https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 9 ஜூலை, 2017

அடையாளமாதல் - 120 *திரளும் மாயத்துளிகள் *.

ஶ்ரீ:


*திரளும் மாயத்துளிகள்   *
இயக்க பின்புலம் - 47
அரசியல் களம் - 34




பாலன் இரவுணவு முடித்துவிட்டு வீட்டிற்கு வெளியே ரோட்டில் சாய்வு நாற்காலியில் அமைந்தபடி சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்இரவுதோரும் உறக்கம் வரும்வரை அவ்வாறு அமர்திந்ருப்பது வழமை . அது எனக்குத் தெரிந்து மூன்றாவதாக பெயர்ந்து வந்த வாடகை வீடு . வாடகை கொடுக்க நிலையான வருமானமில்லாத்தால் போக்கியத்திற்கு  அமரத்திக்கொள்ளவார் .  மிகச்சிறிய    வீடு   அதன்  பினபுறமென்பது குளியளரைப்பகுதி .  

ரோடு எக்காலமும் உயரலாம் என்றோ அல்லது மழைக்காலத்தில் ஏற்படும் நீர்ப்பெருக்கை தவிற்க்க அங்கு எல்லா வீடுமே இரண்டடிக்கும் அதிகமான உயரத்தில் கட்டப்பட்டிருந்தன . படி ஏறி வீட்டு கதவுக்கு அருகில் இடப்புறம் மாடிக்கு செல்லும் படிக்கட்டு . மாடியில் ஒரு ஓலை கொட்டகை அதில்  அந்த வீட்டின் உரிமையாளர் தாங்கிக்கொள்கிறார் . வீட்டின் உள்நுழைத்ததும் சிறிய வரவேற்பறை, சமயத்தில் சாப்பாட்டறை . பின்பக்கம் இடைகழி வலதுபுறம் சமையல்கட்டு , நேராக சென்றால் பின்கட்டு . கற்றுவசதி குறைவிற்காகவோ மனநிலை மாற்றத்திற்காகவோ இரவுகளில் ரோட்டில் அமர்வது .கட்சி சார்பாக பலர் கூடும்போது இது மிகவும் சவுகர்யம் .

அந்த ரோடு பத்தடி அகலமுள்ள சந்துபோன்றது . காரோ மற்ற பெரிய வாகனோ உள்நுழையமுடியாதென்பதால் , இரவு 10:00 மணிக்குமேல் ரோட்டை அடைத்தபடி நாற்காலி போட்டு நெடுநேரம் பேசிக்கொண்டிருப்போம். பெரும்பாலும்  அரசியல் ,ஆன்மிகம், மார்க்சியம், கீதை பற்றியாத இருக்கும் .மிக மகிழ்வான நாட்கள் அவை . எங்களை பார்த்ததும் அவருடன் பேசிக்கொண்டிருந்த அக்கம்பக்கத்து வீட்டிலிருந்து வந்தவர்கள் அவரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டு சென்றார்கள் . சுப்பாராயன் உள்ளே சென்று அனைவருக்கும் நாற்காலிகளை கொண்டுவந்து போட்டார்நான் மெளனமாக நாற்காலியில் அமைந்திருந்தேன் .என்னுடன் வந்திருந்தவர்கள் நாற்காலிகளிலும் ,அவர் வீட்டு திண்ணையிலும், எதிர்வீட்டு கொரட்டிலுமாக  அமந்துகொண்டனர் , சிறிதுநேரம் யாரும் ஏதும் பேசவில்லை , இட்ட வேலையை அது வெற்றிகரமாக செய்துவிட்டு வந்திருக்கிறது. சந்தோஷம். பாலன் வெளியேறவேண்டிய வரும் என்கிற வருத்தம்இரண்டும் கெட்ட நிலை குழுவிற்கு

அதன் பின் என்ன என்கிற கேள்விகள் அதனால் யாரும் பட்டென விஷயத்தை தொடங்க யோசித்தப்படி இருந்தார்கள் . சுப்பாராயன் தான் சகஜமாக வெட்டினாற்போல் பேசத்துவங்கினார் . “அரி கிட்ட சொல்லியாச்சு அவர் சொன்ன மாற்றங்களை இரண்டொரு நாளில் செய்தாக வேண்டும்என்றதும் , பாலன் அமைந்தபடியே என்னஎன்ன அரி சரிதானேஎன்றதும் . இது ஒரு மாற்று ஏற்பாடு தானே நீங்கள் சொன்னதால் சரி என்றேன் . வைத்திலிங்கத்தை சென்று பார்ப்பது மட்டும் அவசியமற்றது என நினைக்கிறேன். அது வேண்டாம் . தலைமை மாறும்போது அதன் அடுத்த தலைமையை நீங்கள் எடுக்கிறமுடிவுதானே . இதில் வைத்திலிங்கத்தை பார்ப்பது எங்கே வருகிறது ,தவிரவும் கால் நீட்டிப்புத்தான் இப்போதைக்கு சரியாகவரக்கூடியது , புதிய தலைவருக்கான பட்டியல் என ஒன்றைத் தயார் செய்வது ,வம்பை நாமே வலிய சென்று வாங்குவது . அதில் கண்ணன் சண்முகம் மரைக்காயர் ஏன் வைத்திலிங்கம்கூட மூன்று மூன்று பெயரையோ ஒருவரையோ இணைக்க வாய்ப்புள்ளது

தில்லியில் கொடுக்கும் போது அதை உங்களிடம் சொல்லிவிட்டு செய்யவேண்டும் என்கிற அவசியம் இல்லை , நாம் பார்க்காததாஎன்றதும் , அனைவரும் திகைத்து என்னை பார்த்தனர்.அப்படி ஒன்றை நாங்கள் எங்களுக்குள் விவாதிக்காததே அதற்கு காரணம் . அப்படியும்  வாய்ப்புள்ளதா என அணைவரும் பாலனை கேட்டபோதுசொல்வதை போல அதற்கும் வாய்ப்புள்ளதுஎன்றதும் ஒரு சோர்வு அனைவரையும் சூழ்ந்தது

வைத்திலிங்கத்தை சந்தித்து எனத் நியமனம் குறித்து பேசச்சொல்வது மாட்டும் எனக்கு நெருடலாக இருந்தது. அதை பற்றிய பல சமாதானங்களை பாலன் சொன்னாலும் எனக்கு அது மனதில் சரியானகாரணமாக படவேயில்லை . பாலனுக்கு வேறு நிஜமான காரணங்கள் இருக்கலாம், அதைப்பற்றி விவாதிப்பதை விருபாவைல்லை என்கிற சித்திரமே கடைசியாக நின்றது . அதற்குமேல் நான் என்ன செய்யவேண்டும் என கேட்டதற்கு , மூன்று நான்கு நாட்களுக்குள் செய்துமுடிக்கவேண்டும் என்றார் . யாரை பார்ப்பது என்ன செய்வது என்றதற்கு முதலில் வைத்திலிங்கத்தை பார் பிறகு ,அவரது நெருக்கமானவர்களை ,மற்றும் அவரது பந்துக்களை என்றார் .அவர் ஒன்றன்பின் ஒன்றாக சொல்ல சொல்ல எனக்குள் எங்கோ ஒரு நிலையழிதலை உணர்ந்தபடி இருந்தேன் . நான் மேலதிகமாக எதையும் பேசாது அங்கிருந்து வெளியேறினேன். ஆனால் இருண்டு நாள் ஓடிவிட்டது நான் யாரையும் சென்று சந்திக்கவில்லை . மறுபடியும் பாலனிடமிருந்து தொலைபேசி . அதில் கண்டிப்புடன் அவர் சொன்னதை நான் செயதேயாகவேண்டும் என்றார் .

இவ்வளவு அழுத்தம் கொடுத்த பிறகு ,என்ன செய்யலாம் என்கிற தீவிர யோசனைக்கு பின் வைத்திலிங்கத்தின், நண்பர்கள் மற்றும் பந்துக்கள் அனேகம் பேர்களை எனக்கு அரசுயலுக்கு அப்பாற்பட்டு தெரியும் . அவர்களில் சிலர் எங்கள்  குடும்ப நண்பர்கள் . ஒரேநாளில் இதை செய்துமுடிக்கலாம்

அன்று சனிக்கிழமை, காலை வைத்திலிங்கத்தின் அணுக்கர்களில் ஒருவர் அவரது சொந்த மாமன் மகன் குமார், எனக்கு நல்ல நட்பு அவரையும் நண்பர்களை ஒருங்கக்கூடிய ஆனந்தரங்க ரவிச்சந்தர் இருவரையும் முத்தலில் சந்தித்து சொன்னதும் அவர்கள் உற்சாகமாக செயலில் இறங்கினர். அன்று இரவுக்குள் அடுத்தடுத்து சந்திப்புகள் சுமார் பண்ணிரண்டுக்குமேல் இருக்கும் .நான் சந்தித்தது பிறகு அது ஒரு லாபிபோல செயல்படத்தொடங்கியது . வைத்திலிங்கத்திடம் அந்த இரண்டுநாள் சந்தித்து பேசியவர்களில் பலர் அதிகம் என்னை பற்றியதாக இருந்தது  . 

எனக்கு மனதிற்குள் வைத்திலிங்கத்தை  சந்திக்க வேண்டாம் என்று தீவிரமாக தோன்றிவிட்டது . காரணம் இது எனக்கு சரியாகப்படவில்லை . பாலன் அளவிற்கு அதிகமாக அழுத்தம் கொடுத்ததால்தான்  இதையாவது செய்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது . ஆனால் வைத்திலிங்கத்தை நேரடியாக பார்ப்பது என்பது எனக்கும் இதில் விருப்பமிருப்தாக ஒரு உருவமெழும் ஆபத்திருக்கிறது .நான் கடைசீ வரை முதல்வரை சந்திக்கவேயில்லை .அவரை சந்திக்கவில்லை என்பது எங்காவது தவறென ஆகிவிடுமோ என்கிற கவலை முதலில் எழுந்தது . தலைமை பொறுப்பிற்கு வருகிற ஆசையுள்ளவனுக்கு வாய்ப்புள்ளவனுக்கு வரவேண்டிய கவலை அது.   எனக்கெதற்கு . நான் வாய்ப்பும் ஆசையும் இல்லாதவன் , பாலன்தான் மறுபடியும் பதவி நீட்டிப்போடு திரும்பப்போகிறவர். காவலையைவிட்டு என்றது மனதுஒருவேளை வைத்திலிங்கத்தை சென்று பார்த்திருந்தால் இந்த நாடகத்தின் முடிவு வேறுவிதமாகக்கூட இருந்திருக்கலாம் . ஊழ் வலிந்து உந்தியது.நான் அது காட்டிக்கொண்டிருந்த மாயத்தை பிடித்துக்கொண்டிருந்தேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்