ஶ்ரீ:
பதிவு : 169 / 243 தேதி :- 25 ஆகஸ்ட் 2017
* ஊழின் தொடுகை *
அழைப்பின் வசீகரம்
1996 தேர்தல் களம் -5
நான் சொன்னதை பிழையென புரிந்து கொண்டிருக்கலாம் . ஆணவத்தின் பொருட்டே நான் மறுப்பதாக நினைக்கலாம் . இல்லை நான் வெகு சிரமப்பட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன் . அதற்காக நான் என்னுள் நான் நிகழ்த்தியது வலிமிகுந்த உரையாடல்கள் . அனைத்திலிருந்தும் தனியனென பகுத்துவந்ததாலே அது நிலைப்படுவது அது என்னை இரண்டாக பிளப்பது . என்னையும் மீறி ஏதோ நிகழ்ந்து இங்குவந்திருக்கிறேன் மறைப்படியும் இதில் நுழைந்தால் அக்கட்டுக்கள் அவிழ்ந்து போகும். நான் அதை விரும்பவில்லை. நான் எனக்கான உலகில் தனித்திருக்க விரும்புகிறேன் . சமீபத்திய நிலையழிதலால் , என்னை கூர்ந்துகொள்ள , என்னை கலைந்து பின் தொகுத்துக்கொள்ளும் முகமாக காந்திராஜை சந்தித்தது என் பிழையென்றது . இது எதன் பிடியிலிருந்து நான்விலக நினைக்கிறேனோ மீளவும் அங்கேயே நுழையும் மாயவழியை அதுஅங்கே கரந்து வைத்திருந்தது .
நான் மௌனமாக காந்திராஜையும் அவருக்கு பின்னால் AK 47 துப்பாக்கி விசையில் வரலுமாக விரைத்து நிற்கும் பாதுகாவலரையும் பார்த்தேன் . விடுதலை புலி அச்சுறுத்தலால் அன்று அமைச்சர் அனைவருக்கும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது . தேர்தல் முடிவு வெளியாகாத நிலையில் அனைத்து இப்போது அலங்காரமாக இருக்கிறது . வைத்திலிங்கம் அரசாங்கம் பொதுமக்கள் மத்தியில் ஒரு இளிவரலைப்போல இருந்து கொண்டிருந்தது .தனிப்பட்டு பேச இயலாமல் அது ஒரு மனத்தடையை ஏற்படுத்தியது . சிறிது நேரத்தில் என்னை தொகுத்துக்கொண்டதும் . பாதுகாவலர் இருப்பை ஒதுக்கி, நான் திரும்பவும் காந்திராஜை சந்தித்த காரணத்தையும் . மரியதாஸ் நிர்பந்தத்தையும் , ஆனால் அதற்கு முன்பாக மனரீதியாக இதில் திரும்பவும் ஈடுபடுதல் என்னை இதில் மூழ்கடிக்கும் பொருட்டே. “மாநில அரசியல் ஒரு வசீகரிக்கும் மிருகம் , அதை தொட்டால் பின் விடுவதென்பது அது நினைக்கும் போதுதான். இதைத்தான் வக்கீல் சுரேஷ் வந்தபோது சொன்னேன்” என்றேன் . “எனவே இந்த மனநிலையில் மாநில அளவிலான அரசியலில் நான் செய்யக்கூடுவது ஒன்றிருப்பதாக நான் நினைக்கவில்லை” என்றேன்.
“எதில் நுழைந்தாலும் அதில் ஒரு கருதுகோளை நான் கண்டடைவதும், பின் அதை விரித்தெடுக்கும் வாய்ப்பும் பாதையும், அதன் முனையில் வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை கண்டபிறகு என்னால் அதை தொடாமல் இருக்க முடிவதில்லை. ஏன் அந்த ஒன்றை பிறிதொருவர் முயற்சிக்கவில்லை , என ஆராய்வதும் . பிறகு அதை செய்ய முழு உற்சாகத்துடன் முயற்சிப்பது , அதில் உள்ள சவால்களின் வசீகரத்தினால்தான் . ஆனால் அது எனக்கு ஆதரவை விட எதிர்ப்பையே பார்குமிடமெங்கும் கொண்டுவந்து நிரூவும் . அதை சமாளிக்கும் சவாலெனவே அதை தொடரும் விழைவு எழுவது விடுகிறது . அது ஒரு வதை .“ஏதாவது ஒரு புள்ளியில் அதை நிறுத்தித்தான் ஆகவேண்டும். இது அந்த புள்ளி இங்கு நான் அதை நிறுத்துவதாக முடிவு செய்து ,நிறுத்தியும் விட்டேன் . என் தனிப்பட்ட காரணங்களுக்காக நான் உங்களை சந்தித்தது , என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
தலைவர் எதற்கு நான் பயன்படுவேன் என நினைக்கிறாரோ இனி அதற்கு நான் உபயோகப் படமாட்டேன்” என்றேன் .காந்திராஜ் “அவர் என்ன நினைக்கிறார் என்று உங்களால் அவரை சந்திக்காது எப்படி முடிவு செய்ய முடியும் . நான் இவ்வளவு பேசினேன் என தெரிந்தாலே வருத்தமுறுவார் . அவர் என்னிடம் சொன்னது இரண்டு விஷயம் ஒன்று ; எக்காரணம் கொண்டும் ஏதும் பேசாதீர்கள். இரண்டு; ‘என்னை அடுத்த முறை சந்திக்க வந்தால் அரியுடன் வா’ என்றார். இதற்கு என்ன அர்த்தமென நான் சொல்லி உங்களுக்கு புரியவேண்டியதில்லை என்றார் . நான் மௌனமாக இருந்தேன் ஆம் அதற்கு "இல்லையேல் நீங்கள் வராதீர்கள்" என்றே அர்த்தம் .
இது என்ன ஒரு சங்கடம் . ஏன் என்னை ஊழ் இப்படி துரத்துகிறது . என்னிடம் உள்ள ஒரு சிக்கலே பழகிய பிறகு யாருடனும் என்னால் கடுமையாக நடந்துகொள்ள முடியாது . ஒரு முறை முகம் நோக்கி நான் கடும் சொற்களை எடுக்கிறேன் எனில் இனி அவரை சந்திப்பதாக இல்லை என்றே அர்த்தம் . அந்த கணம் மிக அரிதாகவே நிகழ்கிறது . அதன் காரணமாக என்னால் நினைத்ததை எல்லாம் பேசுபவர்களை பார்க்கும்போது ஒவ்வாமை எழுந்தாலும் , அவர்கள் ஆசியளிக்கப்பட்டவர்கள் என நினைப்பதுண்டு என்னால் புறவயமாக மட்டுமல்ல , அகவயமான கூட அது சத்தியமில்லை. மனவருத்தத்தை உச்சியில் உணரும் உச்சகட்டமான சூழலில் , மெள்ள சிரித்தபடி நொந்து வெளியேறினேன் எனில் , ஒருக்காலமும் அங்கு திரும்பமாட்டேன்.நான் செய்வதறியாது அமைந்திருந்தேன் . இவர் நேரில்வராது போயிருந்தால் இதை மிக எளிதாக தவிற்த்திருப்பேன். இது என்னை நன்கு அறிந்த எவரோ மிகச்சரியாக நிகழ்த்திய நகர்வு .
நான் என் கருத்துக்களை தொகுக்கும் அடிப்படையில், அவரிடம் “நேற்று தலைவர் வீட்டில் என்ன நிகழ்ந்தது” என்றதும் , அவர் தேர்தல் போது சண்முகம் தொகுதி வாரியாக பிரச்சாரத்திற்கு வந்தபோது அவரை காந்திராஜ் வரவேற்று முறைமைகளை செய்தார் . நானும் மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்தேன் . அப்போது எனக்கு சண்முகம் நன்றி சொல்லிவிட்டு , தன்னை வந்து சந்திக்கும்படி சொன்னார். நான் அதை மையமான சிரிப்புடன் கடந்து போனேன் . அதன் பிறகு சண்முகத்தை காந்திராஜ் சந்தித்தபோது என்னை பற்றி சண்முகம் நிறைய பேசியதும் தான் ஆச்சர்யப்பட்டதாக சொன்னார் . அன்றே உங்களை அழைத்து வரச்சொன்னார் . நான் உங்களிடம் சொன்னதற்கு ஏதேதோ காரணம் சொன்னீர்கள் . அது தேர்தல் நேரம் , அப்போது என்னாலும் ஏதும் சிந்திக்க முடியவில்லை. நேற்று அவரை சந்தித்தபோதுதான் மிகவும் கோபமாக நான் அவரது வார்த்தைக்கு மரியாதை தரவில்லை என்று பேசிய பிறகுதான் அவர் இது வழமையாக சொல்லுவது போல் இல்லை என உரைத்தது . அதன் பொருட்டே இன்று நேரில் அழைக்க வந்தேன் . உங்கள் சிக்கல் உளரீதியானது என்றெல்லாம் நான் போய் அவரிடம் சொன்னால் அவர் என்ன மாதிரி பேசுவார் என உங்களுக்கே தெரியும் . உங்களை அவரிடம் அழைத்து செல்ல வேண்டிய முழு காரணத்தை ரவி என்னிடம் சொன்னபோதுதான் நான் முழுமையாக உணர்ந்தேன் . நான் உங்களை இந்த இடத்திற்கு யூகிக்கவில்லை . எனக்கும் உங்களை சரியாக நடத்தவில்லையோ என்கிற குற்ற உணர்ச்சியும் எழுந்து விட்டது . அதான் காலையிலேயே வந்துவிட்டேன் . உங்கள் மனநிலை புரிகிறது எனக்கும் வேறு வழி இல்லை என்றார்.
நான் என்ன செய்வதென்கிற குழப்பத்தில் ஒன்றும் பேசாது நிறுத்து நேரம் யோசித்தேன். இது ஒரு வகையில் நான் விழைந்ததே. முறையான அழைப்பு வந்தால் செல்லலாமென்பது முடிவுதானே. என்கிற யோசனையில் இருந்தேன் . காந்திராஜ் புதுவையின் சிறந்த தொழில்முறை வழக்குரைஞர் அவரிடம் பேசி வெல்ல முடியாது என புரிந்தது . இவரை எந்த சமாதானமும் செய்து அனுப்புவது சாத்தியமில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்துபோனது .
அவர் மேலும் வேறொரு கோணத்தில் பேசத்துவங்கிவிட்டார் . தலைவர் சொல்லித்தான் உங்களின் பாலனின் தொடர்பே தெரியும். அவர் இந்தளவிற்கு ஒருவரை உயர்வாக பேசி நான் பார்க்கவில்லை . இப்போது எதையாவது சொல்லி நீங்கள் என்னை அனுப்பிவைத்தாலும் இது என்னுடன் முடியப்போவதில்லை . என்றார் . நான் அவரிடம் நான் என் உள்நிலை மாற்றத்திற்காகவே உங்களிடம் வந்தேன் . உங்களை பற்றிய என் எண்ணம் வேறாக இருந்தது அதனால் நான் யார் என்பதை உங்களிடம் வெளிப்படுத்தவில்லை . ரவிக்கு மட்டும் நான் யார் என்பது தெரியுமாதலால் உங்களிடம் சொல்லவந்தவனை நான் தடுத்துவிட்டேன். அன்று எனக்கிருந்த மனநிலையில் இனி சரிவராது என்றுதான் வெளியேறினேன் . ஆனால் இது ஊழின் அழைப்பில் பொதிந்துள்ள வசீகரம் இதிலிருந்து தப்பிப்பது சாத்தியமில்லை என உணரத்தொடங்கினேன். அது விரிக்கும் கரத்தை பற்றுவதை தவிர எனக்கும் வேறு வழியில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக