https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 25 ஜூலை, 2017

அடையாளமாதல் - 137 * கற்பிதத்தின் பிழை *

ஶ்ரீ:

பதிவு : 137 / 210     தேதி :- 24 ஜூலை 2017

* கற்பிதத்தின்  பிழை *


இயக்க பின்புலம் - 63
அரசியல் களம் - 39அது ஒரு கருதுகோளை நோக்கியக் பயணம் .நான் என்னையும் அறியாது அத்துடன்  இதுவரையில்  பயணமாகி வந்திருக்கிறேன்,முதல் முறையாக இயக்கத்தை பாலன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் இடமும் அவரது தன்னலம் , அரசியல் செயல்திறமற்ற தண்மையையும் காண்கிறேன், அதில்  வெறும் ஆசைகளும், தேவைகளுமே மண்டிக்கிடக்கின்றனதனி மனிதனின் கனவுகள் பெரும்பாலும் மலர்வதில்லை , ஆனால் ஒரு அமைப்பின் எண்ணமோ எதையும் சாதிக்கவல்லது . வாய்ப்புகள் நமக்கான கதவுகளை எப்போதும் திறப்பதில்லை , அது திறக்கிற தருணத்தில் நாம் அதையாற்றக்கூடிய இடத்தில் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் வடிவமைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் . தன்னைபற்றிய ஆசைகளால் வீங்கிய மனிதர்கள் , அந்த முறையைகளை பின்பற்றுவதில்லை , வாய்ப்பு கிடைக்கும்போது அதை தங்களுக்கு மட்டுமேயானவை என்கிற மடமையால் அதை ஆற்ற முயல்கிறார்கள். அவரது வீட்டு தொழுவத்தில் இந்த யானையை கட்ட முடியாது என்பதை அவர் அறியவேயில்லை என்பது வினோதம்.

சூழியலே அரசியலை முன்னேசுமந்து செல்பவை , அது விளையும் தோறும் அதற்கான முறைமைகளை செய்தே ஆகவேண்டியவை  அவை பழுப்பதற்கு முன்பாக முடிவெடுக்கப்படவேண்டியவைகள் , அரசியலில் வெகு சில தலைவர்களுள் தலைமை பண்புள்ளவர்கள் ஓரிருவர் மட்டுமேஇதோ அதற்கான கதவுகள் திறந்திருக்கின்றன முன்தயாரிப்பின்மையால் , அது கனிந்து காம்பறுந்து இற்று வீழ்ந்து போனது  , யாருக்கும் பயனற்று. பாலனின் திட்டம் என ஏதுமற்ற நிலையில் , அவரது அரசியல் எதிர்காலமே கூட பிறிதொருவரால் வடிவமைக்கப்படுகிறது  . அந்த சாதாரண அஸ்திவாரத்தில் இவற்றை ஒருகாலும் பொறுத்த முடியாது .எனக்கேற்பட்ட கொதிப்பை ஆற்றிக்கொள்ள , என்னை தொகுத்துக்கொள்ள முற்பட்டேன் .சூழியலே அரசியலை முன்னெடுப்பவை . அதை ஒட்டிய அனைத்துவித  சமாதனங்களின் வழியாக வெளிவந்தேன்.

நீ ஒரு அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவன் மட்டுமே , பாலன் உனக்கு வழி விட்டு உன்னையும்  அருகில் வைத்துப்பதை எதையும் செய்யப்போவதில்லை தெளிவு. உன்னை சந்தேகப்படுகிறாரா , என்பதே முதல் முடுச்சி அது அவிழ்த்தால் அன்றி பிறிதெதுவும் நகராது , ஒரு இயக்கத்தின் தலைவன் அனைத்தையும் அனைவரையும் கண்காணித்துக்கொண்டேதான் தனது அரசியல் வெளியில் இயங்க முடியும் , சந்தேகமென்பது , நிலையாய் ஒன்றின் மீது   தெளிவை நோக்கி நகராது இருந்தால். அது தேங்கிக்கிடக்கும் நீர் குட்டைபோல நொதித்து நாற துவங்கிவிடும் . அதன்மீது ஏதாவதொரு செயலை ஆற்றியேயாக வேண்டும். காலம் தாழ்த்திய செயல்பாடு விபரீதமான பலனையே விளைவிக்கும் .


தலைமை ஏதாவதொரு வகையில் அதை கடந்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பது . அது தன்மீது தனக்கிருக்கும் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டே இதை கடந்துபோக முடியும் . பாலனின் மனம் அதை சிந்திக்க துவங்கியவுடன், அவரின் ஆற்றலின்மையால் அது எழும் பொது அதை ஒதுக்கி தள்ளுவதை தவிர இதுவரை பிறிதொன்றை ஆற்றியதில்லை . பலமுறை பலருக்கு இது நிகழ இருந்தது . நேரம் காலம் முயக்கத்தில் அதன் பிற கூறுகளையும் அந்த நபரின் தேவையையும் எடுத்து சொல்லி சொல்லி நானும் சுப்பாராயனும் பலமுறை பாலனின் முன்முடிவின் தவறான  செயலாக்கத்தை தவிர்த்திருக்கிறோம் . இப்போது பாலனுக்கு என்மேலும் அப்படி ஒரு எண்ணம் எழுந்திருப்பதாக என் அகம் என்னிடம் சொல்லியபடி இருக்கிறது .இந்த சந்தர்ப்பத்தில் அவரது சிந்தனை ஓட்டம் எப்படி இருக்கும் என்பதையும் நான் நன்கு அறிவேன் , இருந்தும் இப்போது எனது சிக்கல் எந்த புள்ளியில் அவர் என்னுடன் முரண்படுகிறார் என்பது தெரியாமல் என்னால் அடுத்த கட்டத்திற்கு நகர இயலாது. என்னைத்தவிர சுப்பராயனும் தற்போது விலகி நிற்ப்பது , பாலனின் சிந்தனையை அபாயகரமான எல்லைக்கு அவரை இட்டுச்செல்கிறது .


ஒன்று நான் பாலனை தாண்டி வைத்திலிங்கத்தை சந்தித்து மூப்பனார் வருகை குயீட்டுரீதியானது , அதன் உள்பொதித்துள்ள அனைத்தையும் பிரித்தால் அன்றி இந்த விழாவின் நோக்கம் நிறைவேறாது .என்பதை அவரிடம் நிறுவியாகவேண்டும் . ஆனால் பாலன் இல்லாமல் நான் அவரை தொடவிரும்பவில்லை. காரணம்  நான் நின்று விளையாடும் களம் அவரிடமில்லை, ஆகவே அவரிடம் நான் பாலன் இல்லது சொல்லப்போவதில்லை .மேலும் பாலனை தவிர்த்து அவரை தொடுவதை அவர் எந்தளவில் ஏற்றுக்கொள்வார் என்பது அடுத்த சிக்கல் . எவ்விதத்தாலும் இது நடக்கமுடியாதது . அதே சமயம் காலம் கடக்காமல் இதை சொல்லியாகவேண்டும் . விழாவிற்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் , நான் எதையும்   தாண்டி ஆற்றக்கூடியது ஒன்றில்லை . இந்த விழாவிற்கு பிறகு உச்சகட்டமாக நான் ஏதாவது செய்து பாலனை என்னை தேடி வரவழித்தாலன்றி இதற்கு விடி விமோசனமில்லை , சரி ஒருவேளை பாலன் வராமலேயே போனால் , இதற்கு இப்போது என்னிடம் விடையில்லை . பாலன் ஒருக்காலும் என் விஷயத்தில் அவ்விதம் நடக்கமுடியாது , எனபது மட்டும் இப்போதைக்கு உறுதி , மாற்றவேளைகளை கவனிக்க தொடங்கினேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...