https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 27 ஜூலை, 2017

அடையாளமாதல் - 139 * நிகழாத காலம் *

ஶ்ரீ:





பதிவு : 139 / 212    தேதி :- 26 ஜூலை 2017

* நிகழாத காலம் *


இயக்க பின்புலம் - 65
அரசியல் களம் - 40






ஏனெனத் தெரியவில்லை , மேடையில் அமைப்பை சேர்ந்த யாருக்கும் உட்காரும் வாய்ப்பை பாலன் செய்யவில்லை. இத்தனை வருட உழைப்பிற்கு ஒரு மரியாதையை அது தந்திருக்கும் , மாநாட்டிற்கு வரும் திரளை ஒருங்கி அமரவைக்க என்கிற காரணத்தை சொல்லி  அனைத்து நிர்வாகிகளும் பலவேறு நிலைகொள்ளலுக்கு கலைத்துவிடப்பட்டிருந்தனர். யாரும் மேடை அருகில் கூட இருக்க விடவில்லை. அனைத்து நிவாகிகளும் கொதிநிலையை அடைந்துவிட்டிருந்தனர் ,இந்த சூழலில் ஒருங்கிணைப்பு என்பதுகொள்ளிக்கட்டையில் தலை சொரிவதுநான் தெளிவாகமுடியாதுஎன்று சொல்லிவிட்டேன் . அது ஒரு விவாதம் போல நிகழ்த்தி என் தலையில் கட்டுவதை தவிர்த்தது , அங்கு திடீரென்று உள்நுழைந்த மரைக்காயரின் தம்பி இக்பாலின் வருகை . நான் மரைக்காயர்கள் குழுவில் மதிப்பது அவரை. நானும் பாலனும்  மரியாதை நிமித்தமாக எழுந்து அவருக்கு மரியாதை செலுத்தினோம்


கிருஷ்ணமூர்த்தி அவரை கண்டதும் எழுந்து மரியாதை செய்வாரென நினைக்கையில் , எந்த அசைவையும் வெளிக்காட்டாது , படுத்தபடியே அவரை வரவேற்று எதிரே உள்ள படுக்கை அறையில் காத்திருக்கக்ச்சொல்லி பின் எங்களுடனான பேச்சை தொடர்ந்தார்  . இந்த ஆணவம் என்னால் சகிக்க இயலவில்லை , அக்கிருந்து உடன் கிளம்பியாக ஏதேதோ காரணத்தை சொல்லி வெளிவந்தபிறகே என்னால்  சுவாசிக்கவே முடிந்தது . பெரும் பாரமென என் உடலை அழுத்திக்கிடந்தது . இன்று நடப்பவைகள் எதுவும் நல்லதற்கல்ல என்றுமட்டும் நினைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்.


சென்னை விமனநிலையத்திலிருந்து பிட்டாவை அழைத்துவர என்னை செல்லச்சொன்னார் கிருஷ்ணமூர்த்தி , எனக்கு மாநாட்டில் எழும் பூசலில் சிக்கிக்கொள்வதை விட இது உகந்தது . ஆனால் உயிராபத்து உள்ளது. ஏற்கனவே பலமுறை கொலை முயற்சியில் தப்பியவர் z + தகுதி கருப்பு பூனைப்படை காவல் உள்ளவர் . இருந்தும்சரிஎன்றேன் . ஆனால் அடுத்தநாள் பாலன் என்னிடம் வண்டி கேட்டார், தான் சென்று அழைத்துவர இருப்பதை சொன்னார் , நான் பதிலேதும் சொல்லாது வண்டியை கொடுத்தவுடன் அன்றைய தேவைக்கும் கடைசி நேர பட்டுவாடாவிற்கும் தேவையான பணத்தை கிருஷ்ணமூர்த்தியிடம், பெற்றுக் கொள்ளச் சொன்னதும் அடக்க முடியாத கோபம் வந்தது நான் தெளிவாக முடியாது என்றவுடன் , அவரது பேசுமுறை மாறியது . நான் மேற்கொண்டு அதை வளர்ப்பதை தவிர்த்து , சொன்ன வேலையை செய்யத்துவங்கினேன் .

கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று நின்றதும் ,ஒன்றும் பேசாது பணத்தை கொடுத்தார் .கிருஷ்ணமூர்த்தி கூடிய கூட்டம்முன்னே அரசியல் செய்யும் பிறவி , அவருக்கு பாலன்  சென்றது  தெரியாது   தெரிந்ததும்   என்னிடம் ஏகத்திற்கு சப்தமிட துவங்கினார் . “இவனை எவன் போக சொன்னதுபோன்ற ஏக வசனத்துடன் , பாலனுக்கு இது தேவைதான் . கண்டவனிடம் கைநீட்டுவதால் இந்த அவமானத்தை அடைய அவர் தகுதியானவர்தான்.நான் கிருஷ்ணமூர்த்திக்கு இணையாக என் குரலை உயர்த்தினேன் . எதிர்பார்க்காத கிருஷ்ணமூர்த்தி தழைத்த குரலில் ஏதோ சொல்லவர நான் என்னிடம் கொடுக்கப்பட்ட பணத்தை அவரது கட்டில் மேல் எறிந்துவிட்டு அவர் என்னை கூப்பிட்டபடி பின்னால் வர நான் அவர் வீட்டைவிட்டு முற்றிலுமாக வெளியேறினேன் .  


அந்த நிமிடம் முடுவெடுத்தேன் இனி ஒரு நிமிடம் இந்த இயக்கத்தில் இருப்பதில்லையென . முற்றிலுமாக அவர் வீட்டிலிருந்து வெளியேறிய எனக்கு அவரின் வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு பிறிதெப்போதும் எழவேயில்லை என்பது விண்ணகத்து தெய்வங்களின் கருணையே காரணம். அந்தநாள் வாழ்வில் மறக்கமுடியாதது , என் வண்டியில் பிட்டா வந்து உப்பளம் விடுதியில் தங்கியபோதும் அவர் கிளம்பி  விழாவிற்கு வந்தபோதும் இளைஞர் காங்கிரஸ் சார்பாக எந்த கூடுகையும் ஏற்பாடு செய்யவில்லை    புதுவை முழுக்க விழாக்கால கோலாகலம் திரும்புமிடமெல்லாம் கட்டவுட்டும் பேனருமாக விளக்கொளியில் மின்னின , ஒரு அகில இந்தியா தலைவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து முறைமைகளும் குறைவற செய்யப்பட்டிருந்தன . நிகழ்வு தொடக்கமுதல் இறுதிவரை எந்த நிர்வாகியும் மேடையை நெருங்க முடியாதபடி ஏற்பாடுகள் யார் செய்தது என் கடைசீ வரை தெரியாது போனது . ஒருங்கிணைப்பாளர் என்கிற பணியை எதையும் கணிசியாது நான் என் வேலைகளை ஆற்றியபடிமிருந்தேன். தில்லி சென்று திருப்பியது முதல் யாருடனும் தொடர்பை நான் விழையாததால் .அன்று நடந்தவைகளை முழுவதும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவர்கள் என்னிடம் மிக வருத்தமுற்று சொன்னபோதுதான் அறிய நேர்ந்தது .


புதுவை கடற்கரையில் ஓர்ஞாயிற்று கிழமை மாலை 5:00 நேரு சிலை அருகே அமைக்கப்பட்ட மேடையில் துவங்கும் படியாக ஒருங்கப்பட்டது , போக்குவரத்து மற்றும் கடவு சீட்டு என்வசமிருந்ததால் அதை அன்றி பிறிதெந்த நிகழ்வும் எதையும் என்னால் அறியமுடியவில்லை . முழு கடற்கரை சாலையில் செல்லும் கடவு சீட்டு ,என் வண்டிக்கு, மூப்பனார் மற்றும் முதல்வர் முதலான ஒரு சிலருக்கே வழங்கப்பட்டிருந்தது , நான் மேடைக்கு செல்ல விருப்பமில்லாம்,காந்தி சிலை அருகேயே நின்று கொண்டேன் , கடல் அலைக்கு இணையாக என் மனதிலும் அலை ஓயவில்லை . சிறுமை படுத்தடுத்தப்பபிடுவதின் எல்லை  இது , அன்று என்னுள் எழுந்த ஓயாத கேள்வி ஏன் ஏன் ஏன் என்பதாக இருந்தது விடை சொல்வர் யாரும்மில்லை . காந்தி சிலை படிக்கட்டுகளில் அமைந்திருந்தோது பாலன் வேகமாக என்னிடம் ஓடிவந்து பீட்டாவிற்கு கொடுக்கப்பட வேண்டிய நினைவு பரிசு இந்நேரம் முடிந்திருக்கும் எனவும் அது முதலியார்பேட்டையில் உள்ளது சென்று எடுத்துவர சொன்னார் . என் கொந்தளிப்பை வெளிக்காட்டிக்கொள்ளாது , மௌனமாக என் காரை வரவழித்து அதில் கிளம்பினேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...