https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 22 ஜூலை, 2017

அடையாளமாதல் - 135 * வாய்ப்புகளின் நடுவில் *

ஶ்ரீ:





பதிவு:135/208 தேதி :- 22 ஜூலை 2017 

* வாய்ப்புகளின் நடுவில்  *

இயக்க பின்புலம் - 61
அரசியல் களம் - 39




மூப்பனாருக்கு நாங்களும் , எங்களுக்கு அவரும்தேவைஎன்கிற ஒற்றைபுள்ளியில் நிலைபெற்றால் தான், எங்களால் அரசியலை முன்னெடுக்க இயலும் . தினமும் அவரை நூற்றுக்கணக்கில் பார்க்க வருபவருக்கு  கிடைக்கும் "தர்ம தரிசணம்" போல இல்லை ,நாம் அவரை காணவந்தது .மாநில அரசியலில் நாங்கள் ஒரு குறுங்குழு மட்டுமே என்கிற நிலையை மாற்றி பிறிதொரு தரப்பு என நிறுவியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் . இப்போது இந்த வாய்ப்பை தவறவிட்டோம் என்னறால் , பின்னெப்போதும் அதை துரத்திக் கொண்டிருப்பதை தவிர,ஆற்ற ஏதுமில்லாமல் போகலாம் . வைத்திலிங்கம் அதற்கான திட்டத்திலிருக்கிறாரா இல்லையா எனக்குத் தெரியாது , என் அளவில் இதுவே சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன் . பாலனுக்கானதல்ல இந்த ஆட்டம் , தொடக்கம் அவருக்கானதாக இருக்கலாம் , அவரையும் உள்ளடக்கியே இது நிகழ இயலும்.வைத்திலிங்கம் அல்லது பாலன் இருவரால்  இது எங்கோ உணரப்பட்டிருக்க வேண்டும்


இதுவரை இல்லை எனில் இனிமேல் உணரப்படும் .அதற்கான அடிப்படையைத்தான் நான் இங்கு கட்டியெழுப்ப முயற்ச்சிக்கிறேன் . அரசியல் ஆளுமைகளில் வெகு சிலர் மட்டுமேஅரசியல் சூழ்நிலைகளைஉருவாக்குகிறார்கள், மற்ற எல்லோரும் உருவாகி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்கள் அரசியல்களை நிருவிக்கொள்கிறார்கள் . அவை என்னைப் போன்ற கணக்கிலடங்காதவர்கள் முன்னெடுத்து அதில் எழும்  வாய்ப்புகள் .அதிலிருந்து உருவாகி வரும் களங்கள் , அதைத்தான் அவரவர் தங்கள் அரசியலுக்கு பயன் படுத்திக் கொள்ள முடியும்  . 


நான் அறிந்தவரை, சண்முகம் கண்ணன் இருவரைத்தவிர பிறிதெவர்க்கும் இதைப் போன்றவைகளை பயன் படுத்திக்கொள்ளும் படிநிலை முறைமைகளை  அறிய இயலாமல் போகலாம் . நான் இன்னும் வைத்திலிங்கத்தை கணிக்கவில்லை . அவர் நினைத்தால் அது உருவாவதற்கான சூழலை அவர் வகிக்கும் பதவியைக் கொண்டு கொடுக்க முடியும் . செய்வாரா என்பதுதான் இப்போதைய கேள்வி . நான் அதற்கான அலகுகளை பொருத்தியபடி சென்று கொண்டிருக்கிறேன் அவ்வளவே . ஆனால் இதை என்னை அன்றி பிறிதொருவர் பயன்படுத்த முடியாது. பயன் படுத்தும் சூழல் எனக்கும்  உருவாகாமல் போகலாம் , அப்போது  இது தூர்ந்து போகும்.அரசியல்நிகழ் களங்களில்இதைப் போன்ற  தூர்ந்த அலகுகளை கணக்கில்லாது பார்த்திருக்கிறேன். பயன்படுத்தப்பட்டவை நூற்றுக்கு ஒன்று, என இருந்தாலே, அதிகமென்பேன்.


இது என்பானி . இங்கு மூப்பனாரை சந்திக்கும் வரை எனக்கு அப்படி ஒரு கருதுகோள் இருப்பது தெரியாது ஆனால் அவருடன் உரையாடிய  அந்த க்ஷணம் , அது எனக்குள் எழுந்து வந்தது . அந்த ஒரு நிமிடம் ,அது எழும் வேகமே சொல்லும்செய் இதைஎன்று . அதற்கு நான் ,என் நினைவு தெரிந்த நாள் முதல் அது சொல்வதை இதுவரை  செய்து வந்திருகிறேன் ,அது எந்த துறையாக இருந்தாலும். என்னை எப்போதும் கைவிட்டதில்லை அது


பாலனை  அழைத்துக்கொண்டு தில்லி செல்வதற்கு முன்பாக , இதன் விதை வைத்திலிங்கத்திற்கு எங்கோ ஆழ்மனப்படிமத்தில் விழுந்திருக்க வேண்டும் . அங்கு பிட்டா , மூப்பனார் தொடர்பு , அவரின் விழைவு , மூப்பனாருக்கு நரசிம்ம ராவிடம் உள்ள செல்வாக்கு போன்றவை  அப்பட்டமாக தெரிந்திருக்க வேண்டும் . இதற்கான விசை அதுவாக இருப்பின் , இன்று நான் மூப்பனாரிடம் பேசியது முறைமையே  . இந்த இடத்தை அவர் எனக்கு கொடுக்காமல் போனால் , இந்த முயற்சியில் நான் நுழைந்திருக்க வேண்டியதில்லை . தூதென வந்திருக்கிறேன். தூது சரியான வழிகளில் சபலமாகலாம் என தெரிந்தால், மேலதிகமாக ஏதாவது செய்யலாம் . ஆகவே இதைச் செயதேன் . இது நான் மட்டுமே நுழையும் கதவு , அதை இப்போது அமைக்காவிட்டால் பிறிதெப்போதும் அமைக்க முடியாமல் போகலாம்  .


நான் இப்போது உங்களிடம் சொல்லும் இத்தருணமே எனக்கு எதிர்  விணையென எழலாம் . என் நிலையில் , நினைவில் நான்  பிழையில்லை. பிறிதெவருக்கோ  இது பிழையெனில், அவர்கள் விழையும் அரசியலில், எங்கோ கோளாறு என்றுதான் பொருளமையும்  . இப்போது நான் அதைத்தான் பயன்படுத்தினேன் . அரசியலில் நாம் சென்று தொடுகிற கதவுகளிலெல்லாம் திறந்துகொள்ளும் என்பது மூடநம்பிக்கை.அவர்களின் தேவைக்காகவே திறக்கப்பட்டுநாம் உள்நுழைய அனுமதிக்கப்படுகிறோம் . அரசியலில் என்றில்லாமல்  ,பொதுவில் ஒரு பேச்சி உண்டுஒருவனுக்கு ஒருவர் எந்த பிரதிபலனும் இல்லது ஒரு காரியத்தை செய்தால் அவன் அப்பன் - பிள்ளையாக இருக்கவேண்டும்.அது தவிர யாரும், யாருக்கும் ,எதையும் ஒரு காரணத்தை பற்றாது உதவுவதில்லைஎன்று  . 1989 ல் உப்பளம் விடுதியில் பாலானை பார்த்த மூப்பனார் கேட்ட முதல் குசலம்மக்கள் தலைவர்”  எப்படியிருக்கிறார் என்றுதான் . நானும் பாலனும் விக்கித்து நின்றோம் .அது கண்ணனை பற்றியது . அன்று வெளிப்பட்டது மூப்பனாரின் கசப்புமக்கள் தலைவர்பட்டம் இந்திய முழுவதும்  அவருக்கானது . அதை பிறிதொருவர் பயன்படுத்துவது, அவரை அறைகூவுவதே


இவ்வளவு காரணிகளை மத்தியில் ஒரு மாநிலத்தில் ஆளுகிற முதல்வரின் பிரதிநிதியாகத்தான் அவரை சென்று பார்த்தேன்  ,நான் பேசியது அந்த ஸ்தானத்தில் நின்றுதான் . அதை இன்னும் அழுத்தமாக சொல்லவே அந்த கடைசீ வரிகள் . என்றேன் . சேகரிடம் நான் கண்ட அந்த "கற்றுக்கொள்ளும்" ஆர்வமே என்னை இந்தளவிற்கு பேசவைத்தது. என்னை பேசவைப்பது எப்பவும் என் எதிரில் அமர்ந்துள்ளவர்களே . அவர்களின் சிந்ததனைக் கூரே என்னை நானே நினைக்காத கோணங்களில் பேசவைப்பது . அவர்களுக்கு அது புதிய திறப்பாக இருந்திருக்கலாம் , அவை எனக்கும் என்னை தொகுத்துக் கொண்டு என் ஆழ்படிமானங்களுடன், உரையாடல்களை நிகழ்த்துவதாக அமைகின்றன .


சேகர் தனக்கு இன்னும் சில  புரியாமை இருக்கிறது என்றார் , நான் சொன்னமுறை அவருக்கு புரியவில்லை போலும் , நான் அதையே வேறுமாதிரி சொல்ல முற்சித்தேன் . மூப்பனார் பாணி அரசியல் இந்திய முழுவதும் தெரியும் அதே தஞ்சாவூர் மிராசு பாணி . அது ஏற்கனவே பயந்தவர்களைத்தான்  கட்டுப்படுத்தும் , புதியவர்களை பயப்படவைத்தால் கட்டுப்படுத்தலாம் . யார் முதலில் யாரை பயப்படுத்துவது, அது தான் சிக்கல் . வேறு தலைமுறை வந்துவிட்டது .  "தனி ஆளுமை" கொடுத்த இடைவெளிகள் நிறைந்த இடங்களை, அவருக்கு இன்று  கொடுக்கக் கூடியவர்களென  தில்லியில் எவருமில்லை. இப்போதைக்கு


நான் சந்தித்த அந்த ஒரு நொடி முன்பு  வரை புதுவை கட்சி அரசியலில் அவர் எந்த குழுவிலும் இல்லை , அவரின் அமைப்பில் மூன்று கோஷ்டிகள்  இருந்தன  , அது சண்முகம்,மரைக்காயர் , கண்ணன் என்று . இப்போது இந்த விழாவிற்கு அவர் வருவாரென்றால்  தமிழகத்தில் நடைபெறும் வாழப்பாடி X  மூப்பனார் அரசியல் இனி புதுவையிலும் அரங்கேறும். இனி சண்முகத்தின் எதிர் தரப்பு என்பது நாங்கள் மட்டுமே என்றாகிவிடும். இது எங்களை அரசியலில் சரியான திசையில் எங்களை நிலைநிறுத்தும் . இதை நாம் செய்திருக்கிறோம் . இது சாதனை இல்லையா . இதை வைத்திலிங்கமோ பாலனோ உணர்ந்திருப்பார்களா என்பது தெரியாது . தெரியவரும்போது , இந்த அலகு செயல்பாட்டிற்கு வரும் .
  

திறமையுள்ளவர்கள் தங்களின்  தொடர்புறுத்தலினால் அதை சாதிப்பார்கள். வாழைப்பாடியைப்போல .அதைப்போல ஒருபாணியை மூப்பனார் சிந்திக்கிறார் என நினைக்கிறேன்என்றேன்இதைவைத்துஎன்றார் , ஆம் "வைத்திலிங்கக்கத்தை வைத்து" என்றேன் . அவருக்கு புரிந்தது ,சிரித்தார் . “இதைதான்  தற்போதைய இந்திய அரசியல்போக்கு என்கிறீர்களாஎன்றார் . நான்ஆமாம்என்றேன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...