https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 4 ஜூலை, 2017

அடையாளமாதல் - 111 *புரியாமையின் யதார்த்தம் *

ஶ்ரீ:





*புரியாமையின் யதார்த்தம் *
இயக்க பின்புலம் - 38
அரசியல் களம் - 33






இதுவொரு தெளிவான திட்டமிடப்பட்ட நகர்வு . இதை பாலன் மட்டுமே செய்திருக்க இயலாது , மாட்டார் . அவர் இருக்க இன்னொரு தலைமையை முன்னிறுத்துவது பதவியில் உள்ளவரை நிறமிழக்க செய்துவிடும் . ஆனால் மிகைத்திறமையாக அவர் கையாலாளப்பட்டிருப்பதில் ஒரு தொழில்முறை நுணுக்கம் இருந்தது . அப்படிப்பட்ட செயல் திட்டம் இது .சுவற்றில் மாட்டியிருக்கும் படம் எந்தப்பக்கமிருந்து பார்த்தாலும் நம்மையே பார்ப்பதைப்போல ப்ரமை ஏற்படும் . அதைப்போன்றது இது.

அதன் உட்கூறுகளில் பல அலகுகளாக திட்டங்கள் கரந்திருந்தது . இந்திரா காந்தியின் பிறந்தநாளை ஒட்டிய நிகழ்வாக அது ஒருங்கப்பட்டிருந்தது . பல புரியாமைகள் முன்னணித்தலைவர்களை திகைக்கவைத்தது . ஒரு சிறு விழவு என்றாலே இயக்கத்திற்கு அதன் பொருளியல் சிக்கலை கடப்பது மட்டுமே மையக்கருவாக இருக்கும் . அதை பலர் தலைகளில் பகிர்தலே பொறுப்புகளை பகிர்தலாக முறைமைகள் என்கிற பெயரில் திறமையாக கையாளப்படும் . இந்த விழவின் செலவுகள் ஒருவரை மையப்படுத்தி இருந்ததால் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது . ஆளும் கட்சி விழவு இப்போது , ஆகவே பொருளியல் சிக்கலில்லை என் நினைத்துக்கொண்டனர்

ஆனால் நடத்தும் பொறுப்பு குறித்து பேசியாக வேண்டும் . தொண்டர்களை திரட்டுவது அவரவர் பொறுப்பில் இதுவரை விடப்பட்டிருந்தது . இப்போது விழா ஏற்பாட்டாளர் கிருஷ்ணமூர்த்தியை மையம் கொண்டிடுப்பதை உணர்த்துக்கொண்டதும் பட்ஜெட் வீங்கத்துவங்கியது . இது சம்பந்தமான குழப்ப நிலையை மூத்த நிர்வாகிகள் கவனத்திற்கு வந்தது . என்னை வந்து என்ன ஏது என விசாரிக்க நான் அவர்களிடம் ஏதும் சொல்லாமல் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம் எனச்சொல்லி அனுப்பிவிட்டேன் . அனைவரும் பழுத்த அனுபவம் வாய்ந்தவர்கள் விளக்க வேண்டிய அவசியமில்லாது ஆழ்ந்த கவலையோடு கலைந்து சென்றனர் 

எல்லோருக்குமே இது புது அனுபவம் .அன்று மாலை 5:30 மணிக்கு அண்ணத்திடலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கியவீதிகள் வழியாக அண்ணாசாலையில்லுள்ள இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தின் அருகில் அமைக்கப்பட்ட மேடையில் ,சிறுதிநேர பேச்சிற்கு பின் விழவு நிறைவடையும் . மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்குபெறுவர் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது . விழா துவக்கத்திற்குமுன்னர் இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் கூடி பின் அங்கிருந்து அண்ணாத்திடலுக்கு ஒன்றாக செல்வது என முதல்நாள் ஒருங்கிய கூட்டம் முடிவெடுத்தது. அதை ஒட்டி நான் மதியம் 3:30  மணிக்கே அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன்

புதுவையின் பல இடங்களில் இருந்து தொண்டர்கள் குவிண்டவண்ணம் இருந்தனர் முக்கியஸ்தர்களை அலுவலகத்திலேயே இருக்க சொல்லி மற்றவர்கள் திடலுக்கு அனுப்பியபடி இருந்தோம் . பாலன் என்னிடம் 5:00 மணிக்கெல்லாம் வந்துவிடுவதாகவும் பின் எல்லாரும் ஒன்றாக புறப்படலாம் என்றும் ,அவர் வரும் வரை காத்திருக்க சொல்லியிருந்தார் . 4:45 மணிக்கெல்லாம் பாலன் வந்துவிட்டதாக ஆள் ஓடிவந்து சொன்னான் , ஆனால் வந்தவர் கீழே எல்லாரையும் சகட்டுமேனிக்கு தீட்டித் தீர்ப்பதாக சொன்னான் நான் பின்கட்டிலிருந்து வெளிவந்து படிகளில் இறங்கும்போதே பாலனின் உஷ்ண குரல் அதிர்ந்தபடி இருந்தது , அவர் தன்நிலை மறந்து கெட்ட வசவுகளால் கேட்பவர் காது கருக்கும்படிக்கு கணமான குரலில் புரட்டியெடுத்தபடி இருந்தார். என்ன காரணமாக இருக்கும் என அதிர்ந்துபோனேன் . அது அவர் வழமையான வசவு மொழிகள் என்றாலும் , விழா துவங்கவிருக்கும் நேரம், அதுவும் நடு வீதியில் . நான் வேகமாக வாசலுக்கு ஓடிவந்தேன் 


அலுவலக வாசலில் வைத்து ஒல்லிசேகருக்கு பாட்டு விழுந்துகொண்டிருந்தது . அவரை சுற்றி தாமோதரன் கமலக்கண்ணன் தலை குனிந்தபடி மெளனமாக நின்றிந்தனர். நான் பாலனிடம் என்ன நிகழ்ந்தது எனக்கேட்டதற்கு , சற்றுநேரம் என்னை உறுத்துப்பார்த்துவிட்டு , போஸ்டர் அடிக்க நீதான் பணம் கொடுத்தாயா என்றார் . நான் அந்தக்கேள்விக்கு அர்த்தம் என்னவென்று புரியாததால் . நான் அனைவரையும் திகைப்புடன் நோக்கினேன் ஏதோ தவறு போஸ்டர் அடிப்பதில் நிகழ்ந்துள்ளது எனப் புரிந்துப்போனது . நான் ஆமாம் என்றால் அவரின் அடுத்து இலக்கு நான்தான்.என்னை பொதுவில் வைத்து எதுவும் சொல்வது அவரின் வழமை இல்லை என்பதாலும் அவர் என்னிடம் கேட்ட அந்த கேள்வியில் இருந்த கனிவு எனக்கு ஏனென புரியவில்லை . அதை மேற்கொண்டு வளர்க்காமல் . “ஏதாகிலும் மேல சென்று பேசிக்கொள்ளலாம் எல்லாரும் பார்க்கிறார்கள்என சொன்னபிறகும் . அவர் விடுவதாக இல்லை 


நீ போஸ்டரை பார்த்தாயா என்றார் , நான் ஒன்றும் புரியாது கட்சி அலுவலகத்திற்கு அருகில் ஒட்டியிருந்த போஸ்டரை வரிவரியாக படித்துப்பார்த்ததில் எனக்கு அதில் தவறாக ஏதும் இருப்பது தெரிவில்லை . நான் மிகவும் குழப்பமுற்றவனாய் பாலனிடம் எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது , என்றதற்கு வாய் கோணி ஒரு ஏளனச்சிரிப்புடன் அனைவரையும் சுற்றி பார்த்துவிட்டு உன் பேர் எங்கிருக்கிறது என்று பார்த்தாயா, என்றதும் தான் என் பெயர் போஸ்டரில் வந்திருக்கும் விஷயமே தெரியவந்ததுநான் ஆர்வமுடன் என்பெயரை தேடி கிழேமற்றும்என்கிற அடைப்பில் இருபது பெயர்களில் நான்காவதாக வந்திருந்தது . எனக்கு அப்போது அதுதான் என் அரசியல் வாழ்க்கையை புரட்டி போடப்போகிறது என சத்தியமாக நான் நினைக்கவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்