https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 164 * அகச்சிறைக்கு வெளியே *

ஶ்ரீ:




பதிவு : 164 / 238 : தேதி :- 20 ஆகஸ்ட்  2017

* அகச்சிறைக்கு வெளியே *


தற்காலிக விலகல்
அடையாளமழித்தல் தொடக்கம்

ஏதாவதொரு போதை மனிதனுக்கு தேவை என்பார்கள் . மனிதனின் நல்லகுணமெனும் பெரும்பகுதியை சரியாக பேணுவது சில விஷம் தேவைப்படுகிறது என்பபார்கள் . அந்த விஷமில்லாதவன் மக்கள் திரளின் ஒரு துளி . சாமான்யன். பலகோடி வாக்காளர்களின் ஒருவன் . அடையாளம் தெரியாது பிறந்து மண்மறைந்துபோகிறான். அவர்களில் நானும் ஒருவனா? நிச்சயமாக நான் அவர்களில் ஒருவனல்ல . இப்படி சிந்திப்பது ஆணவத்தின் வெளிப்பாடல்லவா . ஆணவமில்லாதவன் யார் இந்த உலகில் அகங்காரத்தினாலேதான் ஒருவன்  பசியை உணர்கிறான் என்கிறார்கள் . விழைவு அனைத்தும் அகங்காரத்தின் விளைவுகளே . மேன்மை என்பது  ஏதாவது ஒருமுனையில் அகங்காரத்தால் சமன் செய்யாவிட்டால் அது தரிக்காது மக்கிப்போகும் என்கிறார்கள் . இப்படியே தர்கித்துக்கொள்ள நான் தயாராகில்லை . 




என்னுள் நான் என்றும் உழன்றதில்லை . எதையாவதொரு தர்க்கநியாயத்தை கற்பித்துக்கொண்டு அதிலிருந்து கழன்றுவிடுவேன் . ஒரே உளச்சிக்கலில் இதைப்போல பலநாள் சிக்குண்டதில்லை . இது ஒரு அகசிறைபடல்போல . வெளியேற முடியாதும் போகலாம் . நான் இதனுள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை . இதிலிருந்து வெளியேறவேண்டும் என பலநாள் எனக்கு சொல்லியபடி இருந்தேன் . கழன்றுபோதல் நிகழ்வது தூக்கத்தில் மயக்கத்தில்,ஒரு போதையில் . பலவித போதையுண்டு , ஏன் அரசியலேகூட ஒரு போதைதான் . எதையாவாது சாப்பிட்டால்தான் போதை. அரசியல் நினைத்திலே போதைதான்கொஞ்சகாலம் எனக்கு மிக விருப்பமான துறையில் ஈடுபட விரும்பினேன் . அது அரசியல் அன்றி பிறிதொன்றில்லை . அதற்கு நான் தேவை எனில் அது தான் இனி எனக்கு வழியென இருக்போகிறதெனில் , நான் வேண்டுமென்றால் , அது வந்து என்னை அழைத்து போகட்டும். தட்டிக்கலைவதற்கு நான் கையாளும் வழிமுறையிது . நான் காத்திருக்க துவங்கினேன்

விந்தை”- அது நீண்டநாள் எடுத்துக்கொள்ளவில்லை . நான் காலை பூஜையிலிருந்த போது என்னை சந்திக்க யாரோ வந்திருப்பதாக சொன்னார்கள் . நான் கீழ் ஹாலுக்கு இறங்கிவந்தபோது .எனது நண்பர் வக்கீல் சுரேஷ் காத்திருந்தார் . அவருக்கு கட்சியில் நல்லத் தொடர்புண்டு . ஆனால் இதுவரை வீடுதேடி வந்ததில்லை.முறைமை உரையாடலுக்கு பிறகு தான் வந்தக்காரணத்தை சொன்னார் . என் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக களம்காண்பவர் காந்திராஜ் முன்னாள் கல்வி அமைச்சர் . இந்தமுறை அவருக்கு நிலைமை படுமோசம் என்றார் சுரேஷ் .எனக்கு சிரிப்பாக இருந்தது  சென்றமுறை வெற்றிபெற்றதே ஒரு ஆச்சர்யம். மிக சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் . அதுவும் ராஜீவ்காந்தி அனுதாப அலை கருணையினால் அது  அவருக்கு வழங்கியது அந்தப்பதவி . இந்தமுறை அதற்கான வாய்ப்பில்லை என்றேன் . அவரை எதிர்த்து திமுக சார்பில் சிவகுமார் நிற்கிறார் . அவர் மிகத்திறைமையாளர்”!!!  ஏராளமான ஓட்டை பதிந்து வைத்திருக்கிறார் என்கிறார்கள் . கழகம் விஞ்ஞானமுறைப்படி தேர்தல்  செய்வதில் புகழ்பெற்றது. இவரைப்போல முதல்நாள்வரை தூக்கியிருந்துவிட்டு தேர்தலின்போது எழுந்து வருபவரல்ல சிவகுமார்

காந்திராஜ் சண்முகம் ஆள் . சண்முகத்திற்கு ஜோசப் மாறியதாசுக்கு திரும்ப வாய்ப்பளிப்பதில் விருப்பமில்லை . அதே சமயம் தோற்றாலும் கவலையில்லை என்கிறமாதிரியான சீட்டுக் கணக்கு . ஆனால் கடைசி கள நிலவரம் கலவரமாக இருந்தது . நிச்சயம் வெற்றி என கணக்கிட்ட தொகுதிகள்  மாற்றம் கண்டுவருகிறது . இப்போது ஒவ்வொரு சீட்டும் வென்றால் மட்டுமே ஆட்சி என்கிற நிலை உருவாகிவிட்டது . கட்சியின் அதிருப்தியாளர்களை மடைக்கட்டும் கடைசி நேரப் பணியில்  அவணைவரும்  களமிறக்கப்பட்டிருப்பார்கள் . அந்த முறையில் சுரேஷ் என்னை காணவந்திருக்கலாம் . அல்லது காந்திராஜ் தொழில்முறை வக்கீல் அதனால் சுரேஷ் இந்தளவிற்கு அக்கறையெடுத்திருக்கலாம் . இப்படியாக பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

நான் என் மனவருத்தங்களை அவரிடம் பதிவு செய்தேன் . கடந்த பலவருடங்களாக கட்சி அரசியலில் ஈடுபடும் என்னை தெரியாதவர்கள் இல்லை . எனக்கு பக்கத்து தெருவில் வசிப்பவர் காந்திராஜ் ,இதுவரை என்னை யாரென்றாவது அவருக்கு தெரியுமா ? .நான் தொண்டர் அமைப்பில் என்னை வளர்த்துக்கொண்டவன் . உட் கட்சி அரசியலைத்தாண்டி எனக்கெதுவும் தெரியாது . மாநில அளவில் செயல்பட்டவன் , அவரிடத்தில் எனக்கென்ன மாதிரி  வேலைஇருக்கும் எனத்தெரியவில்லை . தவிரவும் தொகுதி ஓட்டு அரசியலில் நான் செய்யக்கூடுவது ஒன்றில்லை, இருந்தாலும் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் யோசித்து சொல்கிறேன் . என்றதும் அவர் மற்றொரு முறை அழுத்தம் கொடுத்துவிட்டு கிளம்பிச்சென்றார்

அவர் சென்றபிறகு நான் நீண்டநேரம் யோசித்தபடி இருந்தேன் . நான் சிக்கிக்கொண்டிருக்கும் இந்த உளநிலையிலிருந்து நான் மீண்டாகவேண்டும் . இல்லையேல் இது என்னை முற்றிலுமாக சிதைத்துவிடும் . சரி உண்மையிலேயே நான் இதில் கலந்துக்கொள்ள வேண்டும் என காந்திராஜ் விழைந்தால் இந்த தூது வேறுவகையில் கையாள என்னை மீண்டும் சந்திக்க சிலர் வரக்கூடும் அப்போது பார்த்துக்கொள்வோம் என  ஒத்திவைத்தேன் . மேலும் இது தேர்தல் காலம் யார்வந்தாலும் கைகூப்பி வரவேற்பார்கள் அதை உண்மையென நினைப்பது போல மடமை பிறிதொன்றில்லை

