ஶ்ரீ:
பதிவு : 144 / 218 தேதி :- 31 ஜூலை 2017
* நிலம் தேடி *
இயக்க பின்புலம் - 69
அரசியல் களம் - 41
நான் சட்டென எழுந்துகொண்டதை , பாலன் எதிர்பார்க்காததால் சிறிது துணுக்குற்று பின் அவரும் எழுந்து கொண்டார் . மூவரும் அந்த உணவு விடுதியைவிட்டு வெளியே வந்தோம் பூங்காவனம் சென்று அவருடன் வண்டியில் ஏறிக்கொண்டார் . எனக்கு ஏன் இவர் பாலனுடன் செல்கிறார்? அவர் வந்த வண்டி என் அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறது. எப்படி திரும்ப வருவார்? என குழம்பிய சிந்தனையுடன் மெதுவாக நடந்து என் அலுவலகம் வந்தேன், பாலன் சொன்ன கோணத்தில் நான் இதுவரை யோசிக்கவில்லை , பாலன் சொல்வது பொய் என்றால் , நான் வைத்திலிங்கத்தை சந்திக்க போவதேல்லை, நான் இதுவரை செய்த அத்தனையும் வீண் உழைப்பு என்றாகும் . அடுத்து என்ன என்பது ஒரு பெரிய கேள்வியாக தொக்கி நிற்கும்.
அவர் சொன்னது உண்மை என்றால் , அது பாலன் என்னை செய்ய சொன்னது ஆனால் அதை நானாக செய்யவில்லை . பாலன் செய்ய சொன்னது. அதை அவரை வைத்துக்கொண்டு அதை பேசுவதுதான் சரி . வைத்திலிங்கத்திற்கே கூட என்னுடைய குழு சென்று என் சார்பாக பார்த்ததில் , என்னை உள்ளிருந்துகொண்டே கவிழ்க்கும் ஒரு கீழ்மை அரசியல்வாதி என்கிற தேவையற்ற பார்வையை அவருக்கு கொடுத்திருக்கலாம் . அரசியலில் இதைப் போன்ற கவிழ்ப்பு வேலைகளை ஒரு திறமை என்றே பார்க்கப்படும். எனக்கது தெரிந்தே இருந்தது . இருப்பினும் என்சுபாவம் அதுவல்ல என்பதாலும் , நான் அரசியல் ரீதியில் அவருடன் தொடர்ந்து ஆற்றவேண்டிய வேலைகள் பாக்கியுள்ளது. இத்தகைய தவறான புரிதலுள்ள ஒருவருடன் , இணைந்து செயல் படுவது என்னக்கு ஒரு மனத்தடையை ஏற்படுத்தும் , அதை நான் விழையவில்லை .
அது இப்போது விலகிவிடும் . அப்படி விலகினால் , அதுவே மூப்பனார் என்னிடம் சொன்ன சில விஷயங்களை என் கோணத்தில் அவரிடம் பேசும் வைய்ப்பு , அது நான் எதிர்பார்த்ததே . அது நிகழும் எனில் எனக்கு அடுத்த பாதைக்கு தடையாக உள்ளது விலகும். அது நிகழாது போனால் பெருத்த நஷ்டம் எனக்கு . இன்று திறந்திருக்கும் கதவு யாருடைய பயண்பாட்டிற்கும் வராது தூர்ந்து போகும்
என் அலுவலகம் வந்து சேர்ந்து சில நிமிடங்களில் பூங்காவனமும் வந்துவிட்டார் . எனக்கு அவரது வேகம் மிக மகிழ்வாக இருந்தது . தேவையற்று குழப்பிக்கொள்ளும் வாய்ப்பில்லை . பூங்காவனம் வந்ததும் பாலன் அவரிடம் சொன்னதாக என்னிடம் சொன்னது ,“இதெல்லாம் கொண்டுபோய் நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை” , அவர் என்னிடம் சொன்னார், என்றார் . “அதை அரியிடம் செய்ய சொன்னது நான் தானே . இதை எதற்கு இப்போது பேச வேண்டும்” என்றதற்கு . பூங்காவனம் . “பின் அதை எதற்கு இப்போது அரிக்கு எதிராக பயன்படுத்துகிறாய். அதை சொல்லி கமலக்கண்ணனை ஏன் சீவ வேண்டும் . இதை நீ செய்யவேண்டிய காரணம் என்ன . அரி கேட்டபடி நீ இதில் எதையாவது ஒன்றை செய்யாது அவன் இயக்கத்திற்கு திரும்பமாட்டான் , தெரியாத உனக்கு என்றதும்” பாலன் , “சரி இது எனக்கும் புரிகிறது ,அரசியலில் எல்லவற்றையும் இப்படித்தான் செய்யவேண்டும் என யாரும் யாரையும் நிர்பந்திக்க முடியாது” . “விடு , இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை ,கொஞ்சநாள் கோபமாக இருப்பான் , அவன் ஒரு வியாபாரி பிறகு தன் வேலையை பார்க்க போய்விடுவான் அவனால் நமக்கொன்றும் ஆபத்தில்லை” என சொன்னதாக பூங்காவனம் சொன்னதை கேட்டபடி இருந்தேன் , எந்த உணர்ச்சியுமற்று கேட்டபடி இருந்தேன்.
பூங்காவனமும் நானும் ஏதும் பேசாது சிறிது நேரம் அமைந்திருந்தோம் , அவர் கண்கள் நீர்மைகொள்ளத்துவங்கியது , மிக எளிய மனிதர் , மற்ற இயக்க தோழர்களால் பெரிதும் மதிக்கபடுபவர் . வயதில் மூத்தவர் அவர் கண்கலங்குவது எனக்கு நெகிழ்வாக இருப்பினும், அவரை சொற்களால் ஆறுதல் சொல்லும் மனநிலையில் நான் இல்லை . இது என் அரசியல் வாழ்வை முட்டுச்சந்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது . எனக்கு இது அதிர்ச்சியைத்தரவில்லை என்பது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது .
நான் எங்கோ என் ஆழ்மனபமத்தில் இதை உணர்ந்தே இருக்கிறேன் . இது இப்படி முடியாது போனால் . சரியாக இருந்திருக்காது. கடுமையாக இருந்தாலும் இதுதான் நிஜம். ஏனெனில் முழுநேர அரசியலில் இருப்பதைப்பற்றி நான் யோசித்ததேயில்லை.இரண்டாம் நிலை தலைமை பொறுப்பே எனக்கானது . முதல்நிலை தலைமைக்கு நான் லாயக்கற்றவன் என்பது எனக்கே தெரிந்ததுதான் .இந்த அளவில் நிகழ்நத்தவை எனக்கு மனசமாதானத்தை தருவதாக இருந்தது .
ஆனால் பூங்காவனம் பார்வை வேறு தளத்தில் இருந்தது . பாலனுடன் தனது இருபத்தி ஐந்து வருட உழைப்பு வீண்போனதாக உணரத்துவங்கியிருந்தார். எனக்கும் பத்து வருடம் வீணே கடந்து விட்டது எனில் அவை அர்த்தமற்றது , இளமையின் உன்னதமான காலங்களை இழந்திருக்கின்றோம் என்னை விட பூங்காவனத்தால் இதை சகிக்க இயலவில்லை வெறி எழுந்தவர் போல கதறத்துவங்கினார். தான் பாலனிடம் கண்ணனைவிட்டு பிரிய வேண்டியதில்லை என சொன்னபோது ஏறக்குறைய இதேபோல ஒரு மனநிலையில் இருந்து அனைவரையும் வெளிக்கொண்டுவந்தான் . மரைக்காயரை நம்பாதே என பலமுறை சொன்னதற்கு என்னை மீறி பல விஷயங்களை சொன்னான் , ஆனால் நிகழ்ந்தது என்ன, கேவலமான ஒரு நிலை கட்சிக்குள் அடையாளமற்று அனாதைகளைப்போல ஒரு பரிபவத்தை ஏற்படுத்தினான் .இவன் ஒரு அழிவு சக்தி அரி இவன் ஒருநாளும் நம்மை கரை சேர்க்கப்போவதில்லை . நீ உள்நுழைந்த போது , இதே பாலனும் கமலக்கண்ணும் என்ன என்ன சொன்னார்கள் என இதுவரை உன்னிடம் கூட நான் சொல்லவில்லை . உன்னால்தான் இந்த இயக்கத்தை மறுபடியும் பாதையில் கொண்டு வைக்கமுடியும் என்று. ஆனால் அதை செய்வதின் வழியாக அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் புகழும் செல்வாக்கினால் தாங்க முடியாத அழுக்காறு உள்ளவனாகிறான் . எல்லாம் முடிந்து போனது இனி சாவதை தவிர வேறு வழியில்லை, என்று புலம்பியபடி எழுந்து சென்றார் . நான் அவருக்கு எந்த சமாதானமும் சொல்லும் மனநிலையின்றி அவர் செல்வதை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.பத்து வருடம் வாழ்கையில் ஒரு அங்கமென இதுவரை இருந்தது , இனி இல்லையென்றானது. அதற்கு உழைத்தது பயனற்று போனது . தனித்து விடப்பட்டது போல , மீண்டும் கால்பதிக்க நிலம் தேடுவதை போல , புது பயணத்தை தொடங்குவது போல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக