ஶ்ரீ:
*மாயச்சரடுகளால் ஒருங்குதல் *
இயக்க பின்புலம் - 46
அரசியல் களம் - 34
தயக்கம் , கூச்சமும் அச்சமுமாக தனித்திருக்க பின் அதுவே என் சுபாவமாக மாறியது . எதையும் எனக்குள் நிதானமாக தர்கித்து நானே மீறமுடியாத அழுத்தமான காரணங்களை அதன் மேல் கற்பித்துக்கொண்டு அதனுள் ஆழ்ந்து நிதானமாக ஒரு முடிவிற்கு வந்துவிட்டபின் ,ஒருபோதும் அதை மறுபரிசீலனை செய்யவதில்லை , காரணங்களெனப்படுபவைகள் ஏதாவது ஒரு சம்பவத்தை , ஒரு தர்க்க நியாயத்தை அல்லது ஒரு கால சூழ்நிலையை அடிப்படையாக கொண்டிருக்கும் . அத்தனைக்கும் மேலே ஊழ் என ஒன்று நிலைத்து நின்றிருக்கும் ,அதில் எனக்கு அலாதியான நம்பிக்கை இருந்துவந்திருக்கிறது .
ஒவ்வொரு தற்செயல் நிகழ்வுகளுக்கு பின்னல் ஒரு அலகு கிளைநீர்பெருக்கென ஊழின் பெரும்திட்டமெனும் பெருந்தியில் இணைவதைப் பார்த்துவருகிறேன் . சில குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு புரிந்துபோகிறது , சிலது புரிய நாட்பட்டுப்போகிறது . சில புரியாமலேயே போய்விடலாம் . ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு காரணத்தை பார்க்கமுடிகிறது. இந்த பதிவே கூட ஒரு காரணத்திற்கா நான் எழுதிக்கொண்டிருக்கலாம்
என்னால் தலைமை பொறுப்பிற்கு வரமுடியாததற்கு கமலக்கண்ணன் சொன்ன காரணம் என்னை மிகச்சரியாக நிகழ்ந்த ஒரு வெடிப்பு, என இப்போது உணர்கிறேன் . ஆனால் அது ஒரு தொடக்கம் மட்டுமே , அதைவிட பெரும் சிக்கலாக என் அரசியல் பயணத்தை முற்றிலுமாக திசை மாறுவதற்கு இது முக்கிய விசையென உருவாகிவந்திருப்பதை நான் அப்பொது உணர்ந்திருக்கவில்லை.
நான் பாலனின் இந்த திட்டத்திற்கு உடன்படுவது என முடிவெடுத்தேன் , ஆனால் சில நிபந்தனைகள் முன்னிட்டுக்கொண்டு , அதை பற்றிய தீவிர எண்ணத்தில் ஆழ்ந்து போனேன் .
இது என்மேல் இறங்காது ஒழியாது . இதிலிருந்து விலகி எத்தனை யோஜனை தூரம் ஓடினாலும், இது என்னை நழுவவிடாது . இதன் இரை நான் . ஒருநாள் அதற்கு என்னை உண்ணக்கொடுத்தேயாக வேண்டும் . நாளையைப் பற்றியோ , என்னை யார் என்னவென்று நினைக்கபோகிறார்கள் எனபதை பற்றிய சிந்தனை இனி அர்த்தமற்றது .
நீ விரும்பிய திசைகளிலெல்லாம் பயணித்து திளைத்தாய். ஒருநாள் அது இப்படியொரு விலையை கேட்கும் என நீ எண்ணக்கூடவில்லை . உன்னை சமாதானப்படுத்திக்கொள்ள கமலக்கண்ணன் உன்னை சொன்ன சொல்லை கடவு சீட்டென வைத்து உன்னை கடக்கப்பார்கிறாய் . அதற்கான நியாயம் என்று ஏதாவது சொல்லு. இதுதான் நான் திரும்ப திரும்ப எனக்குள் கேட்டபடி இருந்தேன் . கமலக்கண்ணனிடம் உனக்குள்ள விரோதத்தை ஒழி . எப்பாடுபட்டாகிலும் அவனுடனான உன் நட்பை சரிசெய் . விளைவு ஏதாகிலும் சந்திக்கலாம் .
