https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 5 ஜூலை, 2017

அடையாளமாதல் - 112 / 1 *மரமெனும் மனித இதயங்கள் *

ஶ்ரீ:





*மரமெனும் மனித இதயங்கள்   *
இயக்க பின்புலம் - 39
அரசியல் களம் - 33







அந்த சில நிமிட களேபரத்திற்கு  பின் அலுவலக மாடியின் அறையில் பாலன் தனித்து அமர்ந்திருந்தார், எங்கும் மௌனம் கணத்திருந்தது மாலை 5:45 தாண்டி விழாத் துவங்குவதற்கான எந்த அறிகுறியும இல்லை.நான் கூட்டம் திமிறி வழிந்த பின்கட்டிலின் ஒரு ஓரத்தில் தனித்திருந்தேன் . அருகணைந்தவரகளிடம் முகம்நோக்கி ஏதும் பேசாத்தால் அவர்கள் ஓரிரு சொல்லுக்கு பிறகு அந்த திறலில் சென்று மறைந்தபடி இருந்தனர்  , அத்திரளின் மையத்தில் கமலகண்ணன் தாமோதரனை சுற்றியிருந்த  மூத்த நிர்வாகிகள் கமலக்கண்ணனையும் பிறரையும் நோக்கிய கோபாவேசமும், அனுசரனையாக அறிவுறுத்தல் எச்சரிக்கையென கலைந்து எழுந்து பேசிக்கொண்டிருந்தது நீர்வீழ்ச்சி ஒலிபோல பிறித்தரிய இயலாது கார்வையாக கேட்டது, அனைவருக்குமே நடந்த எதிலும் உடன்பாடில்லை என்பதை என்னால் கவனிக்க இயலவில்லை  . நான் அவர்களிடத்தில் இருந்து எங்கோ தூரத்தில் இருந்தேன்.

கடைசியாக பேசிய சிலர் வெளியே சூழ்ந்திருந்த திரளை விலக்கி  நோக்கி அவர்களிடம் ஏதோ பேசிவிட்டு என்கைபற்றி இழுத்து கொண்டு பாலன் அறைக்கு சென்றனர் . நான் என் தலை முழுவதும் ஓடிக்கொண்டிருந்த எண்ணப்பெருக்கின் நுனியை பிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன் . விழா அரை மணி தாமதமாக துவங்கியது .ஒரே கூட்டமான கூட்டம் யார் யார்யாரோ வந்தனர் சென்றனர் ஒரே அலைமோதும் திரளின் பெருக்கு இதுவரை கூடியதில் செறிவானது , என்னால் மகிழ்ந்திருக்க இயலவில்லை யார் யாரோ புதிதாக இயக்கத்தில் இணைந்தனர் , சால்வைகள் மாலைகள் பாலனுக்கு விழுந்தபடி இருந்தது . நிறைய பேர் ஆட்டோவில் வந்தஇறங்கினர். அதில் சுகுமாரன் என்பவன் என் கைகளை பிடித்து வாழ்த்து சொன்னான் ஏன் எதற்கு என கேட்கக்கூட இயலாமல் , நான் தனித்த ஒரு உலகில் சஞ்சாரித்துக்கொண்டிருந்தேன்

மூளைக்குள் உதிரி உதிரியாக சிதறிக்கிடப்பதை தொகுக்க வேண்டும் . இல்லையெனில் அது என்னை உறங்க விடாது. இப்போது தனிமையும் அமைதியும் தேவை , முற்றிலும் கைவிடப்பட்டதுபோல உளைச்சல் தாங்கமுடியாததாக இருந்தது , ஏமாற்றம் புதிதல்ல துரோகமும் புதிதல்ல என்று புரிந்தாலும்  உடல் சிந்தனைப்பெருக்கால் நிறைத்து நீர்போல  அது நிரம்பி தத்தளித்தது .

