https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 17 ஜூலை, 2017

அடையாளமாதல் - 129 *விஸ்தரிக்கும் நீர்மைத் தொடர்புகள் *

ஶ்ரீ:





*விஸ்தரிக்கும் நீர்மைத் தொடர்புகள்  *


இயக்க பின்புலம் - 56
அரசியல் களம் - 37





கும்பகோணம் புதுவையிலிருந்து சுமார் மூன்று மணி நேரப்பயணம் திரும்ப நடுநிசியாகிவிடும் காலையில் கிளம்பியிருக்கலாம் எதற்கு சேகர் அவர் காலை வயல்வெளி , மற்றும் தோட்ட வேலை கூலி போன்றவை முடிந்து குளித்தது பேட்டிக்கு உட்கார மாலை 6:30 மணியாகிவிடும் அதை கணக்கெடுத்துதான் 3:00 மணிக்கு நாம் புறப்பட்டது , என்றார், வழி முழுவதும் பல கதைகள் சின்னவரைப் பற்றி . சிறிது நம்பிக்கை வந்தது மாதிரி இருந்தது . சரியாய் தான் பேசுகிறார் என பட்டது , ஆனால் இதைப்போல சென்று அரசியலில் சிலமுறை சங்கடப்பட்டது நினைவில்  எழ சர்வ ஜாக்ரதையாக இருக்க முயற்சிக்கிறேன்.. ….”சின்னவர் நாம் சொன்னதை ஆழ்ந்து கேட்டபடி மேலுதடை தட்டினால் நாம் சென்ற காரியம் முடிந்த மாதிரிதான்என்றார் . எனக்கு சிரிக்கவேண்டும் போல் இருந்தது . தவராகிவிடக்கூடும் எனவே அமைதியாய் இருந்தேன் .

மூப்பனார்  - ஒரு அகில இந்திய தலைமையில் குறிப்பிடத்தகுந்த ஆளுமை . ஒரு கிராமத்து ஜமீன்தார் பாணி பாரம்பரியத்தின் பின்னணியில் இருந்து ஏழுந்து வந்தவர் ,   ஆயிரக்கணக்கான வேலி நிலங்களுக்கு தொந்தக்காரர் . எளிய உடை ரப்பர் செருப்பு என தோற்றத்துடன் ,பெயரை சொல்வது முறைமை அல்ல என்பதால் ஐயா என அழைக்கப்படுபவர் . தனக்கென ஒரு குறுங் குழுவை இந்திய முழுவதும் வைத்திருந்தார் . எனக்கு மூப்பனார் என்றால் கொஞ்சம் ஒவ்வாமை உண்டு என்னால் ஒருவரிடம் சட்டென பணிந்து விட முடியாது . நான் வளர்ந்த முறை அப்படி. அது தவறாக கூட இருக்கலாம் என்னசெய்வது .எந்த புது சூழல் அல்லது மனிதர்கள் நான் முதல் முறை சந்திக்க நேர்ந்தாலும் நான் வளர்ந்த சூழலையும் அல்லது என் தந்தையையின் ஆளுமையுடன் அவற்றுடன் ஒப்புநோக்குவது , அது ஒரு தானியங்கி செயலி போல என் உத்தரவை அவை எதிர்பார்ப்பதில்லை . பெரும் அதிகாரம் உடையவர்கள் எதிர்பார்க்கும் விநயம் என்னிடமிருப்பதில்லை . நான் பெரிதும் மதிக்கும் ஆளுமைகளைக் கண்டால் அவை தானாக என்னிடம் தோன்றுவதை உணர்ந்திருக்கிறேன்

நாங்கள் அங்கு சென்று சேர்நத போது மாலை 6:30 மணி. பழைய பாணியிலான வீடு , அதில் நுழைந்ததும் ஒருவித உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டேன் . அது என்னுடைய நினைவில் எஞ்சியிருந்த் என் பழைய வீட்டை நினைவு படுத்தியது , ஆனால் இது என் பூர்வீக வீட்டைக்காட்டிலும் ஐந்தாறு மடங்கு பெரியது . வீட்டிற்கு வெளியே எதிர்புறம் காலி மனை பார்க்க வருபவர்கள் வண்டி நிறுத்தமாக அதை உபயோகப்படுத்தினார்கள் . இரண்டால் உயரத்திற்கு பெரிய மரக்கதவு திட்டி வாசலுடன் அதன் மேலே இருப்பு வளைவு பொருத்தப்பட்டு விளக்கு வைப்பதற்கான வளையம் காலியாக விடப்பட்டு இருந்தது .உள்நுழைந்ததும் செண்டுவெளி பத்து இருப்பது கார்கள் நிறுத்துமளவிற்கு பெரியது . இருபுறமும் ஓடு வேய்ந்த சாய்தளத்தால் மூடியிருந்தது, பலவித உபயோகத்திற்கு . பழைய காலத்தில் மாடு கட்ட, வைக்கோல் போட்டு வைக்க  மற்றும் மாட்டு வண்டி அல்லது கோச்சு வண்டிகள் நிறுத்த பயன்படுத்தப்பட்டிருக்கலாம் . இப்போதும் விவசாய சம்பந்தமான தளவாடங்கள் தட்டுமுட்டு சாமான்கள் சிதறிக்கிடந்தன . செண்டுவெளியியை தாண்டியுடன்  ஒரு சில படிகளில் ஏறிச்செல்லுமலவிற்கு பெரிய மேடை திண்ணை போல . நடு நாயகமாய் உயரம் குறைவான , கூடுதல் அகலமுள்ள இரட்டை கதவு , இடது அடைத்த பழமுயான முறை .திறந்து கிடந்த வலப்புரம் ஒருவர் தடையில்லாமல் கடக்க முடியும் . என்னை சுவாரஸ்யப்படுத்தியது அதன் தொன்மையான பாரமரியம் வாசக்கலில் கட்டு நெற்கதிர் பெண்ணின் மிக நேர்த்தியான ஜடையைப் போல பிண்ணி சுற்றிக்கட்டப்பட்டிருந்தது . அறுவடையான முதற் கதிராக இருக்கலாம்.

நீண்ட பெரிய பென்ச் மாதிரி சில போடப்பட்டிருந்தன , வருபவர்கள் உட்காருவதற்குகென .உள்ளிருந்து மணியகார் மாதிரி வந்த ஒருவரிடம் சேகர் ஐயா இருக்காரா என்றார். அவர் எங்களைப்பற்றிய தகவல்களை சேகரித்துக்கொண்டு உள்ளே சென்றார் .நாங்கள் அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தோம். உள்ளே சிலர் பேசிக்கொண்டிருந்தது மிக சன்னமாக வெளியில் புரிந்து கொள்ள முடியாமல் கேட்டது . பெரிய மனிதர்களை சந்திக்கும் முன்பு ஏற்படும் சிறு படபடப்பாக உணர்ந்தேன் . அது என் இயல்பு .பேசத்துவங்கி சிறிது நேரத்தில் சகஜமாகிவிடும் .

