https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 11 ஜூலை, 2017

அடையாளமாதல் - 123 *தன்முடிவிற்கும் பிறிதொருவரென *

ஶ்ரீ:







*தன்முடிவிற்கும் பிறிதொருவரென *


இயக்க பின்புலம் - 50
அரசியல் களம் - 36




அதுவரை நான் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த இருந்த பூங்காவனம் . என்னிடம்சுப்பாராயன் இதற்கு என்ன சொல்கிறான்என்றார் . அவரிடம்நான் காணும் வினோத அமைதியும் ஒதுங்கியிருப்பது போன்ற நிலையே என்னை இதைப்பற்றிய எந்த முனைக்கும் செல்லமுடியாது அலைக்கழிக்கிறதுஎன்றேன் . “நீ என்ன நினைக்கிறாய் எனபதை முழுவதும் சொல்லு எங்கு பிசிறடிக்கிறது என்று பார்க்கலாம்என்றார் . நானும் பலகோணத்தில் சொல்ல துவங்கினேன் .

கடந்த நான்கு மாதங்களாக பாலன் என் வீடிருக்கும் வழியாகத்தான் தினம் சென்று வருகிறார் . சிலமுறை இங்கு வந்தும் பேசி செல்வதும் நடந்துள்ளது . ஆனால் இவ்வளவு பெரிய விஷயத்தை ஆளனுப்பி சொல்லவேண்டிய காரணமென்ன . இதை சொல்ல இந்த வழியை தேர்தெடுக்க வேண்டியதில்லை. எப்படியும் பதவி நீட்டிப்பு தான் என எந்தக்கோணத்திலிருந்து பார்த்தாலும் எனக்கு தெரிகிறது , வைத்திலிங்கம் கிருஷ்ணமூர்த்தி இருவர் தனித்தனியாகவோ , இணைந்தோ ஒரு அணி என்றால் மொத்தம் மூன்று .மரைக்காயரை ஒரு அணியாக எடுக்கவேண்டிய அவசியமில்லை அவர்கள் மாநில காங்கிரஸ் தலைமையை மாற்றும் சர்ச்சையில் உள்ளனர்

சண்முகத்துடனான மோதல் போக்குக்கூட மரைக்காயரின் தனிப்பட்ட பேரத்திற்கு இட்டுச்செல்லும் வழியாகவே எனக்கு தெரிகிறது . அதைமீறி அவருக்கு ஒரு ஆள் இருக்கிறார் என்றால் அதுவெறி நாராயணசாமிமட்டுமே , பாலனுக்கும் அவருக்கும் ஏறக்குறைய ஒரே வயது. மேலும் இப்போது அவர்களுக்குள் நல்ல உறவில்லை. எல்லாவற்றையும் விட மரைக்காயர் தன்னை காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் இருக்கிறார் . அவர் இந்த ஆட்டத்திலேயே இல்லை . இதில் நான்காவது கட்டத்திற்கு ஆள் இல்லை. அங்கு ஒருவரை வைக்காது இந்த இருசால் துலா நிகர்நிலைகொள்ளாது . “நான்காவது அணி பாலன்என வைத்தால் இந்த ஆட்டம் விபரீதமான நிகர்நிலையை அடைகிறது .

அப்போது பூங்காவனம்இந்த ஆட்டத்திற்கு மூன்று தட்டு மட்டுமே என்றல் உன் கணக்கு என்னஎன்றார் . இது நல்ல கேள்வி . அப்படியானால் பாலனும் நானும் ஒரு அணியாக இருந்தால் தான் நீங்கள் சொல்வது சரியாகவரும் . அது அப்படித்தான் என்றால் அவர் நேரடியாக சொல்லவேண்டியதை குழு மூலமாக சொல்ல காரணம் . அந்த சுழி மறுபடியும் அதே நிலையில் நகராது நிகர்நிற்கின்றது . இதற்கு பாலனை தவிர யாரும் பதில் சொல்ல முடியாது . அவருக்கு தனிப்பட்ட உள்நோக்கமென ஏதோ ஒன்று இருக்கவேண்டும் . அது சரி என்றால் அதில்என்னை பலி கொடுப்பதாக இந்த ஆட்டம் முடிவுறும்”. அது யாரை திருப்திப்படுத்த . தன்னையேவா ...?........ பூங்காவனம் திகைத்து சாய்ந்து அமர்ந்தார் . சில நிமிடம் நாங்களிருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை . சிறிதுநேர அமைத்திக்குப் பிறகு . நீ……நீ…….சொன்னதை போல சுழி நான்கில் வந்து நிற்கிறது அது வேறு எங்கும் பொருந்தவில்லை , காரணம் இது பாலன் உன்னுடன் ஆடுவதால் என்றார் பூங்காவனம் . நான் மெளனமாக அதை ஆதரித்தேன் . அப்படியென்றால் நீ தில்லி செல்லாதே , இது தானாகவே ஒரு முடிவிறகு வந்துவிடும் என்றார் . இல்லை இந்த ஆட்டம் தில்லியில்தான் முடிவுவரும் . அங்கு செல்லாவிட்டால் அதை அறிந்துகொள்ள முடியாது

தவிறவும் , இது ஒருவழிப்பாதை , திரும்பமுடியாது. என்னவானாலும் இதன் இறுதிவரை சென்று பார்க்கத்தான் வேண்டும் என்றேன் . உன் பாதுகாப்பிற்கு அல்லது உன் நிலையாக நீ ஒன்றுமே சொல்லவில்லையா என்றார் பூங்காவனம் . இதில் நான் ஆடுவதற்கான இடைவெளியே அமைக்கப்படவில்லை . ஆனால் சுப்பாராயனிடம் எனது வேண்டுகோளாக நம் அமைப்பிற்குள்ளேயே ஒருவருடன் ஒருவரை முரண்படவைக்கும் கீழ்த்தரமான விளையாட்டு  இதில் வேண்டாம் என்று மட்டும் கூறினேன் . இப்படியே சொன்னாயா என்றார் . நான் அப்படியே சொலவவில்லை . இரண்டு வார்த்தைகளை இதில் நான் உச்சரிக்கவில்லை ஒன்றுகீழ்த்தரமானஎன்கிற சொல்லை . “இன்னொன்றுஅதை  நேரம் வரும்போது சொல்லுகிகிறேன் . என்றதும் அவர் சிறிது என்னை பார்த்தபடி இருந்து பின்னர் மிகுந்த கவலை தோய்ந்த முகத்துடன் கிளம்பி சென்றார்

என்னால் இப்போது எளிதாக சுவாசிக்க முடிந்தது . இரண்டு நாளாய் நான் எனக்குள் நிகழ்த்தி அடையமுடியாத ஒரு தெளிவை இப்போதோ அடைந்தேன் . காட்சிகள் ஏறக்குறைய துளங்கிவந்தபடி இருந்தது . ஆனால் மனஅழுத்தம் காரணமாக அதுவரை இருந்த ஒரு பரப்பு இப்போதில்லை பூங்காவனத்துடன் பேசிக்கொண்டிருந்த அந்த கணத்தில் ஒரு கணக்கு எதிர் முனையை கட்டினாற்போல ஓர் உணர்வு அது சரியாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை . ஆனால் அது மட்டுமே இப்போதைக்கு மிச்சப்பட்டு நிற்கிறது . நமக்கு என்ன புரிபடுகிறதோ அதுவே இப்போதைக்கு நிஜம் . என்கிற இந்த புள்ளியில் மனம் நிகர்நின்ற பிறகு இந்த ஆட்டத்தின் அடுத்த நிலையான மனசமாதானம் அதை நோக்கி சிந்திக்க ஆரம்பித்தேன் 

ஒரு நிகழ்வினால் பாதிக்கப்பபிடுகிற போது நான் கையாளுகின்ற வழிமுறை இது . மனம் - அது நம்மை விடாது பற்றி நிற்பது , நம்மை மீறியும் இயங்கக்கூடியது  , சில அசந்தர்ப்பங்களில் நாம் சொல்லும் எதையும் கேட்காது அது தன்னிலையில் செயல்பட்டுக்கொண்டே . பிதொன்றின் மூலம் திரும்ப திரும்ப அதை கவனிக்கும்படி சொல்லிக்கொண்டே இருக்கும் விளையாட்டு . சரியான திசையில் அதை ஒருங்காவிடில் மனப்பிறழ்வுவிற்கு இணையாக கழிவிரக்கம் கொள்ளவைத்துவிடும் . கழிவிரக்கம்- கொள்வதென்பது என்வரையில் தற்கொலைக்கும் கீழானது


இந்த பதவியை நான் தேடிச்செல்லவில்லை , அது கிடைத்தாலும் அதில் என்னால் பொருந்தி இயங்கமுடியாது . உன்னை தன்னுடைய லாபத்திற்க்காக பயன் படுத்திக்கொள்வதாக வெளிப்படையாக சொல்லிவிட்டே இதை ஆரம்பித்தார்கள் . இதனுடைய பலாபலன் அவர்களுக்கே . பாலனுக்காக இதைப்போன்ற ஒன்றை நான் செய்துதான் ஆகவேண்டும் . இதில் அவரின் அடியாழத்தில் வேறோர் கசப்போ அல்லது திட்டமோ கரந்திருக்கும் எனில் அது தானாக வெளிப்படும் நிமிடம் வரை பொறுத்திரு . அதுவரை அமைதியாக இரு . உனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை . என்ன நிகழவேண்டுமோ அது நிகழ்வதாகுக -என் தியானம் - முடிந்தது . பெரும் அமைதி என்னை சூழ்ந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்