https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 13 ஜூலை, 2017

அடையாளமாதல் - 125 *நினைவுகளின் நிழலில் *.

ஶ்ரீ:





*நினைவுகளின் நிழலில்  *
இயக்க பின்புலம் - 52
அரசியல் களம் - 36


தில்லி சென்று அடையும்போது இரவு 8:00 மணிக்குமேல் ஆகிவிட்டது , அது நேர் விமானமன்று ஐதராபாத் வழியாக தில்லி செல்வதால் அங்கு ஒருமணிநேரத்திற்கு மேலாக நிற்கும்படியானது . பிரதமர் நரசிம்ம ராவ் பிள்ளை என யாரோ வருவதால் இந்த தாமதம் என்றார்கள் . விமானத்தில் இருக்கையில் காத்திருப்பதை போல ஒரு சித்தரவதை பிறிதொன்றில்லை . சென்னையில் எங்களால் பிறிதெவருக்கும் நிகழ்ந்தது , இங்கு எங்களுக்கு . இப்போதெல்லாம் கணக்குகள் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன போலும் . என் பக்கத்தில் ஜீவரத்தின உடையார் அமர்ந்திருந்தார் அவர் அறுபதுகளின் இறுதியில் இருந்தார் , எனது பாட்டனாருக்கு மிகவும் வேண்டியவர் , நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர் . வேடிக்கையாக பேசுவதிலும் அங்க சேஷ்டைகளினாலும் பிறரை சிரிக்க வைத்துவிடுவார் . விமானத்தில் குளிரூட்டும் சாதனத்தை நிறுத்திவிட்டதால் வெறும் காற்றுமட்டும் வந்தபடி இருந்தது . புழுக்கம் தாளவில்லை . ஒருமாதிரியாக பிரதமரின் பிள்ளை வந்து எங்களுக்கு இணையாக இருந்த இருக்கை வரிசையில் அமர்ந்துகொண்டார் . அவர் நரசிம்ம ராவின் பிள்ளைதான் என்பதற்கு எந்த சான்றும் தேவையில்லை. முகம் ஒன்றே போதும் . பழுப்பு நிற உடல் ,முழுக்க அடர்த்தியான முடிகொண்ட மெல்லிய உயரமான ஒருவகை குரங்கை உங்களால் கற்பனை செய்ய இயன்றால் ,அது அவரை விட கொஞ்சம் பார்க்கும் படி இருக்கும்  . விமானம் கிளம்பி தில்லி சென்று சேரும் வரை அவர்தான் எங்களின் பேசுபொருளானார்

தில்லி அடைந்ததும் முன்பக்க சிறப்பு வழியாக இறங்க அனுமதிக்கப்பட்டோம் . அது விமான ப்ரோபெல்லர் ஒட்டியபகுதி . இறங்கியது முதலில் உணர்ந்தது முகத்தை நேரடியாக சூளையில் கொண்டு வைத்ததுபோல ஒரு உஷ்ணம் , அது ப்ரோபெல்லர் அருகில் இருப்பதால் என முதலில் நினைத்தோம், அது தவறு. தில்லியின் கோடை காரணமென்று சில அடிகள் நடந்ததும் தெரிந்தது. விமானத்திலிருந்து இறங்கும்போது மரியாதையை நிமித்தமாக கொடுத்த நறுமணம் தோய்ந்த ஈர நாப்கினை நல்லவேளையாக பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தேன். எடுத்து முகத்தை ஈரமாக்கிக் கொண்டேன் .பாவம் உடையார்தான் தவிர்த்துப்போனார் .விமான நிலையம் நுழைந்ததும் எங்களுக்காக ஒருங்கியிருந்த விருந்தினர் லாபியில் சிறிதுநேரம் இருந்து, இயற்கை அழைப்பை ஏற்று, திரும்பி வந்ததும் தில்லில் புதுவை அரசினர் விடுதியிலிருந்து அதிகாரிகள் வந்திருந்தனர் . அரசு மரியாதை முறைமைகள் பேணப்பருவதை பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருந்தது . நானும் உடையாரும் ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டாலாக சிரித்துக்கொண்டோம் . நங்கள் நல்ல நண்பர்களாகி சிலமணிநேரம் ஆகிவிட்டிருந்நது . பாலன் கண்ஜாடையால் அப்படி செய்யவேண்டாம் என்றார் , எங்களுக்கு அது இன்னும் வேடிக்கையாக இருந்தது .

நிறைய அரசாங்க கார்கள் வெளியே அணிவகுத்திருந்தன . அனைவரும் அங்கிருந்து புதுவை விடுதிக்கு கிளம்பினோம் , எங்கள் வண்டியோட்டி குழந்தை ஹிந்தியில் சொன்ன முதல் தகவல் தில்லியின் கோடை வெப்பம் பற்றியது . ஐம்பது வருடம் கழித்து தில்லி இப்பேர்ப்பட்ட வெய்யிலை சந்திக்கிறது என்றார் .சபாஷ் நல்ல நேரம் என்றார் உடையார் . இரவு 8:00 மணிக்கு மேல் இருக்கும் இன்னும் சூரியனை பார்க்கமுடிந்தது. அந்தி நிலா போல .அது இரவிற்கான இருளை ஒருமாதிரி செம்மையால் குழப்பிவைத்திருந்தது. வேடிக்கை.

இதற்கு முன், இருமுறை தில்லி வந்திருக்கிறேன் அவை பெரும்பாலும் நவம்பர் மாதத்தில் இருக்கும் . வியாபார நிமித்தமாக கண்காட்சிகள் அப்போதுதான் நடைபெறும் , அவை பெரும்பாலும் குளிர் நாட்கள். அந்த குளிர் கூட உக்கிரமாக இருக்கும் . கோடையில் வருவது இதுதான் முதல்முறை . தாங்கமுடியாதது போலத்தான் இருந்தது.

கார்கள்  மிகவேகமாக சென்றுகொண்டிருந்தன. அதை விட மனவழுத்தம் அந்த கோடை உஷ்ணத்தை மறக்கடித்தது . அதுவரை வெவ்வேறு காட்சிகளில் ஈடுபட்டிருந்த மனம் திரும்பவும் என்னென்னமோ நினைவலைகளை கிளப்பியது  , பலவித வதைகளாக எழுந்தபடி இருந்தது . தேவைதானா இது . விளையாட்டு அரசியல் உன்னை எங்கு கொண்டுவந்து நிறுத்திருக்கிறது பார்த்தாயா என்று . ஒன்றுமே புரியாத்து போல . அதைப்போல நன்றிகெட்டது பிறிதொன்றில்லை.நான ஆற்றியது எல்லாம் அது சொன்னபடிதான் . இப்போது  மனம் சலிப்பாக தன் போக்கில் சென்றது

இன்று மதியம் பாலன் மனைவி எனக்கு உணவளித்ததை நினைத்துக்கொண்டேன் , எளிமையானவர் , என்னிடம் மிக அன்பாக இருப்பார் , அவரை அக்கா என அழைப்பது வழமை . அவர்களின் குடும்பமே எம்ன மீது அலாதி பிரியமுள்ளது . பாலனுக்கு ஒரு பையன் ஒரு பெண் மிக சிறியவர்கள் . பெண் தூக்கினால் ஒடிந்துவிடுவது போயிருப்பாள் . தீபாவளிக்கு என் குடுப்பத்தார் ,நண்பர் பசங்களுக்கு பரிசளிப்பது வழமை. பட்டாசு ஒரு முக்கிய அங்கம் , அதை கொடுக்கும் போது அவர்கள் அடையும் சந்தோசம் அதற்காகவே அதை தொடர்ந்து வந்தேன் . இதற்கென சிவகாசியிலிருந்து விசேஷித்து திருவிப்பேன் . பிறரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதை போன்ற மகிழ்வு பிறிதொன்றில்லை . ஒரு தீபாவளிக்கு பாலன் பையனுக்கும் கொடுக்கலாம் என தோன்றி பெரிய பட்டாசு பெட்டி இனிப்பு போன்றவைகளை எடுத்து சென்றேன் .இனிப்பை பாலனின் மனைவியிடம் கொடுத்தேன் , மிகவும் மகிழ்வாக வாங்கிக்கொண்டார் , பையனிடம் பட்டாசு கொடுத்தபோது அவன் நம்பிக்கையற்று எனக்கா என கணக்கவிரிய அவன் அப்பாவை பார்த்தபடி கேட்டான். அவரும் சிரித்தபடியே சரியென்றதும் ,வாங்கிக் கொண்டான் . ஒரே ஓட்டம் உள்ளே ஓடினான் . இதில் என் மனதை தொட்ட நிகழ்வு அதற்கடுத்த தீபாவளியின் போது . நான் சிறிது நேரம் கழித்துதான் செல்ல முடிந்தது அந்த தீபாவளிக்கு . நான் பாலன் வீட்டை அடையும் போது அவர் வெளியில் அமைந்திருந்தார் . நான் அங்கு சென்றதும் , அவர் சிரித்தபடி என்னை வரவேற்று பின் வீட்டினுள் திரும்பி நான் வந்ததை சொன்னவுடன் பையன் வேகமாக வெளியே ஓடிவந்தான்.

பரிசை பெறும்போது போன முறையைவிட அடக்கவியலாத சந்தோஷம் . அப்பாவிடம் நான் அதை வெடிக்கட்டுமா என்றான் . நான் , இது உனக்குத்தாண்டா போய் வெடி என்றதும் உள்ளே ஒடினான் . நான் புரியாமல் அவனை பார்த்துக்கொண்டிருந்தேன். போன்வேகத்தில் வெளிவந்தவன் கைகளில் நான் சென்று வருடம் கொடுத்த பரிசு பொட்டி அதை அப்படியே வைத்திருந்தான் மேலே ஒட்டியிருந்த பேப்பர் கருக்கலையாமல் இருந்தது . நான் உள்ளம் பொங்கி திகைத்துவிட்டேன்


ஏன இதை இன்னும் வைத்திருக்கிறாய் என்றதற்கு ,சிறிது நேர மௌனத்திற்கு பிறகு , தனக்கு யாரும் இதுவரை பரிசளித்ததில்லை . அடுத்தவருடம் இதேபோல் கிடைக்குமா தெரியாது எனவே , அடுத்தவருடம் கிடைத்தால் இதை வெடிக்கலாம் என்று வைத்திருந்தேன் என்றான் . மிகவும் நெகிழ்ந்த தருணங்களிவை . அதன் பிறகு மற்றவர்களுக்கு கொடுப்பது நின்றாலும் அவனுக்கு "அந்த கசப்பான நிகழ்வு நடக்கும்வரை " வரை அது நிற்கவேயில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக