https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 25 ஜூலை, 2017

அடையாளமாதல் - 138 *சூழ்தலின் மத்தியில் *

ஶ்ரீ:





பதிவு : 138 / 211: தேதி :- 25 ஜூலை 2017

*சூழ்தலின் மத்தியில்  *


இயக்க பின்புலம் - 64
அரசியல் களம் - 39






கண்ணனின் மன்றாட்டையும் , சண்முகத்தின்விழவை  தான் புறக்கணிக்க முடிவுஎன்கிற அளவிடமுடியாத எதிப்பையும்  மீறி மூப்பனார் புதுவைக்கு வருவது உறுதியாகிவிட்டது . நீண்ட காலத்திற்குப் பிறகு நிலைமை தம்கைமீறி செல்வதாக சண்முகம் உணர்ந்த தருணங்கள் அவை , அரசியலில் சில விசித்திர நிலைப்பாடுகள் உண்டு , தன் திறம் பலம் கொண்டு எவர் எழுந்தாலும் , அவரின் பின் பிறிதொரு தலைவரென  இருப்பதையே அனைவரும் விரும்புவர் அதன் பொருட்டே கட்டுப்படுவர்  . தன் தலைமைக்கு ஒரு தலைமை என்பது அவர்களின் செல்வாக்கு என்றே அது பார்க்கப்படுகிறது  . அந்த இருவரின் நெருக்கம் போன்றவை விழாவுக்காலங்கலில்  பெரிதும் ரசிக்கப்படுகின்றது , எவர்க்கும் அரசியலில் ஒரு "பெரியண்ணன்" பொய்யாகவாவது  தேவைப்படுகிறார் , தன்னை சுற்றி நிற்பவர்களை தக்க வைக்க . தான் ஒன்றும் செய்வதற்கில்லை என , மூப்பனாரின் இந்த முடிவை , ஒன்றுமில்லாத செய்ய ஒரே வழி அவரும் மூப்பனாருடன் மேடையில் தோன்றுவதுதான் .


ஆனால் மூப்பனார் சண்முகத்திற்கு "பெரியண்ணன்" அல்ல , தவிரவும்  அவர் தன்னை அப்படி வெளிப்படுத்த வேண்டிய நிர்பந்தமில்லை என்பதை தனது புறக்கணிப்பின் மூலமாக வெளிப்படுத்த நினைத்தார் . ஆனால் மூப்பனார் தான் வரும்போது அவருடன் சேர்ந்தே மேடையில் தோன்றுவார் என்றெல்லாம் கூட செய்திகள் பரவியபடி இருந்தது. கண்ணனும் அதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வந்தது , அது அவரின் அரசியல் பிழை என்கிறபோதும் . புதுவையின் இதுவரையிலான அரசியல் சமன்பாட்டை முற்றிலுமாக மாற்றி அமைக்க இது வழி என நினைத்தே இதை ஆற்றினேன்  . நெடுங்கால நிலைசக்திகளை அறைகூவும் புதிய அரசியல் முனையாக வைத்திலிங்கம் உருவாவதை தவிர்க்க இயலாததாக்கி உள்ளது


மூப்பனார் வருகின்றார் என்பது என்பது பெரும் அலையைக் கிளப்பிவிட வல்லது . நான் முன்பே சொன்னது போல அரசியல் எதார்த்தம் கருதி தன்னுடைய இடத்திலிருந்து இறங்கிவர சம்மதித்திருப்பது ,ஆகப்பெரும் முடிவு அதன் பின்னணியில் "நான்" மட்டுமே இருக்கிறேன் என்பது என்னால் நம்பமுடியாதிருந்தது . வைத்திலிங்கத்திடம் இதைப்பற்றி பேசியாக வேண்டும் . இந்த ஆவலை மூப்பனார் வந்து செல்லும் அந்த கணம்வரை பொறுத்தாக வேண்டும் . பாலனிடம் சொல்வதற்கு இது ஏற்ற சமயமில்லை . பிறிதொரு சந்தர்ப்பத்தில் இதை பேசலாம் . எப்படியும் சேகர் சுப்பாராயனிடம் நான் சொன்ன கருத்துக்கள், சின்னவர் பேசியது , மூப்பனார் வருகிறேன் என்று சொன்னது, இன்னேரம் சொல்பட்டிருக்கும். அவரும் அதன் பிறகு நடக்கவிருப்பது போன்றவைகளை  தொகைகளாக அவரால் தன்னுள் பெருகியபடி இருப்பார் 


விழாவிற்கு இரண்டு நாள் இருக்கையில் பாலன் என்னிடம், இன்று கிருஷ்ணமூர்த்தியை சந்திக்க வேண்டும் நீ வா என்றார் . இதற்கு எதற்கு நான் . இதைப்போல வேண்டாத விஷயத்தில் என்னை சிக்கவைப்பதே வேலையாகிவிட்டது . கடந்த ஒரு வாரமாக இரவு பகலென வேலை ஓயவில்லை. நான் மூப்பனாரை சந்தித்தது கசியத்துவங்கியது. அலையடிப்பதைப்போல ஒருவித அனலை வேண்டியவர் வேண்டாதவர் என்கிற பாகுபாடு இல்லாது  அனைவரின்  மனதில் தோற்றுவைத்தபடி இருக்கிறது  . இது இப்படித்தான் எழும் என முன்பே அவதானித்திருந்தாலும், அது எழும்போது உருவாகவும் விசையைக்கொண்டே அடுத்து நிகழ இருப்பதை நிழலென அது வெளிக்காட்டிவிடும் . நான் இது இவ்வளவு பெரிய பின்விளைவை உருவாக்கும் என கணிக்கவில்லை . யார் என்னிடம் சிரித்து பேசினாலும் ஒரு கட்டத்தில் அந்த நச்சுப்பல் எழுவதையும் ,கண்கள் மாறுபடுவதையும் அவர்களின் அகம் பற்றி எரிவதை உணரும்தோறும் சில்லிட்ட  வாலின் கூர்மையால் தொடப்படுகிறேன் 


மூப்பனார் வரக்கூடும் என்பது பாலனே எதிர்பார்க்காதது என்பதுதான் இன்னும் வினோதம் , தான் முன்னின்று இதை செய்திருக்கலாம் என்கிற குறுக்கு யோசனை பேசப்பட்டதாக கூட  காதில் விழத்துவங்கியது . விழா நெருங்க நெருங்க இது கணக்கில்லா தலைகளுடன் தினம் வளந்தபடி இருந்தது . இது என்ன ஒரு மூடத்தனம் , மூப்பனாரின் புதுவைக்கு வரும் முடிவே ஒரு தற்செயலென எழுந்தது . அதுவரை அவரது சித்தத்திலேயே புதுவை இல்லை. நான் சந்தித்த பிறகு ஏதோ எழுந்து வந்திருக்க வேண்டும் . அரசியலில் வளர்ச்சியடைவது இப்படிப்பட்ட தருணங்களில்தான்  , அரசியலில் ஒரு எழுதப்படாத விதி ஒன்றுள்ளது , எந்த காரியத்தையும் நீயே செய் அல்லது செய்பவனுக்கு பக்கத்தில் எப்போதுமிரு என்பதே. எல்லாவற்றையும் விழாவிற்கு பிறகு, பிறகு எனத் தள்ளிப்போட்ட போதுதான். பாலன் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு செல்லலாம் என்றார். மூப்பனாரை புதுவைக்கு அழைத்துவந்த என் முயற்சிக்கு அங்கீகாரம்  பாலனால் வாயால் கடைசீவரை உச்சரிக்கபடவேயில்லை


அந்த உப்பளம் விடுதி நிகழ்விற்கு பிறகு நான் மரைக்காயர்கள் அணியை தவிர்த்து வந்தேன் . இன்று அவ்விதம் செய்ய இயலாது , பாலன் என் வீட்டிற்கு வந்துவிட்டதால் நானும் அவருடன் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு செல்ல வேண்டியதானது , அவர் வீட்டில் புராதன சாய்வு நாற்காலி . கைப்பலகையின் நீட்சி இழுத்து விட்டால் காலை நீட்டி படுக்க வசதியாக இருக்கும். அதில்தான் அவர் காலை நீட்டி படுத்திருந்தார் சுற்றி அவரது ஆதவாளர்கள் மொய்த்துக் கொண்டிருந்தனர் .பாலனை கண்டதும்வா பாலாஎன்றார் எழுந்திருக்காமல் . பாலன் சகஜமாய் சென்று பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டார். நான் உள்நுழைவதை பார்த்தவர்வா அரிஎன்று நீட்டியிருந்த காலை தொங்கப்போட்டுக்கொண்டார் , அந்தளவு மரியாதையே எனக்கு போதுமானது என நினைத்துக்கொண்டு பாலனுக்கு பக்கத்தில் அமர்ந்தேன்  . பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பற்றி பாலன் விரிவாக அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் .   


வழக்கம்போல ஒருங்கிணைப்பு என் தலையில் .இத்தால்தான் நான் இன்று சந்தியில் நிற்கிறேன் , இதில் பலருடைய வயிறெரிச்சலை கொட்டிக்கொள்ள வேண்டி வரும் . மேடை நிர்வாகம் மிக ஜாக்ரதையாக என்னிடமிருந்து எடுக்கப்பட்டிருந்தது . இந்த ஏற்பாட்டை யார் யார் செய்திருப்பார்கள் அதற்கு எது காரணம், அதற்கு முறித்திட்டம், என யோசிக்கும் மனநிலையிலையில் நான் இல்லை. எப்படியோ ஒழிந்து போகட்டும் , மூப்பனாரின் வருகையில் , மற்றும் அதனை ஒட்டி நிகழ இருப்பதும் என் சிந்தனையை வியாப்பித்திருந்தது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக