ஶ்ரீ:
பதிவு : 140 / 213 தேதி :- 27 ஜூலை 2017
* தன்வேலி *
இயக்க பின்புலம் - 66
அரசியல் களம் - 40
பிட்டாவிற்கு வழங்கப்பட இருக்கும் நினைவுப்பரிசு . மிக அழகாக வரையப்பட்டிருந்தது , மேலே காந்தி கீழே பிட்டா என்று , பெரிய சைஸ் சுமார் மூன்றடிக்கு இரண்டடி சட்டமடிக்கப்பட்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டு மேடைக்கு செல்வதற்கும் விழா முடிவடைவதற்கு சரியாக இருந்தது, ஆகவே நான் அதை நேராக மேடைக்கு கொண்டுசெல்லும்படி நேர்ந்தது .அன்று சந்தித்த பிறகு நான் மூப்பனாரை மேடையில் தான் பார்தேன் . என்னை பார்த்ததும் அமைதியா புன்னகைத்தார் , அவர் அந்த நினைவுப்பரிசை என்னிடமிருந்து வாங்கி பீட்டாவிடம் கொடுக்க .அந்த காட்சி மட்டுமே என, நான் பாலனுடன் மேடையில் தோன்றும் கடைசீ படம் என முடிவு செய்து புகைப்படததிற்கு நின்றேன் .
இது என் சுபாவமல்ல , யாரும் மேடைக்கு வரக்கூடாதென நினைத்த பாலனின் குறுகிய மனம் தோற்க நான் மட்டுமே அங்கே நின்றேன் , "ஊழ்" என் உழைப்பிற்கு உகந்த மரியாதையை கொடுத்து என்னை அங்கிருந்து வழியனுப்பி வைத்தது .நான் அதுவரை கட்டுப்படுத்தியிருந்த கடும் கொந்தளிப்பை வெளிக்காட்டாது அங்கிருந்து வெளியேறும்போது உரைத்த வெஞ்சினம் . "இது ஏன் இப்படி என்பதற்கான பதிலும் அதற்கான் பிழைநிகரும் நடவாது இனி இளைஞர் காங்கிரஸ் திரும்பமாட்டேன்", என வீடு வந்து சேர்ந்தேன். எனக்கான திட்டமில்லாது ,அடுத்து என்ன நிகழும் என்கிற என் கணக்கை பொய்யாக்கி நான் நினைக்காதது நிகழலாயிற்று .
விழா முடிந்தும் இரண்டுநாள் பிட்டா புதுவையில் தங்கி இருந்தார் .அன்று இரவு என் வீட்டுத் தெருவில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜோசப் மரியதாஸ் வீட்டில் இரவு விருந்து ஏற்பாடாகி இருந்தது . அவரை அங்கு கொண்டுவந்து விட்டு நான் மெளனமாக அங்கிருந்து வெளியேறினேன் . அடுத்தநாள் காலை சண்முகம் வீட்டுல் காலை உணவு. அங்கும் சிறிதுநேரம் இருந்து ,பின் வீடு திருப்பினேன். அதன் பிறகு நான் பாலனை வெகு காலம் நான் சந்திக்கவில்லை. தினம் என்வீட்டு வழியாக போவதும் வருதுமாக இருந்த போதும் , முக்கிய நல்லது கெட்டதுகளுக்கும் , அவரை சந்திக்கும் வாய்பபை தெளிவாக தவிற்த்துவிட்டேன். திட்டமிடப்படாது சந்திக்க நேர்ந்தால் ,அது வலிந்து உண்மையற்ற விஷயங்களை , போலியாக பேசவைத்துவிடும்.அதன் பிறகு தவறு என்னுடையது என்றாகி போகும் . இல்லை தவறை அவர் தான் இழைத்தார் , நான் எனக்கு நியாயம் வழங்குவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் . அது என்னை அழைத்து பேசி நடக்க வேண்டியது. வந்து ,போன இடத்தில் அதை பேசுவதில் எந்தப் பொருளுமில்லை. என்னயுடைய முடிவுகள் தெளிவானவை , என்னக்காரணத்தினாலோ நான் முழுவதுமாக இந்த விழாவில் ஒதுக்கப்பட்டேன் . மூப்பனாரை கொண்டுவந்தது என் தனிப்பட்ட முயற்சி என்கிற சிந்தனை அவர்களுக்கு எழாது போயிருக்கலாம் ஆனால் , நான் உருவாக்கி வந்த அந்த தொடர்பும் அதனால் நிகழக்கூடியதும் , இனி யார் தொடர்வார் , அரசியலில் முறைமைகள் இன்றியமையாதது , பாலன் எல்லாவற்றிற்கும் தன்னை கொண்டு வைக்கமுடியாது என்னை போல பலர் அவருக்கு இனி தேவை .
நான் அவருக்கு தேவையற்று போய்விட்டேன் . என் பலம் எனக்குத்தெரியும் என்னை எவரும் அங்கு நிகர் செய்துவிட முடியாது. இது என் போன்ற பல நூறுபேரின் தியாகத்தின் பொருட்டு இங்கு வந்து அமைந்துள்ளது . இனி ஆரோக்கியமான பாதையில் அது சொல்லவேண்டுமென்றால் பழைய அமைப்பிலுள்ள அனைவரையும் அரவணைக்காது அது நிகழப்போவதில்லை. எங்களில் ஒரு சிலருக்கு மாற்று கிருஷ்ணமூர்த்தி வகையறாக்களால் நிகர் செய்ய முடியும். ஆனால் பல தொகுதியில் எழுந்து நிற்பவர்களை , வெகுகாலத்திற்கு மடமையில் நிறுத்திவைக்க முடியாது. அது நான் வாய்திறந்து பேசாத வரை சாத்தியம். நான் என சுயக் கட்டுப்பாட்டில் நிற்கிறேன் , எனக்கான எல்லை எது என எவரும் நிர்ணயத்து விட முடியாது . நான் எனக்கிட்டுக்கொண்ட வேலிக்கு உள்ளிருப்பது , பிறரின் நன்மையைக்கருதி , காத்திருக்கிறேன் எனக்கிழைத்த பிழை நிகர் செய்யப்படு மென்ற நம்பிக்கையில் .
நான் மாணவருத்தத்தில் இருப்பது இதற்குமுன் நிகழாதது , சிறு சிறு வருத்தத்திற்கே எனவே உடன் பாலன் அல்லது சுப்பாராயானாவது என்னை தொடர்பு கொள்வார்கள் , இப்போது எல்லாவற்றையும் பேசியாக வேண்டும் , இதுவும் நல்லதர்க்கே , இந்த சந்திப்பு நிகழ்ந்தால் அனைத்தையும் சரியான பேசுமொழியில் நிர்தாட்சண்யமாக பேசி முடிக்கலாம் . பேச வேண்டியதை கணக்கில்லா முறை நிகழாத காலத்தில் பேசி ஒப்பிட்டு , சரி செய்யப்பட்டது , பிசுறுகள் நீக்கப்பட்டது ஒவ்வொரு முறையும் நன்கு கூர்ந்தது வடிவமைக்கப்பட்டது , பிறகு கிடைக்கும் இடைவெளியில் அது மறுபடியும் சிந்தையில் சொல்லப்பட்டு பிழை நீக்கப்பட்டது . பலமுறை இது உள் நிகழ்ந்தாளாலேயே சொல்லப்பட்டதாகி நினைவிலிருந்து மெள்ளக் கழல துவங்கியது , இதை பலமுறை நிகழ்த்திய பிறகு மனதின் ஒரு ஓரத்தில் இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறுக்கியபடி சென்றது . பல மாதங்களான பிறகு , எனக்குள் ஓயாது நிகழந்த சிந்தனை பெருக்கு வடிகாலற்றதாகி உள்நோக்கி திரும்புகையில், வருத்தம் சினமாக எழத்துவங்கியது . இளைஞர் காங்கிரஸில் இருந்து என்னை தொடர்பு கொள்பவர்களின் பலர் வராமலாயினர் , சில மாதங்கள் ஓடிவிட்டன . ஆட்சியில் அமர்த்ததுமே அதன் அமைப்புகள் நீர்த்துப்போவது இயல்பானதே . அதன் எஞ்சிய சக்தியும் இந்த விழாவில் உறிஞ்சப்பட்டதால் மிஞ்ச ஏதுமில்லாது போனது. அனைத்தையும் கசக்கி பாலன் தனக்கான பலனை பெற்றுவிட்டாரா இல்லையா எனத் தெரியவில்லை.
ஓயாது இந்த சிந்தனை பெருக்குடன் என்னால் என்னுள் பேசியபடியே இருக்க முடியாது . இந்த அமைதி தாங்கமுடியாததாக உருவெடுக்க துவங்கியது . தவறென இழைக்காத மானுடர் எவர் உளர் இந்த உலகில் , வெறுப்பதற்கு முன் அவர் இதுவரை ஆற்றியதை எடுத்தி சீர்தூக்கி பார்க்கலாம் ,அல்லது நீ இதை இழைத்தாய் என்னளவில் இது குற்றமே அதற்காகவே நீ புறம்தள்ளப்படாய் , உனக்கு இங்கு இனி இடமில்லை , என் யாரவது சொன்னால்கூட அதை ஏற்றிப்பேன் , அமைப்பிலிருந்து விலகுதல் நான் முதலில் சிந்தித்தது தானே . கமலக்கணனுடன் ஏற்பட்ட பிணக்கிற்கு பிறகு நான் இதேபோல வெளியில்வந்தவன்தானே . என்னை அப்படியே விட்டிருக்கலாமே , திரும்பவும் அழைத்து ஒருவரும் ஆற்றமுடியாதவற்றை நான் ஆற்றிய பிறகு , என்னை கொண்டாடவேண்டான், நானும் அதை எதிநோக்க்கவில்லை . இப்படி ஒதுக்க வேண்டியது அவசியமற்றது. முடிவு தெரியாத பயணமல்ல என்பது கனகராஜ் சேகர் மூலமாக வெடித்தது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக