https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 10 ஜூலை, 2017

அடையாளமாதல் - 122 *அனைத்திற்கும் அடியில் கரந்து ஒன்று *

ஶ்ரீ:




*அனைத்திற்கும் அடியில் கரந்து ஒன்று *

இயக்க பின்புலம் - 49
அரசியல் களம் - 35





இதில் ஏதோ  இடறியபடி இருந்தது சில ஒன்றுடன் ஒன்று பொருந்திவரவில்லை  , என எதோ  ஒன்று ஓயாது உள்ளுக்குள் சொல்லியபடியே இருந்தது . ஆனால் இடறுவது இன்னதென்று இனங்காணமுடியவில்லை . பூங்காவனம் வந்தது ஒரு விடுதலை உணர்வைத் தந்தது . அவர் மிக எளிமையான மனிதர் , அவரிடமிருந்து எனக்கு வழிகாட்டுதல் கிடைக்காது, எனினும் என்னை தொகுத்துக்கொள்ள ஒருவர் வேண்டும் . எதிரில்நிற்கும் சுவற்றுடன் உரையாடமுடியாது . உயிருள்ள , என்மேல் சிறிதளவு பிரேமையுள்ள ஜீவன் வேண்டும். கேட்பவருக்கு புரியாது போனாலும் எதிரே ஒருவர் இருக்கும்போது என்னால் ஆழமாக சிந்திக்க இயலும் . நினைப்பதை சொல்லமுடியாமல் போவதைப்போல வதை பிறிதொன்றில்லை .இதன்பின்னால் மனதில் உள்ள நெருடல்களை  ஜாக்கிரதையாக செடலெடுக்கவில்லை என்னறால், தெளிவாக சிந்திப்பதையே இழக்க நேரிடும் 

கடந்த ஒருவருடமாக அரசியல் மரைக்காயருக்கும் சண்முகத்திற்கும் இடையே உக்ரமாக உச்சநிலையை அடைந்திருந்தது. அன்றாடம் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் கூர்தீட்டப்பட்டு நுட்பமாக நடந்தபடி இருக்கிறது.சண்முகம் காகிதங்களை கொண்டு விளையாடுபவர் , அதை கையிலெடுத்தாரென்றால்  எவரும் எதிர்நிறக இயலாது . ஏனெனில் அவர் சோர்வற்றவர். சட்டமன்ற தலைவர் தேர்தலுக்கு பின் சண்முகம் கண்ணனை சபாநாயகர் இருக்கையில் பொருத்தி அதன் அரசியல் தளையினால் சதா எரிகிற சிதைபோல ஒன்றை அவருக்குபரிசளித்தபிறகு, தன் கவனத்தை மரைக்காயரின் மேல் திருப்பினார் . தில்லியில் தனக்கிருக்கும் செல்வாக்காலும்  மாரைக்காயரின் சிடுக்குகள் நிறைந்த நடவடிக்கைகளை பட்டியிலிட்டு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்தும், தன்னை முதுகில் குத்தியதற்கு என , பல மாய முட்கள் ஓழியாது மரைக்காயரை காலை சுற்றியபடி அமைத்திருந்தார்  .  பிரதமர் நரசிம்மராவ் ஒரு கட்டத்தில் மரைக்காயரை அழைத்து எந்த கோப்பிலும் கையெழுத்துடக்கூடாது என உத்தரவிட்டதாக கூட எங்கும் வதந்தி புதுவை முழுவதும் புழுதியாய் வீசியபடி இருந்தது . பின் ஒரு கால இடைவெளியில்  மரைக்காயர் மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டு புதுவை திரும்பினார்.

ஒருநாள் பாலன் என்னை அழைத்து மரைகாயர் தில்லியில்   பதவியை தொலைத்துவிட்டு வருகிறார் . நாம் அவரை வரவேற்க வேண்டும்  வா என்றார் . நாங்கள் கோரிமேடு பகுதிக்கு சென்ற போது  வழமைப்போல ஒரு கூட்டம் இரு பக்க அலையடித்துக்கொண்டிருந்தது . நான் இன்றிக்கும் மனநிலையில் பல வருடத்திற்குமுன் அங்கு நிகழ்ந்த சம்பவம் நிழலாடியது . ஜிப்மர் ஒரு அரசியல் குறியீடுபோல மாறிவிட்டது . நிறைய கனரக வாகனங்கள் சென்ற படி இருப்பதால் , எதிரே வருபவரை அடையாளம் கண்டு நிறுத்தமுடியாது

என்னை பார்த்ததும் கிருஷ்ணமூர்த்தி , நாம் இங்கு நிற்க வேண்டாம் விஜிபி ஆர்ச் அருகில் சென்றால் அது சுமார் மூன்று நான்கு கிலோமீட்டர் நேரான பாதை தூரத்தில் வரும்போதே அடையாளம் காணலாம் என்றவுடன்,, எங்கள்  இரு கார் மட்டும் கிளம்பியது எங்களுடன் ஏம்பலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெய்வநாயகம் காரில் ஏறிக்கொண்டார் ,சற்று நேத்தில் விஜிபி ஆர்ச் அடைந்தோம் . மரைக்காயர் அவருடைய பழையாபென்ஸ் காரில் வருவதாக கிருஷ்ணமூர்த்தி சொன்னார் . சிறிது நேரத்திற்க்கெல்லாம் ஒரு பழைய பென்ஸ் காரைப்பார்த்ததும் அவர் அதுதான் என அடையாளம் காட்டினார் நாங்கள் அவரை அங்கேயே மடக்கி சால்வை போட்டோம் , இதில் வினோதம், எதற்கு என தெரியாமல்  . மரைக்காயர் அவர் வண்டியை விடுத்து என் வண்டியில் ஏறியதும்  நாங்கள் நான்குபேரும் ஏறிக்கொண்டோம் . காரில் ஏறி உடன்  மரைக்காயர் கிருஷணமூர்தியைக் கேட்டதுயார் இருக்கிறார்கள் யார் யார் ஓடிவிட்டனர் என்று . நானும் பாலனும் சிரித்துக்கொண்டோம் . மரைக்காயர் எங்கு போனாலும் அவரால் மாநில அரசியலில் இருந்து ஒதுங்க முடியாது.

1996 சட்டமன்ற தேர்தலை ஒட்டி நடந்த சண்முகத்திற்கு எதிராக நடந்து கொண்டவர்களாக பேசப்பட்டவர்களின் அரசியல், மீண்டும் மாநில அளவிற்குள்ளேயே  தேக்கமடைந்தது . சிறிது காலத்திற்கு பிறகு கண்ணன் மரைக்காயர் இணைந்து சண்முகத்தை கட்சி தலைவர் பதவிலிருந்து இறக்குவதற்கான முயற்சியில் இணைந்து செயல்பட்டு வந்தனர் . பின் ஒரு கட்டத்தில் வைத்திலிங்கமும் அவர்களுடன் இணைந்து கொண்டதும்  மூவர் அணியாக மாற்றமடைந்து சண்முகத்திற்கு வலுவான மாற்றுத்தலைமை கொடுக்கும் முயற்சி மெள்ள எழுந்து வந்தது

கட்சிக்குள் சண்முகம் அவ்வளவுதான் என்கிற பேச்சும், இல்லை சென்னா ரெட்டி , நரசிம்ம ராவ் , கேரள கருணாகரன் சீதாராம் கேசரி போன்றவர்கள் இருக்கும் வரை அவரை ஒன்னும் செய்யமுடியாது என்கிற பேச்சும் நிலவியது . இந்திரா காந்தியுடன் பணிபுரிந்து கொண்டிருந்த தவான் திரும்பியது கூட அவருக்கு பலம் தான் என்றனர் . தில்லி சூழலும் அதை உண்மை என்றே அதை மரைக்காயரின் மிக குறுகிய கால மந்திரி சபையிலிருந்து வெளியேற்றப்பட்டது அதற்கு சான்று கூறியது

சண்முகத்தை வீழ்த்த அணைவரும் ஒன்று கூடியிருக்கிற இந்த அசாதாரண சூழலில்தான் பாலனின் பதவியைப்பற்றிய சிக்கல் நேரடியாக தில்லியில் நிகழப்போகிறது . என் உறுத்தல் ஒன்று மட்டுமே . நான் ஏன் வைத்திலிங்கத்தை பார்க்கவேண்டும் . ஒரு சிறு மரியாதை நிமித்தமாக என்றால் பாலனே என்னை அழைத்து சென்றிக்கலாமே. கமலக்கண்ணனுக்கோ பிறிதெருவருக்கோ பாலன் கட்டுப்பட வேண்டிய தேவையில்லையே .


மேலும் நான் தனித்து பார்க்க சென்றால் அந்தப்பதவியை நான்  விழைவது போலாகாதா . என்னால் அமைக்கப்பட்ட ஒரு குறுங்குழு கடந்த இரண்டு நாட்களாக என்னை தலைமைப் பதவிக்கு சிபாரிச செய்து அறுபது ஏழுபது பேர் அவரை இதுவரை சந்தித்திருக்கின்றார்கள் . இன்று வரை நான் அவரை சென்று சந்திக்கவில்லை . சந்திக்கவும் போவதில்லை . இதில் பொருந்தாத சில முனைகள் இருக்கிறது அதன் பொருந்து முனைகள் வேறெங்கோ இருக்கவேண்டும் அது எங்கிருக்கிறது என தெரிந்தால் மட்டுமே நான் சிக்கியுள்ள இந்த ஆட்டம் முடிவுறும். எளிமையானதாக தெரியும் இதற்கு அடியில் தனியாக வேறேதோ ஒன்று கரந்துள்ளதாக உணரமுடிகிறது, என்றதும் பூங்காவனமும் அதை ஏற்றுக்கொண்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...