சரி இது ஒரு மாற்றுஏற்பாடு என்கிற வகையில் சம்மதிக்கிறேன் . எனக்கும் கமலக்கண்ணனுக்கான உறவை எந்தவகையிலும் பாதிக்கும் நிகழ்வுகள் நடக்கக்கூடாது . எங்களிருவருக்கும் இடையே எக்காரணத்தை பொருட்டும் அரசியலை நுழைக்க கூடாது , என்னை என் அனுமதி இல்லாமல் என் பெயரை பிறரின் செயலிழைப்பிற்கு பயன்படுத்திக்க்கூடாது . என்னை யாருடனும் மோதுவிடுவதற்கான சூழலை உருவாக்கக் கூடாது . இப்படி எத்தனை நிபந்தனை போட்டாலும் அது கமலக்கண்ணனுடனான உறவு மட்டுமல்ல யாருடைய மனக்குமுறலுக்கும் நான் ஆளாகிவிரும்பவில்லை என்பதை மையமாகக் கொண்டிருந்தது . ஏதோ ஒரு வேகத்தில் ஏன் இப்படி என்னை சுற்றி ஏன் அப்படி ஒரு அரணமைத்தேன் என அப்போது எனக்கு தெரியாது . என நிபந்தனைகள் அனைத்தும் மீறப்பட்டு அந்த அரண்களே என்னை முற்றிலுமாக கைவிட்டன.
அன்று மாலை 6:00 மணிக்கு என்னை மறுபடியும் சந்திக்கவந்த குழு அனைத்தையும் பாலனிடம் பேசிவிட்டு வந்தபோது ,அடுத்தது என்ன என்பதே ஆகப்பெரும் கேள்வி .அன்று எனக்கு சொல்லப்பட்டது . மாற்று ஏற்பாடகிலும் வைத்திலிங்கத்திற்கு ஏதோ மனத்தடை உள்ளது .கிருஷ்ணமூர்த்தி அவரிடம் சொல்வதை கடந்து செல்ல நான் வைத்திலிங்கம் ஆதரவையும் பெறவேண்டும் என . எனக்கு இதற்கான அர்த்தம் புரிபடவில்லை . இரண்டு வகையில் நான் அத்துடன் முரண்பட்டேன் . தீர்மானமே போதுமானது என்கிறபோது . இப்பொது நான் முதல்வரை பார்த்து அவரது ஆதரவை பெற சொல்வது எனக்கு விளங்கவில்லையே . அவர் நமக்கானவர்தானே , பாலன் சொன்னாலே போதுமே. என்னை எதற்கு இதற்குள் இழுக்க வேண்டும் . பல முறை விவாதிக்கப்பட்டு இந்தக் கேள்வி மட்டும் எதனுடனும் கலக்காமல் நின்றபடி இருந்தது . அப்படியானால் . தலைவர் மாற்றம் தேவையில்லை . தவறுமேயானால் என்னை முன்மொழியட்டும் என்றேன் .அதற்கும் எதிர்ப்பு .
அடுத்ததலைமைக்கு ஒரேபெயரை பரிந்துரைப்பது முறையில்லை குறைந்தது மூன்று பெயர்களாவது அதில் இடம்பெறவேண்டும் என்றதும் , ஆம் , நானிந்த முறைமையை அறிவேன் .எனவே மூன்று பேர் கொண்ட பட்டியல் இணைக்கப்படவேண்டும் என்றேன் . அவர்கள் இருவர் பெயர் உள்ளது , நீ மற்றும் முருகேசன் என்று . நான் கமலக்கண்ணனின் பெயரை சேர்க்கசொன்னேன் . ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை அவர்கள் அனைவருமே கமலக்கண்ணனுக்கு எதிரானவர்கள் , நேற்று வந்த முருகேசன் பெயர் ஏறும்போது கமலக்கணனை தவிர்ப்பது எனக்கு சரியெனப்படவில்லை எனக்கடுத்த இடத்தில் கமலக்கண்ணனின் பெயரை சேர்த்த போது அனைத்தும் ஒரு முடிவிற்கு வந்தது . அங்கிருந்து பாலனை அவரின் வீட்டில் சென்று சந்திக்கும்போது இரவு 10:30 மணியை தாண்டி விட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக