https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 15 ஜூலை, 2017

அடையாளமாதல் - 128 *மனவழுத்தமிகு நிலைத் தடை *

ஶ்ரீ:

*மனவழுத்தமிகு  நிலைத் தடை  *


இயக்க பின்புலம் - 55
அரசியல் களம் - 37
வைத்திலிங்கம் தனக்கான லாபியை எதிர்பார்த்திருந்த போதுதான் , பாலனின்  சிக்கல் தலையெடுத்தது . இனி மரைக்காயர் , கண்ணன் அணியை நம்பி பயனில்லை என்கிற முடிவிற்கு வந்திருந்த  வைத்திலிங்கம் இப்பொது தனக்கான வீயூகங்களை சந்திக்க அதை நோக்கிய பயணத்தில் இருந்தார் . சரியான பாதையில் அடியெடுத்து வைக்க உகந்த  தருணங்கள் அவை . அவருக்கு பெரிய அரசியல் வெற்றியை அது முதலில்  வழங்கியது , பின்னர்  தொடர்புறுத்தலை சரியான படி பேண இயலாததே அவரின் தோல்விகளுக்கும் அது வழிவகுத்தது . தொட்புறுத்தலென்பது  முழுநேரம் செய்தாகவேண்டியது, சலிப்பைத்தரும்  சந்திப்புகளை தொடர்ந்து நிகழ்ததியபடி இருக்கு நிர்பந்திப்பது  , நாம் உற்சாகமாக இருக்கும் தருணங்களில் எளிதில் கையாலப்படுவது , மனசோர்வு காலங்களில் நிலையிழிதலை கொடுப்பது . அதை நம்மைத்  தேடி வருபவரிடம் காட்டத்தயங்காதவர்களை, அது  மோசமான திசைகளை நோக்கி பயணிக்கும் வழிகளை திறந்து வைக்கும் வல்லமை கொண்டது. இன்று வரை எனக்கு புறியாதது ஒன்று அதிகாரத்தில் இருக்கும் போது ஏன் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என . ,

அற்புதமான வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டார் . எடுத்த முயற்சிகளையும் திட்டங்களையும் பாதியில் கைவிட்டார் .அவை அனைத்தும் ஒருவித படிநிலை முறைமைகள் . அமைப்பு ரீதியாக அவற்றை செய்வது மிக சிடுக்குகள் மிகுந்ததே . சரியான வழிகளில் செய்யப்படுபவை , நீண்ட நாட்கள் பயன் தரத்தக்கவைகள் ,பல மாநிலங்களில்ஏன் தமிழக்தில் கூட வாழைப்பாடி தலைவராக இருந்தபோது செய்யப்பட்டவை இதை போன்ற சில படிநிலை முறைமைகள் , அவை மிக சிறப்பாக செயல்பட்டு , அவற்றில்  வெற்றிகரமாக செயல்முறைமைகள் ஏற்படுத்தப்பட்டு. அதன் மத்தியில் சக்திவாய்ந்தவராக அதர்ந்திருந்தார் . ஒரு சிலந்தி பின்னிய வலையில் அது அனைத்து இழைகளில் நிகழ்வதை உடன் அறிந்துகொள்வதைப்போல . அனைத்துவித நிகழ்கால கரவு வேலைகளையும் எதிர்கால புரிதல்களையும் . அகில இந்திய அரசியிலில் வெற்றி பெற்ற மூப்பனார் மாநில அளவில் பரிதாபகரமாக தோற்றுப்போனார்.

பிரதமரின் செல்லப்பிள்ளை போல இருந்த பிட்டாவிற்கும் மூப்பனாருக்குமிருந்த நெருக்கம் , வைத்திலிங்கத்தை சரியாக சொடிக்கியதுஅது தனக்காண  மிகச் சரியாக உருவாகக்கூடிய லாபியை அடையாளம் காட்டியிருக்கலாம் . அதுவரை சண்முகம் வாழப்பாடியை முன்னிறுத்தி நிகழ்த்திய நகர்வுகளுக்கு அகில இந்திய கட்சி எதிர்வினையை நிகழ்த்த மூப்பனார் மிக சிறந்த தேர்வு .

புதுவையில் இளைஞர் காங்கிரஸ் நடத்த இருக்கும் அந்த பொதுக்கூட்டத்திற்கு மூப்பனாரை அழைப்பது என் முடிவானது .அவரை அழைத்து வரும்  பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தனர் , அதற்கான வழிமுறைகளுடன் . மூப்பனார் புதுவை இளைஞர் காங்கிரஸ் பொதுக்கூட்டத்திற்கு வருவதென்பது நடக்கவே முடியாத ஒரு விஷயம். சண்முகத்தை மீறி அவரை அழைத்து வருவது வெறும் பகல் கனவு .அதற்கு பெரிய தடை மூன்று ஆளுமைகள்  சண்முகம் , கண்ணன், வக்கீல் முருகேசன் இந்த ஜாம்பவானகளை கடந்து அழைத்துவருவதென்பது , நடைபெற இயலாதது .ஆனால்  செய்தாகவேண்டிய நிர்ப்பந்தம்

சுப்பாராயன் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்தது . அவருடன் மில்லில் வேலை செய்யும் நண்பர் ஒருவருக்கு மூப்பனாரின் தம்பி ரங்கசாமி மூப்பனார் நல்ல பழக்கம் அவரை சந்திக்கலாம் என் முடிவெடுத்தோம்  . அவரது பேச்சை கருப்பையா மூப்பனார் மீறமாட்டார் என் எங்களுக்கு சொல்லப்பட்டது . அவர் கும்பகோணத்தில் இருக்கிறார்அவரை சந்திக்க நானும் சுப்பாராயனின் நண்பர் சந்திராசேகர் என்கிற சேகர் புறப்பட்டோம் . மிக மிக ரகசியமாக செய்யப்பட்ட ஏற்பாடு . பாலன் மற்ற விஷயங்களைக் கவனித்து வந்தார் . சுப்பராயன் சொன்னதை பாலன் நம்பவில்லை . நாங்கள் இது சம்பந்தமாக ஒருமுறை பேசியபோது பாலன் தன் எரிச்சலைதான் வெளிப்படுத்தினார். “கொக்குத்தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது போலஎன்கிற கிண்டல் பழம்சொல்லை சொன்னார் . எனக்கு இதில் மேற்கொண்டு ஈடுபடவேண்டுமா என்கிற சந்தேகமே எழுந்தது

ஆனால் சுப்பாராயன் விடுவதாக இல்லை . என்னை தொடர்ந்து  வற்புறுத்தினார். நான் பாலனுக்கு எண்ணமில்லையே என்றதற்கு , “அவன் கிடக்கிறான் அப்படிதான் சொல்லுவான் , நீ கிளம்பு  நான் பார்த்துக்கொள்கிறேன்என்று சொல்ல நானும் வேறு வழி இல்லாமையால் இதில் ஈடுபட முடிவெடுத்தேன்


பாலன் இயல்பாகவே அகம்பாவி ,தில்லி சென்று வந்ததிலிருந்து அவரின் போக்கில் ஏற்பட்டுள்ள நிறைய மாறுதல்களை கவனிக்க துவங்கினேன் . ஒருவித ஆனவப் போக்கும் , எவரையும் தூக்கியெறிந்து பேசுவதை , எவரிடமும் எரிந்து விழுவதையும் புது வழமையாகக் கொண்டார் . என்னிடமும் அது நிகழத்துவங்கியது . முதலில் எனக்கிது ஆச்சர்யத்தை கொடுத்தாலும் , அவருடைய போக்கு எல்லோரிடமும் இதே போன்ற அணுகுமுறைதான், முன்பும் கண்டத்துதான், என்றாலும். இப்போது அது வீரியம் பெற்றிருந்தது . விழா ஏற்பாடுகளில் உள்ள நெருக்கடி , அதனால் நிகழும் நிலையழிதலால் இப்படி நடந்து கொள்கிறாரா . இதை அவருக்கு ஒருநாள் புரியவைக்கவேண்டும் என்கிற கோபம் வந்தாலும் ,காரியம் நடந்தாக வேண்டும் என்கிற முனைப்பில் . அனைவரும் இரவுபகலாக ஓடிக்கொண்டிருந்தோம்.  


பாலனின் இந்த திடீர் மாற்றம் குறித்து சுப்பாராயனிடம் பலமுறை சொல்லியாகிவிட்டது ,ஒரு பயனுமில்லை. சுப்பராயனே பல முறை உதாசீனப்படுத்தப்பட்டதால் நாளுக்கு நாள் இது ஏறி வந்தபடி இருந்தது . நான் அவரை தனிமையில் சந்திப்பதை தவிர்த்தேன் . அவரின் நடவடிக்கைகள் மூத்த நிர்வாகிகளுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது . பலர் நிரை நிரையாய் என்னிடம் வந்து சொல்லி வருத்தப்படத்துவங்கினர் , எனகிருந்த மனவழுத்தத்தை இது மேலும் அதிக்கப்படுத்தியது .அவர் என்னிடமும் அப்படிதான் நடந்து கொள்கிறார் என்கிற உண்மையை அவர்களிடம் என்னால் சொல்லமுடியாது . அதை மறைத்து வந்தவர்களுக்கு ஆறுதல் வழங்குவது , பெரும் சலிப்பை தரத்துவங்கியது . ஏன் பாலன் மனநிலை பிறழ்ந்தது போல நடந்து கொள்கிறார் என யாருக்கும் தெரியவில்லை . அந்த இரண்டு மாதத்தில் அனைவரிடமும் பெரிய முரண்பாட்டை வளர்த்துவிட்டிருந்தார்

சுப்பாராயன் திரும்ப திரும்ப மன்றாடியதை அடுத்து என் வருத்தத்தை ஒதுக்கி செயலாற்ற துவங்கினேன். ஒரு பயணம் எனக்கும் ஒரு ஆறுதலை கொடுக்கும் என்பதால் , அதில் முழு மூச்சுடன் ஈடுபட்டேன். சேகரும் என்னிடம் அன்று மதியம் 3:00 மணிக்கு புறப்படலாம் என சொன்னார் . ரங்கசாமி மூப்பனார் கருப்பையா மூப்பனாரின் தம்பி , குடும்ப சொத்தை நிர்வகிப்பவர் மேலும் தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் .மூப்பனாருக்கு எல்லாமே இவர்தான் . இவர் சொல்லுவதை அவர் மீறமாட்டார் . முக்கிய கட்சி முடிவுகள் சின்னவர் எடுப்பதே.

அகில இந்திய தலைமையின் பொருட்டு பெரியவர் அடிக்கடி தில்லியில் செல்வதாலும்,  மாநில அரசியலில் நிலவும்  கட்சி சம்பந்தமான பஞ்சாயத்துகளுக்கு இவரை அனுப்பிவைத்து கட்சி வழமை . தமிழக கட்சி முக்கிய முடுவுகள் சின்னவர் சொல்வதே அவரின் குழு முடிவாக இருப்பது. இது எல்லாம் சேகர் என்னிடம் சொன்னது . பொதுவாக அரசியலில் ஒருவரை உயர்த்தி சொல்ல பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் சேகர் சொல்லியாகிவிட்டது , பெரும்பாலும் அவை உண்மையாக இருப்பதில்லை . அரசியலில் ஒருவருக்கு பிறிதொருவர் முடிவெடுப்பதென்பது நடைமுறை சாத்தியமே இல்லை . அவரவர் அரசியலில் அவர்கள் எடுக்கும் முடிவுகளே பிழையாகி விடும்போது . மற்றவராவது ..... நான் பதிலேதும் சொல்லாமல் பயணப்பட்டபடி இருந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக