ஶ்ரீ:
*முரண்களின் கருதுகோள் *
இயக்க பின்புலம் - 35
அரசியல் களம் - 33
பாலனுக்கு அனைத்துப்பக்கத்திலிருந்து நெருக்கடி , விழைந்த கதவுகள் அடைபட்டுவிட்டன , காலத்தில் நேரும் மாற்றங்களுக்கு ஏற்ப்ப காத்திருக்கும் சமயம் இயக்கத்தின் பக்கம் அவரின் கவனம் திரும்பியது , அநேகமாக வைத்திலிங்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுவிட்டிட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். காரணம் இந்தக்காலகட்டதில் நிகழ்ந்த பல சர்ச்சைக்குரிய அவரின் பல நடவடிக்கைகளுக்கு பின்னால் கிருஷ்ணமூரத்தியின் பிம்பம் தெரிந்தது , ஆனால் அதற்கு பின்னல் அரசங்கத்தின் நிழல் இருந்திருக்கலாம் அல்லது இல்லாதுமிருக்கலாம் . இதில் வினோதம் பாலன் அதை யாருடனும் ஒப்புநோக்கு முடியாதிருந்தது .
இந்தக்காலகட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி தன் தரப்பு ஆட்களை திட்டமிட்டு இளைஞர் காங்கிரசின் இயக்க கமிட்டிக்குள் கொண்டுவர முயற்ச்சித்தபடி இருந்தார் . பாலனுக்கும் அவரது விருப்பத்திற்கு உடன்படவேண்டிய கட்டாயம். அவர் உள்நுழைக்க முயறசித்தவர்களில் பிரதானம் முருகேசன் சுரேஷ் நந்தா , வக்கீல் பாலமுருகன் . பாலமுருகன் கிருஷ்ணமூர்த்தியின் மைத்துனர் , மிக ஆபத்தான நபர்.
இளைஞர் காங்கிரஸ் இயக்கம் கைமாறிபோவதை தடுக்கும் திறன் யாருக்கும் இல்லை என்பது நிதர்சனம். சுப்பாராயன் கூட தேர்தல் தோல்விக்கு பிறகு சற்று அடக்கி வாசிக்க துவங்கியது பாலனுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததைப்போலானது . யார் என்ன கேட்டாலும் எரிந்து விழத்துவங்கினார் . தனக்கான வாய்ப்புகள் அனைத்துமே தூர்ந்துப்போன நிலையில் கையில் இருக்கும் இயக்கத்தை வைத்துத்தான் ஏதாவது வித்தை காட்டியாக வேண்டிய நிர்பந்தம் , அதையும் விலை பேசி விட்டாரா என்கிற சந்தேகம் அனைவரின் மனதில் ஓயாது அலைஅடித்தபடி இருந்தது .
தலைமைப்பண்பு . ஆரசியல் எனக்கு கற்றுக்கொடுத்த மிகச் சிறந்த பாடமென்றால் நான் இதைத்தான் எப்போதும் நினைவு கூர்வேன் . தலைமை பண்பு என்பது அலாதியானது அதில் வென்றவர் என எவருமிலர் . இன்று ஆகப்பெரும் தலைவர்கள் அனைவரும் அதை சிரத்தையாக முயற்சித்தவர்களே . காரணம் காலம் தன் முழுமையையும் ஒருவர் தான் அடைந்த வெற்றியில் நீடித்திருக்க வைக்காது . வாய்ப்புள்ளவரை அதை அனுபவிப்பவர் அருளப்பட்டவர்கள் . அடைந்ததை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கும்போது ஸ்வபாவத்தை மீறி அரசியல் கோட்பாடு என பிறிதொருவர் சொல்வதையோ அல்லது , பதவியில் நீடிக்க அது எதை வேண்டுமானாலும் செய்யும் முறைமைகளையும் , மீறல்களையும் ஆற்ற நெறியின் கீழ் வழிசெய்யப்பட்டிருக்கிறது என எதையும் செய்யும் போதுதான் காலம் அவர்களை தாட்சண்யமாற்று வெட்டி வீசுகிறது .
இதில் சண்முகம் மற்றும் பாலனை பற்றிய என் எண்ணம் கலவையானது . இருவரையும் துலாவின் இருதட்டுகளில் வைப்பதை காலம் ஒப்பாது . ஆனால் ஒரு தெளிவிற்க்காக இப்படி சொல்ல முற்படுகிறேன் . பாலன் தலைமைபண்பு பற்றிய எந்த குறியிடுமற்று , சந்தர்ப்பவசத்தால் தலைமை பதவிக்கு வந்தவர் ,அவரின் போதாமையே என் போன்றவர்களை அவரை நோக்கி இழுத்தது . அவரது தலைமையில் நான் கண்ட வெற்றிடம் அதை நிரப்புவதன் மூலமாக நமக்கான இலக்குகள் துலங்கிவரும் என்பதாலே நான் கண்ணனை விட்டு பாலனை தேர்ந்தெடுத்தது .
அனைவரையும் கலந்தாலோசித்த போதும் அவருக்கு தன் தலைமையின் மீது நம்பிக்கை இருந்தது . ஆனால் பிற்பாடு அவரிடம் இருந்தது ஒரு கூட்டம் அதற்கு பாலனை தவிர வேறு போக்கிடமில்லை , அதன் தலைவராக அவர் வந்தபோது கண்ணனின் ஆளுமை விலகிய காலம் அதன் மிச்சம் அதில் எஞ்சி இருந்தது . பாலன் தலைமையில் கமிட்டி அமைந்த போது காங்கிரஸின் அனைத்து தலைவர்களுடைய ஆதரவாளர்களால் அந்த நிரம்பியிருந்தது . முக்கியமாக கண்ணன் மற்றும் சண்முகம் தரப்பினர்.
நான் உள்நுழையும் போது கண்ணன் மற்றும் சண்முகத்தின் ஆதரவாளர்கள் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி கூட்டங்களில் பங்கெடுப்பதில்லை . ஏன் அவர்கள் பங்கெடுப்பதில்லை என்பதன் காரணம் எனக்கு முதலில் புரியவில்லை . என்னளவில் நான் புரிந்துகொண்டது அவர்கள் கமிட்டி கூடுகைகளை புறக்கணிக்கிறார்கள் என்று .
பாலன் பதவிக்கு வந்த புதிதில் ஒரு சில கூடுகைகள் உஷ்ணமாக நடந்திருக்கிறது . அதை எதிரகொள்ள தை விடுத்து தவிற்க துவங்கினார் . எண்ணிக்கை பலமும் எதிரபெழாத கூடுகைகளுமே அவர்களின் வழிமுறைகளாக இருந்தான.
ஒரு அமைப்பின் தலைவர் ஒரு குழுவின் தலைவரைப்போல செயல் துவங்கியிருந்தார் , எதிலும் ஒற்றைபடையான எண்ணம் , செயல்பாடுகள் , கூட்டுத்தலைமைக்கான திறமையை அவர் வளர்த்துக்கொள்ளவில்லை , கண்ணனுக்கு எதிரான போரில் சந்தர்ப்பவசத்தால் வென்ற பிறகு அனைவரையும் அரவணைக்கும் போக்கை விடுத்து ஒற்றைப்படை கருத்துடன் அவர்களை ஓரங்கட்டுவது உதாசீனப்படுத்துவது போன்ற அணுகுமுறை அவர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவைத்தது .
அரசியலில் முழு மடைமை எனில் இதுதான் . முற்றிலும் ஜனயாக பண்பற்ற செயல் . பலவித கருத்து மாறுபாடுகள் வெவ்வேறு கருது நிலைகள் பல்வேறு தனிஆளுமைகளின் மோதலினால் விளையும் முரணியக்கமே எந்த ஒரு அமைப்பையும் உயிர்ப்புடன் வைத்திருப்பது . சொல்வது எளிது கையாள்வது சுலபமல்ல அமைப்பை அவ்வாறு செயல்பவைப்பது .
எதிர் கருத்தை எதிரிடையாக நோக்காமல் அவற்றை வெளிப்படுத்த அனுமதித்தும், ஏற்றுக்கொள்ளத்தக்கதை நோக்கிய மனத்திறப்பும் எதிரிகளையும் நிலைகுலையவைப்பவை . அர்த்தமற்ற வெறும் கூச்சலுக்கும் ஆழமான கருத்து வெளிப்பாட்டிருக்கும் நம்முடைய எதிர்வினை வித்தியாசப்படுத்தி காண்பிக்க தவறினால் முதலில் மதிப்பிழந்து போவது தலைமையே . மாற்றுங்கருத்துகளின் குரல்வளையை நெருக்கி எதையும் ஒற்றைப்படையாக்கினாலே அங்கே இயக்கம் மக்கிக்கொண்டிருக்கிறது என்றே அர்த்தம். தன்னை கலைப்தும் சிதைப்பதும்மான கருதுகோள்களின் மத்தியில் வாழத்தெரியாதவன் கற்றுக்கொள்ள ஒன்றில்லை .நான, உள்நுழைந்த தருணம் அது மக்கிக்கொண்டிருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக