https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 21 ஜூலை, 2017

அடையாளமாதல் - 134 * இருநிலை முறைமைகள் *

ஶ்ரீ:



பதிவு:134/207 தேதி : 21 ஜூலை 20017


* இருநிலை முறைமைகள்  *

இயக்க பின்புலம் - 60
அரசியல் களம் - 39





சேகர் நான் மூப்பனாரிடம் பேசிய முறை வழமையான பாணியில் இல்லாதது என்கிற சிறு வருத்தத்துடன் , நாம் வேண்டி நிற்கும் காரியத்திற்கு தடையாக எழலாம் , என்றும் தான் அச்சப்படுவதாக சொன்னதும் , நான் ஏன் அப்படி பேசினேன் என்பதற்கு காரணம் , என் அரசியல் சூழியலின்  அவதானிப்பில்  எழுந்தது என சொன்னேன்  . “மூப்பனாரை நான் அரசியல் ரீதியில் பல வருஷங்களாக பார்த்துவருகிறேன், அவரது பாணி அலாதியானது , இருவகையான அரசியல் புராதாண முறைமைகளில், எஞ்சியதின் மத்தியில் தனக்கான அரசியல் உருவாகி வர, அதன் மத்தியில் இருந்து கொண்டார்  . காமராஜர் காலத்தில் திண்டிவனம் ராமமூர்த்தி மாநில செயலராக இருக்க மூப்பனார் தஞ்சாவூர் மாவட்டத்தலைவராகத்தான் நியமிக்கப்பட்டார் . அதுதான் அவரது அரசியல் துவக்கம் . பின்னொரு காலத்தில் திண்டிவனம் ராம்மூர்த்தி மூப்பனாரின் போர்வாளென மாறி அமர்ந்தார் . இதை ஒரு உதாரணத்திற்கு சொன்னேன் . இதைப்போல பலர் இடம்மாறி அமர எது காரணமாக இருந்தது என கணக்கிட்டால் அவை அனைத்தும்  நான் சொன்ன அந்த இருவகையான புராதண அரசியல் முறைமைகள் என்னவென புரியவரும்.


காரணம் ,அவரை வடிவமைத்தது இந்திரா காந்தி , அவர் இந்திராகாந்தியின் கை ஆயுதம் . காமராஜரைக் கூட அப்படி சொல்வதுண்டு . இந்த இருநிலை பயணத்தில் அவருக்குக்கீழ் பொருந்தி வந்தவர்களை தவிர . வேறு எவரும் அவர் முன்பே நிலைக்க முடியவில்லை . நடிகர் சிவாஜி கணேசன் ஒரு உதாரணம் . ஆனால் இன்று மூப்பனாரால் கட்டுப்பத்துப்பட்ட புராதண அரசியல் முறைமைகளை உடைத்துக்கொண்டு வாழப்பாடி மேலெழுந்து வந்து விட்டார் .அது கால மாற்றத்தின் நடைமுறை எதார்த்தம் . உங்களுக்கு ஒரு விஷயம்  சொல்லுகிறேன்”. “இந்தமுறை பாலன் தீவிரமாக தில்லியில் சீட்டுக்கு முயற்சித்த போது ,மாநில அளவில் அனைவருக்கும் பொதுவில் நிற்போம் ,ஆனால் ஒரு இடத்தில் நமது விசுவாசம் இருக்கட்டும், என முடிவெடுத்தோம் .இது எங்களுக்கு  போன தேர்தலில் பாலனின்  சீட்டுக்கு முயற்சித்த போது கிடைத்த பாடம் . பாலன் வாழப்பாடியை தவிர தில்லியில் எவருடனும் தொடர்பில் இருக்க வேண்டாம் , என்கிற நிலைதான் அன்றைய முடிவு . அவருக்கான ஆதரவு திரட்டுவதை இந்த முறை ,இரு பிரிவாக பிரிந்து செய்தோம்  . ஒரு குறுங்குழு தொடர்ச்சியாக மூப்பனாரை தொட்டபடி இருக்கும் , பிரிதொன்று வாழப்பாடியை . பாலன் மூப்பாரை சந்திக்கும் குழுவுடன் எந்தத் தொடர்பிலும் இருக்க மாட்டார் . இரு குழுவை நானும் சுப்பராயனும் ஒருங்கினைத்தோம் . இரு குழுவும் ஒன்றில் நிகழ்வதை பிறிதொன்று அறியாது ,அந்த சூழலில் வாழப்பாடிக்கு நெருக்கமான நண்பர் "பண்ருட்டி வக்கில் கண்ணன்" அந்த தொடர்பை சரியாக செய்தார் , அங்கு நிளவிய சிக்கலின் மத்தியில்அவர் படுகொலையானது எங்களுக்கு பெரிய  பிண்ணடைவைத் தந்தது. அந்த சம்பவம் நடவாதிருந்தால் , 1990 லேயே அரசியல் ரீதியாக  வேறு திசையில் பயணித்திருப்போம் , இன்றைய இந்த நிலை நிகழாதே போயிருக்கலாம் .

பாலன் வாழப்படித்தவிர யாருடனும் தொடர்பில் இருக்க வேண்டாம் என்பது தீர்மானம் . பாலன் தில்லியிலிருந்து ஒருநாள் தான்வெஸ்டர்ன் கோர்ட்டில்சாப்பிட வந்தேன் என்றார் .எனக்கு சொரேலென்றது ,அது மூப்பனார் வசிக்கும் பகுதி அங்கு போகவேண்டிய அவசியமே இல்லை . நான் அவரிடம் தெளிவாக சொன்னேன் .திருப்ப புதுவை விடுதிக்கு செல்லுங்கள் இது வேண்டாத வேலை என்று.

இல்லை இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது என்று இழுத்தார், எதையாவது செய்து ஒழியட்டும் என போனை வைத்து விட்டேன் . இவர் சென்று மூப்பனாரை பார்க்க வெளியில் காத்திருந்த போது ,உள்ளே பேசிக்கொண்டிருந்தவரை மரியாதை நிமித்தமாக வெளிக்கொண்டு விட வந்த மூப்பனாரை பார்த்து கும்பிட்டு , திகைத்து சிலையானார் பாலன். அவருடன் வெளிவந்தது வழைப்பாடி………..இது தான் ஊழ் எனப்படுவது , இதை என்னிடம் சொல்லி வருந்தும்போது சிரிப்பதை தவிர என்ன செய்வது . இதை சொல்லவந்தது பாலனை பற்றியல்ல மூப்பனாரை பற்றி . அதன் பிறகு வாழப்பாடி பாலன் மீது நம்பிக்கை இழந்ததால் , அந்த தொடர்பை அப்படியே விட நேர்ந்தது . அதற்கு மாற்று மூப்பனார் , ஆனால் அவருக்கு இங்கே நிரை நிரையாக தலைவர்கள் இருக்கிறார்கள் , அந்த காலகட்டத்தில் இதனுள் நுழைவது வ்யர்த்தம் .

மூப்பனார்  அரசியல்  நிகர்நிலை கொள்ள துவங்கி சில காலமாகிறது . அந்த மாறுபட்ட மனோநிலை உள்ள மூப்பனாரைதான் நாம் தேடிவந்திருக்கிறோம். நான் சொல்லுவது உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும் ஆனால் அதுதான் அரசியல் சரி . நேற்று சுப்பாராயனிடம் என்ன சொன்னேனோ அதையே உங்களிடமும் சொல்லுகிறேன்  அவர் என் முடிவு சரியென்றார் , என்றேன் அன்றெல்லாம்  வாழப்பாடி சண்முகம் ஒரே நிலைப்பாட்டில்  இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை, அல்லது அதன் பிறகு நிகழ்ந்த சட்டமன்ற தலைவர் தேர்தலால் இணைந்தார்களா ,எனவும்  தெரியாது . அந்த காலகட்டத்தில் சண்முகம் தனித்து தன் அரசியல் நகர்வுகளை செய்கிறார் என்கிற பிம்பத்தில் இருந்தோம் . மூப்பனார் சண்முகத்துடன் நல்ல தொடர்பில் இருந்தாலும் . சண்முகம் அவர் கீழ் அடங்காத ஆளுமை . புதுவை அரசியல் என்பது பக்கத்து தமிழக மாநில அரசியல்வாதிகளுக்கு எப்போதும்தொட்டுக்கொள்ளதேவைபடுபவை, அது கசப்பாக இருப்பினும் . அதுவும் ஒரு ருசிதானே  , அந்த வகையில் தனக்கென இங்கும் ஒரு குழு மூப்பனாருக்கு உண்டு .அதில் பிரதானம் கண்ணன்


கண்ணனை வைத்துதான் மூப்பனார் மரைக்காயர் சண்முகம் இருவரையும் சமதூரத்தில் நெடுங்காலம் வைத்திருந்தார் . வக்கீல் முருகேசன் சண்முகத்தின் ஆளென இருந்தாலும் கண்ணனுடன் நல்ல தொடர்பில் இருந்தார் . மூப்பனார் முருகேசனை மூவரின் பொருட்டும் பயன்படுத்திவந்தார் . அவர் மூப்பனாரின் விசுவாசி என்பதால் மூவருமே அவருடன் பழகுகையில்  “பாம்புடன் ஒருகூரையில்என்பது போலதான் தொடர்பில் இருந்தார்கள் . அதன் புழுக்கமே அரசியல் ரீதியான எந்த பதவிக்கும் முருகேசனால்  தன் இறுதிக்காலம் வரை வர முடியாமல் போனது . தன் துறை சார்ந்த பதவிகளுக்கு அவர் வந்தபோது அவருக்கு யாரும் தடையாக இல்லை ,ஆனால் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி பதவிக்கு அவர் விழைந்த போது ,அதன் பாதைகள் அடைபட்டுப்போயின . அவர் அதற்கான மனிதர் இல்லை என்பதும் மூவரின் ஒரே கருத்து


பல கிளைகளை பற்றியவர் என்கிற காரணத்தினால் , அவர் எவரிடம் சென்றாலும் பிறிதொருவரின் அபிமானி என்றுதான் பார்க்கப்பட்டார். அவரை எவரும் ஒரு காலத்திலும் தன்னுடையவராக பார்க்கவேயில்லை என்பது அவரின் துர்பாக்கியம் . கண்ணனுடன் முருகேசனுக்கு என்ன காரணத்தினாலோ ஏற்பட்ட பிளவு , வெளித்தெரியாதது . அதன் முரண்பாடுகளால் கண்ணனுக்கு அவரால் மீளமுடியாத தடையை உருவாக்கும் முயற்ச்சியில் , முருகேசன் அதிதீவரத்துடன் இருந்தார்.
முருகேசனின் கைங்கர்யத்தால் கண்ணன் மூப்பனாரின்  அபிமானத்தை இழந்து பல காலமாகிவிட்டது, என்பதை பாலனுக்கு சீட்டு கேட்டு உப்பளம் விடுதியில் சென்று நிற்கும்போதே பாலனும் நானும்  புறிந்துகொண்டோம் . அப்போது நாங்கள் சொல்வதை யாரும் நம்பவில்லை .


ஒருமுறை கிராமத்துப் பகுதியில் கட்சி ரீதியான வேலையின் பொருட்டு இரவு தங்கநேர்ந்தது. சுதந்திர போராட்ட தியாகி , வயது முதிர்ந்தவர் அவருடன் அக்கால அரசியல் நடந்த நிகழ்வுகளுக்கு பினபுலமாக இருந்த பற்றிய பல நுட்பமான காரணங்களை அனாயாசமாக சொல்லிபடி இருந்தார் . மெள்ள நிகழ்காலத்துக்கு வந்தவர் , கண்ணனை பற்றிய தன் முடிவாக சொன்னது போது ஆச்சர்யமடைந்தோம் அவர் தன் கிராமத்து பாணியில்ஏறிய மடைவழியாகத்தான் நீர் இறங்கியாக வேண்டும்என்றார்.


அவர் மடையென குறிப்பிட்டது மூப்பனாரை. கட்சியின் முக்கிய பொருப்பில் உள்ளவர்களுக்கும் தெரியாத விஷயம் சாதாரண பார்வையாளர்களுக்கு இருக்கிறது . எனக்கு  களப்பணியில் கிடைத்த தொடர்புமுறை மற்றும் அனுபவமும் என்னுடைய தனிப்பட்ட பலமாக இருந்திருக்கின்றன. எனக்கு அரசியல் சொல்லிக்கொடுத்த சண்முகம் அடிக்கடிச் சொல்வதுபுலி வாலை விடத்தெரிந்தவனே வாலை பிடிக்கவேண்டும்என. ஆம் அவர் அப்படித்தான் வாழ்ந்தும் காட்டினார். அவர் சொன்னதை சரியாக புரிதலுக்கு  உதவியது எனக்கான களப்பணியும் அதன் தொடர்புகளும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்