https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 4 ஜூலை, 2017

அடையாளமாதல் - 109 *குறுங்குழுவென சிதைதல் *.

ஶ்ரீ:





*குறுங்குழுவென சிதைதல்  *
இயக்க பின்புலம் - 36
அரசியல் களம் - 33





எதிர்கால தலைவர்களை உருவாக்குவதற்கான நாற்றங்கால் அமைப்பு இளைஞர் காங்கிரஸ் , அதனால் அதிகாரத்திற்கு வந்தவர்கள் இளந்துருக்கிய மனோபாவத்தினால் , அதனாலேயே அவர்கள்  இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தை அஞ்சினார்கள் , அதன் வழியாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு உள்நுழையும் அனைத்து வாசல்களும் திட்டமிட்டு அடைக்கப்பட்டது . அகில இந்திய அளவில் இளைஞர் காங்கிரஸ் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதனாலே இன்று பரிபவபவப்பட்டு நிற்கிறது. மாநில அளவில் அது நிறமிழந்து காரணத்தை பற்றியும் அதில்நிகழ்ந்த பல உள்ளூழல் நிகழ்வுகளின் தொகுப்பாக இதை பதிவு செய்து வருகிறேன்.

பாலன் பதவி வகித்த நேரம் ஒரு கால சந்தி போல , அதனாலேயே அவரின் செயல்பாடுகளில் காணப்பட்ட போக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது . அதனாலேயே அவரின் ஆளுமை மிக விஸ்தாரமாக இதில் பதியப்படுகிறது . அதைத்தாண்டி அவரை விமரசிப்பதற்கு எனக்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை . ஒருவிதத்தில் நான் அவருக்கு நன்றிக்கடன் பெற்றிருக்கிறேன் . அவருடன் இருந்த காலங்களில் நான் சந்தித்த நிகழ்வுகள் தான் என்னை வடிவமைத்தன . இன்று நான் என் பொதுவாழ்வில் என்னவானேன் எனபதல்ல இந்தப்பதிவின் கரு

ஒருவரின் வெற்றித்தோல்வியை பிறிதொருவர் நிர்ணயப்பதில்லை. அது அவருக்கும் அவர் மனதிற்குமானது . விமர்சனம் ஒரு காலகட்டம் வரை நீடிப்பது . ஆனால் மனம் கடைசீ தருணம் வரை உரையாடக்கூடியது . அது நாம் செறிவாக வாழ்ந்ததாக செல்லுமானால் அதற்கு பிறிதொருசான்று அவசியமில்லை.

பாலனுடைய போதாமை பல இந்த இயக்கத்தை வீணாகியது , அதற்கான பிழைநிகராக பின் ஒரு காலகட்டத்தில் அவரையே அது தன்னிடமிருந்து வெளியேற்றியது . அவரின்  தலைமை பண்பின் முக்கிய பிறழ்வுகள் இரண்டு . ஒன்று ;சென்ற பதிவில் சொல்லியிருந்தபடி . கருத்தொருமிக்க தலைமையை இயக்கத்திறகு கொடுக்க இயலாது அதை குறுங்குழுவாக மெலியவைத்தது  , இரண்டு: தன் குறுங்குழுவிற்குள்ளேயே தனக்கிணையாக வளர்வதை தடுத்தது . இதை தாண்டி அவர் அதற்கு ஆற்றக்கூடிய கெடுதி பிறிதொன்றில்லை

கண்ணன் மற்றும் சண்முகம் தரப்பு நிர்வாக  எதிரிகள் பாலனை விட பலம் பொருந்தியவர்கள். பாலன் ஒரு சாதாரண ஆலைத் தொழிலாளி என்கிற பின்புலத்திலிருந் எழுந்து வந்திருந்தாலும் . அவரின் போதாமைகள் அவரின் எளிய பின்னணியில் விளைந்தவைகள் என புறம்தள்ள முடியாது. முக்கியமான இரண்டு காரணங்களால் . ஒன்று . கண்ணன் தலைமைக்கு எதிர்த்து எழுந்த அமைப்புதான் பாலனை தலைமை பதவிக்கு கொண்டுவந்தது . அதற்கு காரணம் நீண்ட நெடுங்காலமாக கண்ணன் வளர்த்தெடுத்த எதிர்மறை குறுங்குழு முழு அமைப்பையும் கட்டுப்படுத்தியதுஅதை விரோதித்து கிளம்பிய எதிர்ப்புணர்வு ஒருநாளில் உருவாகி எழக்கூடியதல்ல பல கால உட்பொருமலே , ஒருநாள் வெளிக்கிளம்பியது

அப்போது அது கண்ணனுக்கு எதிராக யாரைவேண்டுமானாலும் முன்னிறுத்தியிருக்கலாம் , ஆனால் அது பாலனை தன் குவிந்த ஒரே தலைமையாக முன்னிறுத்தியது . ஆகையால் இது முதலிருந்தே தெளிவாக முன்னெடுக்கப்பட்டது . கண்ணனுக்கு மாற்றுத் தலைமையாக நிர்வகிப்பது என்பது அவர்களுக்குளேயே நிலைபெற்றதால்  கண்ணனை அது வாயடைக்க செய்துவிட்டது . அப்படி பலரின் கூட்டுத்தலைமையாக தன்னை முன்னிறுத்தி வென்றவர்க்கு அது இப்போது கைவரவில்லை என்பது போதாமையல்ல , பணபின் வீழச்சி அல்லது நல்ல நோக்கமின்மையாக வெளிப்படுகிறது .

இரண்டு : எதிர்ப்பு அரசியலை  திறம்பட நிர்வகித்தாலன்றி , அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்திருக்க முடியாது . இந்த திறமைகள் எங்கே போயின . தன் காலை பிடித்திருந்தவர்களிடம் அவர் நிகழ்த்திய அரசியல் கீழ்மை அவருக்கு பெரிய பலவீனத்தை கொடுத்து இறுதியில் அவரையும் சீரழித்த பிறகே அது முடிவிற்கு வந்தது

எதிர்தரப்பு தன் வாதத்தை வைக்கும் ஆரோக்கியமான அரசியலை கிள்ளி எறிந்ததால் அது சவலை பிள்ளையாய் காலை சுற்றி சுற்றி வந்தது. நான் பாலனுடனான முதல் சந்திப்பில் எனக்கு சவால் மிகுந்ததாக ஆவை இருக்கும் என கணிக்கவில்லை . அதன் பின்புலம் துலங்கிய பின்னர் பலரிடம் பேச பேச முழு உருவம் எழுந்து  வந்தது . நான் உற்சாகமானேன் . அது நான் செயல்படுவதற்கான பாதையை அடையாளப்படுத்தியது . அவற்றில் நான் முன்னின்று செய்தது அனைத்து குறுங்குழுவையும் ஒருங்கிணைத்தது

பல வித ஜாதி மத சமூக பொருளாதாரப் பிளவுகளால் வேரூன்றி நின்றது அவர்களுக்கிடையான கசப்பு . அவற்றை நான் அல்லாது பிறிதெவரும் செய்திருக்க முடியாது என் சொல்லமாட்டேன் . இரண்டாம் நிலை தலைவர்களுக்கான பனியின் சாரம் அது . ஆனால் இரண்டாம் நிலை தலைவர்களாக அவர் வைத்திருந்தது உதாவக்கரைகள் . அவர்கள் தங்களை முன்னிறுத்தி எந்த காரியமும் ஆற்றமுடியாது காரணம் இருவருக்குள்ளும் ஒரு பழைய பகை நீறுபூத்திருந்தது . வீங்கிய தகுதியற்ற ஆணவம் .

அவற்களுக்கு பாலனை முன்னிறுத்தமுடியாது காரணம் இவர்களின் கோரிக்கைகளை அவரிடம் கொண்டுசென்று சாதித்தித்து காட்டவேண்டும் , பாலனை கண்டால் தன் விஷயத்தையே பேச யோசிப்பவர்கள் பிறிதொருவர் பிரச்சனையில் தலையிட முடியாது . அது அவர்களின் இடத்திற்கு வேட்டு வைத்துவிடும் என்கிற பலகீனம் .

நான் சிறுபிள்ளைபோல அனைத்து பிரச்சனைகளையும் பாலன் கவனத்திற்கு கொண்டு சென்றது மட்டுமே தீர்த்து வைப்பது என்னால் ஆகாதது . ஆனால் தங்கள் சிடுக்குகள் பாலன் கவனத்திற்கு தெரியவந்ததே போதுமானதாக இருந்தது என்றால் ,இயக்கம் செயல்பாடாத நிலையை இதைவிட தெளிவாக விலகிவிடமுடியாது .


பலமுனை தலைவர்களை கொண்டதாக இயக்கம் வளர்ச்சி பெறாத காரணத்தினாலேயே அதன் முழு அமைப்பும் சிதைந்து சிறுத்தும் போனது. பாலனுடைய தேர்தல் வெற்றிகூட அவர்களை எங்கும் கொண்டுசெல்லாது என்பதை மிகத்தாமதமாக புரிந்து கொள்ள நேர்ந்தது . இற்றுப் போன ஓலைகொட்டகையை யானை அசைப்பது போல கிருஷ்ணமூர்த்தி பெரும் சக்திக்கு முன் இந்த இயக்கம் ஒன்றுமேயில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்