https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 4 ஜூலை, 2017

அடையாளமாதல் - 110 *வாழ்வியலின் நம்பிக்“கை” * .

ஶ்ரீ:


*வாழ்வியலின் நம்பிக்கை*
இயக்க பின்புலம் - 37
அரசியல் களம் - 33

கமலக்கண்ணனின் எண்ண ஓட்டம் வேறுமாதிரி இருந்தது. அவர்களின் இலக்கிற்கு நான்தான் தடை , என்னை அகற்றுவது அவ்வளவு எளிதல்ல . ஆனால் கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்களின் உள்நுழைவு முதலில் என்னை  தாக்கி அழிக்கக்கூடியது . நான் என் அழிவிலிருந்து காத்துக்கொள்ள இரண்டே நிலைகள் எடுக்கவேண்டிவரும் ஒன்று ; பாலனிடம் உதவிநாடுவது , அது இப்பொது சாத்தியப்படாது காரணம் பாலனே இப்போது கிருஷ்ணமூர்த்தியின் ஆளுமையின் கீழ் உள்ளார் , அவரின் கண் சிவக்கும்படியான யாதொரு காரியமும் அவரால்  செய்யமுடியாது . இரண்டாவது கிருஷ்ணமூர்த்தியிடம் நேரடியாக சரணடைவது . அதன் பலன் தெளிவு .கத்தியில் தலையை வைப்பது , நான் அதை செய்யப்படுவதில்லை . நான்  ஒருபோதும் கிருஷ்ணமூர்த்தியை ஏற்றுக்கொள்ளபோவதில்லை , என்பது மட்டுமல்ல அது அவருக்கும்  தெரியும் என்பது இன்னும் விசேஷம் . முருகேசன் கோஷ்டியின் தாக்குதல் நான் மட்டுமே . ஆகவே கமலக்கண்ணன்  , முருகேசனுடன் அல்லது   கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரேமுறை பதவி பகிர்வு ஒப்பந்தம் . அது போதும் அவர்களுக்கு . நான் தனித்து விடப்பட்டேன் . நாளையை பற்றிய நம்பிக்கையுடன் காத்திருப்பது எளிதல்ல . ஆனால் அதுவே என் தர்மம் . அது எனக்கு அமைத்து கொடுத்த வாழ்கை போல ஒன்றை என்னால் திட்டமிட்ட ஆற்றிடக்கூடய ஒன்றில்லை.

இந்து சூழலில் கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்களின் உள்நுழைவு தீர்மானிக்கப்பட்டது . காரியங்கள் வேகவேகமாக நடந்தேறியது . அந்தத் தருணத்தில் அவரகளுக்கு சமமான எதிரியாக சொல்லப்பட்டதால் கமலக்கண்ணன் அனியினர் அவர்களுடன் கைகுலுக்கிக்கொண்டனர் பிற மாநில நிர்வாகிகள் இதை விரும்பாது போனாலும் , அப்போது அவர்களை எதிர்கொள்ளக்கூடிய திறனுள்ளவரகள் என யாரும் இங்கில்லை , நான் அவரகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீரக்கமாய் இருந்தேன் , கமலக்கண்ணன் அனியினர் என்னிடம் நேரடியாக மோதல் போக்கில் இல்லை எனபதால் . நான் அவர்களுடனான முரண்பாட்டை வெளிக்காட்டவில்லை . உட்கட்சி அரசியலில் கமலக்கண்ணன் அணியின் பிறழ்வு இது . அவர்களுடனான என் நட்பு இயல்பானது . இவர்களுடன் அவர்கள் ஒருநாளும் உடன்பாட்டிற்கு வரப்போவதில்லை . காரணம் கமலக்கண்ணனை அவர்கள் எதிர்நிலையாக பார்க்கவில்லை. நான்மட்டுமே அவர்களின் நேரடியான சவால்.எனக்கும் அவர்களின் உள்நுழைவு ஒருவித ஒவ்வாமையை கொடுத்து அவர்களுடன் இணையமுடியாது செய்தது

புதிதாக ஒருவரை மாநில கமிட்டியில் நுழைப்பது அவ்வளவு எளிதல்ல தில்லையில் முடிவெடுக்கவேண்டியது . அது முடியாது என்பதால் மாவட்டக்கமிட்டி போடப்பட்டது, அதன் வழியாக கிருஷ்ணமூர்த்தி ஆட்கள் உள்ளே வந்தார்கள் . அனைவரும் அதிர்ந்துதேபோனோம் . ஆறு கமிட்டியில் மூன்று அவர்களுக்கும் மீதம் பழைய ஆட்களுக்கு கொடுக்கப்பட்டது அதில் காரைக்கால் கூட கிருஷ்ணமூர்த்தி ஆள் தான் என்றார்கள் . அமைப்பின் விதிப்படி மாநில கமிட்டி செயலிழந்துபோனால் , அந்த இடத்திற்கி மாவட்ட கமிட்டி வந்துவிடும் . அதைவிட சிக்கல் தொகுதி கமிட்டிகள் மாவட்டக்கமிட்டி போடப்பட்டுவிட்டால் அதன் கீழ் வந்துவிடும் . நானும் சோர்ந்துதான் போனேன் . இங்கு முன்னமே ஏகக்குழப்பம் , இதில் புதுத்தலைவலி வேறு . இருப்பினும் மாநில கமிட்டி தலைவர் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படாதவரை ஆபத்தில்லை .

பாலனுக்கு பொருளியல் ரீதியான உதவிகள் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து கணிசமாக வருடத்தொடங்கியதால் , இயக்கம் முன்னிலும் வேகமாக செயல்படலாயிற்று , இயக்கத்திற்குள் எழுந்த எதிர்ப்பை சரிக்கட்ட வழமையான முறைமைகள் மாற்றப்பட்டு. பொதுவான தலைமையாக கமலக்கண்ணனுக்கு ஸ்தானம் வழங்கி தலைமை என்கிற இடத்திற்கு அவர்பெயர் முன்மொழியப்படலாயிற்று . இது முழுக்க என்னை குறிவைத்து நடத்தப்பட்டது . பெரும்பாண்மை நிர்வாகிகள் என் தரப்பில் இருக்கும் போது முருகேசனை கொண்டுவர இயலாது . அவர்களுக்கான பாதையை கமலக்கண்ணன் செய்யவேண்டும் என்கிற புரிதல் அவர்கள் அடைந்துவிட்டிருந்தார்கள்

என்னை பொருத்தவரை இது ஒரு முக்கிய தருணம் . நான் நினைக்காமல் , விரும்பாமல் பிறருடைய பிழைகணக்கால் நானும் தலைமை போட்டியில் இருப்பதாக தோற்றத்தை இது உருவாக்கிவிட்டிருந்தது வேடிக்கை.

இந்த சந்தர்பபத்தில் தான் கமலக்கண்ணனை முன்னிருத்தும் திட்டமும் ஊர்வலமும் வடிவமைக்கப்பட்டது . கமலக்கண்ணன் தரப்பு பலி ஆடுகளெனபதை உணராது அதில் குதூகலிக்க ஆரம்பித்து . அவர்கள் அனைவரின் நிலையில் நான் ஒருவனே எதிர்நின்றவன் . ஆனால் கிருஷ்ணமூர்த்தி குழு வந்தபிறகு என் கரம் தாழ்ந்ததாக நினைக்க ஆரம்பித்துவிடனார்

எப்போது  பாலனுக்கு மேல் கிருஷ்ணமூர்த்தி என்றானபின் 

அந்த விழா கமலக்கண்ணன் தலைமை தாங்குமாறு ஒருங்கமைக்கப்பட்டிருந்தது . முன்னிலை என நிரை நிரையாக பல பெயர்கள் பேசப்பட்டன . தாமோதரன் என்னிடம் சில பொருளாதார உதவி கேட்டிருந்தார் போஸ்டர் இதர செலவுகளுக்கு , நான் பார்த்துக்கொள்கிறேன் என உறுதிகூறினேன் கமலக்கண்ணனை முன்னிறுத்தும் இந்த திட்டம் எனக்கு உடன்பாடானது . பாலனிடம் கருத்துப்பரிமாற்றத்தில் உள்ள தயக்கம் எனக்கு இனி இருக்கப்போவதில்லை . ஒரு விடுதலை உணர்வு .மிக உற்சாகமாக செயல்படுத்துவங்கினேன் . ஏனெனில் கமலக்கண்ணன் தரப்பில் உள்ள மூத்த நிர்வாகிகள் அனைவரும் எனக்கு நேரடியாக எதிர்ப்பாளர்கள் அல்ல . இப்போதைய போட்டி தலைவைக்கானது அதில் நான் இல்லை என்பதால். நானும் கமலக்கண்ணனின் அணியாகவே மூத்த நிர்வாகிகளால் பாரக்கப்பட்டேன் . ஆனால் உண்மை நிலையை அறிந்தவர்கள் , தாமோதரன் அவரால் கமலக்கண்ணனை விட இயலாது , இரண்டு சுப்பராயன் அவர் தற்போது சன்யாசத்தில் உள்ளார் அவரால் கருத்து கூற இயலாது . இரண்டு சேகர்களும். தலையையும் வாலையும் மாற்றிக்காணபிப்பவர்கள் . நான் இந்தப்போட்டியில் இல்லை எனபதால் , நடக்கும் உள்ளூழலை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்