https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 145 *நீர்மையை எதிர்த்து *

ஶ்ரீ:




பதிவு : 145 / 219     தேதி :- 01 ஆகஸ்ட்  2017

*நீர்மையை எதிர்த்து  *

இயக்க பின்புலம் - 70
அரசியல் களம் - 41




எல்லாம் முடிந்து போனது இனி சாவதை தவிர வேறு  வழியில்லைஎன்று புலம்பியபடி பூங்காவனம் எழுந்து  சென்றார்நான் அவருக்கு எந்த சமாதானமும்   சொல்லும் மனநிலையின்றி அவர்   செல்வதை   பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.பத்து வருடம் வாழ்கையில் ஒரு அங்கமென அரசியல் இதுவரை   இருந்தது ,    இனி இல்லையென்றானதுஅதற்கு  உழைத்தது பயனற்று போனது .  தனித்து   விடப்பட்டது   போல ,  மீண்டும் கால்பதிக்க நிலம் தேடுவதை போல , புது பயணத்தை தொடங்குவது போல” 


பூங்காவனம் எழுந்து சென்ற பிறகு நிலவிய நீண்ட   அமைதி , வலிமிகுந்ததாக இருந்தது . என்னென்ன நிகழ்ந்தது விட்டது , ஏன் இவை அனைத்தும் ஒரே நாளில் இவ்வளவு விரைவாக நிகழ வேண்டும். என ஒன்றும் புரியாது அமைந்திருந்தேன் . பூங்காவனம் சொன்னது நிஜம் . அனைத்தும் இன்று ,இங்கு ஒரு முடிவிற்கு வந்துவிட்டது .இனி இது பிறிதொரு  வடிவமெடுக்கும்   என்பதற்கு எந்த வாய்ப்புமில்லை . இது ஒரு இறப்பின் தருணம், அது நிகழ்கின்ற சமயம் நம்பமுடியாத பிரமையை தோற்றுவிக்கும். “இல்லை இதோ எழுந்துவிடுவார் என ஏதோ ஒன்று நம்பிக்கை அளித்தபடி இருக்கும் , ஒரு நாடகீய தருணம் போல யாரோ ஓடிவந்து இல்லை இல்லை என சொல்லப்போவதில்லை . புரண்டு படுத்ததும், சே இது கனவு என தித்தித்து ,  வாழ்கை இன்னும் மிச்சமிருக்கிறது என புரிதலை அடைவதற்கு” . இனி வாழ்நாள் முழுவது ஏன் என்கிற இந்த சாவியை பொருத்தி திறக்கும் ஒரு பூட்டை கண்டடைய போவதில்லை . இதை சுமந்தலைவது மட்டுமே இப்பொது  விதிக்கப்பட்டது . பலவகை எண்ணப்பெருக்குடன் வீடு சென்று சேர்ந்தேன் .
-
பாலனை ஹோட்டல் அரிஸ்டோவில் சந்தித்தது ஒரு கனவு போல சில மாதங்கள் கடந்தும் போனது . அதன் மிச்சமென எங்கோ நினைவில் தங்கி இருந்தது . ஒரே ஒரு விஷயம் .ஒரு ஆறாத வடு போல .காய்ந்து போனாலும் , தவறி எங்காவது பட்டுவிட்டால் குருதி பெருகுவதை நிறுத்தி முடிவதில்லை . யாரவது ஓரிருவர் வாரத்திற்கு வந்து இயக்கத்தின் சீரழிவை பற்றிச் சொல்லி, என் வருத்தத்தை ,நீர் வடுவை போல காயாது வைத்திருந்தனர்


பாலனின் சொல்அவனால் ஆபத்தில்லை " இது ஒருஆப்தவாக்கியம் போல ,ஸ்மாரணையில் கேட்டபடி இருந்தது . எனக்கு கோபமென்ற ஒன்றில்லையா , அதனால் ஆபத்தில்லாதவனா? , அதனால் நான்  பரிபவப்படலாம் .உலகம்  சக்தி உள்ளவன் என்றால் . அவன் காலை பிடித்தாவது தன் வாழும் வழியை தேறவேண்டியது .இப்படி ஒரு நிலைப்பாடா . எனக்கென திட்டமில்லாது பதவிநோக்கமில்லாது உள்நுழைந்தது குற்றம் . ஒருவனை மிதித்து மேலேறுபவனே கவனிக்கத்தக்கவன் . என்னிடமிருந்து விலகியிரு என அவன் சொல்ல வேண்டாம். ஏனெனில் மற்றவனே  அதை செய்து கொண்டுயிருப்பான் . பிறருக்கு உதவுவதன் பொருட்டு வருபவன் கோமாளி . அவனிடம் நீ நெஞ்சை நிமிர்த்தி சொல்வாய், நீ ஆபத்தற்றவன் ஆகவே நீ உதாசீனப்பட  தகுதியானவன் , நீ புறந்தள்ளப்படவேண்டியவன் ஏனென்றால் நீ ஆபத்தில்லாதவன்

ஏதோ ஒன்று என் அமைதியை தொடர்ந்து உடைத்தபடி இருந்தது.என்னதான் நான் அமைதியாக  என்வேலையை பார்த்தபடி இருந்தாலும், முன்போல இதை ஒதுக்கி தள்ள தள்ள அது என்னை விளக்கி , விளக்கி முன்னே வந்து நின்றபடி இருந்ததுகனகராஜ் சேகர், ஒல்லி சேகர் ,கமலக்கண்ணன், தாமோதரன் அவ்வப்போது தலை காட்டத்துவங்கினர். மெள்ள பாலனின் போக்கு பேசப்படுவது தவிர்க்க இயலாது போனது . ஒரு கட்டத்தில் தொகுதி அமைப்பிலிருந்து என்னை சந்திக்க ஆற்றாமையுடன் வந்த கூட்டம் பெறுக துவங்கியது . அவர்கள் அனைவரும் எளியவர்கள் அவர்களுக்கு வேறு வடிவம் சொல்லப்பட்டிருந்தது . எனக்கு அரசியலில் விருப்பமில்லை என , இதற்கு பதில் சொல்லும் மனநிலையை நான் இழந்து பலகாலமாகிவிட்ட சூழலில் அது உண்மைபோலவே ஒரு தோற்றத்தை ஏற்ப்படுத்திவிட்டிருந்தது .ஆனால் அது நீடிக்கவில்லை .

உண்மை ஒரு அலர் போல ,எங்கும் பேசத்துவங்கும் . நான் மறுபடியும் பேசுபொருளானேன் . முக்கியஸ்தர்கள் சந்திக்கும் போது அடுத்தகட்டம் விவாதிக்கப்பட்டது . இந்த போக்கு ஆறுதலிக்க வல்லதேயன்றி . அடுத்த நகர்வு என்கிற அரசுசூழ்த்தலை நோக்கி நகரப்போவதில்லை . ஒரு சமாதானத்தை நோக்கிய திட்டம் அவர்கள் எல்லோரிடமும் பொதுவில் ஒரு எண்ணமாக இருந்தது , அது ஒரு விழைவு மட்டுமே செயல்திட்டமல்ல . ஆகவே அது ஒரு வேண்டுகோள் , மன்றாட்டு . நான் அதற்கானவனல்ல . நான் தெளிவாக திட்டமிடப்பட்டு வெட்டி எறியப்பட்டவன் , மறுபடியும் இங்கு துளிர்க்க அனுமதிக்கப் போவதில்லை  . அதற்காக  இவர்களுக்கான  தலைமை நான் ஏற்கப்போவதில்லை . எனக்கு அரசியல் விழைவு  என ஏதுமில்லை . பலிகொடுக்கப்பட்ட வலி அது  உணரப்பட்டு அதற்கான மருந்து என்ன என்பதுதான் என் தேடலாக இருந்தது

வருபவர் அனைவரிடமும் ஏதோ ஒன்று செய்தாக வேண்டுமென்கிற வேட்கையை பார்க்க முடிந்தது. செயல் வடிவம் கொடுக்கவோ அதை முன்னெடுக்கவோ இவர்களால் இயலாது . இது ஒரு ஆதரவு போக்குமட்டுமே  . உனக்கென திட்டமிருந்தால் இவர்களுகளை  வழிநடத்தலாம் ஆனால் அது மிக நெடியபயணம்.துவக்கி வென்று சில அடி முன்னகரந்தால் . இவர்கள் அனைவரும் ஒரு கோரிக்கையின் வடிவில் வந்து நிற்பார்கள்  ,அந்த வலையில் மற்றுமொரு  சிக்கிக்கொள்ள நேரும்.நான் இனி எதற்கும் தலைமை தாங்கப் போவதில்லை , ஒரு புது முயற்சியை துவங்கவோ அல்லது பிழைகளை நிகர் செய்யவோ விரும்புபவனுக்கு நெருக்கடி இருக்கக்கூடாது . அதற்கு பணிந்தால் அது முழுமையாக நிறைவேறாது .


எனக்குள் ஓங்கி ஒலித்தபடி இருந்தது . அந்த ஆப்த வாக்கியம் மட்டுமே  "அவனால் ஆபத்தில்லைஇதற்கான தீர்வு என எனக்கு எதுவும் புலப்படவில்லை ,என்பதைவிட இதில் நான் ஆற்றுவதெற்க்கென என்ன இருக்கிறது . என்று யோசித்தபோது  ,பாலனுக்கு எது சிக்கல்  என்பதை அவதானிக்க வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை , அவரின் மாற்றத்திற்கு எது வேண்டுமானால்  காரணமாக இருந்திருக்கலாம் . என்னது இப்பொது ஒரு பொருட்டே அல்ல ,ஆனால் இன்று என்னை தேடி வந்து கதறும் இவர்கள் என்மீதிருந்த விருப்பம், அன்பினால் மிக குறுகிய காலத்திற்குள் என்னை அவர்களின் ஒருவனாக ஏற்றுக்கொண்டார்கள். இதை மற்றோரு முறை அடையமுடியாது . இவர்களை இழக்கவும் நான் தயாரில்லை  அதற்கு பாலன் மீதிருக்கும் வெறுப்பை இங்கு உமிழ காரணமென ஏதுமில்லை . இதில் நான் செய்யக்கூடியது ஒன்று மட்டுமே , பிரதான நதியிலொருந்து விலகி சந்தர்ப்பவசத்தால் பிரிந்து குட்டையென தேங்கி நிற்கும் இவர்களை மீளவும் நதியில் இணைக்கமுடியுமானால் அது நான் ஆற்றுவதற்குறியது .அது பற்றி தீவிரமாக யோசிக்க துவங்கினேன.


கிருஷ்ணமூர்த்தி வகையறாக்களை தாண்டி இன்று பாலனையே தொட்டு தெளிவுறும் நிலை இல்லை என்கிறபோது. அவரைக்கொண்டு வைத்திலிங்கத்தை தொடர்புகொள்வது இனி நடவாது . அரசியல் வேண்டாம் என்கிற முடிவு ஒருபக்கம். தினம் சந்திக்க வருபவர்களின் வற்புறுத்தல் மற்றொரு புறம்  தாண்டி அந்த " ஆப்த" வாக்கியம். பிறரின் உபயோகத்திற்கு தன்னை கொடுப்பது , நல்லதுதானே , உபயோகித்து பின் தூக்கியெறியப்படுவது பெரும் வலியை கொடுப்பது . நான் முடிவுசெய்துவிட்டேன் , என்னை அவ்வளவு எளிதில் தூக்கியெறியமுடியாது . இதை இப்போது செய்யாது  விடுத்து நாளை என்னை  நொந்து  வருத்திப்பயணில்லை. பூங்காவனம் போல கண்கள் நீர்மை கொள்வதால் தீருவதல்ல அரசியல் . அது என்னால் முடியாது .நீ விலகி சென்றாலும்  எதிர் வருவது  வலியவந்து உன்னை மோதுமென்றால் . அத்துடன் மோதிப்பார்ப்பதே ஆற்றக்கூடியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்