https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 18 ஜூலை, 2017

அடையாளமாதல் - 130 *தலைமை செயல்படு முறைமைகள் *

ஶ்ரீ:





*தலைமை செயல்படு முறைமைகள்  *

இயக்க பின்புலம் - 56
அரசியல் களம் - 38





ஒரு அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிற்கு பிறகு தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த மூப்பனார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார் . ராஜீவ் காந்தியால் ஓரங்கட்டப்பட்டார் எனவும், இல்லை கட்சியை பலப்படுத்தவும் ,பல தலைகளாக பிரிந்துகிடக்கும் குறுங்குழுக்களை அமைப்பிற்குள் தொகுக்கவும் இது ராஜதந்திர நடவடிக்கை என, இது இருவிதமான விமர்சனங்களை எழும்பியது . மூப்பனாரின் அணியே அதை பிறிதொருவர் தலைவராக வரும்போது செய்வது . அவற்றின் கைகளில் கொடுப்பதை போன்று , அவர் அடையாளம் காட்டுபவரை தவிர்த்து அவரையே தலைவராக நியமித்தது , அவர் அளவில் மிக அபாயகரமானதுதான் .  மூப்பனாரின் மாநில தலைமை செயல்பாடுகளை அவரின் நெருங்கிய நண்பர்துக்ளக் சோகூடபிள்ளையார் பிடிக்க குரங்காய் முடித்ததுஎன கார்ட்டூன் போட்டார் . உண்மையில் மூப்பனார் கோட்பாடுகளை உருவாக்கும் இடத்தில் இருந்தவர் ,அதே மனோநிலையில், அதை செயல் படுத்தும் இடத்திற்கு வருபவர்கள் அடையநேர்வது ,தோல்வியைத்தவிர பிறிதில்லை என்பர் . அவருக்கும் அதுவே நிகழ்ந்தது .

தொண்டர்களை வழிநடத்துவது வேறுமாதிரியான கலை . எல்லாருக்கும் வாய்ப்பதில்லை அது . ஆனால் மாநிலத்தலைவராக இருந்த காலத்தல் பெற்ற தொடரபுருத்தல் நிர்வாகம் அனுபவம் அவருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் உருவாக்கி வெற்றிபெறுவதில் கைகொடுத்தது. அது உருவானதே அதிமுக கூட்டணியை வெறுத்து.ஒரு வருடம் கழித்து மீண்டும் தேர்தல் நெருங்கிய போது அதே அதிமுக வுடன் கூட்டணி என அவர் நிர்பந்திக்கப்பட்ட போது அதில் உள்ள நேரடி தொடர்புகளின் விபரீதத்தால் அதிர்ச்சியுற்றார் . பிறகு திரும்பவும் காங்கிரஸ் ஆதரவு நிலையெடுத்தார் அதிமுக கூட்டணி அமைத்தார் காங்கிரஸ் உள்ளொதிக்கீடு எனும் புதிய அணுகுமுறையுடன் . புதுவை முதல்வராக சண்முகம் இருந்தபோது அவருடன் நானும் , மூப்பனாரின் இறுதிக்காலத்தில் சந்திப்பின் போது உடனிருக்க நேர்ந்தது . பேச மிகவும சிரமப்பட்டு அவர் தட்டுத்தடுமாறி சென்னது, தன் பிள்ளையை எப்படியாவது காங்கிரசில் சேர்த்து விடுவதைப் பற்றியும் , மாநில கட்சி நடத்துவதன் கசப்பையும் பகிர்ந்து கொண்டார். தலைவர்களின் தலைவருக்கும் , தொண்டரின் தலைவருக்கும் , மக்கள் தலைவருக்கு  உள்ள அரசியல் செயல் முறைமைகள் மிகவும் மாறுபாடுகள் உள்ளவை மட்டுமின்றி அவை ஒன்றுக்கொன்று நேர் ஏதிரானவை.

மூப்பனார் தலைவராக இருந்த சூழலில் நடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பன்னிரண்டு முறை ராஜீவகாந்தி பிரச்சாரத்திற்கு வந்தும்  சொற்ப இடங்கள் கூட கிடைக்காதது, தேசிய அளவில் ராஜீவ் காந்திக்கும் ,கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது . அதன் பொருட்டு மூப்பனார் மாறி வாழப்பாடி ராமமூர்த்தி தலைமை பொறுப்பிற்கு வந்தார் . மூப்பனாரின் ஆளுமைக்கு நேர் எதிர் வாழப்பாடி . அவர் நிலச்சசுவான்தார் . இவர் தொழிற்சங்கவாதி . தொடருபுருத்தலை மிக திறமையாக கையாண்டவர் வாழப்பாடி . அமைதியான  மூப்பனாருக்கு உண்மையில் சரியான நேர் என்றால் அது வாயாடி அரசியல்வாதி EVKS இளங்கோவன்தான் தமிழக காங்கிரஸுக்கு இவர் ஒரு நோய் . வாழப்பாடி இவர்களுக்கு இடையில் . அதே சமயம் மிக சரியான தலைமையை கொடுக்க வல்லவர் .

காங்கிரஸ் கட்சியில்  அதிக சொத்துள்ள ஒரு சில மாநில தலைமை நிலையத்தில் தமிழகத்தின் சத்தியமூர்த்தி பவனும் ஒன்று. (அதற்கு காமராஜரின் நேர்மை காரணம்). அதுவரை முறைபடுத்தப்பாடாமல் இருந்ததை, முறைப்படுத்தி பல அமைப்புகளை உருவாக்கி ,அலுவலக  நிர்வாகிகள் , கள நிர்வாகிகள் என் பிரித்து , மேலும் தலைமை நிலைய பேச்சாளர் செய்தித்தொடர்பாளர் , அமைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என அட்டவணை பிரித்து செயல்பட வைத்தது மட்டுமின்றி , அவர்களுக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டது . கட்சி உயிரோட்டமாக இருந்தது அவரது காலத்தில் தான்

கட்சி அமைப்பை மிக திறமையாக கையாண்டவர் வாழப்பாடி. முறையான அரசியலால் மேலெழுந்து வந்தவர். தமிழக கட்சி அரசியல் வரலாற்றில் மூப்பனாரை எதிர்த்து நின்று அரசியலில் வென்றவர் யாருமில்லை , வாழப்பாடியைத் தவிர . அவரின் சரியான அரசியல் நிலைப்பாடுகள் , பெரும் வெற்றியை தரவல்லவை . அதற்கான அடிப்படை பொறுமையும், காலத்தில் வேகமான செயல்பாடுகளும் வேண்டுபவை . தலைமைப் பொறுபென்பது ஒற்றைபடையான பார்வையையும்  , நோக்கத்தையும் அடிப்படையில் கொண்டதில்லை , அதேசமயம்  பன்முகம் கொண்டவருடைய அனுகுமுறை, நேர்மையும்  எதார்தம் என்கிற ஒற்றை பண்பை வெளிப்படுத்துபவையாக இருக்கும்.

மூப்பனார் பொறுமையும் சில இடங்களில் அவர்கொண்ட நிமிர்வும் தான் அவரது அரசியல் அழகு என்பேன் . வாழப்பாடியை பொறுத்தவரை பாரம்பர்ய அரசியல் முறைமைகள் , தன்னை சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை பற்றிய தெளிவு, வேகம்   .நேரத்திற்கு தகுந்தாற் போல பேசும் தாழ்மையற்ற நிலை இருவரின் அழகு என்பேன் .இருவருடன் எனக்கு நல்ல ஆழமான தொடர்பை எனக்கு காலம் வழங்கியது . இங்கிருந்து அவற்றை திரும்பிப் பார்க்கிறேன் . ஊழின் கைகளில் சிக்கி என் விழைவின்றி அது பயணிக்கமிடமெலாம் இழுத்து செல்லப்பட்டேன்.அதனால் அடைந்த பயன் என்ன . அவற்றால் நான் அடைந்த அனுபவமே அதன் பயன் அன்றி பிறிதொன்றில்லை  . ஆம் அனுபவமே இறை .


மூப்பனார் தனது பாணி அரசியல் மாநிலத்திற்கு ஏற்றதில்லை என்பதை அவர் புரிந்துகொள்வதற்குள் காலம் கடந்து விட்டது . அவர் வெளியேறி வாழப்பாடி உள்நுழைந்த போது அவர் வந்த நொடி முதல் ,அந்த பதவிக்கு மிகச் சரியாக பொருந்தினார், அதனாலேயே உட்க்கார்ந்த உடன் தன் அரசியலை மாநிலமுழுவதும் துவங்க முடிந்தது . தமிழக அரசியலில் இனி காங்கிரஸுக்கு ஏதிர்காலமில்லை , கூட்டணிக்கு திராவிடக் காட்சிகள் சீண்டப்போவதில்லை , சீட் பேரம் பேசும் இடத்தில் அது இல்லை என்பதை தாண்டி, ஜெயலலிதாவுடன் பேசி அதிமுகவுடன் கூட்டணி கொண்டுவருகிற இடத்தை அடைந்ததே அவரது அரசியல் வெற்றியாக பார்க்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...