ஶ்ரீ:
பதிவு : 155 / 229 தேதி :- 11 ஆகஸ்ட் 2017
* நிறமும் அதன் அம்சமே *
இயக்க பின்புலம் - 78
அரசியல் களம் - 46
"அரசியலின் நிலைத்தன்மை உரையாடல் தொடர் உரையாடல்களினால் நிகழ்வது அதில் எதையும் ஒற்றைபடையாக உருவகித்துவிடமுடியாது . இன்று அர்த்தமற்றது என நினைக்கும் ஒன்று, நாளை தேவையென எழுந்துவரும் . பின்னொருகாலத்தில் சண்முகத்தின் அனுகுமுறையில் இதைப் பார்த்திருக்கிறேன் . சேர்கையில் பிறிவை, பிரிகையில் மீளவும் சேருவதற்கான கதவை திறந்து வைப்பதே , உரையாடல்களின் வழியே நிகழ்வது. பாலன் தன் உரையாடலை நிறுத்தியதனூடாக அதை நிரந்தரமாக மூடிவிட்டார் . இவர்களும் அங்கிருந்து உருவாகி வந்ததால் . சிந்தனைப் பெருக்கு பாலனை ஒத்தேயிருந்தது” .
அன்று காலை அனைவரும் என்னுடைய அலுவலகத்தில் கூடினார்கள் . கனகாஜ்சேகரும் ஏதும் நடவாததைப் போல வந்திருந்தான் . தாமோதரனுக்கு இரவு நடந்ததை தெரியப்படுத்தினேன் . அவர் ஏகத்திற்கு குமுறிக்கொன்றிருந்தார் . நான் சேகரிடம் இதுபற்றி யாரும் பேசவேண்டாம் என சொல்லியிருந்தேன். எனக்கு அவன் செய்த இந்த விஷமம் பொறுக்க இயலாததாக இருந்தது . என்றைக்கும் தன் வீட்டிற்குவந்திராத பாலன் , வந்து ஒரு உதவி என்றதும் அனைவரையும் காட்டிக்கொடுக்க தயாராகிவிட்டான் . அவன் குணம் இது என்பது தெரிந்ததே .ஆனாலும் நடந்த சூடு குறைவதற்குள் இது நிகழுமென என யாரும் எதிர் ப்பார்த்திருக்கவில்லை. இன்று எனக்கிருக்கும் கொஞ்சம் பொறுமையும் அன்று கிடையாது. ஆனால் அன்று நான் இதை ஜீரணிக்க கடினமாக இருந்தாலும் மிகவும் நிதானமாகவே இதை கையாண்டாதை இப்போது நினைத்துப்பார்கிறேன் . பின்னொரு காலத்தில் சேகர் தான் செய்தது பெரும் தவறு என என்னிடம் கூறி வருந்தியபோதும், நான் அவனை எங்கு வைத்திருந்தேனோ அதே இடத்தில் அவன் இன்றும்கூட இருக்கிறான் .
பாலன் அன்று இரவு என்னை வந்து சந்தித்ததைப் போல அனைவரையும் சென்று சந்தித்திருப்பார் என்கிற கணக்கு பொய்த்துப்போனது . அவர் யாரையும் சென்று சந்திக்கக்கல்லை என்பதிலிருந்து , அவர் வேறுஏதோ திட்டத்தில் இருக்கிறார் என அவதானித்தேன். எதிர்நோக்கியதைப்போல , அன்று “மாலைமலரில்” பாலன் எதிர்வினையாற்றியிருந்தார் .
பாலனின் தலைமையிலான நிர்வாகிகள் அமைப்பு முற்றிலுமாக கலைக்கப்பட்டகாகவும் ,அதில் பாலன் மட்டிலும் தலைவராக மிச்சப்பட்டிருப்பாரென்று செய்தி வந்திருந்தது . எதிர்பார்த்தத்துதான் என்றாலும், நிகழும்போது அனைவரையும் அதிரவைத்தது . பாவம் தாமோதரன்தான் நொறுங்கிப்போனார் . தன் இடத்திலிருந்து இறங்கிவராது பேரம்பேசும் நிலையை தக்க வைக்க அவருக்கு இது சிறந்த வழி . அவர் குறைவாக மதிப்பிட்டது என்னைத்தான் . நான் இவர்கள் இந்த இடம் வரை இழுத்துவருவேன் என அவர் எதிர்பார்க்கவில்லை.
பாலன் இந்த முடிவிற்கு வந்தது ஒரு நல்ல நகர்வு . இங்கு என் கணக்கு தவறித்தான் போனது . அவர் இதை பிரகடனபடுத்தாமல் கூப்பிட்டனுப்பி பேசி சரி செய்திருக்க வேண்டும் . நான் கணக்கிட்டது போல, இது அவர் நின்று விளையாடும் களம். இதில் எங்களால் எதிர் நிற்க முடியாது . அதற்கு எதிர்வினை என்பது பாலனின் தாக்குதலை ஏற்று அதற்கு ஏதும் ஆற்றாது காத்திருப்பதே . இதற்கு காலம் கடத்துவதே சரியான முடிவாக இருக்கும் . ஆனால் அதற்கான வாய்ப்பை இவர்கள் தருவார்களா எனத் தெரியவில்லை . இவர்கள் அளவிற்கதிகமாக பதறுகிறார்கள் . என்னைவிட இவர்களை பாலன் சரியாக புரிந்திருந்தார் பாலனுக்கு எல்லா பக்கத்திலிருந்தும்வ ரும் நெருக்கடியை நீண்டநாளுக்கு கொண்டு செல்ல இயலாது . அதை தவிற்க இந்த முடிவிற்கு வந்திருக்கலாம் . இதில் என்னைப் பொறுத்தவரை அவருக்கு வெற்றி என ஒன்றில்லை. பாலன் தெரிந்தோ தெரியாமலேயே இந்த இயக்கத்தை இப்படி வளர்த்தெடுத்துவிட்டார் . அது இனி அவருக்கு பயனளிக்குமா எனத்தெரியாது .
மூப்பனார் சொன்ன விஷயத்தை என்னை மட்டுமே கொண்டு செய்யஇயலும் அதுவரை பொறுத்திருப்பது அவரால் இயலவில்லை , அவருடைய கணக்குப்படி அது நிகழ்நதுவிட்டால், நான் இன்னும் பலம்கொண்டுவிடுவேன் , பிறகு என்னைக் கழிப்பது நடவாதுகூட போகலாம் . ஆகவே அவரே அதை முயன்றுபார்க்க முடிவெடுத்துவிட்டார். முதல்வரின் ஆசி பூர்ணமாக இருப்பதால் அதைக்கொண்டு மூப்பனாருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம் என் நினைத்திருக்கலாம் . இது ஸ்தான பேதத்தால் நடப்பதல்ல . அரசியல் வழிமுறைகள் கூர்மையிலானது. மூப்பனார் அவரை பக்கத்தில் வைத்திக்கொள்ளலாம் , இவரைப்போல அவரிடம் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் அவர்களுக்குள் இவரும் ஒருவர் அவ்வளவே.
நான் ஏற்படுத்திவிட்டு வந்திருப்பது மூப்பனார் விரும்பும் ஒரு புதுப்பாதை .அதற்கு வைத்திலிங்கம் எப்படி அவருக்கு உதவ முடியும் என்பதுதான் இந்த நகர்வின் மையக்கரு . அதை ஆற்றுவதனூடாக மாநில அரசியலுக்கு ஒரு அகில இந்திய லாபி கிடைக்கும். இது நான் துவங்கிய ஆட்டம் . அதை என்னால் மட்டுமே ஆடமுடியும் , காரணம் நான் அவரிடம் என்ன பேசிவந்தேன் என்பது, என்னுடன் இருந்த சந்திரசேகர் பாலனிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் என்திட்டமென்ன என்பதை நான் சந்திரசேகரிடம் விவாதிக்கவில்லை . துரதிஷ்டவசமாக பாலனும் கடைசீவரை என்னிடம் கேட்கவேயில்லை .
இப்போது நான் விழைவது என் அரசியல் விடுதலையை, என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தியபாலன் ,என்னிடம் சொல்ல விழைந்தது நீ வீட்டிற்கு போ என்று .நான் வீட்டில் சென்றடையமாட்டேன் என அவர் யூகிக்கவில்லை அதுதான் அவர்பிழை. ஒரு விதத்தில் அவர் நினைத்தது சரியென்றாகியிருக்கும் , அவர் பூங்காவனத்திடம் அந்த “ஆப்த வாக்கியத்தை” சொல்லாமல் இருந்திருந்தால். அதுதான் என்னை தூண்டிய விசை .என் குணாதசியத்திற்கு மாறாக என்னை கொண்டு இங்கு நிறுத்தியவரும் அவர்தான் .
நான் உழைத்து ஒன்றிணைத்துவைத்துள்ள இயக்கம் பாலன் அன்று உருவாக்கிய இயக்கமல்ல .அதை அவர் என்றோ சீரழித்துவிட்டார் , இது அவருக்காக நான் உருவாக்கியது . நான் இயக்கத்திற்குள் நுழைந்த பிறகே புரிந்துகொண்டேன் 1989 லேயே இது பாலன் மேல் நம்பிக்கையிழந்த கூட்டம் என்று. அவரின் அணுகுமுறையால் அது சிதைந்துபோய், வளரும் உதிர்விசையை முற்றிலுமாக இழந்துவிட்டிருந்தது . அதை சரிசெய்யும் வாய்ப்பினால் எனக்கு கிடைத்த தொடர்பை, நான் பாலனுக்கு அணுகுணமாகத்தான் திருப்பினேன் . பாலனை நம்பலாம் ,அவருக்கு எதிர்காலமிருக்கிறது என்கிற நம்பிக்கை நான் அளித்தேன் .நான்கொடுத்த உறுதிமொழியில் ஒருங்கிணைந்த இயக்கம் இது . அதனாலேயே நான் அனைவராலும் விரும்பப்பட்டேன் . இது பாலனுக்கு என்மேல் காழ்ப்பை உருவாக்கும் என தெரிந்திருந்தும். என் நேர்மறையான அணுகுமுறையால் அவரது நம்பிக்கையை ஒருநாள் வென்றெடுக்க முடியும் என்கிற என் அவதானிப்புத்தான் இங்கு தோற்றுப்போனது . இப்போது நான் உருவாக்கி வைத்த அதனுடன் உரையாடவேண்டும். அதை தனித்து என்னால் செய்திருக்க முடியும் தாமோதரனின் குழுவின் அனுசரனை இல்லாமலேயே . அது நேரடியாக பாலனுக்கு நான் மாற்று என்கிற அறைகூவல் விடும் பாதையை திறந்து விட்டுவிடும் . என் நோக்கம் அதுவல்ல. பாலன் என்மேல் காழ்ப்புக்கொண்டது நான் ஒருநாள் அதை செய்வேன் என்றே . இப்போது நான் அதை செய்தால் பாலன் நினைத்தது சரியென்றாகும் . அதில்லை நான் விழைவது என்பதை பாலன் புரிந்துகொண்டதால் .அன்றிரவு என்னை தேடிவந்தார் . ஆனால் காலம் கடந்துவிட்டது. அன்று பிறிதெவரையும் அவர் சென்று பார்க்கவில்லை , பாலன் அவர்களை சென்று பார்த்திருந்தால் அவர்கள் அன்றே அவருடன் சமாதானத்திற்கு வந்திருப்பார்கள்.
நான் துவங்கிய ஆட்டமும் ஒரு முடிவிற்கு வந்திருக்கலாம் . எக்காரணம் கொண்டும் நான் வரப்போவதில்லை என பாலனுக்கு அன்றிரவு புரிந்திருக்கும் . ஒட்டுமொத்த கமிட்டியையும் கலைத்ததற்கு இரண்டு நோக்கம் இருந்திருக்க வேண்டும் . ஒன்று ;என்னைவிட தாமோதரனின் குழுவின் மனநிலையை பாலன்தான் மிகச்சரியாக புரிந்துவைத்திருந்தார். அவர் எதிர்பாராது இவர்களை நான் பேரம்பேசும் இடத்திற்கு கொண்டுவருவேன் என்று அதைத்தான் இப்போது தகர்த்துவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக