ஶ்ரீ:
*பாதுகாப்பென முளைவிடுதல் *
இயக்க பின்புலம் - 43
அரசியல் களம் - 34
என்ன காரணத்தினாலோ தாமோதரன் கமலக்கண்ணனை விட்டுக்கொடுக்க முடியவில்லை , நல்ல நட்பின் அடையாளமாக அதை பாராட்டலாம் , இதில் நான் எங்கு வருகிறேன் , என்னை விரோதிக்க என்ன காரணம் , இதை தான் கடந்த சில மாதங்களாக என்னை சந்திக்க வருபவர்களிடம் நான் கேட்பது . வெளியில் பேசுவதற்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது . இதோ உங்களை தாண்டி எனக்கு நன்மை செய்பவர்கள் யார் . உங்களிடம் ஏன் மறைத்துப்பேச வேண்டும் . நீங்கள் சொல்லுங்கள் நான் யாருக்கும் போட்டியில்லை , எந்த பதவிக்கான பந்தய ஓட்டத்திலும் நான் இல்லை . சட்டென சுப்பாராயன் சூடானார் , கிருஷ்ணராஜை பார்த்து . இதுக்கா நாம் வந்தோம் , பேசவேண்டியதை விடுத்து அனாவசியமான பேச்சு எதற்கு . என்று போய்க்கொண்டிருந்த சொற்பெருக்கை வெட்டி அவர் சொன்னது . பாலன் சொல்லி ஒரு கருத்தாய்வு நடந்தது . அந்த கருத்தாய்வில் முடிவானது இன்று எங்கள் அறிக்கையாக பாலனிடம் கொடுக்கவுள்ளோம் . அதை பற்றிய உன் அபிப்பிராயமும் தெரிவது அவசியம் என்பதால் உன்னைப்பார்க்கவந்தோம் என்றார் .
நான் என்னுடைய நிகர்நிலையை இழந்துகொண்டிருந்தேன் . .அவரின் பீடிகை பலமானதாக இருந்தது . “இதில் என் கருத்தை அறிய என்ன வந்திருக்கிறது . சரி தெளிவாக பதிவு செய்ய்துவிடலாம் , எந்ததோன்றி , எதைப்பற்றியது என்று சொன்னால் என் கருத்தை சொல்வேன் . ஆனால் அதற்கும் இப்பொது என்ன அவசியம் என்று எனக்கு தெரியவில்லை . நடந்தது உங்களுக்கும் உடன்பாடில்லை என்பதை நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியத்தில் நான் இல்லை . உங்களுக்கும் அது தெரியும் . நான் சொல்ல வருவது . அந்த நிகழ்வினால் நான் அடைந்த புரிதல் ஒருநாளில் வந்ததல்ல.
அரசியல் விளையாட்டல்ல ,இப்பொழுது நிகழ்வது பெரிதும் வருத்தமளிப்பதாக இருப்பது சட்டமன்ற தலைவர் தேர்தலின்போது நிகழ்ந்த அந்த அதிர்ச்சியில் எனக்கு ஏற்பட்ட திறப்புகள் ஏராளம் . நான் நினைத்ததுபோல இது ஒரு சிறிய உலகமன்று , ஒருநாள் இல்லை ஒருநாள் இந்த சிறிய உலகை விட்டு வெளியில் வந்தேயாகவேண்டும் . வெளியில் நாம் யார் என்பது ஆகப்பெரும் கேள்வி . அன்று அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பூங்காவனம் நம் கையறு நிலையை சொல்லி கண்கலங்கிய போது நம்மில் எவர் கண்கலங்காதவர் . கட்சிக்கும் நமக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை எனும்போது, ஆட்சிக்கு நமக்கான இடம் என்ன என் கேட்பதை போல ஒரு மடமை பிறிதொன்றில்லை .
இருந்தும் ஒருநாள் வளர்ந்து வெளியில் நிகழும் அரசியலில் நாமும் ஒரு ஆள்தான் என தருக்கி நிமிரும் காலம் ஒன்று வரும் என்பது, கிருஷ்ணமூர்த்தியின் நுழைவிற்கு பிறகு முழுவதுமாக தகர்ந்து போனது . நமக்கொரு சிக்கல் வராது நமது தலைமை நம்மை காத்துக்கொடுக்கும் என்கிற நம்பிக்கை இழப்பே , பிறிதெதையும் தாண்டி முன்னால் வந்து நிற்கிறது . அந்த காற்றில் பாலன் பறப்பது கண்முன் நிகழ்வு .எதைக்கொண்டும் இதை மறித்துவிடமுடியாது , நான் இங்கு பாலனை குறை சொல்லவரவில்லை
ஆனால் அதுதான் எதார்த்தம் . நமது அலுவலகத்திற்கு புறமே உள்ள அரசியல் பொதுவெளியில் . நாமும் ஒரு அங்கம்தான் என நிரூவுவதற்கான ஒரே வாய்ப்பை நாம் தொலைத்து நிற்கிறோம் . “இயக்கம் இனி என்ன” என்பது நமது பேசுபொருளே அல்ல . அது ஏறக்குறைய நம்கைவிட்டு போய்விட்டது . அதை பற்றிய கருத்தாய்வு என்பது நம்மைநாமே ஏமாற்றிக்கொள்வது . அந்த கேள்வியினால் விளையும் பயன் நமக்கானது அல்ல . நான் அரசியலுக்கு லாயக்கில்லை . இதுவரை நான் ஆற்றியதெல்லாம் அரசியலை போல ஒன்று . ஆனால் நிஜமான அரசியலை பார்த்தமாத்திரத்தில் நாம் தெறித்துப்போனோம் .
உங்களுக்கு அந்த சந்தர்ப்பம் வாயக்கவில்லை .உப்பளாம் விடுதியில் நிகழ்ந்த சம்பவத்திற்கு பிறகே நாம் இதுவரை செய்தது ஒன்றுமேயில்லை என்பதைவிட , அதிர்ச்சியானது மட்டுமல்ல விபரீதமான உண்மை, நாம் இதுவரை பயணித்தது வந்தது அதற்கான பாதையேயல்ல என்பதுதான் . இயக்கம் பற்றி பேச ஒன்றில்லை நான் பாலனை பார்த்து அவருடனான நல்ல நட்பின் காரணமாக அவருக்கு தேவையானதை செய்துகொடுத்துக்கொண்டிருந்தேன் அவ்வளவே . அதற்கு “அரசியல் “ என்று பேர் என்று நீங்கள் சொல்லுவீர்களேயானால் உங்களை போன்ற மொண்ணைகள் பிறிதொருவரில்லை .
இவ்வளவிற்கும் பிறகு நான் உங்களுடன் அரசியல் என்கிற ஒன்றை பற்றி பேசுவது அன்று கூடியிருந்த திரளின் நடுவே என்பொருட்டு பாலன் கேட்ட கேள்வி ஒன்றே இத்தனை வருஷா உழைப்பிற்கு போதுமானது . அது என்றைக்குமானது . என்றேன். நான் பேசிமுடிக்கும்வரை யாரும் குறுக்கிடவில்லை . அவர்கள் அனைவருமே மிக நுட்பமான அரசியலுக்கானவர்கள் . நான் பேசியது அனைத்தையும் சொல்லித்தான் புரியவேண்டும் என்கிற அவசியமில்லாதவர்கள் , நானும் அவர்களுக்கு புரிவதற்காக இதை சொல்லவில்லை, என் தற்போதைய நிலை இது என கூறுவதற்காக வைக்கப்பட்டது மட்டுமே . அதுவரை அமைதியாக இருந்தவர்கள் சுப்பாராயன் தொண்டையை செறுமியதும் அவரை திரும்பிப் பார்த்தனர் . சற்று நேர அமைதி கிழிக்கக்கூடிய பருப்பொருள்போல அனைவரையும் சூழ்ந்திருந்தது . அனைவரின் மௌனம் , என் தரப்பு வார்த்தைகளுக்கு அப்பால் தொடர்பற்றதாக எங்கோ இருந்தது அவர்கள் சொல்லவந்திருந்த சொற்கள் . அந்த மௌனம் கலையாமல் அவர்கள் எழுந்து செல்வார்களேயானால். எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கும் . வேறு ஏதாவது பேசி கலைவது அனைவருக்கும் உகப்பானதாக இருக்கும் என எண்ணினேன் .
வளர்வது ஆரோக்கியமானது தேவையற்ற இடத்தில் வளர்வதைப்போல வ்யர்த்தம் பிறிதொன்றில்லை , ஆனால் இவர்கள் நல்ல நண்பர்கள் , அரசியல் என்கிற விஷயத்தில் உள்ள எதார்த்த இன்று நான் பேசியது , கொஞ்சம் கடுமையாகி விட்டது . பலமுறை இதைப்போன்ற விவாதம் பலவற்றை நிகழ்த்தியுள்ளோம் . இதற்கு முன்புகூட இதை போல பலமுறை கூடியிருக்கிறோம் , அவையெல்லாம் எல்லோரும் சேர்ந்து ஒரு பயணத்திற்கான இலக்கை அடைவதை குறித்தாக இருந்தது , அப்போது இதைவிட நிர்தாட்சண்யமாக கருத்துக்களை நான் சொல்லி இருக்கிறேன் .ஆனால் இதற்கு ஒரு மாறுபாடு உண்டு இன்று நான் விலகி செல்வதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன் . பாலனுக்கு நான் என்னவேண்டுமானாலும் செய்துகொண்டிருக்கிறேன் . அதை நான் அரசியலில் இருந்துதான் செய்யவேண்டும் என்கிற அவசியமில்லை என்றதும். சுப்பாராயன் தனது இறுதி அஸ்திரத்தை என்னை நோக்கி ஏய்த நான் பேச ஏதும்மின்றி , அமைதியானேன் . என்வார்த்தையை எடுத்து என்மீதே வீசுகிறார் , என்ன சொல்வது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக