https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 14 ஜூலை, 2017

அடையாளமாதல் - 127 *முரண்களின் தொகை *.

ஶ்ரீ:

*முரண்களின் தொகை *
இயக்க பின்புலம் - 54
அரசியல் களம் - 36

Add captionபிரமாண்டமான அந்த பொதுக்கூட்டத்திற்காக ஒவ்வொரு சிறு ஏற்பாடுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. அவை தினம்தோறும் பத்திரிக்கை செய்திகளாக வரும்படி பார்த்துக்கொண்டோம் . விஷேச அழைப்பாளராக மூப்பனாரை அழைப்பதென தில்லியிலேயே முடிவெடுக்கப்பட்டது . தமிழக காங்கிரஸ் தலைவராக வாழப்பாடி ராமமூர்த்தி சர்வவல்லமை உள்ளவராக இருந்த காலம். அவரின் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்த செல்வாக்கும் , மூப்பனாரின் அரசியில் தோல்வியும் அவரை அசைக்க முடியாத தலைமையாக நிறுவியிருந்தது.

சண்முகம் மூப்பனாரின் ஆதரவு அல்லது எதிர்ப்பு அணி என சொல்வது சண்முகத்தின் ஆளுமைக்கு முன்பு அரத்தமில்லாத்து மேலும் , இங்கு பொருந்தாது . இவர்கள் எல்லோரையும் விட அரசியலில் மூத்தவர் ,பழுத்த அனுபவமுள்ளவர் .காங்கிரசை  தொடர்ச்சியாக ஆட்சிபீடத்தில் அமரத்தியவர் , ஆனால் இந்த தேர்தல் தோல்வியால் பலம் குன்றி இருந்தாலும் .மூப்பனார் , வாழைப்பாடி இருவர் அரசியலில் நுழையும் போதே ,அவர் மாநில தலைமையாக இருந்தவர்  . 

புதுவை சிறிய மாநிலமாக இருந்ததால் ,அவரது ஆளுமை வெளிப்படாமல் போனது .இருப்பினும் தென்னிந்தியாவின் காங்கிரஸ் அரசியலில் நிலையாக இருந்தவர். இந்திரா காந்தியால் நியமிக்கப்பட்ட தலைவராக தொடர்ந்து தலைமை பொறுப்பிலிருந்தது சண்முகம் ஒருவரே . அரசியல் சூழல் நிலையானதல்ல , அது தினம் மாறுவதற்குரியதாகவே எப்போதும் இருந்துவந்திருக்கிறது .தேசிய அரசியலில், இந்தியா முழுவதுமுள்ள தலைவர்களால் பல்வேறு மாறுபட்டக்காருத்துக்களின் முரணியக்கத்தால் அவை நிலை பெயர்ந்தபடியே எப்போதும் இருந்துகொண்டிருக்கும்ஒவ்வொரு நிமிடமென இதை அடிப்படையாக கொண்டே தேசிய அரசியல் மற்றும் அரசுக்களின் இயங்கு முறையாக அவை இருந்துவருகிறது . ஒரு முடிவு எடுத்த நிமிடத்தில் அமுல்படுத்தாவிடில் அது முழுவதும் தவறான முடிவாக தெரிவதை யாரும் மாற்ற முடியாது என்பதே முதல் வினோதம்
காலம் தாழ்த்தப்பட்ட ஏதும்இதம் இத்தம்”  என எவராலும் எங்கும் நிர்ணயித்து விட முடியாது .அவர் பிரதம மந்திரியேயானாலும் கூட . நேற்று எடுக்கப்பட்ட ஒரு ஆகபெரும் முக்கிய முடிவிற்கு காரணமான ஒருவர், இன்று அங்கில்லை எனறால் ,இந்தியா முழுவதும் நேற்று எடுக்கப்பட்ட முடிவில் ஒரு சிறு மாற்றம் வந்துவிடும் . அதற்கு அவர் பதவி இழந்திருக்க வேண்டுமென அவசியம் இல்லாமல், அவர் இன்று தில்லியில் இல்லை என்கிற ஒரே காரணத்தினாலேயே . இதில் இன்னும் வினோதம் அடுத்த சில நொடிகளில் அவரது முடிவு மாற்றமடைந்துவிட்டது என் அவருக்கு தெரியவந்தாலும் கூட அவரால் ஒன்றும் செய்வதற்கு இயலாது , இதைப்போல ஒரு விளையாட்டை  ஒரு அரசியல்வாதிதான் அடையமுடியும் என்று இல்லை.அதிகாரிகளே அதை செய்ய வல்லவர்கள் .

அதிகாரிகளின் அரசியலுக்கு முன்பாக அரசியல்வாதிகள்  ஒன்றுமே இல்லை . அது அந்த மந்திரியுடைய சொந்த விஷயமாக இருந்தாலொழிய அவரால் அதை சரிபடுத்தவே இயலாது . குவிந்த இரு கைகளில் அள்ளிய தண்ணீரின் விரல் இடுக்குகளில் வழியே கசிந்து ஒழுகி மறைவதை பார்த்து தவித்து நிற்பதை தவிர செய்யக்கூடியது பிறிதொன்றில்லை .

ஒரு முறை ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது சொன்னது அரசாங்க திட்டத்தின் மூலமாக பயனாளி ஒருவருக்கு பத்து பைசாவை கொண்டு கொடுக்கவேண்டும் என்கிற திட்டம், அதற்கான செலவுகள் கொண்டு கொடுப்பதுற்கு ஆகும் செலவீனங்கள் தொன்னூறு காசுகள் என அவர் சொன்னது நகைச்சுவையல்ல என்பதுதான் இன்னும் கொடுமையானது

புதுவை அரசியலென்பது தில்லி மேலிட்டதால் பல காரணங்களினால் தமிழக அரசியலை ஒட்டியே புரிந்து கொள்ளப்பட்டு வந்திருக்கிறது , பொதுவான பேசுமொழி தமிழ் என்பதும் , திராவிட காட்சிகளே இங்கு பிரதான எதிர் காட்சிகளாக இருந்துவந்திருப்பதும் . தமிழகத்தில் உள்ளே அமைந்த மாநிலமாக இருக்கிறது . ஒரே வித்தியாசம் இங்கு காங்கிரஸ் தொடர்ந்து மாறி மாறி ஆட்சி அமைத்திருக்கிறது . தமிழகத்தில் அது நடக்கவில்லை நடக்கவும் போவதில்லை

2001 இல் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் மூரகத்தால் ஒரே ஒரு முறை சண்முகத்தின் முயற்சியால் கூட்டணி  தமிழகத்திலும் புதுவையில் மாறி  அமைந்தது . புதுவையை பிரதானமாக தில்லி எடுத்துக்கொள்ளாததற்கு இரண்டு முக்கிய காரணம், ஒன்று இது ஒரே ஒரு பாராளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினரை தரக்கூடியது என்பது தான் ஒரே காரணம் அவர்களின் ஆர்வக்குறைவிற்கு . பெரும்பாலும் கட்சி ரீதியான சிக்கல்களை மரைக்காயர் , எப்போவாது கையிலெடுப்பர் . மற்றபடி சண்முகம் அளவிலேயே அவை பெரும்பாலும் சரி செய்யப்பட்டுவிடும் . காமராஜர் அளவிற்கு அவரை சொல்லமுடியாது போனாலும் இதுவும் ஏறக்குறைய அப்படியே . மாநில அளவிலான சிக்கல்களை காமராஜர் இருந்தவரை அவரே தீர்த்துவைப்பதினால் தில்லியின் தலையீடு இருப்பதில்லை , அவர் மறைவிற்கு பிறகு தமிழக காங்கிரஸ் வீணாகிப்போனதற்கு காரணம் தில்லியின் நேரடியான தலையீடுகளே . சண்முகத்திற்கு பிறகு அதுவே இன்று புதுவையிலும் துவங்கியுள்ளது .


நாராயணசாமி ,சண்முகத்தால் அடையாளம் காட்டப்பட்டு 1991 வரையிலும் சண்முகத்தின் போர்வாளென தில்லியில் செயல்பட்டுவந்தார் . மரைக்காயர் மத்திய இணை அமைச்சர் பதவி இழந்தது 1992 களின் மத்தியில் , இந்த காலக்கட்டத்தில் இருவர்க்கும் கருத்து முரண்பாடுகள் தோன்றியிருக்க வாய்ப்புகள் அதிகம் . தில்லி அரசியலை சண்முகம் சார்பாக நாராயணசாமி பார்த்துக்கொண்டது அவருக்கு பலம் சேர்ப்பதானது .சண்முகம் அந்த காலக்கட்டத்தில் மரைக்காயரை வீழ்த்தியபிறகு பெரிய எதிரிகள் என யாரும் மாநில அளவில் வளர்ந்து வரவில்லை தில்லியில் நாராயணசாமி வளர்ந்துகொண்டிருந்தார் . சண்முகத்தால் அதை ஒன்றும் செய்யமுபையவில்லை . வாழப்பாடி ராமமூர்த்தியை வைத்து இணையான அரசியலை நடத்திக்கொள்வதும் , நாராயணசாமியை அதன் தொடர்ச்சியை கவனிக்கும் படியான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார் இது நாராயணசாமியின் தில்லி வளர்ச்சியையும் பாதித்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக