https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 23 ஜூலை, 2017

அடையாளமாதல் - 136 *மடமையின் உச்சம் * .

ஶ்ரீ:



அடையாளமாதல் - 136
பதிவு : 136 / 209     தேதி :- 23 ஜூலை 2017
*மடமையின் உச்சம்  *

இயக்க பின்புலம் - 62
அரசியல் களம் - 39





சேகர் நான் சொல்ல விழைந்ததை ஒரே வாக்கியமாக மாற்றிச் சொன்னார் . அவருடன் பேசியது உற்சாகமாக இருந்தது.சிதம்பரத்தில் காலை உணவுக்கு இறங்கியது , சீர்காழி அருகே சிறிது போக்குவரத்து நெரிசல் என சில காரணங்களால் தாமதமாகியது. காலை 11:20 சுமாருக்குத்தான்சின்னவர்வீட்டை அடையும் போதுதான் உணரமுடிந்தது , உடன் எங்களுக்குள் அது பதட்டமாக எழுந்தது . வண்டியில் வரும்போது எங்களுக்குள் நிறைய ஆழ்ந்து பேசியதால், ஓட்டுனரை விரட்ட மறந்துவிட்டிருந்தோம் . இன்று சந்திக்க முடியாமல் போனால், திரும்பவும்  வருவது அலுப்பூட்டுவது , தவிரவும் மூப்பனார் வருவது நிச்சயமற்று  இருப்பதால் இதுவரை போஸ்டர் பேனர் நோடீஸ் என எதுவும் அச்சாகாது நிற்கிறது.அதைவிட இந்த மர்மத்தை இனியும் பொறுக்கும் மனநிலை நான் இல்லை. வீட்டை நெருங்கும்வரை சின்னவர் வீட்டில் இருக்கிறாரா இல்லையா என எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற தவிப்பை வெளிக்காட்டாது அமைதியாய் இருந்தேன்  . உள்ளே அவரின் காரை பார்த்த பிறகுதான் உயிர் வந்தது . காலை அவர் வீட்டில் இருக்கமாட்டார் என்பதனாலேயே என்னவோ அங்கு கூட்டம் ஏதுமின்றி வெறிச்சென இருந்தது மிகவும் ஆறுதலித்தது .

எங்களை பார்த்ததும் மணியகார் போலிருந்த ஒருவர் ஓடிவந்துநீங்கள் பாண்டியா , உங்களை வந்ததும் ஐயா இருக்க சொன்னார், இதோ வந்துவிடுவார்என்றார். அது நாடகீய இறுதி கணங்களை நெருங்கும் ஆர்வம் கலந்த பதட்டத்தை உருவாக்கியது .சிறிது நேர காத்திருப்பிற்கு பின் வெளியே இருந்து வந்த ஒரு காரிலிருந்து சின்னவர் இறங்கியதை பார்த்ததோம், அவர் சிரித்தபடி அணுகிவந்து . “ஐயா வருவதாக சொல்லிவிட்டார்என சுருக்கமாக அவர் பாணியில்  சொல்லியபடி எங்களை உள்ளே அழைத்து சென்றார். நான் பரபரவென்ற ஆர்த்தியில் , என்னென்ன செய்யவேண்டும் என்பதை பற்றிய கனவில் இருந்தேன் . எங்களுக்கு மோர் சொல்லிவிட்டு , அவர்முதலில் நான் பேசிய பிறகு சண்முகமும் ,கண்ணனும் பேசியிருப்பார்கள் என நினைக்கிறேன் . உள்ளூரிலேயே சிக்கல் ,வெளியூர் வேண்டாமே விட்டுடு என சொல்லிவிட்டார் , ஒரு அளவிற்றகு மேல் அவரை நிர்பந்திக்க முடியாது . எனக்கு நீங்கள் இங்கு வந்து சொன்னது அதன் பிறகு இதற்கு பெரியவர் அவசியம் போகவேண்டிம் என என்னிடம் பலரும் சொடணார்கள், நேற்று இரவு கூட சிலர் பேசினார்கள் , நான்தான் இனி முடியாது என சொல்லிவிட்டேன் . பிறகு என்னை பார்த்துநீ சொன்னதை பெரியவர் என்னிடம் சொன்னார் . அதுதான் சரியான பேச்சி , அசந்துட்டார் . உன்னைப்பற்றி நிறைய சொன்னார் . எனக்கும் உன்னை நேரில் பார்த்து இதை சொல்ல ஆசைப்பட்டேன் , நான் சமீபத்தில் பெரியவர் யாரைப்பற்றியும் அதிகம் பேசி பார்த்ததில்லைஎன்றவர். நான் நாளை கழித்து சட்டக்கல்லூரியில் ஒரு விழாவிற்கு வருகிறேன் மற்றவை பற்றி அங்கே பேசுவோம் என்றார் .

இது ஒரு அரசியல் திருப்புமுனை இதன் விசைகள்  என்னென்ன விளைவுகளை உண்டாக்கும் ,என சிந்திக்க முடிந்தது.என் வாழ்வில் வந்து போகிற அனைவரும் ஒரு கதாபாத்திரம் மட்டுமேபிறிதெவருக்கு நான் அப்படியே . பாலனுடன் ஏற்ப்பட்டிருகிற கசப்பு மெள்ள என்னுள் பரவுவதை சில காலமாக உணர்ந்துவருகிறேன் , என்னால் என்னை யாருக்காகவும் கசப்பாக உருக்கொள்வது  வழமையல்ல . என் வாழ்வில் வந்துபோகிற எவருக்காகவும், என்னுடன் நான் வாழும் காலம்வரை என்னுடன் இருக்கப்போகிற என் அகத்தை, ஏன் பிறர் பொருட்டு கசப்பாக்கிக்கொண்டு வாழவேண்டும் . இது என்வாழ்க்கை , இனியது . இதை இப்படியே நீடிக்கவிடுவகித்தே எனக்கு சரியானது . அதிலிருந்து வெளிவரும் வழியாக நான் செயல்படத்துவங்கினேன்

வழி முழுவதும் சேகரிடம் நான் பேசியது எல்லாம் என்னை தொகுத்துக்கொள்ளும் முகமாகத்தான் , மேலும் விஷயத்திலுள்ள வாய்ப்புகள் , அதன் பின்னனியில் உள்ள அரசியல் சிந்தனையும் போக்கையும் , நான் சொல்லுவதற்கு முன்பே சுப்பராயனுக்கு தெரிந்திருப்பது அவசியமாகிறது . அவரால் மட்டுமே நான் மூப்பனாரிடம் ஏற்படுத்தியுள்ள அலகுகளை இங்கு சரிவர பொறுத்த உதவ முடியும். பாலனில் எழுந்துள்ள தன்நிலைமறப்பை அவரைக் கொண்டுதான் சரி செய்ய இயலும். அதை பற்றிய சிறிது கணக்கிடல் சுப்பராயனிடம் இருந்தால்தான் என்னால் மாற்றுக்கோணங்களை அவரிடம் விவாதிக்க முடியும்

இன்று நிகழ்ந்துள்ள தொடர்பு யாருடைய எண்ணத்திற்கு அப்பாற்பட்டது.கண்ணனும் இதைப் போன்ற ஒன்றை முயற்சித்து தோற்றுப்போனார். ஒருவகையில் கண்ணனுடைய அரசியல் வீழ்ச்சிக்கு மூப்பனார் ஒரு மறைமுக காரணம் என்று கூட சொல்லலாம். அவரைத்தாண்டி தில்லியில் கண்ணனுக்கு யாரையும் தெரியாது என்பது மட்டுமல்ல யாருடனும் அவரால் தொடர்புகொள்ள இயலவில்லை . அது மூப்பனாரை விரோதிக்கும் என்பதே அவரது அரசியல் பலவீனமானது . சணமுகத்தை எதிர்பதில்தான் தனது அரசியலே இருக்கிறது என்பதைப்போல உருவகத்திற்கு வந்துசேர்ந்திருந்தார்.

இதை உடனடியாக முதல்வருடன் பேசியாக வேண்டும், அடுத்து நிகழக்கூடியது பற்றிய என் எண்ணமும் அதற்கு வழிமொழிவதே மூப்பனாரின் இந்த வருகை .ஆனால் துரதிஷ்டவசமாக நான் இதுகுறித்து வைத்திலிங்கத்தை நேரடியாக சந்தித்து பேசமுடியாது , அது பாலனை விரோதிக்கும் அவரை வைத்துக்கொண்டுதான் இயல்பாக அதை சொல்லியாக வேண்டும் , அதை வைத்திலிங்கம் ஒத்துக்கொள்வாரா என்பதை இப்போது இங்கிருந்து அறியமுடியாது


பாலனின்  தற்போதைய நிலை என்னால் எதையும் எண்ண முடியவில்லை , மூப்பனாரை வைத்திலிங்கம் சந்திக்கும் அந்த நிமிடம் நான் உடனிருந்தால் அன்றி , நான் ஏற்படுத்திய அலகுகள் செயல்பாட்டிற்கு வராது , வைத்திலிங்கமோ , நானோ இதை முன்னெடுத்து பேசாது போனால் பிறிதெப்போதும் பேசுவது முடியாது போகலாம் . இழவு இந்த பாலனின் மனதில் என்னதான் பிறழ்வு என தெரியாது திண்டாடிக்கொண்டிருக்கிறேன்  , நான் இப்போதைய அரசியல் சூழலில் செய்யக்கூடியது ஒன்றில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக