https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 6 ஜூலை, 2017

அடையாளமாதல் - 114 *உள்ளுசாவலின் வடு *.

ஶ்ரீ:

*உள்ளுசாவலின் வடு  *
இயக்க பின்புலம் - 41
அரசியல் களம் - 34

எனக்கு முதல் ஆச்சர்யம் அதிகாலையில்  ஐந்தாறு பேர் வந்திருந்தது , அதைவிட ஆச்சர்யம் பாலனுடைய அந்தரங்க அணுக்கர்கள் அனைவரும் . சுப்பாராயன் , லோகரட்சகன் , சம்பத் , கிருஷ்ணராஜ் , அசோகன் , லோகநாதன் , அவரகள் எனக்கும் மிக அணுக்கமானவர்கள் , அவர்களில் பெரும்பாலானோர்  தொகுதி மற்றும் மாநில மூத்த நிர்வாகிகளுமாவார்கள் . நான் மிகுந்த மகிழ்வுடன் அவர்களை வரவேற்றேன் நாங்கள் ஒருங்குகூடி பல மாதமானதால் அந்த சந்திப்பு மகிழ்வின் பெருக்காக இருந்தது . ஆரம்பகட்ட பரஸ்பர நலம் விசாரிப்புகள், பகடிகள் என வெடிச்சிரிப்புகளுக்கு ,பிறகு என்ன விஷயம் என கேட்டதும் ,முக்கியமானதுதான், எங்காவது வெளியில் சென்று பேசலாம் என்றனர்

இவ்வளவு காலையில் எங்கு செல்வது என கேட்டு , அவர்களை சற்றுக் காத்திருக்குப்படி சொல்லி மாடி, சென்று முகம்கழுவி என் அலுவலக சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன் . என் அலுவலகம் பக்கத்து கட்டிடம் என்பதால் அங்கேயே பேசலாம் , என்னவாயிருக்கும் என்கிற ஆவலில்  அழைத்து சென்றேன் .

அலுவலகம் சென்று அமர்ந்த மறுநொடி சுப்பாராயன்நாங்கள் ஒரு தீர்மானத்திற்கு  வந்திருக்கின்றோம் , நீ அதற்கு கட்டுப்பட வேண்டும் மறுப்பு சொல்ல கூடாது”  என்றார் . இதுதான் எப்பொழுதும் சுப்பாராயனின் பாணி . நான் சிரித்தவாறு , “ இதை சொல்லவா இவ்வளவு காலையில் வந்தீர்கள் . முடிவு நீக்களாகவே எடுத்து அதை மற்றவர்களை நிர்பந்திப்பது எவ்வகையிலும் நியாயமில்லை , தவிரவும் நான் என்ன காரணத்திற்கு கட்டுப்படவேண்டும் . ஏன் , உங்கள் எல்லாருக்கும்  தெரியும், சாமீபமாக நான் எதிலும் கலந்துகொள்வதில்லை , கட்சி விஷயமாக நான் பேசுவதற்கு ஒன்றில்லை . எனக்கு ஒரு இக்கட்டு நீங்கள் அனைவரும் பாதாளம் சென்று மறைந்தீர்கள் . உங்கள் ஆட்டத்திற்கு நான் ஆளில்லை . இதை தவிர்த்து வேறு ஏதாவது இருப்பின் பேசலாம்என்றேன் லோகரட்சகன் . “ சொல்லவந்ததை சொல்லுவதற்குள்ளாக , இப்படி பேசுவது சரியில்லை . நீங்கள்,முதலில் என்ன ஏது என கேட்காமல் இப்படி சொன்னால் எதுவிஷயமாக நாங்கள் வந்திருக்கிறோம் என்பது தெரியாமல் ஏன் இப்படி பேசுகிறீர்கள்என்றார்
அந்த நொடியில் விளையாட்டு மறைந்தது , எனக்கு பழைய நிகழ்வுகள் மறுபடி உக்கிரமாக எழுந்தது , அவர்கள் அனைவரும் பலவித ஸ்தானத்தில் உள்ளவர்கள் , சிலர் பொறுப்பான அரசாங்க பொறுப்பில் இருப்பவர்கள் . விஷயம் அதி தீவிரம் எனபதை எனக்கு சொல்ல ஒரு போன் போதும் , அல்லது இவர்களில் ஒருவர் வந்திருக்கலாம் , அனைவரையும் ஒருங்கியிருப்பது சுப்பாராயன் எனபது தெளிவு

அவர் ஒருவர் மட்டுமே என்னை உள்ளும் புறமுமாக அறியக்கூடியவர் . நான் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளது அவருக்கு தெரியும் . அவரும் ஒருவகையில் பாதிக்கப்பட்டவரே , இது கமலக்கண்ணனுக்கும் எனக்குமான தூது அல்ல , நானாவது தற்போது எழுந்த சிக்கலால் கமலக்கண்ணனுடன் முரண்பட்டேன் . ஆனால் சுப்பாராயனுக்கு கமலக்கண்ணனை ஆரம்பத்திலிருந்தே ஆகாது . நான் கூட முதலில் இது சுப்பாராயனின் சுபாவமான் தனிப்பட்ட காழ்ப்பு என்றேதான் நினைத்திருந்தேன்

அவரால் சகஜமாக யாருடன் பழக இயலாது . ஆனால் பழகினாரானால் குழைந்தையை போல . இதை நான் இந்த குழுவில் சொன்னால் கூட என்னை அடிக்கவருவார்கள் . இவர்களில் பலர் தனிப்பட்ட முறையில் என்னிடம் சுப்பாராயனை பற்றி மனம் வெதும்பி பேசியதுண்டு . இந்த குறுங்குழு மிக ஆற்றல் மிக்கது இது இருவர் பொருட்டு ஒன்று கூடும் ஒன்று : பாலன் இன்னொன்று : நான் . இவர்களை என்னால் எளிதில் கடக்க இயலாது . காரணம் இவர்கள் திட்டங்களும் செயல்பாடுகளும் பாலனுக்காக மட்டுமே அதைத்தாண்டி பிறிதொருவருக்கு என்றால் அது எனக்கானது என்றால்  மட்டுமே.

லோகுவின் பேச்சிற்கு பின் நான் என் மனவருத்தத்தை என் பிரலாபமாக  இங்கு வைக்க போவதில்லை காரணம் , பாலனை தாண்டி எதையும் யோசிக்கத்தவர்கள் . நிச்சயமாக இதுபற்றி பாலனிடம் பேசாது இருந்திருக்கமாட்டார்கள் . என்ன நிகழ்ந்தது என்பதை அறியவே என் மனவருத்தத்தை அவர்களிடம் பகிர்ந்தேன் . மேலும் நான் இயக்க உள்விஷயங்கை தலையிடவில்லை , கடந்து சில மாதங்களில் என்ன நிகழ்ந்தது என இவர்கள் வழியாகத்தான் அறிந்துகொள்ள முடியும் . பாலன் இவர்களிடம் மட்டுமே மனதை ஓரளவிற்கு திறந்து வைப்பார்.

கிருஷ்ணராஜ் மிக தெளிவாக பேசக்கூடியவர் அவர் சொன்னது . நடந்தது யாருக்கும் உடன்பாடில்லாததுஅன்று பாலன் ஒல்லி சேகர் நோக்கி சப்தமிட்டது உன்பொருட்டே , என்றாலே அது எங்களுக்காகவும்தான் என்பது நீ அறியாததல்ல . என்னை பொறுத்தவரை நடந்தது மிக நன்மையானது . கமலக்கண்ணனின் அகக்கருப்பு வெளிப்பட்டுவிட்டதில் எங்களுக்கு சந்தோசம் . பாலனின் ஒரே மனதடை தாமோதரன்தான் ,அவர் என்ன காரணத்தினாலோ கமலக்கண்ணன் பக்கம் உறுதியாக நிற்கிறார்


கண்ணன் செய்ததை போல பழைய நிர்வாகிகளை ஒதுக்கி வேறொருவருக்கு தலைமையை விட்டு தருவதுபோல தானும் செய்வதா என்கிற குழப்பத்திலிருக்கிறார் . இந்த நிகழ்வு அதை உடைத்து வீசிவிட்டது . உனக்கு சமீபமாக நிகழ்ந்து வருவது தெரியாது . கடந்த இரண்டு மாதகாலமாக புதுவையின் அனைத்து தொகுதிகளிலும் கருத்தாய்வு கூட்டம் நடந்து முடிந்தது அதை செய்வதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டது , அந்த குழுதான் இது இதில் தாமோதரனும் இருந்தார் . இன்று உன்னை பார்க்க வருவது அவருக்கும் தெரியும் . ஆனால் அவரும் இங்கு உன்னைப் பார்க்க வந்தால் கமலக்கண்ணன் மனம்குலைந்து போவான். அதை அவர் விரும்பவில்லை , இங்கு என்ன முடிவெடுக்கப்பட்டாலும் அதில் உடன்பாடே என்று சொல்லிய பிறகுதான் நாங்கள் இங்கு வந்தோம் . என்ன காரத்தினாலோ அவரால் கமலக்கண்ணனை விட்டுக்கொடுக்க முடியவில்லை என்றார் . நான் அதை கேட்ட என்ன சொல்வது என யோசித்து அமர்ந்திருந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக