https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 1 ஜூலை, 2017

அடையாளமாதல் - 106 * யாதெனினும் என்னப்போல *.

ஶ்ரீ:*யாதெனினும் என்னப்போல *
இயக்க பின்புலம் - 33
அரசியல் களம் - 33அவருடன் பேச என்ன இருக்கிறது . இருகரைகளிலும் கால் வைத்தது மட்டுமின்றி அதை நியாயப்படுத்தி பேசியவர் . மரைக்காயர் அவரை எங்கு வைத்திருந்தார் என்பதை சற்று நேரத்தில் அவருக்கு காட்டிவிட்டது மற்றுமின்றி கண்ணனுடன் ஒரு சிறு பிணக்கிற்கான விதையை போட்டுச்சென்றிருக்கிறார் . உண்மையில் என்ன நடந்தது என்பதை தன் வாழ்நாள்முழுவதும் அவர் கண்ணனுக்கு விளக்கியாகவேண்டும் அதைவிட கோமாளித்தனம் பிறிதொன்றில்லை . கைசொடுக்கும் நேரத்தில் அவர் செய்து சென்றது மறுபடி மறுபடி என் நினைவில் வந்தபடி இருந்தது.

அந்த நிகழ்வு காலமெல்லாம் நிலைத்து நிற்கக்கூடிய பாடத்தை விட்டுச்சென்றதுபின்னொருபோதும் இருநிலைகளை சிந்திப்பதுபற்றியும் , குறுக்கே கால்விடும் அரசியலை நான் ஒருபோதும் செய்ததில்லை . எனக்கான அடிப்படையிது இது , என் தன்னியல்பு இது
எனக்கான ஆளுமை இங்கிருந்து எழுந்தால்தான் அது நான் என்றாகும் . பிறிதொருவரை நான் ஏன் பிரதிபலிக்க வேண்டும். நான் நானாக மட்டுமே செயலாற்றமுடிவும் , அதன் பிழையானவை என் சுயம் கொண்டு சரிசெயகிறேன் . இனி எதற்கும் எவற்றையும் நாடி நிற்பதில்லை .

சில நேரங்களில் ஏற்படும் மனவழுத்தம் காரணமாக உள்ளே ஒரு குரல் நம்மை எள்ளல் செய்வதும் அதை சரி என பாதைகளை மாற்றுவதும் பலர் செய்ய கண்டிருக்கிறேன் . அவர்கள் வென்றாலும் அதில் முழுதமையமுடியாது, மனம் உலைந்த பின் தோற்று நிற்பதையும் , ஒருகால் அத்தகைய மனமாற்றமடைந்து தன் முயற்சியில் முதல் நிலையிலேயே தோற்றவர்கள் பின் எவருடனும் இணையமுடியாது தனித்துவிடப்பட்டதையும் பார்த்திருக்கிறன் . முதல் சொன்னவருக்காவது சில கால வெற்றி . அதனால் பக்கத்தில் அமர்த்திருக்கும் சிலராவது வெறுமனே பேசக்கிடைப்பார்கள் , இரண்டாமவர்களுக்கு உட்கார நாற்காலியே கிடைக்காது அதனினும் கொடுமை.

இந்த எளிய நிகழ்வினால் நான் அடைந்த தெளிவு அபாரமானது . நான் யார் ,என் உணவு என்ன ,எது எனக்கு ஜீரணமாகும் , என்பதை காட்டிச்சென்றது . அதுவரை எது எனது வழியாக இருந்ததோ அதில் என் கால்களை ஆழ ஊன்றி நடக்க துவங்கினேன்.

அன்று மதியம் நான் பாலனை சந்திக்கும்போது தெளிவாக இருந்தேன் . பாலன் நிலைதான் மிகவும் கவலைக்கிடமாக.          இருந்தது . “மரைக்காயர் நாளை டெல்லி செல்கிறார் காலையில் வாஎன்றார் . நான் முதல் முறையாக பாலனிடம் சொன்னேன்உங்கள் தலைவர் எனக்கும் தலைவராகி இருக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை ஆகவே நான் இனி அவரை சென்று பார்பதாகஇல்லைஎன்றேன் .அவர் மிகுந்த ஆச்சர்யத்துடன்அவர் டெல்லி செல்வது மத்திய அமைச்சர்பற்றி விஷயத்திற்காக . நமக்கு இது எவ்வளவு பெரிய வாய்ப்பு  . மாநிலத்தில் நமக்கேற்பட்ட பின்னடைவை இதைக் கொண்டு சரிசெய்ய முடியும் உனக்கு புரியவில்லையாஎன்றார் . நான்அவர் பிரதமமந்திரி ஆனாலும் நமக்கு ஒன்றுமில்லைஎன்று சொன்னவுடன் , மௌனமாகிவிட்டார் . இப்போது நல்ல சிந்தனை அவருக்கு வரப்போவதில்லை . நான் அவரை மறித்து பேசினது மட்டுமே அவருக்கு ஓடிக்கொண்டிருக்கும் . மேலதிகமாக எதையாவது பேசும் முன்பதாக அங்கிருந்து வெளியேறினேன் .

வைத்திலிங்கம்  அமைச்சரவை பதவியேற்றபோது பாலன் மட்டும் சென்றுவந்தார் . கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு அவர் களையும் மாலையும் வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவதுபோல சென்று வருவது சகிக்கமுடியாதபடி மாறிக்கொண்டிருந்தது . வெகு விரைவில் இதில் சிக்கல் வெடிக்கும் என்பதால் நான் மிக ஜாக்ரதையாக இருக்கும்படி எல்லோரையும் எச்சரித்தபடி இருந்தேன் . சிலர் எனக்கு கட்டுப்படாதவர்கள் . தாமோதரன் அவர் அனைவருக்கும் சீனியர் , அவர் சட்டமன்றம் சென்றுவருவதை பாலனே தடுக்க முடியாது . அதை பாலன் ரசிக்கவில்லை என்பது வேறுவிஷயம் . மற்றொருவன் திருபுவனை விஜயன் .  

விஜயன் இவன் ஒரு அலாதியான குணாதிசயமுள்ளவன் . தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் . யாருக்கும் கட்டுப்படாதவன் . ஆனால் பெரும் கூட்டம் கூட்டும் சாமர்தியன் என்பதாலும் வயதில் சிறியவன் என்பதாலும், என்ன செய்தாலும் அவன் செய்வதை முன்னிட்டு விசாரிப்பதை ஒரு கேலிக்கூத்தாக மாற்றிவிடுவான் . அவனிடம் எதைப்பற்றி பேசினாலும் அவன் பதில் மேடைப்பேச்சைபோல உதாரணம் ,அடுக்குமொழி ,என ஏகத்திற்கு எதையாவது பேசி இவனை ஏன் அழைத்தோம் என வருத்தமுற அல்லது கேட்டவரின் நிலையையே நகைப்பிற்கிடமாக்கி விடுவதில் சமர்த்தன் . ஓயாத வாயன் எதையாவது உளறிக்கொட்டி வீண் வம்பை வளைத்துவிடுவதில் தனித்திறன் உள்ளவன்.

பாலன் செல்லுமிடமெல்லாம் இவனும் செல்வதும் ,ஏதாவது ஒரு சிபாரிசு வேண்டி ஆல் அவனுடன் இருப்பான் . சிறு சிறு காரியங்களை செய்து கொடுத்தும் விடுவான் . அதனால் பயனடைந்தவர்கள் அவனுக்கு பிரதி செய்வார்கள் . பெரிதாக ஒருமில்லாது போனாலும் இருவேளை உணவிற்கு வழி செய்வதுடன் நாளை வந்து போவதற்கு பஸ்க்கு  தேற்றிவிடுவான் . அவனது தன் அரசியல் விஷயங்களுக்காக இழந்தத்தை வேடிக்கையாக சொன்னாலும் கேட்பவர் விழிகளில்  நீர் திரளுவதை தவிர்க்க இயலாது . வேறு எங்கும் ஏதும் பேரவில்லை என்றால் கடைசீயாக என்னிடம் வருவான் . என்மீது நிறைய மரியாதை உள்ளவன்
அடுத்த நாள் பஸ் மற்றும் மத்திய உணவு ஏதாவது சிரிக்க பண்ணிவிடுவான்

எல்லாம் மிக சொற்ப தொகைகள் . இவனை எது இப்படி நாலா பக்கமும் விரட்டியடிக்கிறது என நான் ஆச்சர்யப்பட்டதுண்டு . வேண்டுமென்றே பாலன் போகிற அனைத்து இடத்திற்கும் அவரை வெறுப்பேறற்ற செல்வதை பற்றியும் அதில் தான் செய்தது சரி என்றும் , சில சமயங்களில் தனக்கேற்பட்ட பரிபவங்களை பற்றியும் சொல்லுவான் . என்ன சொன்னாலும் அவன் காதில் ஏறுவதில்லை


என்னுடன் யார் என்ன சொன்னாலும் அதை பிறிதொருவருடன்  பகிர்ந்துகொள்வது என் வழமையல்ல . அது அவனுக்கு தெரியும் என்பதால் என்னிடம் அவன் நினைப்பதை எந்த தடையும்மின்றி சொல்லிவிடுவான் . பாலனுக்கு அங்கு என்ன நிகழ்கிறது எனபதை அளக்கும் ஒரு கருவி போல அவன் . நடப்பதை விவரிப்பதால் அதில் உள்ள நுட்பங்கள் அவன் அரியமாட்டான் . எனக்கு ஒன்று தெளிவாக விளங்க ஆரம்பித்துவிட்டது . பாலன் தன் மரியாதையை இழந்து வருகிறார் என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக