ஶ்ரீ:
பதிவு : 142 / 216 தேதி :- 29 ஜூலை 2017
*இருவழி அற்றப் பறவை *
இயக்க பின்புலம் - 68
அரசியல் களம் - 40
சணமுகத்தை மாற்ற இயலாது என்கிற உண்மை முகத்தில் வந்து அறைந்தபோது , பாலன் நிலைகுலைந்து போயிருக்கவேண்டும் . இந்த ஆட்சியில் ஏதாவது சாதித்து பிழைத்திருக்க வேண்டும் என்கிற தேவை , அரசியலின் தருக்க நியாயங்களை ஒன்றுமில்லாது அடித்துவிட்டது . அரசியலின் அடிப்படையே “உரிய காலத்திற்கு பொறுத்திருப்பது ” என்பதுதான். பாலன் எதையும் பொறுக்க முடியாதவரானார். அதிகாரமிக்கப்பதவி ஒன்றே தன் எல்லாவற்றிற்குமான தீர்வாக தோன்றியபின் , அவரது குவிமையமாக அதுவே இருந்தது . அதை அடைவதற்கு மட்டுமே இனி ஆற்ற வேண்டியவைகள். அதற்கான தடையை ஒழிப்பதற்கு செய்யவேண்டியது போன்றவை அவரது சிந்தனையில் இருந்திருக்க வேண்டும் . இதில் அவருக்கு மூன்று தடைகள் இருப்பதை, அவர் அறியாது தடுத்தது, அவரது விழைவு மட்டுமேயான அகம் .
ஒன்று ; இதில் பாலன் முதல் நிலை ஆட்டக்காரர்களின் ஒரு காய் மட்டுமே, அவர்கள் நகர்த்தும் திசை தோறும் நகந்தாகவேண்டும்,அதற்கு தன்விருப்பென ஒன்றிக்க வழியில்லை. இரண்டு; அவர்களும் புதுமுக ஆட்டக்காரர்கள் ,சண்முகத்தின் நீண்ட அனுபாவமும் கள நிலவரம் அறியாதவர்கள் , மரைக்காயரின் உதவியை இழந்திருந்தார்கள் . ஏனெனில் வைத்திலிங்கம் மற்றோரு தரப்பாக தன்னை முன்னிறுத்துவது மரைக்காயருக்கும் அறைகூவுவதே . மூன்றாவது: பாலன் எது அவரை ஒரு காயென வாய்ப்பளித்ததோ, எது அவரது அடித்தளமோ,அந்த இயக்கத்தை தக்கவைக்க மறந்து ஆடிய ஆட்டம் மிக ஆபத்தான திருப்பத்தை நோக்கி நகருமேயானால் , அவர் இந்த விளையாட்டிலிருந்தே தூக்கியெறியப்படுவார்.
பாலனின் குணாதிசயத்தை அவரே சரிவர புரிந்துகொள்ளவில்லை என்றே நினைக்கிறேன் . ஏதோ ஒன்று அவரை தலைவரென முன்னிறுத்தியது, அது “ஊழ்” எனமட்டுமே கூறவியலாது , அவருக்குள் இருந்த சில குணங்களும் அவரை “அதுவாக” ஆக்கியது . கிடைத்தையெல்லாம் உண்டு ஜீரணமாக்க முடியாது அவரால், இதை அவரே உணராதது பரிபவம் . இந்த ஆட்டத்தில் அவர் நகர்தப்படும் போதெல்லாம் , அவரது எண்ணம் ,தன்னை நிகர்நிலையில் வைத்திருப்பது , அதற்கு அந்தந்த சந்தர்ப்பத்தில் ஒரு தர்க்க நியாயம் கண்டடைந்து முன்னெடுக்கப்பட்டு அதுவே இன்றைய முறைமை என பிழையாக மனச்சான்று அளிக்கப்பட்டு, பின்னர் நகர்ந்து கொள்வது . அதனால் விளைவது வெளிப்படும்போது, தனக்கென ஒருங்கப்படுவதில் பொதிய முடியாது மனம் கசந்து, குமைவது அவரின் புது வழிமுறையானது . எதிர்பார்ப்பு நிறைவேறும் என்கிற போது, எதையும் இழக்கலாம் என்கிற சூதின் வெறியில் ஆடப்பட்டு , எல்லாம் இழந்த பிறகும் ,ஏதும் கிடைக்காமல் போவதால் ஏற்படுகிற துக்கம் ,உடலே சிதையென நின்று எரிவது . அதைவிட இழிந்தது ஒரு ஆன்ம தனக்கு தான் செய்யக்கூடியது பிறிதொன்றாக இருக்கவியலாது .
தில்லிக்கு கிளம்புமுன் தான் நிகழ்ந்த கட்டத்தில் பாலனின் நிகர்நிலை குலைய துவங்கியிருக்கலாம். வெறும் தலைவர் பதவியை வைத்து ஒன்றும் செய்ய இயலாது , அமைப்பும் தனக்கு வேண்டியதாக இருக்கும் , தனக்கு பிறகு இன்னார் என அறிவிக்கப்பட்ட ஒருவன் அமைப்பிற்குள் நீடிப்பது தனக்கு அறைகூவுவது . ஒருக்கால் தில்லியில் வலுவான போட்டி நிகழ்ந்து , நீட்டிப்பல்ல தலமைமாற்றம்தான் என எழுந்தால். அந்த தீர்மானம் கைகொடுக்கும் , நான் அவர்மீது மரியாதை உள்ளவன். என்னை தனது பதலியாக உபயோக படுத்தமுடியும். இதுவரையில் அவரது திட்டமெல்லாம் சரி. ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் நான் அவருக்கு பெரிய அச்சுறுத்தலாக உருமாறி உள்ளேன்,நான் ஏந்த நகர்வையும் நிகழ்த்தாத போதும்.எதோ ஒரு இடத்தில் என்னை சவாலான எதிரியாக அவர் உணர்ந்திருக்க வேண்டும்,ஆனால் நான் அந்த இடத்தில் இல்லை என்பது வேறு விஷயம். வெளியில் சொல்லமுடியாதது ஒரு தலைவனின் சிக்கல் .
இருவர் அந்த சிக்கலால் வரும் முடிவையே அல்லது அறிவுரையையோ சொல்லி இருக்க வேண்டும் அது முதல்வராக இருக்கலாம். பிறிதொருவர் "யாராகவும்" இருக்கலாம் !!. எந்தக்கோணத்தில் பார்த்தாலும் இந்த ஒரு இடத்தில்தான் பாலனின் சாயம் வெளுக்கிறது. பாலன் ஏன் என்னிடம் நேரடியாக இதை சொல்லாமல் தூதுக்கு குழுவை அனுப்பினார் . ஏன் அதற்கு பின்னால் ஒளிந்து கொண்டார்.தில்லி செல்வதற்கு முன்பாக இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாரா அல்லது தில்லியில் நடந்த விபத்தா. இரண்டும் இல்லை .தில்லி செல்லும் முன்பே இதற்கான கரு உருவாகியிருக்கும் .
இப்போதுதான் அனைத்தும் முடிந்து அவருக்கு நீட்டிப்பும் கிடைத்தபிறகு, இந்த நகர்வை நிகழ்த்த என்ன காரணம் , நான் தேவையில்லை என்கிற தீர்மானம் உறுதியானது .இது நான் அவருக்கு வேறுஏதோ ஒருவகையில் அவருக்கு சவால் என்பது எந்தவகையில் என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை . இது நிச்சயம் என்னைப்பற்றிய தவறான கணிப்பு , அதை சரி செய்துவிட முடியும் என்கிற எண்ணம் நிறைவேறப்போவதில்லை என்கிற முனைக்கு வந்தாகிவிட்டது . இனி அடுத்ததாக என்ன . இல்லை இது இன்னமும்கூட , அமைப்பிலுள்ளவர்களை சரி செய்வதற்கான முயற்சியாக பட்டது . சில நாள் கழித்து பூங்காவனம் என்னை சந்திக்க வந்தார் மிகவும் விரக்தியாக காணப்பட்டார் , எதுவும் சரியில்லை என்கிற மனப்பான்மைக்கு வந்திருந்தார்.
நான் ஏதும் ஆறுதலாக சொல்வேன் என நினைத்திருக்கலாம். நானும் வருத்தத்தில் இருந்தது அவருக்கு அதிர்ச்சியை அளித்தது . அவர் தான்மட்டுமே முரண்பட்டிருப்பதாக நினைத்திருந்தார் , பலருடன் பேசியதும் எல்லோரும் இதே மனநிலையில் இருப்பது தெரியவந்தது . அந்த விழா அனைத்தையும் புரட்டிபோட்டுவிட்டது . நானும் அதே மனோ நிலையில் இருப்பது அவர் எதிர்பார்க்காதது. மிகவும் கோபமாக "என்னதான் சொல்றான் பாக்கலாம்" என பாலனை சந்திக்க புறப்பட்டார் . நான் அவரிடம் எல்லாவற்றையும் கேட்க இது சந்தர்ப்பமில்லை என நான் கேட்க்க நினைப்பது இந்த ஒரு விஷயம் நமக்குள் அரசியலுக்காக கோர்த்துவிடுவது கூடாது என்பது மட்டுமே நமக்குள்ளான உடன்பாடு , என்னை பற்றிய தவறான செய்திகளை கமலக்கண்ணனுக்கு சொன்னது உண்மையா . ஆமெனில் ஏன் சொன்னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக