https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 7 ஜூலை, 2017

அடையாளமாதல் - 117 *இருத்தலியலின் பலமுனை திருப்பங்கள் *.

ஶ்ரீ:







*இருத்தலியலின் பலமுனை திருப்பங்கள்  *
இயக்க பின்புலம் - 44
அரசியல் களம் - 34




 ஒரு தொழில்முறை அரசியல்வாதியாக இதுவரை நான் என்னைக் கற்ப்பித்து கொண்டு பார்த்ததில்லை . தலைமைக்கு அருகில் இருந்துகொண்டு அதைத்  தாண்டியும் , தலைமையை ஒதுக்கியும் பேருரு கொண்டு அதன் அனுமதியுடன் இயங்குவதென்பதெல்லாம் ஈதெதிலும் சேராது. இது தனித்துநிற்பது . என்னை உள்ளும் புறமுமாக பாதிக்காத எதையும் என்னால் இயற்றமுடியாது . நான் யாருடைய அறிவுறையையும் கேட்டு என் வழிகளை இதுவரை தேர்ந்ததில்லை . என. ஆழ்மனம் என்ன சொல்கிறதோ அதைமட்டுமே பின்பற்றி எனக்கான பாதைகளை அமைத்துக்கொண்டேன். ஊழின் ஆடலில் ஓர் அலகென எழுந்து என்னைச் சீண்டும் ஒன்றையொன்று விரோதித்து எழுவது என் வழமையாக இருந்திருக்கிறது . உன்னால் இதை ஆற்ற முடியாது என அறைகூவலாக விடுக்கப்பட்டதை , என் இயல்பையும் தாண்டி அதை முடியுமென செய்து காட்டிருக்கிறன் .

ஆனால் தலைமையாக முன்னிற்பது முற்றிலும் வேறானது . நான் ஆற்றிய செயல்களின் விளைவை என்னால் இப்போது மிகச்சரியாக உணரமுடிகிறது . அனைத்திற்கும் பின்னால் ஆழ்மனதில் இதை எங்கோ விழைந்தேயிருக்கிறேன் . கமலக்கண்ணன் ஐயத்தினால் முரண்பட்டதில் ஒரு நியாயம் இருக்கத்தான் இருக்கிறது. எது எவ்வகையில் நடப்பதனாலும் தமோதரனின் நிலைப்பாடு மதிக்கத்தக்கதே . ஆனால் அன்றிருந்த மனநிலையில் ஒருவிஷயத்தில் தெளிவென இருந்தேன் . என்னால் இதை ஏற்கமுடியாது

எனக்கானது மிகச்சிறிய விளையாட்டுலகம்.அதன் பாரம்பரியம் , சமூகமதிப்பிற்கு நான் என்னை இழந்தது அதிகம் , மேலும் தலைமை அதைசார்ந்த அரசியல் அதற்கென இலக்கு . உட்கட்சி ஊழல் , முரண்டுகளை களையெடுத்தல் அல்லது கட்டிவைத்தல் எதற்கும் அதை ஆற்றுவதற்கான இல்லாத சிந்தனை போக்கு . அதற்கான மனநிலை நிச்சயமாக எனக்கில்லை. ஏதாகவேண்டுமானாலும் ஆவதாக  கனவுகளில் வாழ்வது அனைவருள்ளும் நிகழ்வதே . அப்படியெனில் கனவு குற்றமா .கனவு காண்பதில் பிழையொன்றுமில்லை. குற்றவுணர்வோ நாணமோ கொண்டு அதை கட்டுப்படுத்த வேண்டியதில்லை. இன்று எண்ணுகையில் அக்கனவுகளுக்கு நடைமுறைப் பொருளென்று ஏதுமில்லை என்று தோன்றுகிறது. அக்கனவுகள் அளித்த இன்பம் மட்டுமே அவற்றின் பயனென மிச்சப்பட்டு நிற்கின்றது.

கனவுகள் முழுக்க நிறைவேறும் வாழ்க்கையை விண்ணுறை தெய்வங்கள் யாருக்கும் அருளுவதில்லை. ஆனால் என் கனவுகளில் ஒரு பகுதி நிறைவேறியது. ஆகவே எஞ்சியவற்றை அடைந்துவிடலாமென்று எண்ணினேன். இப்போது கனவுகளைத் துரத்துவதைப்போல வாழ்க்கையை வீணடிப்பது பிறிதொன்றில்லை என்று தோன்றுகிறது. கனவுகளில் அமர்ந்து திளைத்து மகிழ்ந்து அவற்றிலேயே மூழ்கி மறைய முடியுமென்றால் அதுவே பெருங்கொடை என்கிறது வெண்முரசு . ஆம் அது அவ்விதமே.

நான் எதுவும் பேசுகிற நிலையில் இல்லை என்றதும் சுப்பாராயனே மேற்கொண்டு பேசினார் . இது பாலனை மையப்படுத்தி எடுக்கப்பட்டது . அவருக்கு மட்டுமல்ல எல்லோருக்குமானது . சரியானதும் கூட . உன்னிடம் நான் ஒன்று சொல்லவேண்டும் . அந்த போஸ்டர் நிகழ்வுதான் இந்த ஒருவரி தீர்மானத்திற்கு விசையாக இருந்தது என்பது உண்மையல்ல . உனக்கு முதலில் இருந்தே இந்த ஆதரவு இருந்தது என்பது உனக்கும் எங்களுக்கும் தெரியும் , அது வேகமெடுத்தது கிருஷ்ணமூர்த்தி உள்ளேநுழைய முயற்சித்த அந்த கணத்தில்

இப்போது முடிவு உன்கையில் . அதற்குள் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை . எனக்கு வைத்திலிங்கத்துடனான உறவு நல்லதொடக்கம் . நான் ஒரு மாற்று அவ்வளவே . ஆனால் இது பெரிய முடிவு என்னால் அவ்வளவு எளிதாக இதை தீர்மானிக்க முடியாது . முதல் சிக்கல் அப்பா எப்படி எடுத்துக்கொள்வார் என்பது , இயல்பான பேசுவதில் உள்ள சிக்கல் . முழுநேர அரசியல்வாதியாக என்னால் என்னை எண்ணக்கூடவில்லை

அதைத்தாண்டி உள்ள எதார்ததம்  சண்முகத்தை மாற்ற நம்மால் முடியாது என்பதை மட்டும் என்னால் முழுமையாக சொல்ல முடியும் ,ஆகவே தலைமை மாற்றம் என்பது நிகழப்போவதாக நான் நினைக்கவில்லை , பாலனுக்கும் அப்படியே . இதை உடன்படுவதற்கு என்ன இருக்கிறது . அமைப்பில் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளத்தக்க இடத்தில் இருக்கிறேன் என்பது ஒன்றே எனக்கு பெரும் சந்தோஷத்தை தருவது.ஆனால்  இது வேறு விதமாக திரும்புமானால் என்னால் இதை ஏற்க முடியாது என்பதால் இதை மறுபரிசீலனை செய்யலாம் என நினைக்கிறேன் எனக்குள் ஒன்று திரும்ப திரும்ப சொல்கிறது நான் அதற்கான ஆள் இல்லை என . எனக்கு ஓரிருநாள் அவகாசம் வேணும் . இதை பிறிதொரு சமயத்தில் பேசலாம் என்று முடிக்க நினைத்தேன்

லோகுஅப்போ பாலனிடம் என்ன சொல்வதுஎன்றார்  . நான் மாற்று ஏற்பாடு என்கிற இந்த ஆட்டத்தில் எனக்கு ஒரு சிக்ககிலும் இல்லை ஆனால் தலைவர் பொறுப்பேற்கக்கூடிய சூழ்நிலை உருவானால் என்னால் நிச்சயமாக அதற்கு ஒப்புக்கொள்ள முடியாது .


சுப்பாராயன் தனது வழிமுறைகளுக்குள் சென்றார் . நீ இப்போதுதானே சொன்னாய் . பாலனுக்கு நட்புடன் இதுவரை ஆற்றியதை பற்றி அதை அரசியல் என யார் சொன்னாலும் மொண்ணை என்றாய் , நான் மொண்ணையல்ல , நீ இதுவரை அரசியல் செய்யவில்லை என்று .ஆனால் அது அரசியல் தான் உனக்குளே எது வாழ்கிறதோ அதுவே புறத்தே  வெளிப்படுவது. இத்தனை ஆயிரம் பேர் , அரசியல் ரீதியா நீ செயல்பட்டாய் என்று நினைத்து உன்னை தலைவராக ஒருவரி தீர்மானம் போட்டிருக்கிறார்கள் . உன்னை அதற்கு கட்டுப்படு எனச்சொல்லவில்லை . இன்றைய சூழலில் இது தவிற்க இயலாதது . முதலில் தில்லி சென்று பாலனின் பதவி நீட்டிப்பு அதற்கு பின்னர் என்ன என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். அனைவரும் கிளம்பிச்சென்றனர் . நான் பலவித உணர்வுபெருக்குடன் அலுவலக அறையிலேயே அமர்ந்திருந்தேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக