https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 30 ஜூலை, 2017

அடையாளமாதல் - 143 * ஊழின் நாற்கலம் *

ஶ்ரீ:




பதிவு : 143 /  217 :   தேதி :- 30 ஜூலை 2017

* ஊழின் நாற்கலம் *

இயக்க பின்புலம் - 68
அரசியல் களம் - 40




நான்பூ ங்காவனத்திடம் பாலன் இப்படி சொன்னதாக கனகராஜ் சேகர் சொன்னான் என்றேன். அவன் சொல்லும் செய்திகள் பிழையுறுவதில்லை , ஆனால் அதை பிறிதொருமுறை வேரொரு கோணத்தில்  சொல்ல முயற்சிக்கிறேன் என்றதும் பூங்காவனம் பாலனை சந்திக்க கிளாம்பி சென்றார்  . அவர் கிளம்பி சென்றது எனக்கு விடுதலை உணர்வை கொடுத்தது . இன்னும் சில நாட்களில் இதற்கு ஒரு முடிவு வந்துவிடும் . எல்லாம் சரியாக சென்றால் மூப்பனார் விஷயம் செயல்படுத்தும் வழிமுறைகள் மேலும் தெளிவடையும் .என்னுடனான உறவு சரிசெய்யப்பட்டால்  நான் பாலனிடம் அதுபற்றி பேச பேசும் வாய்ப்பு உருவாகும்

என் அலுவலகத்திலிருந்து மத்திய உணவிற்கு கிளம்பியதும் , வழியிலேயே பூங்காவனத்தை பார்த்தேன் ,உற்சாகத்துடன் திரும்பவும்  வந்து அமர்ந்து கொண்டேன் , பூங்காவனத்தின் நடையில் தெரிந்த தளர்வு என்னை துணுக்குற செய்தது . செய்தியின் சாரத்தை என் ஆழ்மனம் முன்னமே  அறிந்துவிட்டிருக்க வேண்டும் .  சோர்வும் பதட்டமும் சேர்ந்துகொண்டாலும் அதை வெளிக்காட்டாமல்  நேரடியாக அவரிடம்என்ன நடந்ததுஎன்றதற்கு மிக சுருக்கமாக , “அவன் கமலக்கண்ணனிடம் என்ன சொன்னானோ  அதையே என்னிடமும் சொல்லுகிறான்என்றார் . எனக்கு அது உடனடியாக எந்த உணர்வையும் தூண்டவில்லை. எவ்வித உணர்ச்சியும் அற்ற  நிலையிலேயே இருந்தேன் .மேலும் அவர் இதில் தனக்கு ஒரு தெளிவு வேண்டும் என்பதால் பாலனை வரச்சொல்லி இருப்பதாகவும், இன்றே அதை பேசி முடித்தாக வேண்டும் என்றார் .

அவர் சொன்னதும் , எனக்கு முதலில் இதை கொஞ்ச காலம்தாழ்த்தி செய்திருக்கலாம் என தோன்றி மறைந்தாலும் இதை மேற்கொண்டு வளர்க்க விழையாமல் ஒரு முடிவிற்கு வருவது உகந்ததே என தோன்றியது .பூங்காவனம் என் நன்மையில் நாட்டமுள்ளவர் . அவரது சொல்லை பாலனால் தவிர்க்க இயலாது . இதுவே அவரின் பலம் . எங்கு சந்திப்பது என்றதும் நாங்கள் வழமையாக கூடும் இடங்களில் ஒன்று அரிஸ்டோ ஹோட்டல் , அங்கு சந்திப்பதாக முடிவானது , அரைமணி நேரத்தில் பாலன் என் அலுவலகத்திற்கு வந்ததும் அனைவரும் அரிஸ்டோ ஹோட்டலுக்கு புறப்பட்டோம் . அங்கு எளிய உணவினை சொல்லிவிட்டு காத்திருந்தேன். அந்த உணவு விடுதி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது . சுற்றிலும் தட்டும் கரண்டியுமாக மெல்லிய ஓசையில். காற்றில் உணவுகளின் கலவை மனம் எழுந்திருக்க , பசியுள்ளவர்களுக்கு காத்திருக்கும் தன்மையை அது நிச்சயம் தராது .

யார் முதலில் துவங்குவது என்கிறவகையில் நீண்ட மௌனம் கலையாது அழுத்தமாக படிந்திருந்தது . நான் அவரிடம் பேச விழையாதது , சமாதான சொற்கள் என எதுவும் எழாது அனைத்தும் முடிவிற்கு வரவும் தருணமாக அவரவர் தங்களின் இருப்பில் அசையாது அமைந்திருந்தோம் , பொதுவாக  பாலனின் பேச்சு துவங்கிய சில நிமிடம்,மாநில அரசியல் அமைச்சர்களின் பாராமுகம் , போன்ற தன் சிக்கலை பொதுவில் வைத்துக்கொண்டே இருந்தார். நான் ஏதும் பேசுவதாக இல்லை . பாலனின் செயற்கை நிலை மனதிற்கு படும்முன்னர் அது ஒரு மெல்லிய மனம் போல நாசிக்கு தெரிந்தது, ஒரு திடுக்கிடல் போல , அவர் அகம் அதை உணர்ந்திருக்க வேண்டும்


பாலன் ஒரு  நுண்கூர் மதியாளன்,அதில் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கும் , எதார்த்தமாக தனுக்கே முரணை கொடுக்கும் விஷயத்தைக்கூட தயங்காது பேசுவது அவரின் சுபாவம் . அது ஒரு தனி அழகுதான் தலைமைக்கு . விந்தையான சில கணிப்புகளை நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் சொல்லுவது பலமுறை நிகழ்ந்துள்ளது , ஒரு விளையாட்டென . இனிமையான நாட்கள் அவை . ஒருமுறை அரசியல் விஷயமாக நானும் பாலனும் காரைக்கால் சென்றபோது வழியில் திருக்கடையூர் சென்றிந்தோம் . அவர் ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் , கீதையை பற்றி மணிக்கணக்கில் விவாதித்துள்ளோம் . சைவ நெறியில் ஈடுபாடுள்ளவர் , நான் வைஷ்ணவத்தில் தீவிரமாக இருந்த   காலமது ,   பிற தேவதாந்திர கோவில்களுக்கு செல்வதில்லைநான் வரவில்லை என்று  சொன்னால்   இன்று நானே பேசுபொருளாகி ஏதாவது விதண்டாவாதத்திற்கு வழிவரும், என நினைத்து ஒன்றும் சொல்லாது உடன் சென்றேன் . அம்பாள் சன்னதி வந்ததும் , ஏதோ ஒரு சிறிய நெகிழ்வு ஏற்பட்டு விம்மிவிட்டேன் , “மனதில் என்ன மாறூபாடிருந்தாலும் தாய் என்றும் எவர்க்கும் தாயேஎன தோன்றி ஈடுபாடுடன் சேவித்தேன் . எனக்கு முன்னாள் நின்றுகொண்டிருந்த பாலன் என்னைத் தாண்டி வெளியில் வந்ததும் , என்னை பார்த்துஉள்ளே தாயைப்பற்றித்தானே சிந்தித்தாய்ஏற்றதும் ஒரு ஆச்சர்ய அதிர்வை கொடுத்தது , “நான் ஆமாம்என்றேன்எப்படி சொன்னீர்கள்என்றதற்கு பதிலேதும் சொல்லாது மெளனமாக சிரித்தபோது சென்றுவிட்டார்


மனம் சலனமற்று இருக்கும் தருணங்களில் இது சாத்தியமே , இதுதான் பாலனின் பலமும்  சுபாவமும்  , இன்று அவர் உள்ள நிலை அவருக்கு பொருந்திவரவில்லை .ஏன் இதை சொன்னேன் எனில், முகமூடி போல சில ஏற்காத புது குணங்களை ஏறிட்டுக்கொண்டிருக்கிறார் . “அதனுடன் அதுவாகஅவரால்  தொடர்ந்து தனது பாதையில் பயணிக்க இயலாது, என்கிற உண்மையை அவர் அவதானிப்பதாக இல்லை . சில பதவிகளுக்கு சில இயல்பில்லாததை ஏறிட்டுக்கொண்டு அது வெளுக்கும்போது , உள்ளதும் கழன்றுபோகும் . பாலனுக்கு இது கட்டுப்பபையாகப் போவதில்லை சிறிது நேர இந்த வீண் விளையாட்டிற்கு பிறகு அவரது இயற்கை குணம் வெளிவந்தது . நேரடியாக என்னிடம் "அரி நீ என்ன சிக்கல் என்று சொள்ளாதவரை நானே இது அது என யூகிக்கவியலாது சொல்ல வேண்டியதை நேரடியாக சொல்லு" என்றதும் . நான் கேட்க விழைந்ததை கேட்டேன் . “நான் முதல்வரிடம் சந்திக்க நேரம் கேட்டதாக உங்களிடம் யார் சொன்னதுஎன்றதும். அவர் எல்லாவற்றிற்கும் தயாராக வந்திருப்பதால் அவர் எந்த சித்தவிகாரரத்தையும் அடையாது ஒரு கற்சிலையின் ஒழுங்கில் முகத்தை வைத்துக்கொண்டு , சொன்னார் "முதல்வர்" என்று . நான் இதை முதல்வரை வைத்து நிருபிக்க முடியுமா என்றதும் , சிறிது நேரத்திற்கு மௌனத்திற்கு பிறகு "நான் கேட்டு சொல்கிறேன் எப்போது சந்திப்பதென்றுஎன சொன்னதும்  நான் இருக்கையிலிருந்து எழுந்த கொண்டேன் .அவர் அதை எதிர்பார்க்காததால் சிறிது துணுக்குற்று பின் அவரும் எழுந்து கொண்டார் . மூவரும் வெளியே வந்தோம் பூங்காவனம் அவருடன் வண்டியில் ஏறிக்கொண்டார் . எனக்கு ஏன் இவர் அவருடன் செல்கிறார் என் தெரியாததால் , நான் குழம்பிய சிந்தனையுடன் மெதுவாக நடந்து என் அலுவலகம் வந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்