https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 18 ஜூலை, 2017

அடையாளமாதல் - 131 *மௌனத்தை பிளந்து *

ஶ்ரீ:
பதிவு தேதி : 18 ஜூலை 20017

*மௌனத்தை பிளந்து   *


இயக்க பின்புலம் - 57

அரசியல் களம் - 38

தோல்விக்கு பின் ஒரு தலைமை மற்றமென்பது மரபாக இயன்று வருவது , அது சரியா என்பது விவாதத்திற்குறியதே  . பல மாநிலத்தில் அதை மூப்பனார் பிறிதொருவர் மேல் பரிந்துரைத்திருக்கிறார் . இப்போது அதுவே அவருக்கும் வாய்த்திருக்கிறது , அவர் பொறுத்த அளவில் அது அவமானகரமானது . காலசூழல் மாற்றத்துற்குள்ளானதால் , அவரும் தனது செயல் முறைகளை மாற்றுவது பற்றிய தீவிர சிந்தனை தருணத்தில் இருந்தார் . பிறிதெவரிடமும்  அவரது பணிந்து போகாத நிமிர்வு ஒரு வரம், எனினும் அதுவே அவரை யார்கீழும் தன்னை பொறுத்த முடியாமலானது

தலைமை மீது விசுவாசம். அவர்கள் வழங்கியஇடைவெளி”  அதன்பொருட்டு அவரின் சுயமான முடிவுகள்,கொடுக்கப்பட்ட பொறுப்புகளை திறம்பட நிர்வகித்தது, அகில இந்திய உட்கட்சி பூசலில் பெருமளவில் தலையிடு , போன்றவைகளால்  விளைந்த  நட்பும் ,எதிர்ப்பும் மறைமுகமானது .யார் எப்போது எந்த முனைக்கு செல்வார்கள் என , யாரும் யூகிக்க இயலாதுநரசிம்மராவ் அவருக்குரிய மரியாதையை தருபவர் இருப்பினும் ,ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு கட்சி அரசியல் போக்கில்  பெருத்த மாற்றம் ஏற்பட்டு  விட்டது , தனி தலைமை என்கிற நிலை மாறி கூட்டுத்தலைமை என்பதை நோக்கிய நகர்வு போல அப்போது அது தொடங்கியிருந்தது .

மூப்பனார் தனது இடத்திற்காக காத்திருந்தார் . சோனியா காந்தியின் அரசியல்பிரவேசம் எதிர்பார்க்கப்பட்டாலும், நாளுக்கு நாள் அதற்கான வாய்ப்புகள் குறைவதாக தென்பட்டகாலம் அது . இந்த சந்தர்ப்பத்தில்தான் பிட்டா பங்கேற்கவிற்கும் இளைஞர் காங்கிரஸ் மாநில மாநாடு . இப்படி பல காரணிகளின் பிண்ணனியில் எழுந்த முரணியக்கத்தின் விளைவுகளைத் தெரியாமல்நாங்கள் சென்னை புறப்பட்டோம்.

அன்று காலை 5:00 மணிக்கு சேகர் தொலைபேசியில்சின்னவர் பேசியதாகவும்உடன் சென்னை கிளம்பிச்செல்ல வேண்டும் என பரபரப்பாய் சொன்னார். மூப்பனார் அன்று மாலை தில்லி செல்கிறார்  , மாநாட்டிற்கு இன்னும் ஒரு வராமே உள்ள நிலையில , இது சம்பந்தமாக அவரை நேரில் சந்திக்து பேசும் கடைசி வாய்ப்பு இதுவாக இருக்கலாம் என்பதால். தாமதிக்காமல் காலை 5:30 மணிக்கு சென்னை கிளப்பினோம் . யாருடனும் எதுவும் கலந்தாலோசிக்க இயலவில்லை .பாலனிடம் பேசமுடியாது , எதையாவது குதர்க்கமாக சொல்லித்தொலையலாம் , பயணத்தை நிறுத்தினால் , பின் ஒருபோதும் இந்த தொடர்பை உபயோகப்படுத்த முடியாது . சுப்பாராயனை பிடிக்க முடியவில்லை . நேராக சென்று பார்த்துவிட்டு புறப்பட பொழுதில்லை.வழி நெடுக என்ன சொல்வது , எதை சொன்னால் அவரால் மறுக்க முடியாது.சண்முகத்தை , கண்ணன் இவர்களின் நிலை குறித்து பேச்சு எழுந்தால், எதைச் சொன்னால் சரிவரும். இப்படி பலவித சிந்தனையோடு சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தோம்

மூப்பனாரை இரண்டொரு முறை உப்பளம் விடுதியில் பார்த்திருக்கிறன் . பாலன் சீட்டு விஷயமாக அவருடன் . மூப்பனார்  எதிரில் உட்காரக்கூட இல்லை . மூப்பனார் ஒரு பெரிய ஆளுமை . இன்றும் நான்  பெரிதும் மதிக்கும் சண்முகம் சமமாக யாரையாவது வைப்பேன் என்றால். அது மூப்பனார் மற்றும் வாழப்பாடி . மிக நெருக்கடியான காலத்தில் கூட தெளிவாக சிந்திக்கவும் பேசவும் கூடியவர்கள் , உட்கட்சி அரசியலில் எக்காலத்திலும் அவர்களின் வார்த்தைகள்  பிழையுறுவதில்லை.

மூப்பனாரின் வீட்டை அடையும்போது காலை 8:10 மணி , நல்ல வேகத்தில் வந்திருக்கின்றோம் , அவர் 9:00 மணிக்குத்தான் வீட்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வருவார் . கொஞ்சம் நேரமிருந்தது . ஒருசிலர் வந்து சென்றபடி இருந்தனர், முக்கியஸ்தர்கள் என யாருமில்லை . "சின்னவர்" அனுப்பினார் என் சொன்னதும் , அவர் வீட்டு காரியதர்சியின்   கண்கள் மாறுபடுவதை  கவனித்தேன் . சிறு மரியாதையாக  அது கூடியது , மேலதிகமாக சில விஷயங்களை சொல்வது அரசியலில் பிழையில்லை, வந்த காரியம் முக்கியம் 

நான் அவரிடம் தாழ்ந்த குரலில் " முக்கியமான விஷயம் தனிமையில் சொல்ல சொன்னார்என்று மட்டும் சொல்லிவைத்தேன் . அவர் மரியாதையுடன் அப்படியே செய்கிறேன் நேரமிருக்கிறது காலை உணவு சாப்பிடவில்லைனென்றால் சாப்பிட்டுவிட்டு வருமாறு சொன்னார் . திருப்தியுடன் அங்கிருந்து வெளியே வந்ததும் சேகர்என்ன இப்படி சொல்லிவிட்டிர்கள்” , என சங்கோஜத்துடன் கேட்க .நான் சேகரிடம்அவரை அழைத்துசென்றேயாக வேண்டிய நிபந்தம் . நீண்ட நேரம் அவர் யாருடனும் பேசுவதில்லை மேலும் அவரது தஞ்சாவூர் தமிழை ஒருமுறைக்கு இருமுறை கேட்டாலன்றி பிரித்தறியலாகாது . மேலும் என்ன பேசுவது என் இதுவரை புலப்படவில்லை .பதட்டத்தில் எனக்கு வார்த்தை  ஏதும் எழாதும் போகலாம்” , “உங்களுக்கு அவர் நல்ல அறிமுகமா என்றதற்குஇல்லை சில முறை அவரை வீட்டில் பார்த்ததுதான்என்றார் . “அதுபோதும் கும்பலின் நடுவே என்னால் வார்த்தை எடுக்க முடியாது. சில நிமிட அவகாசம் போதும் , நல்ல காலமிருந்தால் அவர் மூலமாக ஏதாவது ஒரு "கருத்துரு" கிடைக்கலாம்என்றேன் .

காலை உணவு வேகவேகமாக முடித்துவிட்டு அவர் வீட்டிற்கு வந்ததும் , பெரிய ஏமாற்றம் . நிறைய கூட்டம் கூடியிருந்தது . இன்று தர்ம தரிசனம்தான் , ஒன்னும் பேசமுடியாது. விதி. இவ்வளவு தூரம் வந்து இதான் பயன் . காற்றை பிடிங்கினாற்போல சக்தி முழுவதும் காணாமலாகி இருந்தது . மெள்ள கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்நுழைந்ததும், மூப்பனார் இன்னும் கீழே வரவில்லை . என்றதும் சற்று நிம்மதியேறப்பட்டது. அவருக்காக காத்திருக்க துவங்கினோம்


ஆழ்ந்த மௌனத்தை எதுவும் கலைக்கவில்லை . ஓசையற்றிருப்பது ஒரு சூழல் வதைப்பதை போல ,பிறிதெதுவும் செய்யாது . கணத்த சுவர் போல அது அங்கு நின்றிருந்தது. எனக்கு யாராவது சிறிது சபத்தமாக பேசினால் . இதை உடைத்து வெளிவரலாம் என ஏங்க ஆரம்பித்தேன்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...