன்னறம், என சகல உணர்வுகளும் எண்ணங்களும் என்னால் நிகழ்த்தப்பட்டன . வாழ்வின் பெரும் அர்த்தமும் , எந்தவித அர்த்தமின்மையும் என்னால் இங்கிருந்தே அடையப்பட்டது .
குழந்தை இறந்து பிறந்தது என்றார்கள் . அதற்கான மற்றொரு வாய்ப்பையும் கழித்தே கொடுத்தார்கள் . ஏதேதோ பேப்பர் காட்டிக்கொண்டேயிருந்தார்கள், நான் கையெழுத்திட்டுக் கொண்டேயிருந்தேன், "கிருஷ்ணார்ப்பனம்” என்று . இதற்குத்தானா என் திருமணநாள் தொடக்கி உன்னை படிக்கத்தொடங்கினேன் . இதன் பொருட்டே என்னிடம் வந்தாயா . நான் எல்லாவற்றிற்கும் ஒருகாரணத்தை கற்பித்து அதை கடந்து செல்லும் குணம் , அன்று முதல் பழக்கமென்றானது . நான் கீதையை கடந்து போனேன் .
அதனால் , அதன் பின், கடந்துபோகச்சொல்லி பலது என் காலின் கீழ் அணிவகுத்தன . பின் கடந்து செல்லுதலே வழக்கை என்றானது . இதை எங்கோ மனதில் நான் எதிர்பார்த்திருந்தேன் . உயிர்மீண்ட மனைவியை ஒரு கீரைகட்டென வீட்டிற்கு அழைத்துவருவதற்குத்தான் என்னென்ன முழுக்க கடக்கவேண்டிவந்தது . இரண்டுகூறாக பிரிந்திருந்தேன் ஒன்று சதா சர்வகாலமும் நேரம் காலமற்று விவஸ்தை இல்லாமல் பிரம்ஹ வித்தையை சொல்லியபடி இருந்தது . இன்னொன்று இது ஒரு துக்கம் உன்னால் இதை இப்படியே தரிக்க முடியாது . அரைமயக்க நிலையே உகந்தது உன்னையும் கடக்க அது அவசியமென்றது . எதையாவது குடி என்றது . போதை ஒன்றே நீ மீளும் வழி என்றது . என்னையும் கடந்து நான் செல்வதெங்கே என்று எதனிடம் கேட்பதென தெரியவில்லை . இந்த இரண்டும் யார்? . கேட்டுக்கொண்டிருக்கும் நான் யார்? . நான் எத்தனை பாகமாக பிரிந்தேன்? . மூன்றாகவா? . என்னை கடந்து செல்வதும் சாத்தியமே என்றது இரண்டும் . வருத்தம் அவமானம் கைவிடப்படல் நாளை குறித்த கேள்வி . நான் வறண்டுபோய் இருந்தேன் இறப்பின் ஒரு கணமென . இதில் வேடிக்கை ,இத்தைகைய இறப்பின் கணத்தை ஒன்றிற்கும் மேலாக அனுபவித்தாகிவிட்டது . இறப்பே ஒரு உடலில் பலமுறை நிகழும் என் அப்போதுதான் அறிந்துகொண்டேன் . காலம் என்னை பலஇடத்தில், பல உருவங்களில், அந்தஸ்துக்களில், துறைகளில், பிறப்பித்தபடி இருந்தது. பின் ஏதோ ஒரு காலத்தில் அவை இறந்துபோய் என்னுள் தகனமாகின . நான் ஒரு அணையாசிதைப்போல என்னையே பலமுறை எரித்தபடி இருக்கிறேன்.
உனக்கென என்மேல் இவ்வளவு அக்கறை . ஒவ்வொருமுறையும் எங்கோ ஓடிக்கொண்டிருக்கின்ற நதியை என்பொருட்டு இழுத்துவந்து என்னருகில் ஓடவைக்கும் உன்கருணைக்கு தெரியாதா ?, அந்த நதியின் நீர்பெருக்கு வளைந்து சுழித்து மற்றொருபுறம் என் கரைகளை உடைத்து வாரி எடுத்துக்கொண்டு செல்வதை .ஏதும் வேண்டாமென்று ஒதுங்கி இருந்தாலும் அது வந்து பிடித்து இழுத்து உயரத்தில் வைத்து பெரும் திரள்களின் மையத்தில் வைத்து பலவித அனுபாவங்களை வலிந்து கொடுத்து . அதற்கு விலையாக கையிலுள்ள எதையாவாது பிடிங்கிக்கொள்கிறது . யார் கேட்டார்கள் உன்னை . என்னை விடேன் . நான் எப்படியோ ஒழிகிறேன்.
மனைவி உடல்நலம் தேர அவளது அம்மாவீட்டிற்கு சென்றிருக்கிறாள் . ஒவ்வொருமுறை வீட்டிற்கு திரும்போது அதுவரை கண்டிராத வெறுமையை தனிமையை காணத்துவங்கினேன் . மனவழுத்தம் என்னை பாதிக்காது பார்த்துக்கொண்டது என் காலை நேர பூஜை . அந்த மனவழுத்தம் உள்ளே எங்கோ எப்போதும் உணரப்பட்டுக் கொண்டேயிருந்தது . அதன் நேரடி பாதிப்புகளை தவிர்த்தபடி இருப்பதால் ,அது ஏதாவதொரு விதத்தில் வெளிப்பட காத்திருந்ததை ஒருநாள் உணர்ந்தேன் . என்னை மறக்கும் ஏதோ ஒரு வடிகால் அவசியமென உணர்ந்தேன் . ஏதாவதொரு போதை மனிதனுக்கு தேவை என்பார்கள் . மனிதனின் நல்லகுணமெனும் பெரும்பகுதியை சரியாக பேணுவது சில விஷம் தேவைப்படுகிறது என்பபார்கள் . அந்த விஷமில்லாதவன் மக்கள் திரளின் ஒரு துளி . சாமான்யன். பலகோடி வாக்காளர்களின் ஒருவன் . அடையாளம் தெரியாது பிறந்து மண்மறைந்துபோகிறான். அவர்களில் நானும் ஒருவனா? நிச்சயமாக நான் அவர்களில் ஒருவனல்ல .
இப்படி சிந்திப்பது ஆணவத்தின் வெளிப்பாடல்லவா . ஆணவமில்லாதவன் யார் இந்த உலகில் அகங்காரத்தினாலேதான் ஒருவன் பசியை உணர்கிறான் என்கிறார்கள் . விழைவு அனைத்தும் அகங்காரத்தின் விளைவுகளே . மேன்மை என்பது ஏதாவது ஒருமுனையில் அகங்காரத்தால் சமன் செய்யாவிட்டால் அது தரிக்காது மக்கிப்போகும் என்கிறார்கள் . இப்படியே தர்கித்துக்கொள்ள நான் தயாராகில்லை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக