https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 20 ஜூலை, 2017

அடையாளமாதல் - 132 * கலைந்து விலகிய எண்ணங்கள் * .

ஶ்ரீ:



பதிவு:132 /204 தேதி : 19 ஜூலை 20017


* கலைந்து விலகிய எண்ணங்கள்  *


இயக்க பின்புலம் - 58
அரசியல் களம் - 38





நாங்கள் காலை உணவை அவசரஅவசரமாக சாப்பிட்டு விட்டு திரும்பிய போது மூப்பனார் வீட்டில் கணிசமான கூட்டம் கூடியிருந்தது . மெள்ள கூட்டத்தை விலக்கி காரியதர்சியை பரிதாபமாக பார்த்த போது , சிறு தலை அசைப்பில் எங்களை அருகனைத்து , வீட்டின் இடதுபக்கத்தில் படிக்கு அருகில் மிக குறைந்த இடத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியை காட்டி அதில் அமர சொன்னார் , பின் தாழ்ந்த குரலில் அங்கு கூடி இருந்தவர்களிடம்சின்னையா அனுப்பி வந்திருக்கிறார்கள் , அவர்கள் பேசி சென்ற பிறகு நீங்கள் போங்கள்என்றதும் ,வெறப்பான கஞ்சியில் காலர் இல்லாத சட்டை  மற்றும் கரை  வேட்டியில் இருந்த இருவர் எங்களை பார்த்து எழுந்து கும்பிட்டு பின் அமந்துகொண்டார்கள்

அந்த இடத்தில் மேலே பேன்  ஓடும் சப்தம் கேட்டபடி அமர்ந்திருந்தோம். இயற்கையாக நிறைய பேர் கூடியிருந்தால் , எழும் ஒரு கார்வையான ஒலி அங்கு இல்லாதது, அசாதாரண சூழ்நிலையை கொடுத்து,   நிமிடங்கள் மணிநேரம் போல மிக மெதுவாக கடந்து போனது . எந்த வழியாக வருவார் என் புரியாது நான் அடிக்கடி ,மாடியை பார்த்த படி இருக்க . சரேலென என் பின்பக்கத்திலிருந்து மூப்பனார் வெளிப்பட்டார் . அவர் நறுமணம் ஏதும் பூசியிருக்கவில்லை ,ஆனால் என்னை கடந்து சென்றதும் ஒரு மெல்லிய வாசனை , அவர் சென்று எதிரில் உள்ள சிறிய மர நாற்காலியில் அமந்துகொண்டபின்னரும், அந்த இன்னது என பிரித்தறிய முடியாத வாசனை என் பக்கத்தில் நின்றபடியே இருந்தது . இதற்கு முன் இவரையும் இன்னும் பலரையும் சந்தித்திருக்கிறேன் , பிறருடன் கலந்து சென்று , தனி முகமற்று .ஆனால் நான் தனித்து அரசியலில் சந்திக்க இருக்கும் பல ஆளுமைகளின் முதல் இவர் , என்பது சிறிது திகைப்பாக இருந்தாலும் , சிறிய வட்டத்திலிருந்து அரசியல் நடைபெறும்  வளையத்திற்குள் நேரடியாக  நான் நுழைய இருப்பதை கட்டியங்கூறுவது, இந்த சந்திப்பு ,என நான் அப்போது நினைத்திருக்கவில்லை .நான் என்னை முன் நிறுத்தி கொண்டு சந்திப்பது இது முதல் முறை என்பது எனக்குள் ஒரு அரசியல் நிமிர்வை கொடுத்திருந்தது.

மூப்பனார் - கிராமத்தில் வளர்ந்த திடகாத்திரமான சரீரம். நல்ல நடுத்தர உயரம் , ஒட்ட வெட்டி கிராப் போல தோன்றினாலும் அது நிஜமல்ல , நரைத்தமுடி சிறு சுருள் கொண்டது , அதை படிய சீராக வாரியிருப்பதல் அப்படி தோன்றும் .முழுவதும் மழித்த முகம் சாதாரணமாகவே சற்று திறந்துகிடக்கும் வாய்காலர் வைக்காத நல்ல கதர் சட்டை நாலுமுழ வேட்டி , கழுத்துப்பகுதி சற்றே முன்பக்காமாக வளைந்திருப்பதால் ,சட்டை காலர் கழுத்தை தொடாது எட்டி நிற்கிறது .சட்டையின் கீழே உள்ள பட்டன்களில் ஒன்று போடாது  விடப்பட்டிருக்கிறது. நாற்காலியில் அமரும்போது பின்பக்க சட்டையை கசங்காது மேலிழுத்து மடித்து பின் அமரும் வழக்கம் . ஜிப்பா பாணியில் இரண்டு பக்கமும் ஒரு ஐந்து அங்குலம் திறந்தபடியிருப்பது அமரும் போது படியாது கசங்காது தனித்து நிற்கிறது.பேசும்போது அசல் தஞ்சாவூர் பாணி , நாக்கு சற்று தடித்தது போல சொற்கள் கூர்மையழந்து வெளிவருகிறது. அவ்வப்போது உதடுகளை ஈரமாகியபடி இருக்கும் நாக்கு ,தொலைக்காட்சி பெட்டியிலும் , தினசரிகளில் வரும் படத்திற்கும் அவர் உருவத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு .அது ஏன் என புரிவதில்லை.நான் பல ஆளுமைகளில் இதை கவனித்திருக்கிறேன்


அவரை கண்டதும் சட்டென எழுந்து அவருக்கு முறைமைகள் செய்தோம்லேசாக தலை ஆட்டியபடி எங்களிருவரையும் சில மணித்துளிகள் பார்த்தபடி இருந்துவிட்டுசொல்லுங்கஎன்றார் .அந்த "சொல்லுங்க" வில் முதல் மற்றும் கடைசீ எழுத்துக்களை கேட்கமுடியவில்லை . நல்லவேளையாக  சேகர் பேச துவங்கிவிட்டார் . விழா , பெருசு , அவசியம், வரணும் ........ என ஏதேதோ சொல்லியபடி  இருந்தார் . நான் "ஊடாலே புக முடியாது "!! ஸ்தம்பித்திருந்தேன் . திடீரென  "சமூகம் என்ன சொல்ற.". என்றதும் . சற்று நேரம் அமைதி. நான் இது ஏன் என்கிற பாவனையில் நின்று கொண்டிருக்க, சேகர் மெள்ள என்னை தொட ,நான் புரியாது அவரை பார்த்தேன் . சேகர் என்னிடம் ஐயா சண்முகம் பற்றி கேட்கிறார் எனதும்தான் , இந்த உலகத்திற்கே வந்தேன்

முறைமைகள் மறந்து போயின நான் வெகு சகஜமாக , “அவர் எங்களுக்கு எப்போவும் எதிர்ப்புத்தான் , சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இன்னும் மோசம்என்றேன் . என்னை வினோதமாக பார்த்தபடி ஒன்றும் பேசாது இருக்க . நான் பேசியது தவறோ என புரியாமல் நிற்க . லேசாக சிரித்தபடிஏன் ஒன்னா இருந்து பண்ணுவதை விட்டு ,இப்போ பழையமாதிரி எதிர்ப்பரசியல் தேவையாஎன்றதும் , நான் வாழப்பாடியை இழுத்துக்கொண்டேன் . “அவர் வாழப்பாடி வைத்துதான் எல்லாமே செய்து வருகிறார் முதல்வர் தேர்தலிக் நடந்தது உங்களுக்கும் தெரியும்” , கண்ணனை பற்றிய பேச்சு வந்ததும்பாலன் தேர்ந்தெடுக்கப்பட்டமுறை , அதன் பின் எழுந்த வன்முறை , அவருடன் இணைந்து செயல்படமுடியவில்லைஎன்றேன் . சற்று நேரம் மௌனமாக இருந்தவர் .”தம்பி சொன்னார் பார்ப்போம்என சொல்லி முடித்துக்கொண்டார் . ஏமாற்றமாக போய்விட்டது . நிறையப் பேசியாகிவிட்டது . நான் சொல்லிழந்தேன் , நாற்காலியிலிருந்து எழப்போகிறார் , அடுத்த முறை பேச வாய்ப்பேயில்லை . நான் சட்டென அவரிடம்ஒன்னே ஒன்னு , நீங்கள் இதுவரை புதுவைக்கு பலமுறை வந்திருக்கிறீர்கள் கல்யாணம் சாவு இதை தவிர உங்களை புதுவையிலிருந்து வேறு எதற்கும் இதுவரை யாரும் அழைத்ததில்லை . நாங்கள் உங்களை முதல் முறையாக கட்சி பண்ண அழைக்க வந்திருக்கிறோம் . எங்கள் பெருமையை காட்டிக்கொள்கிற விஷயமில்லை , பெரிய எதிரிகளுக்கு முன்பாக நிற்க வேறு வழி இல்லாமல் வந்திருக்கிறோம் பிறகு உங்கள் முடிவுஎன சொன்னதும் மெல்லிய புன்னகையுடன் சற்றுநேரம் என்னை பார்த்திருந்து விட்டு என் தோளை லேசாக தட்டி ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டார் . நான் பேசிமுடித்த ஆயாசம் தீர பின் அவர் எங்கிருக்கிறார் என் திரும்பி பார்க்க கூட்டம் வெளியே சென்றபடி இருந்த்தது. வெளியில் மூப்பனார் காரில் ஏறி எங்கேயோ போயே போய்விட்டார் . நான் விடுதலையடைந்த உணர்வில் இருந்தேன் . இது எனக்கான அங்கீகாரம் , இனி வாய்ப்பு கிடைக்கும்போது மறுபடி சந்திக்க இந்த விடுபடல் உதவும் என்கிற எண்ணம் தோன்றியவுடன் . இது நாள்வரை அடர்ந்து அடைந்து  கிடந்தது  கலைந்து போனது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்