https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 8 ஜூலை, 2017

அடையாளமாதல் - 118 *சொற்களை தொகுத்து கடத்தல் * .

ஶ்ரீ:






*சொற்களை தொகுத்து கடத்தல் *
இயக்க பின்புலம் - 45
அரசியல் களம் - 34





ஊழ் ஒரு பசித்த சிம்மம் போலே ,அது தன் இரையை கதறக்கதறக் கொண்டுசென்னு உண்டு எஞ்சியது வீசி எறிவதைப் போல . அதன் ஆடலினால் ஏற்பட்ட அனுபவக் கசப்புகளால் அனைத்திலிருந்தும் வலகி நின்று வர மறுப்பவர்களை நிர்பந்தித்து விட்டதை ஆற்றச்செய்து , அதன் கெடுபலனை இறுதியில் வழங்கும் படியான நிலையை கொடுத்தே நகருகிறது

சில நிமிடங்களுக்கு பிறகு என்னை மெள்ளத் திரட்டிக்கொண்டேன். சில கணங்கள் விழிமூடி அத்தருணத்தில் என்னை குவித்து , பின் திறந்தபோது உடல் அமைதிகொண்டிருந்தது. உள்ளம் அந்த அமைதியை வாங்கி அலையவிந்தது. இப்போது என்னால் உள்ளும் புறமுமாக என்னுள் ஆழ்ந்து கொள்ள இயன்றது .இது ஊழினால் தெளிவாக பின்னப்பட்ட வலை . ஊழின் பொருட்டு மனிதர்களின் ஆடல் , இந்த சந்தர்ப்பத்தில் விவாதத்தில் ஈடுபடுவது எவ்வித பயனையும் தரப்போவதில்லை. இப்போது இவர்களிடம்இல்லை, முடியாதுஎன நான் தீர்மானமாக சொன்னாலும் . அது இத்துடன் நிற்கப்போவதில்லை , அடுத்தடுத்து நிரை நிரையாக நிர்வாகிகள் வந்துகொண்டே இருக்கப்போகிறார்கள் .அவர்கள் அனைவருக்கும் பதில்சொல்லிக் கொண்டு இருக்க முடியாது . சிறிது கால அவகாசம் வேண்டும்என்னுடன் நான் உரையாடுவதற்கு  .

இறுதியில் கமலக்கண்ணன் என்ன நிகழக்கூடாதென நினைத்தானோ அதுவே நிகழ்ந்திருக்கிறது . இதில் எவ்வகையில் எனக்கு சம்பந்தமில்லை என சொன்னால், கேட்பவர் வெறும் சிரிப்புடன் அதை கடந்து செல்வார்கள் . விதி என்பார்களே அது இதுதான் போலும் . இதிலிருந்து என்னால் மீளவேமுடியாது . அது மட்டும் தெளிவாக தெரிகிறது. மாலை மறுபடியும் சந்தித்து பேசலாம் , அதுவரை எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றதும்  . அப்போதைக்கு என் முடிவு ஏற்கப்பட்டு  அனைவரும் புறப்பட்டு சென்றார்கள் 

நெடுநேரம் என் அலுவலக அறையிலேயே அமர்ந்திருந்தேன் எதுவாகிலும் என்னுள் தர்கித்து ஊறி எழுந்த பிறகே நான் முன்னடி எடுத்துவைத்திருக்கிறேன் . நான் என்னை ஆழமாக கேட்டுக்கொள்கிறேன் . இந்த தலைமை பதவி வேண்டுமானால் நீ அகவயமாக நினைக்காத ஒன்றாக இருக்கலாம் .ஆனால் , முதல் நாள் நினைவுகளை திரும்பி பார்த்தால் . உன்னுடைய குற்றம் உனக்கு தெளிவாக தெரியும். நீ அவர்களது வாழ்கையில் அத்துமீறி வராது போயிருந்தால் , அவர்களின்  அரசியல் வேறு பாதைக்கு சென்றிக்கும். நீ உள்நுழைந்ததாலேயே , இது இவ்வளவு சிடுக்குகள் நிறைந்ததாக மாறியுள்ளது . உன்னை அவர்கள் ஒதுக்கி கூட்டம் நடத்தியபோதே நீ வெளியேறியிருக்கலாமே, உன்னை யார் வெஞ்சினம் உரைத்து அனைவரையும் தாண்டி உள்நுழைந்து உன்னை நிறுவிக் கொள்ளச் சொன்னது . எந்த அடிப்படையில் அது நிகழ்தினாய் . இவர்கள் மிக எளியவர்கள் . அவர்களுக்கு விதிக்கப்பட்டதை அடைந்து வாழ்ந்தோ, வீழ்ந்தோ போயிருப்பார்கள் . நீ யார் அவர்களின் பாதையை மாற்றுவதற்கு . ஆனால் மாற்றினாய் . இதுதான் அதற்கான விலைகொடு அதை

அன்று போஸ்டர் விஷயத்தில் உனக்கு ஒன்றும் பெரிய பாதிப்பில்லை என்பது உண்மைதான் .அது வெறும் அச்சடித்த காகிதம் . அதில் நீ எங்கிருந்தால் என்ன . ஆனால் அதை உனக்கு வேண்டியவர்கள் வந்து வந்து ஆர்த்து பேசியதை ஏன் நீ காது கொடுத்து கேட்கவேண்டும் . அதனைக்கொண்டு உன்னை ஊதி ஊதி பெருக்கிக்கொண்டாய் . அன்று ஒரு பாரில் குடித்துவிட்டு கமலக்கண்ணன் உன்னை தெத்துவாயன் என்றான்நீ தெத்துவாயான் தானே , இல்லையா , ஆமாம் என அதை அனுமதித்து கடந்து விலகியிருக்கலாம் . இவனால் ஒரு மேடை ஏறி பேசமுடியுமா என சொன்னான் என்று யாரோ வந்து சொன்னபோது ,ஏதோ குடிகாரன் பேச்சி என ஒதுக்கித்தள்ளாது கமலக்கண்ணன் சொன்னதை நினைத்து, நினைத்து மாய்ந்து போனாய் , அதை முறியடித்து நின்று காட்டவேண்டும் என ஏன் முனைந்து நின்றாய் . நீ சகஜமாக் அங்கு செல்லாலதால் இப்படி ஏதாவது ஒன்று கிளர்ந்தெழும் என் உள்மனதில் நினைத்தாய்

எங்கு எவ்விதம் அதை கடந்து காட்டப்போகிறாய் . அதை யார் பார்க்கப்போகிறார்கள் . ஏதன் பொருட்டு அதை நீ செய்யவேண்டும் . அந்த பிறவிக்குறையை சுட்டி உன்னை உதாசீனப்படுத்தியவர்களுக்கு முன் வென்று தருக்கி நின்று காட்டவேண்டும் என நினைத்தாய் .இதோ அதற்கான சந்தர்ப்பம் உன்வீட்டு வாசல் தட்டி காத்திருக்கிறது. போ நின்று தருக்கி காட்டும். இது தான் அதற்கான  சந்தர்ப்பம் நினைத்ததை செய்துக்காட்டு . அதன் பலன் நிகழ் காலத்தில் சிறு பகுதியும் வருங்காலத்தில் மிச்சத்தையும் கொடுத்துச் செல்லப்படுகிறது .

நீ சிறு வயது முதற்கொண்டே பெரிய கூட்டுக்கும்பத்தில் பிறந்தாலும் இருந்தும் தனியனாகவே வளர்ந்தாய் , அதற்கு வெவ்வேறு காரணங்கள் . நீ திக்கி திக்கி பேசுவதும் ,சில சமயங்களில் பேசவேமுடியாதவனாகி விடுவதும் இனந்தெரியாத பயவுணர்வினால் சிலரின் கேள்விகளை தவிற்க அனைத்திலிருந்தும் எட்டி நின்றாய் . உன்னுடைய விலகல்கள் ஒருவித அச்சத்தை உன்னுள் ஆழப்புதைத்துவைத்தது . உன் வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் உன் உதவிக்காக நீ யாரையாவது சார்ந்தே இருந்திருக்கிறாய் . நிறைய நண்பர்களை தேடிக்கொண்டாய். நண்பர்கள்தான்  உனக்கு என்றும்  அணுக்கமானவர்களாக இருந்தார்கள்  . அவர்களிடம் ஏனோ உனக்கு தயக்கமிருப்பதில்லை . அரசியல் தொடர்புகளையும் நட்பென ஏற்பட்ட  பிழைபுரிதலால் இப்புதிய சிக்கல் எழுந்துள்ளது . கல்வி பாதிக்கப்பட்டதும் இதே பிரச்சனையால் தான்


ஒருமுறை ஜிப்மர் மருத்துவரிடம் அப்பா உன்னை கொண்டு காட்டியபோது , உனது அச்சம் தான் பேச்சுத்தடைக்கு காரணம் என்றார் . சில மருத்துவர்கள் சிந்திக்கும் திறன் வேகமாகும் போது  அதற்கு பேசுசும்வேகம் ஈடுகொடுப்பதில்லை . பிரிதிரொருவரை காட்டிலும் நீ சிந்திக்கும் வேகம் அதிகம் என்றார் . அது ஆறுதலுக்காக இருதிருக்கலாம் . ஆனால் அதுவே உன்னை எப்போதும் பிறிதொருவருடன் பேசுவதற்கு ஒரு பெரும் தடையை குறுக்கே வைத்துவிட்டது . நீ உனக்குள்ளே ஆழ்ந்துபோவது அதனால்தான் போலும் . சராசரி பேச்சிற்கே இந்த தடையை சிறுவயதில் எதிர்கொந்தாலோ என்னவோ நீ , உனக்குள் பேசிக்கொள்ளும் வழமைக்குள் வந்தாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக