https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 154 * உரையாடலின் பாதையில் *

ஶ்ரீ:




பதிவு : 154 / 228      தேதி :- 10 ஆகஸ்ட்  2017

* உரையாடலின்  பாதையில்   *

இயக்க பின்புலம் - 77
அரசியல் களம் - 46 

|| நாங்கள் வெவ்வேறு உலகில் வாழ்கிறோம்என்னால் அவர்களின் உலகில் நுழைந்து , நம்பிக்கையை பெறுவது ஒருநாளும் முடியாது . அரசியல் இலக்குகளை விட தங்களை உணர்ச்சி பெருக்கில் ,சதா சர்வகாலமும் திளைக்கிறார்கள்.  நுண்மைக்கோரும் அரசியலுக்குள் இவர்களால் பொருந்தி இருக்க முடியாது . சிந்தனையால் இருபது வருடத்திற்கு பின்னல் இருக்கிறார்கள் . நிகழ்கால அரசியலுக்கு இவர்கள் வரப்போவதில்லை .இப்படிப்பட்ட சூழலில் கையெழுத்துவேட்டைக்கு உடன்செலவது என்னால் இயலாது . இவர்களால் நிகழ்த்தும் அநர்த்தத்திற்கும் நான் பதில்சொல்லவேண்டி வரலாம் . ||




அவர்கள் யதார்த்த உலகிற்கு வரவேயில்லை . அடுத்த நடக்கவிருப்பதை பற்றி விவாதிப்பதே குற்றமென்கிற மனநிலையில் இருந்தனர் . பாலனுடன் ஒரு சமாதானததிற்காக வாய்ப்பேயில்லை என்றனர் . ஒருவர் கடந்து நின்ற தூரத்திலிருந்து , பிறிதொருவர் புறப்பட்டு இன்னும் கொந்தளித்து அடுத்த புள்ளிக்கு அதை நகர்த்தினார்இது இன்னும் ஒரு இரவிற்குள் வெடி நிலைக்கு செல்லுவது போல தோன்றினாலும் ,அது நிகழப்போவதில்லை . தேவைக்கு மிகையாக கொதிப்பது குழைவதற்கே

கையெழுத்து வேட்டைக்கு கிளம்பிய குழு , எனக்கு அணுக்கர் என்பதால்  ,மூத்த துணைத்தலைவர்  பூங்காவனத்தைத்தான் முதலில் அணுகியதுபூங்காவனம் கையெழுத்திருந்தால் மற்ற நிர்வாகிகளுக்கு விளக்கம் அவசியமிருக்காதுபூங்காவனம் இவர்களைக்கண்ட உடன் கேட்ட முதல் கேள்வி “அரி எங்கேநான் மதியம் வருகிறேன் என்றும்நான் முதல் கையெழுத்திட்டிருக்கிறேன் என சொன்னவுடன்பூங்காவனம் என் கையெழுத்தை பாரத்த பிறகு , தீர்மானத்தை படித்து கையெழுத்திட்டாருக்கிறார் .பின் அனைவரிடமும் பெறுவது ஒரு காரியமே இல்லை

இந்தக் குழுவின் நம்பகத,தன்மையை இனிமேல்தான் நிரூபிக்கவேண்டும் . கடந்த காலங்களில் எனக்கு  கசப்பான அனுபவங்களையே இந்த குழு கொடுத்திருக்கிறதுஇருந்தும் முன்னேற்றமென ஒன்று ,   எவருக்கும் உள்ளதே . அதை எதிர்பார்த்துத்தானே , ஒருநாளே விடிகிறது . எனக்கும் அன்று அப்படித்தான ஏதாகிலும் ஒரு அசட்டு நம்பிகை தேவைபடுகிறதுசில காரியங்களை ஆற்றுவதற்குஅதுவும் இல்லாது போனால் வாழ்கை கசப்பும்வரட்சியாக , வெறுப்பாக மட்டுமே எஞ்சும் . 

இதில் இரண்டு வாய்ப்புகளே உள்ளதுஒன்று ; பாலனுடனான உறவு முடிவிற்குவரும்அத்தால் கிடைக்கும் பலன் , குட்டையாய்குறுங்குழுவாய் தேங்கிக்கிடந்து உட்கட்சி அரசியலில் வரண்டு  முகமற்று மறைந்து போகாது , உயிரோட்டமான அரசியலுக்கு திருப்பலாம் .  எதிர்காலம் எப்படி இருக்கும் என இங்கிருந்தே அவதானிக்க முடியாது . அங்கு நிகழும்  ஒரு சதவிகித வளற்சிக்கான வாய்பே இதைவிட நூறு சதம் மேலதிகமானது . அல்லது குறைந்த பட்சம் “இழப்பதற்கு ஒன்றில்லை” என்கிற "ஆப்த வாக்கியம்இருக்கவே இருக்கிறது .

இரண்டாவதுபாலனுடன்  சமாதானம்:ஒருக்கால் பரந்து விரிந்த அரசியல் பொதுவெளிக்கு வர அஞ்சி பாலனிடம் இக்குழு சரணடையலாம் . அது தற்கொலைக்கான இழிப்பாதைஎன்னால் அது முடியாது . இனி பாலனுடன் அரசியலில் இந்த இயக்கத்தில் நீடிப்பதென்பது  , ஒரு போதும் நடவாது.   அது வந்த வழி திரும்புவது . ஒன்றும் மிச்சப்படாது  போகும்ஆனால் “அரியால் ஆபத்தில்லை” என்கிற சொல்  காரத்தின் மண்டைக் குடைச்சலில் இருந்து விடுதலை . என்னால் என்ன முடியும் என்பதை இதன் மூலம் பாலனுக்கு காட்டியதாகிறது . அதுவே போதுமானது . “அரசியலில் ரௌத்திரமற்றவன் ஒரு சடலம் மட்டுமே”.

இரவு வெகு நேரம் கழித்தே வீடு திரும்பினேன் , வீட்டில் எவருக்கும் நான் அரசியலில் என்ன செய்து  கொண்டிருக்கிறேன் என்பது தெரியாதென்பதால் , வீடு அமைதியாக இருந்தது .வழமை போல இரவுணவிற்கு பிறகு என் அறையில் அமைந்து , அன்று நிகழ்ந்ததை முழுவதுமாக மற்றுமொருமுறை தொகுக்க ஆரம்பித்தேன் . தீர்மானத்தில் முதல் கையெழுத்திடும்போது ஒரு சிறு நலுங்களை உணர்ந்தாலும் எந்த உணர்வையும் வெளிக்காட்டவில்லை .. இதுவரை இப்படித்தான் நிகழும் என்கிற என் கணக்கில் இதுவரை எந்த மாற்றமுமில்லாது நிகழ்ந்துகொண்டிருந்தது . இனி மாற்றுத்தரப்பு என்ன எதிர்வினை வைக்கிறதோ , அதைக்கூர்ந்த பிறகு குழுவின் நடவடிக்கைகளை நான் ஒருங்கலாம் . சிறு பதட்டம் எழுந்தபடியே இருந்தது ,  மூச்சு பற்றாக்குறைபோல , அவ்வப்போது ஆழ்ந்து காற்றை இழுத்து சுவாசிப்பது   சிந்தனையின் வெப்பத்தை தனிப்பதாக இருந்ததுபாலன் இந்நேரம்  என்ன செயது கொண்டிருப்பார் ?  

இது பைத்தியக்காரத்தனம் என்றாலும் நாளை காலை என்ன நிகழும் எனபதை ஓரளவாவது அவதானிக்கமுடியும் . அழைத்து பேசி இதை ஒன்றுமில்லாதபடி இரவுக்குள் செய்தாக வேண்டும் . அது அவரது எண்ணமாக இருந்தால் நாளைவரை பொறுத்திருக்க வேண்டியதில்லை . இந்த தீரமனத்தின் பின்னனியில்  நான் இருப்பது  அவருக்கும் தெரியும் . மாலைமலரில் செய்தி 3:30 மணிக்கெல்லாம் வந்துவிட்டது , அதற்குமுன் முதல்வர் அலுவலகத்திற்கு 1:00 மணிக்கெல்லாம்  காவல்துறை நுண்பிரிவு மூலம் தகவல்  சொல்லப்பட்டிருக்கும் . அதை கணக்கெடுத்தால்முழுதாக இரண்டுமணி நேரம் போதும் , அழைத்து பேசஆனால் தாமோதரனின் வெளியேற்றம் நிகழும்போதே இதுபோல ஒன்று நடக்கும் என அவர்   உய்த்துணர்த்துட்டிருப்பர் . பாலன் மொண்ணையல்ல . 

என் தங்கை வந்து கீழே கட்சியிலிருந்து யாரோ தேடி வந்திருக்கிறார்கள் என்றதும் , சற்று பதட்டத்துடன்  இறங்கி வந்தேன் .கீழ் ஹாலில் கனகராஜ் சேகர் எனக்காக காத்திருந்தான் . இரவு 11:00 மணிக்கு   மேலிருக்கும் , என்ன தகவலாக இருக்கும் ,“என்ன இந்த நேரத்தில்ஏதாவது சிக்கலா” என்றதும் . அவன் என்னை சந்திக்க பாலன் வெளியில் காத்திருப்பதாக சொன்னான் . நான் உடல்முழுவதும் சூடாக ஏதோ   பரவுவதை உணர்ந்தேன் . இதைப்போன்ற ஒன்றை நான் அவனிடம் எதிர்பார்த்திருக்க வேண்டும் சில  வினாடி மௌனத்திற்கு பிறகு “வரச்சொல்” என்றேன் . அவன் சகஜமாய் எழுந்து வெளியே சென்றான் .  அப்பா மேல டிவி பார்த்துக்கொண்டிருக்கிறார் , இங்கு சத்தம் பெரிதாக எழுந்தால் சிக்கல்தான் . சரியாக வில்லங்கம் பண்ணியிருக்கிறான்  இந்த நாய் .

பாலனுக்கு என் தந்தைமீது ஒரு அச்சம் கலந்த மரியாதை எப்போதும் உண்டு . வரம்பு மீறமாட்டார் என   நினைத்தேன்சேகர் இருக்கும் தைரியத்தில்தான் பாலன்  துணிச்சலாக என் வீட்டிற்கு இந்நேரத்தில்   வரமுடிந்தது .நான் சேகரிடம் என் கோபத்தை காட்டாது அமைதியாக இருந்தேன் . பாலன்சுப்பாராயன்சுகுமார் மூவரும் உள்ளே நுழைந்தனர் . என்ன திட்டத்தோடு வந்திருக்கிறார்கள் என யூகிக்க முடியவில்லை . எதுவானாலும் சந்தித்துத்தான் ஆகவேண்டும் . நான் எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாது   அனைவரையும் வரவேற்று  அமரச்சொன்னேன் .”சொல்லியனுப்பிருந்தால் நானே வந்திருப்பேனே” என்று சொல்லியபடி சுப்பாராயனை பார்த்தேன் . பலமாதம் காணாமலாகியிருந்தவர் மைத்துனருக்கு சிக்கல் என்றதும் நீண்ட உறக்கத்திலிருந்து எழுந்து வந்திருக்கிறார்.  என் பார்வையின் உஷ்ணம் புரிந்ததும்   சுப்பாராயன் மௌனமாய் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார் .

பாலன் தான் துவக்கினார் ,“என்ன அரி என்னை அமைச்சராக்கிவிட்டுதான் போவேன் என்று முன்பு   சொன்னாய் , அதை செய்துவிட்டு பிறகு செல்லலாமேஏன் இப்படி நடந்துகொண்டாய்” என்றார் , “நான் என்ன செய்துவிட்டேன்? , என்னால் என்ன செய்யமுடியும்? , ஆபத்தில்லாதவன் நான்என்றதும்,   பாலன் முகம் அதிர்ந்ததுபோல இருந்தது .“இது நான் மட்டும் எடுத்த முடிவல்ல எல்லோரும்   சேர்த்தெடுத்தது . இப்போது பேச என்ன இருக்கிறது” என்றேன் .“எல்லோரையும் சந்தித்து பேசி சரி   செய்துவிடலாம் ஏற்பாடு செய்” என்றார் ,“அது என் வேலையல்லதலைவர் என்கிற முறையில் நீங்கள் அழைத்தால் வரப்போகிறார்கள் இதில் நான் எங்கு வருகிறேன்”“தாமோதரனை அழைத்து பேசுங்கள்”.  என்றேன் .பாலன் குரல் தழைய எதோ சொல்ல வர சுகுமார்தான் பேசினார் ,“அரி நடந்ததை மனதில்  வைத்துக்கொள்ள வேண்டாம் , இதை பேசி சரிபண்ணி விடு” என்றார் ,“எங்குபோய் இருந்தீர்கள்   இவ்வளவு காலம் , அனைவராலும் ஒதுக்கப்பட்டு நான் அவமானப்பட்டபோது”.

எனக்கென்ன தலையெழுத்து உங்களுடன் அரசியல் செய்யவேண்டுமென்று , இங்கு உள்ள அனைத்து  அரசியல் தலைவர்களை விலக்கி எங்கோ முதலியார்பேட்டையில் எனக்கென்ன அரசியல் வாழ்கிறது . நான் ஒன்றுமில்லை என் இவர் முடிவெக்கும்போது தெரியவில்லையா கூப்பிட்டு பேசவேண்டும் என்று , இதோ சுப்பாராயன் , ஒவ்வொருவரும் மிச்சமில்லாது தலைமைக்கு எதிராக பலமுறை எழுந்தபோது   நான் சொல்லித்தான் பல விஷயம் இவருக்கே தெரியும் , கணக்கு வழக்கில்லாமல் செய்துகொண்டிருந்தேன்,  ஏன் சுப்பாராயன் உங்களிடம் சொன்னதில்லையா , அப்போதெல்லாம் பாலன்  வந்து  என்னிடம் கேட்டுத்தான் நான் செய்தேனா?, இது ஒன்றும் சின்னப்பிள்ளை விளையாட்டல்ல , நான் யாரையும்   ஒளித்துவைதில்லை , நீங்கள் யாரைவேண்டுமானாலும் அழைத்து பேசுங்கள் . உங்கள் சிக்கலை   சரிசெய்துகொள்ளுங்கள் எனக்கு எந்த மறுப்புமில்லை” என்றதும்,“சரி வா எல்லோரையும் சென்று   சந்திப்போம்” என்றார் பாலன் , நான் தலையாட்டினேன் .“அது உங்கள்வேலை , உங்களுடனான என்   அரசியல் இன்று இத்துடன் முடிந்துபோனது . நான் சொல்லுவதற்கோ செய்வதற்கோ ஒன்றில்லை .  அதே சமயம் இணைப்பிற்கு நான் எதிரானவனல்ல” என்றதும் .சிறிது நேரம் அனைவரும் அமைதியாய் அமர்ந்திருந்தனர் .பின்னர் ஒருவர்பின் ஒருவர் எழுந்திருக்க பாலன் ஒன்றும் பேசாது மௌனமாய்   வெளியேறினார்

அரசியலுக்கு உரையாடல் ஓர் அடிப்படை . எதையும் ஒற்றைபடையாக உருவகித்துவிடமுடியாது.  இன்று தேவையற்றது என நினைக்கும் ஒன்று நாளை தேவையென எழுந்துவரும் . பின்னொருகாலத்தில் சண்முகத்தின் அனுகுமுறையை பார்த்திருக்கிறேன் . சேரும்போது பிறிவை பற்றியும்பிறியும்போது மறுபுறம் சேருவதற்கான கதவை திறந்து வைப்பதே உரையாடல்களின் வழியே நிகழ்வதுபாலன் தன்  உரையாடலை நிறுத்தியதனூடாக  அதை நிரந்தரமாக மூடிவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்