அன்றுமாலை புது வேலை துவங்குவது விஷயமாக நான் என் மேலாளருடன் பேசிக்கிகொண்டிருந்த போது  வரவேற்பறையில் இருந்து தொலைபேசி அழைப்பு. முன்னாள் அமைச்சர் வெளியில் காரில் எனக்காக காத்திருக்கிறார் என்றதும் நான் . காந்திராஜ் தேடியே வந்துவிட்டாற்போல என உடன் கிளம்பி வெளியில் வந்தேன் அதற்குள் அவர் என் அறைக்கு வந்துவிட்டார் . வந்தது  காந்திராஜ் இல்லை ஜோசப் மரியதாஸ் முன்னாள் அமைச்சர்  . எனக்கு மிகவும் அணுக்கர் . ஒருகாலம் சண்முகத்திற்கு நெருக்கமாக இருந்தவர் . மரைக்காயரின்  நாற்காலி  விளையாட்டில் சிக்கி வீழ்ந்துபோனார்

சண்முகத்துடன் இருந்த கசப்பில் கொஞ்ச காலம் அரசியலிலிருந்து விலகியிருந்தவர் . திடீரென என்னைத்தேடிவரக் காரணமென்ன? . சுரேஷ் என்னை காந்திராஜ் விஷயமாக தேடிவந்ததை தெரிந்து கொண்டு வந்திருக்கிறாரா? . காந்திராஜும் இவரும் கிருத்துவமதத்தை சேர்ந்தவர்கள் . இருவருக்கும் எப்போதுமே  ஏழாம்பொருத்தம் . அவரால்தான் தனது அரசியல் வாழ்வு அஸ்தமித்தது என்கிற வருத்தமுள்ளவர். என்னை காந்திராஜிக்கு உதவவேண்டாம் என கேட்டுக்கொள்வதற்கா இவ்வளவுதூரம் வந்திருக்கிறார்? என நினைத்து மனதிற்குள் சிரித்தபடி அவரை அழைத்துக்கொண்டு என் அறைக்கு திரும்பினேன் . என்ன செய்யலாமென யோசிப்பதற்குள் அடுத்த எதிரணி வந்து நிற்கிறது . இதற்கு ஓய்வே இல்லைபோலிருக்கிறதே.அவருடன் சிறிதுநேரம் முறைமை பேச்சிற்கு பிறகு அவர் விஷயத்திற்கு வந்தார் 

நேற்று சண்முகம் வீட்டில் சிறு கூடுகை என்னையும் காந்திராஜையும் கூப்பிட்டிருந்தார்” . “தேர்தல் சம்பந்தமா . அப்போது எதிர்ச்சையாக உன்னை பற்றி பேச்சி வந்தது , அப்போது சண்முகம் காந்திராஜிடம் உன்னை சந்திப்பதை பற்றி பேசினார் . அதற்கு காந்திராஜ் சுரேஷை அனுப்பி பேசியதாகவும் யோசித்து சொல்கிறேன் என நீ சொன்னதையும் அவரிடம் சொன்னார்”. அப்போது சண்முகம் காந்திராஜிடம் "உனக்கு யாரை எங்கு வைக்கவேண்டும் என் தெரியாததால் தானய்யா இவ்வளவு சிக்கல்" என்று கூறிவிட்டு என்னிடம் திரும்பி  “அவன்வரமாட்டான் நீ சொன்னால் கேட்பான் சென்று அழைத்துவா என்று சொன்னார்என்றார் . நான் என்ன சொல்லப்போகிறேனென என்னை பார்த்தபடி இருந்தார் .

எனக்கு தர்மசங்கடமான நிலைமை . நான் சிறிது நேரம் யோசித்தேன் . இதற்கு மேல் தாமதித்தால் வேறுஒருவர் வருவார்அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள் இனி விடமாட்டார்கள் . நான்சரி நாளை வருகிறேன் ஆனால் சண்முகத்தை பார்க்கமாட்டேன் . காந்திராஜுடன் இணைந்து என்னால் என்ன முடியுமோ செய்கிறேன்என்றதும் மரியதாஸ் விடுவதாகயில்லை . “உன்னை திருப்பவும் அழைத்துவந்த பெருமை எனக்கு இருக்கட்டுமே அதை எனக்கு தரமாட்டாயாஎன்றதும் நான் ஒருவார்த்தையும்  பேசாது அவருடன் புறப்பட்டேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...