பலவாறாக சிந்தனைகள்  நோக்கும் பக்கமெல்லாம் சிதறியபடி  இருக்க அதைக் கட்டுக்குள் கொண்டுவர பெரிதும் சிரமப்பட்டேன் . வீட்டின் இரவு தனிமையில் அதை ஒருவாறு பிரித்துக்கொண்டேன் . ஒன்று : பாலனின் இன்றைய கோபம் அர்த்தமுள்ளதாக பட்டது . முதல் பெரிய நிம்மதி அது எனக்கு . நான் உழைத்ததற்கான அங்கீகாரமது.அவரின் அளவிற்கு மீறிய வசவுகள் அவருக்கும் ஒல்லி சேகருக்குமான நெடுநாள் நட்பின் உரிமையில் எழுந்தவை , அதை புரிந்துகொண்டாலும் , சொல்லப்பட்டவைகள் கமலக்கண்ணனை நோக்காக கொண்டவை , ஆனால் இதன் தார்மீகப் பொறுப்பேறக்கவேண்டியவர் தாமோதரன். அவர்தான் என்னிடம் பொருளியல் உதவி பெற்று இந்த விழவிற்கு இடைச்செருகல்  ஏற்பாடுகளை செய்திருந்தார்

முழு விழவும் கிருஷ்ணமூர்த்தியின் செலவு என்றானபின் இவர்கள் தனிப்போஸ்டர் அடிக்க காரணம் என்ன . அவர்கள் பொதுவில் அடித்துக்கொடுத்த போஸ்டரில் பாலனே முன்னிலை படுத்தப்பட்டிருந்தார் , அதை நிகர் செய்யவே மாற்றுபோஸ்டர் வடிவமைக்கப்படவேண்டும் என்று சொல்லித்தான் என்னிடம் வந்தார்கள் , நான் சமீபமாக நடந்தேறிவந்த  முரண்களை தாண்டி , கிருஷ்ணமூர்த்தியின் கை ஓங்குவதற்கு எதிர்  மாற்று இங்குள்ளது என காட்டுவதற்கும் . பிற்காலத்தில் எழவிருக்கும் இயக்கத்தினரின் மத்தியில் எழவிருக்கும்  கண்டனத்தை எண்ணி  நிகர் செய்யும் நோக்கத்திற்க்காகவே நான் நடந்த எதையும் எண்ணிப்பார்க்காது பொது சிக்கலில் ஒன்றுசேரவேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் அதை செய்திருந்தேன் .

அதன் பொருட்டே அவர்களுக்கு மீளவும் நட்பாக கைநீட்டினேன் , ஒரு சந்தர்ப்பம் வரும் என்னைப்பற்றிய பிழையான கருத்துக்களை கலைந்துகொள்ளலாம் என நினைத்தேன் . ஆனால் அவர்கள் என் கழுத்தை துணிக்கும் ஆயுதம் வாங்க என்னிடமே பொருளியல் உதவிக்கு கைநீட்டும் அளவிற்கு இதயம் மரத்துப்போய் இருப்பார்கள் என எண்ணக்கூடவில்லை  . எதிர்காலத்தில் இதை போன்ற மர மனிதர்களை சந்திக்கப்போகிறேன் என அன்று எனக்கு காலம் புரியவைத்தது , அதன்பின் நான் சந்தித்த துரோகங்கள் அளவு கடந்தவைகள் . ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல என்கிற கவிதை வரிகளை நினைவு கூறுவதும் , அதை கடந்து செல்வது என் பாணியானது


நான் ஒருநாளும் என் இருதயத்தை மரமென மாற்றிக்கொண்டதில்லை . இது நான் எதிரகொண்ட முதல் வெளிப்படையான எதிர் நகர்வு  என்பதால் அன்று அடைந்த மனப்புழுக்கம் பிறிதொருமுறை அணுகாது பார்த்துக்கொண்டேன் . அவர்களின் சிந்தனை மடிப்பிற்குள் புகுந்து அதை ஆராய்ந்து அறிந்துகொள்ள முயற்சித்ததுதான் நான் அன்று ஆற்றிய ஆகப்பெரும் பிழை . அதன் பின் நான் கண்ட சித்தனை தொகுப்பும் ,சிறுமையுமாக அவர்களின் எண்ணங்கலின் வீச்சம்  .அது மக்கி , புளித்து நொதித்து நாரி போயிருந்தது , அதை திறந்து பார்த்திருக்க கூடாது .அது ஏற்படுத்திய ஒவ்வாமை நீண்டநாள் நீடித்திருந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்