https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 157 * தான் தனக்கும் முன்பாக *

ஶ்ரீ:




பதிவு : 157 / 231     தேதி :- 13 ஆகஸ்ட்  2017

* தான் தனக்கும் முன்பாக  *

இயக்க பின்புலம் - 80
அரசியல் களம் - 46

இருபத்தி மூன்று நிர்வாகிகளில் பத்தொன்பது பேர் எதிர்த்து கையெழுத்திட்டத்தி ஒன்றே சான்று அவரின் கையறுநிலை . பொறுந்திருந்தால் , மிக எளிதாக இதிலிருந்து அனைவரும் வெளிவந்திருக்கலாம் . பிளவு பட்டவர்த்தனமாக வெளியான பின்பு . கட்சியின் பிற அமைப்பு தொடர்புகொள்ளவே விரும்பும் . அது நிகழுமானால் இயக்கம் மீளவும் ஆரோக்கியமான பாதைக்கு திரும்பும் . மூப்பனார் ஆதரவு இருக்கும் இந்த சூழலில் அற்புதமாக ஆடியிருக்கலாம் . இவர்கள் விநோதமனிதர்கள் . எதையும் ஒற்றைப்படையாகவே புரிந்துகொள்வதும் அதற்கு அனைவரும் உடன்படவேண்டும் என்கிற அவசரத்தில் இருப்பவர்கள் . நிதானமில்லாதவர்கள் . அது ஒன்றுபோதும் பாலன் இதில் வெற்றிபெற .




அரசியலில் பாதை புரியாத  போது , அது தெளிவடையும்வரை பொறுத்திருக்க வேண்டும் . இப்படியாக மூன்றுநாள் கடந்துவிட்டது . இது மாதக்கணக்கில் கூட நீளலாம் . என்ன இருக்கிறது பொறுத்திருப்போம் என நான் சொன்ன சொல் அர்த்தமிழக்க துவங்கியது . கமலக்கண்ணன் தனக்கான ஆட்டத்தை துவங்கினார் . நான் பொருளாதாரம் , தொழில் என அனைத்திலும் நிறைவடைந்தவன் அவனால் பொருத்துக்கொண்டிருக்க , முடியும் நம்மால் எப்படி முடியும் என்கிற கேள்வியை கமலக்கண்ணன, வைத்ததும் அதற்கு ஆதரவாக சில ஓட்டுக்குள் விழுவதை பார்த்தேன் . அவர்களுக்கும் எனக்குமான வித்தியாசத்தை நான் இன்னும் நுட்பமாக உணர்ந்தேன் . இது ஒரு பொய்யான பதட்டம் . இவர்களுக்கு மாத சம்பளமும் தினசரி உணவும் இந்த பதவி கொடுத்துக்கொண்டிருத்தை போலவும் , இப்போது அதை இழந்ததனால் , உயிராபத்து வந்துவிட்டதைப்போல திணரத்துவங்கினர் . அதுவரை உள்ளூர் தலைவர்களை நானும் நம்பியிருந்தேன் . என்ன காரணத்தினாலோ  அது பொய்த்துப்போனது. ஆனாலும் வெகு விரைவில் அதற்கான காரணத்தை நான் தெரிந்துகொண்டேன் .

அன்று காலை என்னை வீட்டில் சந்தித்த சண்முகத்தின்  அணுக்கர் வைத்தியநாதன்சண்முகம் இதை உண்ணிப்பாக கவனித்து வருவதாகவும் , தனக்கான நுழைவிற்கு இது காலமில்லை எனவும் , உண்மையிலேயே பிரிவு எனில் ஒருவாரம் தாங்குகிறார்களா பார்போம் என்றதாக கூறினார்
"நான் சண்முகத்தின் காலம்கடத்துவதால்தான் இப்போது சிக்கலே எழுந்திருக்கிறது" , என்றேன் சண்முகம் உன்னை மட்டும் சந்திக்க ஆர்வமாயிருக்கிறார் என்றார் வைத்தியநாதன் . அவரிடம் என்னை சந்திக்க வந்ததற்கு நன்றியையும் , நான் சண்முகத்தை தனித்து பார்க்க இது உசிதமான நேரமில்லை என்றேன் . அவர் "இதை வெளிப்படையாக வேண்டாம் இன்று இரவு 11:30 மணிக்கு மேல் வைத்துக்கொள்ளலாம்" என்றார் . நான் உறுதியாக மறுத்ததும் வைத்தியநாதன் கிளம்பிச்சென்றார்.

சணமுகத்தின் அவதானிப்பு உண்மை என்றானது. எங்கள் குழு குலையத்துவங்கியது . கமலக்கண்ணனுக்கு என்னை தோற்கடிக்கும் வாய்ப்பாக இதை பார்க்க துவங்கினார் . அதை பின்புலமாக கொண்டு நான் எடுக்கும் முயற்சிகளை குறைசொல்ல ஆரம்பித்தார் . கட்டுப்பாடு ஒருகட்டத்தில் நிலைகுலைந்தது . நானும் மன அளவில் இதை இத்துடன் முடிக்கும் முடிவிற்கு வந்திருந்தேன் . அதன் பொருட்டு  பொறுமை காக்கத்துவங்கினேன்  . இது நான் எடுத்த முடிவு , என் பொருட்டே அனைவரையும் வெளிக்கொண்டுவந்தேன் . இந்த பதவி இதுவரை யாருக்கும் ஒன்றும் செய்யவில்லை . இனியும் அது செய்யப்போவதில்லை. அதை முறையாக பயன்படுத்த தெரிந்தவர்களுக்கே அது தன்னை முழுவதுமாகத் திறந்து காட்டும் . இவர்கள் வேறுமாதிரியானவர்கள் . ஒரு போதும் அதை புரிந்து கொள்ளப்போவதில்லை . அதை செய்ப்பவனே இவர்களின் முதல் எதிரி என்கிற பழங்குடி மனோநிலையில் இருந்தார்கள் 

அதற்குள் பாலன் தன நகர்தலை தொடர்ந்தார் , ஒல்லி சேகர் அவரின் பால்ய நண்பர் , ஓர் இரவு அவரிடம் அழுது தன்னை நொந்து , பல வாக்குறுதிகளை கொடுத்ததும் இருவரும் கட்டி அனைத்து , ஒரு உறுதிப்பாட்டை அடைந்தனர் . கமலக்கண்ணன் தாமோதரன் மறுநாள் ஒருமுறை தன்னை சந்தித்தால் அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும் என்று பாலன்  சொல்லிச்சென்றார் . அன்றிரவே கமலக்கண்ணன் அவரை சென்று சந்தித்தார் .எனக்கு இவர்கள் நிகழ்த்தும் அனைத்தும் உடனுக்குடன் செய்திகளாக வந்துகொண்டே இருந்தது . பாலனே அது என்னை வந்தடையும்படி வெளியிட்டும் இருக்கலாம் . அது என்னை வந்தடையும்போது நான் முற்றிலுமாக இவர்களை வைத்திருக்கும் அரண் தகர்ந்துபோகும் என திட்டமிட்டிருக்கலாம் . நானும் அதற்கு முற்றிலுமாக ஒத்துழைத்தேன்

இவர்களை நான் வெளியே அழைத்துவந்து சந்தியில் விட்டுவிட்டேன் என்கிற குற்றஉணர்வை அடையவும், கெட்டபெயரையும் சம்பாதிக்க விரும்பவில்லை . அது தானாக உடையும்வரை காத்திருந்தேன் . அதுவும் நீண்டநாளெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை . ஒரே இரவு அனைத்தும் மாறி அமைந்தன . என்சாமாதத்துடன் பாலன் தூதுக்குழுவுடன்  காலை துவங்கிய பேச்சுவார்த்தை . மதியத்திற்குள் முடிவை எட்டிவிட்டது.

அது ஒரு அற்புதமான நாடகீயத்தருணம் . முதலில் பாலன் சார்பாக பேச வருவதாக செய்தி எனக்கு தெவிக்கப்பட்டது . நான் என் நெறியை சொன்னேன் .  “நான் இதற்கு ஆதரவில்லை , ஆனால் நீங்கள் விரும்பினால் நிகழ்த்திக்கொள்ளுங்கள் , அதற்கு நான் எதிர்ப்பில்லை. அதே சமயம் உங்கள் முடிவு என்னை கட்டுப்படுத்தாதுஎன்றேன். நான் சொன்ன கடைசீ வாக்கியம் அவர்களுக்கு முக்கியமானதாக படவில்லை. நான் அவர்களுக்கு கொடுத்த எச்சரிக்கையும் அதுதான். வெய்யிலின் மணற்பரப்பில் வெறும்காலுடன் நிற்பவனின் நிழலை தேடும் பரிதவிப்பு அவர்களிடம் காணப்பட்டது . அது எனக்கு வேடிக்கையாக இருப்பினும், அது அவர்கள் வாழும் உலகம் . அந்த உலகில் நானில்லை , அதனால் அதன் வலி எனக்கு தெரியாது இருக்கலாம்

எனக்கு ஜெயகாந்தனின் கட்டுரை நினைவிற்கு வந்தது . ஒரு மனம்பிறழ்வு நோய் மருத்துவமனைக்கு சென்றவர் , பலவித நோயாளிகளில் மத்தியில் , காதில் பெரும் சப்தம் கேட்பதாக காதுகளை இறுக்க மூடி கடும் அவதிப்படும் ஒருவரின் அவஸ்தையை சில நிமிடம் பார்த்தவர் , அந்த சப்தம் தனக்குத்தான் கேட்கவில்லையோ என நினைத்து அங்கு நிலவிய நிசப்தத்தை  உடைத்துப் பார்க்க , தனக்கு கத்த வேண்டும் என்கிற எண்ணத்தை , தான் வெளியே செல்ல முடியாதாகிவிட போகிறது என்கிற பயம் தடுத்ததாக நகைச்சுவையாக எழுதி இருப்பார் . அதைப்போல அவர்கள் வாழும் உலகில் அவர்களுக்கு காதுகளில் கேட்கும் ஒலி எனக்கு கேட்கவில்லை போலும்.

வந்திருந்த பாலனின் பிரதிநிதிமீசைசுகுமாரிடம் , இளிவரள் நிபந்தனைகள்  , கோரிக்கைகள், வேண்டுகோள்  இப்படி ஏகத்துக்கும் சொல்லியனுப்பினார் . அது அவர்களின் புத்திவிகாசம் . அற்புதம்ஏன் இவர்கள் இன்னும் இப்படியே இருக்கிறார்கள் என்பதற்கு அதன்பிறகு  எனக்கு விளக்கமே தேவைபடவில்லை. மதியம் 3:00 மணிக்கு பாலன் வந்திருந்தார் , கோபம், வெறுப்பு, அழுகை , அணைப்பு என நவரசபரிதமான காட்சிகள் நடந்தேறின . நான் ஒருவார்த்தையும் பேசாது இந்தக்கூட்டத்தை பார்த்தபடி இருந்தேன் . எனக்கு இது சீக்கிரம் ஒரு முடிவிற்கு வந்தால் போதுமென்றாகிவிட்டது . அது ஒரு இரண்டுமணிநேர நாடகம் . விரைந்து முடிந்தது

நாளை காலை சட்டமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரிந்தவர் மீளவும் இணைந்ததை நிரூபித்து பின் செல்லலாம் என முடிவாயிற்று. அது ஒரு பலிகளத்திற்கு செல்லும்பாதை போல , எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டிக்கொள்ளாது , நான் சென்று கொண்டிருந்தேன். பாலன் வந்து சென்றதை தங்களின் வெற்றியாக கருதி , நான் பக்கத்திலிருப்பதை மறந்து தங்களையும் கடந்து அவர்களுக்கும் முன்னே அவர்கள் தங்கள் பலிகளத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...