https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 6 ஜூலை, 2017

அடையாளமாதல் - 113 *பொறுமையெனும் பறவை *

ஶ்ரீ:

*பொறுமையெனும் பறவை *
இயக்க பின்புலம் - 40
அரசியல் களம் - 33

அந்த போஸ்டரை பாலன் சுட்டி பேசியதிலிருந்து அதில் என்பெயர் இருக்க வேண்டிய இடம் என்ன என எனக்கு புரியாது போனாலும் . பெயர் வரும் இடத்தினால் ஆவதென்ன , இதைப்போய் இவ்வளவு பெரிதாக பேச என்ன இருக்கிறது என்பதுதான் எனக்கு முதல் எண்ணமாக இருந்தது. ஆனால் பிறிதொரு சமயத்தில் பாலன் என்னிடம் பேசும்போது அவர் கோணமாக சொல்லும்போது அவரின் வன்மத்திற்கு அர்த்தம் புரிந்தது .அவர் சொன்னது "தான் ஏற்கனவே பதவியை ராஜனாமா சைய்துவிட்டேன் . யாரவது ஒருவர் அங்கு வந்துதான் ஆகவேண்டும் . கமலக்கண்ணன் அதற்கு தகுதியானவனில்லை , அந்த வாய்ப்பை ஏற்கும் விழைவுள்ளவன், இயக்கத்தில் இருப்பவர்களை அரவணைக்கும் போக்கை தவிர்த்து எதிரிகளாக நினைப்பவர்களை அறுக்க முனைந்தால் அமைப்பு சிதைந்து விடும் . அவனுக்கு அதை புரியவைக்க அவனை விளக்கி பிறிதொருவரை கொண்டுவருவதை விட அவனுக்கு கொடுத்து என்ன செய்கிறான் என பார்த்தேன் என் கணக்கு தப்பவில்லை . ஒரு சிறிய சந்தர்ப்பத்தில் அவனது தகுதின்மையை நிரூபித்துவிட்டான் "என்கிறார் .  

அதையே அரசியல் கோணத்தில் பெரும் பிழை என எனக்கு எடுத்து பேசியது பூங்காவனம் . அவர் வயதில் பாலனை விட மூத்தவர் என்மீது பெரும் கனிவு கொண்டவர் . வெளிப்படையாக பேசுபவர் . இயக்கத்தில் வெகுசிலர் சொல்லுவதை அப்படியே நான் என் கருத்தாக எடுத்துக்கொள்வேன் , அவர்களில் பூங்காவனமும் ஒருவர் . இந்த விஷயத்தில் நான் நினைப்பது தவறு என்றும் இதற்கு தாமோதரன் துணை போயிருக்க கூடாது என்றார் . இது நீ ஒருவன் சம்பந்தப்பட்ட விஷயமால்ல . தலைமைக்கு வரும் முன்னமே இவ்வளவு கசப்பை காக்கும் கமலக்கண்ணனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் . உனக்கு வேண்டுமானால் இன்று நீ எங்கிருக்கிறாய் எவ்விதம் அனைவராலும் விரும்பப்படுகிறாய் என்பது தெரியாமல் இருக்கலாம் . இது அவ்வளவு எளிதில் முடியப்போவதில்லை . நீ வேண்டுமானால் பார் , இதில் தொட்டு என்னென்ன நிகழ போகிறதென்று  பார் என்றார் . என்னால் அதன் உட்கூறுகளை புரிந்துகொள்ள இயலவில்லை .

பூங்காவானம் சொன்னதுபோல வேறு சிலரும், என்னை நல்லது , கெட்டது போன்ற பொது நிகழ்வுகளில் சந்திக்கும்போது வெளிப்படையாக பேசி பேசி ஒருவித எண்ணத் தெளிவையும் காழ்ப்பின் மெலிவையும் உருவாக்கி விட்டார்கள் . என்னால் அதிலிருந்து வெளிவர இயலவில்லை . ஒரு கட்டத்தில் நான் அடைந்த புரிதல். இன்னும் ஒன்றுமே  நிகழாதபோது தயக்கமற நினைத்ததை செய்ய துணிபவர்களுடன் , இனி எதை இணைந்து ஆற்றுவது. அப்போது எனக்குமுன்பே இருந்த கேள்வி ஒன்றுதான் . அரசியலில் நீடிக்க விரும்புகிறாயா . இந்த கேள்விக்கு என் பதில் , நிச்சயமாக வெகுதூரம் கடந்து விட்டிருக்கிறது . திரும்புவது எனில் அது முற்றாக என்னை உதறுவது . இதோ உதறியதுபோலத்தான் இருக்கிறது என நினைத்துக்கொண்டேன் . தலைவராக விழைகிறாயா. இந்தக்  கேள்விக்கு என் உறுதியான பதில் நிச்சயமாக இல்லை நான் அதற்காக வார்க்கப்படவில்லை . அதன் அச்சு வேறு நான் அதற்கானவன் இல்லை என்பது என் தெளிவு.

அரசியலின் அசிங்கமான முகம் அணுக்கமானவரகள் மூலம் வெளிப்பட்டுவிட்டதால் எழுந்த ஒவ்வாமை என்னை மேற்கொண்டு சிந்திக்கப்பண்ணவில்லை. இது வேண்டாமே என ஒன்றும் , சும்மாயிரு என ஒன்றுமாக தர்க்கித்துக்கொண்டேயிருந்தது . அதனிடம் என்னை ஒப்படைத்துவிட்டு ,நான் அடுத்து என்ன என சும்மாயிருக்க துவங்கினேன்.

கனவு அது கையெட்டினால் தொட்டுவிடக்கூடியதென  காட்டிநிற்பது , விழைந்து கைநீட்டினால் எட்டாத்தொலைவிற்கு பறப்பதும் , வேண்டாமென விலகிச் சோர்ந்திருக்கும் கணத்தில் தானே வந்து தோளில் அமர்வதுமாக ஒரு பறவைகளின் ஆடல் .என் வாழ்வியலில் நான் வெறுமனே வேடிக்கை பார்த்திருக்க சில கோட்பாடுகளின் அடிப்படையில் மனசமானத்திற்கு வந்தபிறகு எதை செய்தியாக்கூடாது என முடிவெடுத்தேனோ அதை செய்யும்படி நிகழ்வதே உச்தித்தள்ளப்படுவதே வழமை  , ஒவ்வொரு முறையும் நான் எடுக்கும் தீர்மானத்திருக்கு எதிராக என்னை கொண்டு  இருத்துவதை என் ஊழ் என்னை கொண்டு நிறுத்துவதை பார்த்திருக்கிறேன் அதில் எதிர்பார்க்காத வெற்றியை கொடுக்கும் அது இறுதியில் எதன் பொருட்டு நான் மறுத்தேனோ அதை கைகளில் ஆழ பதித்து செல்லும் .

அடுத்து என்ன என்கிற கேள்விக்கு யாரிடமும் பதில் இருப்பதில்லை அது காலம் முடிவெடுப்பது .காலம் ஒருநாள் தன் முடிவை சொல்ல என் வீடு வந்தபோது நான் அதிகாலை நல்ல உறக்கத்திலிருந்தேன்


என் தங்கை என்னை எழுப்பும்போது அதிகாலை 5:45 இருக்கும் , எரிச்சலுடன் ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுப்புகிறாய் என அவளிடம் கேட்டதற்கு ஒரு ஹூங்காரத்துடன் , “அதை உன்னை பார்க்க வந்திருக்கும் கட்சிகார்களிடம் கேள்என்றாள் , எனக்கு குழப்பமாக இருந்தது . கனகராஜ் சேகரை தவிர என் வீட்டிற்குள் யாரும் வருவதில்லை . நான் அரசியலில் இருப்பது அப்பாவிற்கு விருப்பமில்லை என்பதால் நான் அது சம்பந்தமாக யாரையும் வீட்டிற்கு அழைத்துவருவது வழமையல்ல . அதிகாலை குழுவாக வந்திருக்கிறார்கள் என்றால் ஏதாவது பெரியளவிலான பிரச்சனை எழுந்திருக்கும் வாய்ப்பே அதிகம் . நான் அவரசமாக கீழிறங்கி வந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...