முக்கால் மணி நேரம் கழித்து , பொறுமையிழக்கும் நேரம். உள்ளிருந்து சிலர் வெளியே வந்து சற்று ஓரமாக நின்று அவர்களுக்குள் பேசியபடி இருந்தனர் . அநேகமாக உள்ளூர் காரர்கள் கட்சி அல்லது பொது விஷயமாக இருக்கலாம். நான் ஆர்வமற்று அவர்களை பார்த்துக்கொண்டிருந்தபோது சேகர் என்னால் மெள்ள தொட்டவுடன் ,எங்களுக்கான அழைப்பு வந்திருந்ததை அறியமுடிந்தது . நாங்கள் சிறிய தயக்கத்துடன் உள்நுழைந்தோம் , அது பெரிய வரவேப்பரை அந்த வீட்டின் மொத்த அகலத்திற்கு இருந்தது . நீளம் வெளியே இருந்த செண்டுவெளியில் பாதி இருக்கும் என நினைக்கிறேன் . தளம் மிக உயரத்தில் இருந்தது . வாசலுக்கு இடப்புறம் பழைய பிரம்பு பின்னிய சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடிரங்கசாமி மூப்பனார் “. எதிர்பார்த்த எந்த சின்னமுமில்லாது நடுத்தர உயரம் ஆகிருதி என ஒரு சாதாரண கிராமத்து மனிதரைப்போல் இருந்தார் . அவரது தோற்றம் என் சுவாரஸ்யத்தை குறைத்துவிட்டது. அவருக்கு சேகரை நன்கு பரிச்சயம் என அவரது வரவேற்ப்பில் தெரிந்தது . அங்கு அமர்வவதற்கு ஏதும் இல்லாததால் எனக்குள் சிறிய தயக்கம் தரையில் உட்காரச்சொல்வார்களோ என . நல்லவேளை மூலையில் இருந்த நாற்காலியை மணியக்காரர் தோற்றம் கொண்டவர் எங்களுக்காக எடுத்துப்போட்டார் . பொதுவாக யாரும் அவருடன் அமர்ந்து பேசுவதில்லை என நினைக்கிறேன்.

கிளம்பும் போது என்னிடம் சேகர் முன்னமே அவரிடம் தொலைபேசியில் பேசியத்தைப்பற்றி சொல்லியிருந்தார் . சேகர் அவரை ஐயா என்றுதான் விளித்து பேசினார் நான் அதுவரையில் யாரையும் அப்படி அழைத்ததில்லையா . அப்போதெல்லாம் அந்த சொல் விளிக்கப்படுபரை உயர்த்தியாக சொல்லுமோ என்னவோ . ஆனால் வளிப்பவரை மிக தாழ்மையாக்கிவிடுவதாக ஒரு எண்ணம் , பின்னாளில் தான் அது ஒரு அழகான விளிச்சொல் என புரிதலை அடைந்தேன் . பொதுவான புதுவை அரசியலை பற்றி நிறைய பேசிக்கொண்டிருந்தார் . அவரது புதுவை பற்றிய புரிதல் ஏறக்குறைய சரியாக இருந்தது கொஞ்சம் ஆச்சரியமளித்தது


பின்னர் அதன் காரணத்தை அவரது பேசுமுறை கொண்டு தெரிந்துகொண்டேன் . தஞ்சாவூர் பாணி தமிழ் சில விஷேஷ அசைச்சொல்லை அடையாளப்படுத்தியது அது காரைக்கால் வாசிகளிடம் நான் கவனித்திடுக்கிறேன் . காரைக்காலில் அங்கிருந்து அருகில் உள்ளது . அங்கிருந்து சிலர் இங்கு வந்து போகிறார்கள் என ஊகித்தேன் . அதுவே அவரது புதுவை பற்றிய அரசியல் புரிதலுக்கு காரணம் . எங்களுக்குள்ள கட்சி உள்ளீடான சிக்கல் அதை ஒட்டிய பேச்சி என எதுவும் எழாதது ஆறுதல் அளித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விழாவிற்கு அழைக்கவந்தது போன்ற ஒரு எளிமையான தோற்றத்தை அது ஏற்படுத்தியதாக நான் நினைத்ததால் ,அரசியல் ரீதியான எந்த கேள்வியும் அங்கு எழவில்லை . நான் அதற்கு விளக்கம் சொல்லும் சூழலும் ஏற்படவில்லை . தான் பெரியவரிடம் இதுபற்றி சொல்லுவதகாகவும்  எங்களை சென்னை சென்று பெரியவரை பார்கச்சொன்னார்  . எனக்கு அந்த முடிவு உற்சாகமளிப்பதாக இருந்தது .அவரது தம்பி அனுப்பி சென்று பார்ப்பதென்பது , ஒரு நல்ல அடித்தளம் , அது நன்கு நின்று பேசுவதற்கு ஏற்றது . அவரிடம் நன்றி விடை பெற்று  புதுவை திரும்பினோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...