https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 7 ஜூலை, 2017

அடையாளமாதல் - 116 *அழகியச்சிறு காகிதப்பறவை * .

ஶ்ரீ:
*அழகியச்சிறு காகிதப்பறவை * .

இயக்க பின்புலம் - 43
அரசியல் களம் - 34
விவாதமென்பது சொற்பெருக்கும் விளையாட்டு , கருத்து பறிமாற்றமாற்றத்தில்  பிறரால் ஏற்கப்படல், ஆனவத்தை வீங்கவைப்பது .எதிர்த்து எழுந்து  அடிபட்டால் , மறுபடி வைத்த கருத்தை நிரூவுவதற்கு சிந்தனை தொகுப்பில்   வார்தைகளை தேடுவது . ஆனால் கருத்துப்பரிமாற்றம் நிகழும் தருணங்களில் வாதப்பொருள் பற்றிய புரிதலை தாண்டி விளக்குவது ,அதில் உணர்ச்சி பெருக்கிற்கு இடமளிப்பதும்  , நெறியை சார்ந்து கட்டமைக்கப்பட்ட சட்டகத்திற்கு உட்பட்டு ஆடுவது என்பது ஆபத்தானது . அது நம்மை கட்டும் கயிற்றை நாமே தருவதில் சென்று முடியும் .இப்போது எனக்கு அதுதான் நிகழ்ந்துள்ளது

நான் ஜெயிக்க வேண்டும் என்றால் மறுபடி வார்த்தை விளையாட்டில் கால்பதிக்கலாம் . என்னால்  கருதுகோளாக முன்வைக்கப்பட்டவைகளை , நான் மிதித்து கடக்கவேண்டும் . இது வெற்றி தோல்வியை பற்றியதல்ல . சொன்ன சொல்லிலிருந்து என்னால் விலகமுடியாது . என் மனோநிலையை தயக்கமில்லாது வெளிப்படுத்தியிருக்கிறேன் .அதன் தொடர்ச்சி இது . அவ்வளவுதான் . இதை அடைய பலநாட்கள் எண்ணி எண்ணி யாத்த நிலைகள் வழைவுகளை  விழுமியங்களாக உருமாறித்தெரிவதை செதுக்கி வலிதராத நிலைக்கு மனதை கொண்டு செல்லுதல் , இப்படியாக தலைகுள் இருப்பதை ஒருங்கியாகிவிட்டது.இது விவாத தோல்வி என இப்போது முடிவெடுக்க வேண்டாம் . அவர்கள் தரப்பில் சொல்லவந்ததை அவர்கள் இன்னும் முழுமையாக சொல்லவே இல்லை . அவர்கள் முதலில் சொல்லி முடிக்கட்டும்  என காத்திருந்தேன் . சுப்பாராயனுக்கு என்னை பற்றிய சிந்தனை ஓட்ட சிக்கல்கள் முழுவதும் தெரியுமாதலால் . பேச விழைந்த சிலரை கை அமர்த்தி , தானே பேசத்துவங்கினார்

பாலன் எங்களுக்கிட்டது அந்த கருத்தாய்வு செய்யும் உத்தரவு , அதன் முடிவிற்கு எப்போதோயெழுந்த காரணம். பாலன் தன் பதவியை ராஜினாமா செய்ததால் வந்தது . சமீபத்திய அரசியல் திருப்பங்களினால்  முதல்வர் வைத்திலிங்கம்,  கிருஷ்ணமூர்த்தி , பாலன் இருவரையும் வெவேறாக பார்க்கிறார் . அவருக்கும் இளைஞர்  தலைமை இப்பொது மாறுவதில் விருப்பமில்லை . ஆனால் ராஜினாமா செய்யப்பட்டு விட்டது . இதுவரை அதன்மேல் தன் முடிவு என்ன  எனபதை அகில இந்திய தலைமை இதுவரை ஒன்றும் அறிவிக்கவில்லை , இப்போதைய சிக்கல் , நமே அதை சீண்டுவது. அது தேவையற்றது . நேரடியாக தில்லி சென்று அதைப்பற்றிய விவாதத்தில் மாநில முதல்வர் என்கிற பொறுப்பில் அழுத்தம் கொடுத்து   பாலனுக்கு காலநீட்டிப்பு வாங்கவேண்டும் ,

சண்முகத்தை மாற்ற அனைத்து வித ஏற்பாடுகளையும் செய்தாகிவிட்டது . அவர் இடத்திற்கு ஜீவரத்தின உடையார் மரைக்காயரால் முடிவு செய்யப்பட்டிருக்கிறார் .ஒரே சமயத்தில் இரண்டு தலைமையும் மாற வேண்டியதில்லை . பாலனுக்கு நீட்டிப்பை இதை சொல்லி தன்னால் வாங்கமுடியும் என வைத்திலிங்கம் நம்புகிறார் . இதில் சாதக பாதகங்கள் .ஒன்று ; தலைமை மாறித்தான் ஆகவேண்டும் என தில்லி நினைத்தால் , இரண்டு தலைமையும் மாறும் , இப்போது பாலனுக்கு எதிர்ப்பு சண்முகம் . அதனால்தான் நம்மால் எதுவும் செய்ய முடியாது கட்டுண்டு கிடக்கிறோம் , இரண்டு ; சண்முகம் மாற்றப்பட்டால் நமது சிக்கல் முழுவதுமாக விலகிவிடும் ,பாலனின் அரசாங்க பதவியை பற்றி அங்கேயே முடிவெடுத்துவிடலாம்.

சண்முகத்திற்கு மாற்று ஜீவரத்தின உடையார், நமக்கு யார் என வைத்திலிங்கம் கேட்டதால் . அவரின் அறிவுறுத்தலின்படிதான் இந்த கருத்தாய்வு , இதன் மூலம் கிருஷ்ணமூர்த்தியின் தலையீடு தவிர்க்கப்பட்டுவிடும் . அனைத்து தொகுதி கருத்து தீர்மானமாக செல்லும்போது வேறொருவர் மாற்றுக் கருத்து சொல்ல இடமில்லை . தலைமைக்கு இப்போது மாற்றமில்லை என்றால் பாலனின் ராஜினாமா ஏற்கப்படாது . மறுபடியும் தலைவராக நீடிக்க இதுவரை இருந்துவந்த தடை விலகிவிடும் . என்றார் .

மேற்கொண்டு அவரே பேசும்பொருட்டு அமைதியாய் இருந்தேன் . அந்த இடைப்பட்ட நேரத்தில் என் தலைக்குள் ஆயிரம் கேள்விகள் நான் ஏன் அந்த கருத்தாய்வு குழுவில் இல்லை , நான் விலகியதும் விட்டுவிட்டார்களா , அப்படித்தான் என்றால் அப்படியேபோய்த்தொலைந்திருக்க வேண்டியதுதானே , நானாவது நிம்மதியாய் இருந்திருப்பேனேஅதில்லை என்றால்  இப்பொது என்னை தேடிவர காரணம் என்ன

சுப்பாராயனே தொடர்ந்தார் மாநிலம்முழுவதுமிருந்து தீர்மானத்தின் நகல் இது . ஏற்கனவே பாலனுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது .அப்போது உனக்கு இது  தெரியுமா என்றார். அவன் கருத்தையும் தெரிந்து வாருங்கள் இன்று காலைக்குள் முதல்வருக்கு கொடுக்கப்படவேண்டும் என்றார். என சொல்லிக்கொண்டே அனைத்து தொகுதி , மாவட்டம் மற்றும் மாநில அமைப்பின் தீர்மான நகலை என்னிடம் கொடுத்தார் . நான் அதை வாங்கி நிதானமாக பார்த்தேன் . ஒரு திடுக்கிடல் தலைக்குள் மின்னலை போல தெறித்தது , எனக்குள்ளே ஒன்று நடுங்குவதும்,காதுமடல்கள் வெம்மைகொள்வதை உணரமுடிந்தது

என்னை மாநில இளைஞர் காங்கிரசின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கும் ஒற்றைவரி தீர்மானம் அது . இதைவிட பெருமிதம் கொள்ளும் தருணம் என பிறிதெப்போதும் நிகழப்போவதில்லை . ஆனால் இது என் வாழ்வை திசைமாற்ற கூடியது . இதுவரை நான் பயணித்த பாதையை மாற்றி அமைக்கவல்லது . இது என்னை ஒரு முழுநேர அரசியல்வாதியாக மாற்றிவிடும் . இப்படி முதலில் எழுந்த எண்ணப்பெருக்கு ஒழிந்த நிலையை அடைவதே இப்போதைக்கு இதை கடக்க போதுமானது .

நான் மூன்றாக பிளந்தது போல இருந்தது , உள்ளே இரண்டு வித எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று மாறி மாறி சொற்குவியலாக ,பெருக்காக எழுந்து எங்கும் நிரப்பிக்கொண்டிருந்தது .நான் மட்டும் அதிலிருந்து தள்ளி நின்று என்னுள் நிகழ்வதை உற்றுநோக்கியபடி இருந்தேன்.சில நொடிகளில் அனைத்தும் அலசி முடிவுகள் நீர் பெருக்கில் மிதக்கும் ஓடம் போல என்னை மெள்ள  நெருங்கி, தொட்டு நின்றது . இவ்வளவு வேகமாகவும் சிந்திக்க முடியுமா. எனக்குள் ஒன்று எண்ணையே வியந்தது. நான் அதற்க்கு அப்பால் என இருந்தேன் 

எல்லோரும் என்னையே வினோதமாக பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததும் , என் சமநிலையை நிர்வகிக்க அந்த தீர்மான நகலை ஒன்றும் பேசாது லோகுவிடம் கொடுத்தேன் . எல்லோருடைய கவனமும் என் முகம் நோக்கியிருந்தது . என் அமைதி அவர்களை எந்த முடியும் எடுக்காத படி நிறுத்தியிருந்தது . கிஷ்ணராஜ் என்னை ,என்ன என்பதை போல என்னை பார்த்தார் . நான் அடுத்து பேசவேண்டியதை தொகுத்துக்கொண்டிருந்தேன்.


இது வாழ்வின் முக்கிய தருணம் , வாழுமுறையை பலவாறாக திருப்ப கூடியது . ஒருமுறை தவறுதலாக பாதையை தேரினால் , பின் ஒருபோதும் தற்போது நிற்கும் இடமாவது திரும்பமுடியுமா என்பதே கேள்வியாக  என்முன்னே உள்ளதுதீர்மானமெனும் அழகிய காகிதப்பறவை  இப்போது என் கைகளில் உள்ளது , என் எண்ணமே இதற்கு உயிரளிக்க வல்லது . ஆனால் உயிரென எழுந்து இது எனக்கென கொடுக்க இயலும்  நான் விழைவதையா  அல்லதுவிழையாததையா . விழைவதெல்லாம் நம் நண்மைக்கானது என எங்கும் சொல்லப்பட்டிருக்கவில்லை . இப்போது தேவை நான் விழைவதா எனக்கு வேண்டுவது, எது .உணர்ச்சிப்பெருக்கை நிறுத்தி அவதானிக்க , நான் எனக்குள் உரையாட துவங்கினேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...