https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 13 ஜூலை, 2017

அடையாளமாதல் - 126 *ஊழின் பலி *

ஶ்ரீ:*ஊழின் பலி *
இயக்க பின்புலம் - 53
அரசியல் களம் - 36தில்லியில் உள்ள புதுவை அரசினர் விடுதியில் தங்குவது இது முதல்முறை , கார் பயணித்த வழி ஏதாவது ஒன்று பார்த்ததைப்போல இருந்தால் பழைய நியாபகத்தில் இருந்து எதையாவது மீட்டெடுக்கும் கடுமையாக முயற்சியில்   இருந்தேன் . உள்ளே மனம் தன்னிச்சையாக செயல்படுவதை தற்காலிகமாக நிறுத்தி இது ஒரு சிறந்த வழி . ஆனால் என் நினைவு , எங்களை வேக வேகமாய் கடந்து மறையும் சாலைகளும் ,கட்டடங்கள் ,ஹோட்டல் ,மால் எல்லாம் நான் இதுவறை பார்த்திராத பகுதிகள் என சொல்லியபடி இருந்தது . ஆம் நான் இங்கு வந்ததில்லை , இதற்குமுன் தங்கியிருந்தது பழைய தில்லிஇது புதுதில்லி ,இங்கு மொத்தமே ஓரு நாள் தான் அழைத்துவந்திருந்தார்கள் . புது தில்லி அரங்க அதிகாரங்களை வெளிப்படுத்தும் நகரம் நாங்கள் தங்க இருக்கும் பகுதி கௌடில்யா மார்க் , சாணக்யபுரி . சரியான பெயர்.

சாணக்கியபுரி ஒரு குறியீடுபோல மனதில் தங்கியதுநகர்தல்கள் என்னென்ன  நிகழலாம் என கேள்விகளை மனம் உள்ளெழுப்பிக்கொண்டே இருந்தது . விடுதி நெருங்கியது . மணிப்பூர் பாவணத்திற்கும் ,உபி பாவணத்திற்கும் இடையே மண் வண்ணத்தில் ஒரு கட்டடம் . அகலம் குறைந்த சிறிய விடுதி போல இருந்தது. புதுவையில் ரயில் நிலையத்தில் தீபத்தை கையில் உயர்தி வைத்தபடி  வரிவரியாக துணியால் தலையை மூடி குனிந்து எகிப்த்து பாணி பெண்ணை போல ஒரு சிலை இருக்குமே , அதன் பெரிய வார்ப்பு இது . மிக உயரமாக மாடங்கள் கூடிய முகப்பு . உள் நுழைந்ததும் , அகலம் குறுகியது போன்ற தோற்றம் இருந்தாலும் மிக நீண்ட கட்டிடம் அது 


முகப்பு நுழைவாயில் பக்கவாட்டில் அதன் வயிற்றுப் பகுதியில் இருந்ததால் அதன் பிரம்மாண்டம் தெரியவில்லை .நான்கு தளமுள்ளது . நாங்கள் இறங்கியதும் முதல்வருக்கு வழமையான அரசாங்க முறைமைகள் நிகழத்துவங்கியது. நான் அதில் ஆர்வமற்று விடுதியின் கட்டமைப்பில் கவனம் செலுத்தியபடி இருந்தேன்   அருகில் வந்த பாலன் . என்னிடம் இது ஜோசப் மரியதாஸ் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த போது கட்டியது என்றார் . உடையார் தன் வழமையான குறும்பாக அதான் மாதாக்கோவில் மாதிரி இருக்கிறது என்றார் . நாங்கள் முதல்வருக்கு நடக்கும் முறைமைகளை மறந்து சிரிக்க துவக்க அருகில் இருந்த காவல் அதிகாரி எங்களை ஏறிட்டுப்பார்க்க நாங்கள் அமைதியானோம் . நான் திரும்பவும் அந்த விடுதியை பார்த்த போது உடையார் சொன்னது சரிதான் அது மாதா கோவிலை மாற்றி வடிவமைத்த கட்டிடம் போல் தான் இருந்தது.

உடையார் பெரியவர் அவருக்கு தனி அறையும் ,முதல்வரின் செயலர் அறையில் பாலனும் தாங்கிக்கொள்ளும்படி ஒருங்கியிருந்தார்கள் . நானும் செயலர் அறையில் தாக்கிக்கொள்ளலாம் என்றதும் வைத்திலிங்கம் நான் இவ்வளவு பெரிய அறையில் தனியாக என்ன செய்யப்போகிறேன், என் பேச்த்துணைக்கு அரி என்னுடன் இட்டுக்கட்டும் என்றார்

எனக்கு சங்கடமாக இருந்தது. முதல்வர் அறையில் உடன் தூங்குவதில் பல சங்கடங்கள் எழலாம் . இயல்பாக இருப்பது கடினமாக இருக்கும். ஆனால் நான் முடிவெடுப்பதுற்குள் என் பெட்டிகள் முதல்வரின் அறையில் ஒருங்கிவிட்டன . எனக்கு முதலில் திகைப்பாக இருந்தாலும் அந்த ஒரு இரவிற்குள் நாங்கள் சகஜமாவிட்டோம்

அடுத்த ஒருவாரம் நிகழ்ந்தது ஏறக்குறைய ஒரே மாதிரியான நிகழ்ச்சிநிரல் .காலை அக்பர் ரோட்டில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம், பாராளுமன்ற வளாகம் மாற்றி மாற்றி காலை, மதியம் ,இரவு உணவு அனைவருக்கும் விடுதியில் தயாராக இருந்தது  , இரவு மாநில அரசியல் பற்றிய பேச்சிகள் இப்படிபோய்க் கொண்டிருந்தது . இரண்டு நாளில் ரயிலில் வந்த நண்பர்கள் அனைவரும் விடுதிக்கு வந்துவிட்டார்கள் . முதலில் சிறிதும் முகம்கொடாமையாக துவங்கினாலும் அன்று மதியத்திற்குள் அனைவரும் ஒன்று கூடிவிட்டோம் , நான் இரவு தூங்குவதற்கு மட்டும் முதல்வரின் அறைக்கு செல்வது பாக்கி நேரமெல்லாம் நண்பர்களுடன் அரட்டையாக சென்றது . இருந்த சிறு கசப்பும் காணாமலாகி இருந்தது.

காலை மாலை இருவேளை நடைக்கு இந்திய கேட் முதல்வருடன் சென்றுவிடுவேன் அவரது பேச்சு துணைக்கு , அதை தவிர்க்க இயலவில்லை . நான் இயல்பிலேயே கூச்ச சுபாவி என்பது முதலில் ஒரே பெரிய தடையாக இருந்தபோதிலும் . அது போக போக சரியாகிவிட்டது .

ஒரு அகில இந்திய கட்சியில் இருப்பதும் , அதற்கு தில்லி சென்று கட்சி விஷயங்களில் ஈடுபுவதும் மிகவும் செலவேறியது மட்டுமின்றி , மொழி உணவு தங்குமிடம் வாகனவசதி போன்றவை பெரும் தடை மட்டுமல்ல வதையும் கூட . ஓரளவிற்கு அங்கீகாரம் உள்ளவர்களுக்கு தலைமை அலுவலகத்தில் செவிகூர்வார்கள் . நம் தரப்பை நிரூவுவதற்கு வேண்டிய தரவுகளும் வாதங்களும் கோட்பாடுகளுமாக சலியாது முன்வைத்தபடியிருக்கவேண்டும்

சரியான இடைவெளியில் தொடர்சந்திப்புகள் இவைகளை தாண்டி உங்களை ஆதரிக்கும் ஒரு தரப்பை கண்டடைவது அவ்வளவு எளிதல்ல . தில்லியில் தலைமை அலுவலகத்தில் உள்ள யாரும் எதிலுமே இதுதான் நிலை என துணிந்து சொல்லிவிடமுடியாது . பெரும்பாலும் முடிவுகள் அரசியல் ரீதியானவைகள் , இதில் முரண்நகை. முடிவுகள் முதலில் எடுகப்பட்டு அதற்கான காரணம் மட்டுமே பின்னர் கண்டடையப்படும். அவை பெரும்பாலும் நிஜத்தை பிரதிபலிப்பதில்லை . மனசோர்வு அடைபவர்களுக்கானது இல்லை அரசியல் 

சண்முகத்தை மாற்றுவது முடியாதது என்பது  நாலைந்து நாட்களில் தெரிந்தது . அனைவரும் சோர்ந்து போயினர் , அடுத்தது பாலன் நிலை .மாற்றுவது சரிவராது என்பதை இதைக்கொண்டு இளைஞர் காங்கிரஸ் அலுவகத்தில் கோட்பாடாக வைத்துவிடலாம் என முடிவுசெய்யப்பட்டது . வைத்திலிங்கம் பாலன் இருவர் மட்டும் இளைஞர் காங்கிரஸ் அலுவகத்திற்கு இரண்டுநாள் சென்றுவந்ததும் , அன்று மாலை தகவல் வந்தது பாலனுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதாக . பாலன் பெருமூச்சு விட்டார் , என்னிடம் பேசும்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பைத்தியம் போலானதாக உணர்ச்சிப்பெருக்கில் சொன்னார் . நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன் . என் கோட்பாடும் முடிவும் சரியானவைகளென . ஊர் திரும்பும் ஏற்பாடுகள் துவங்கின. இரவே கிளம்புவதாக முடிவானது.

வைத்திலிங்கம் சொல்லும்போது ஒரு நிபந்தனையுடன் பாலனுக்கு இந்தப்பதவி வழங்கப்பட்டதாக சொன்னார் . மூன்று மாத காலத்திற்குள் ஒரு பெரிய நிகழ்வொன்று புதுவையில் நடத்தப்பட வேண்டும் அகில இந்திய தலைமை அப்போது புதுவைக்கு வரும் என்றார்

அகில இந்திய தலைவர்பொறுப்பிலிருந்தவர். மனீந்தர் சிங் பிட்டா . இவர் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்த்தான் தீவிவாதிகளின் கொலை முதற்சியில் படுகாயமடைந்து தப்பிய போது ,அவரை நலம் விசாரிக்க வந்தருந்த பிரதமர் நரசிம்மராசாவின் கவனத்தை கவந்தார் . தில்லி திரும்பியதும் பிட்டாவிற்கு  வயது வரம்பை மீறி அவரது தியாகத்திற்கு பரிசாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுத்தார்  . அவரது பதவி ஏற்பு விழாவிலே அவர் தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானார் . சுமார் பதினோரு முறை தாக்கப்பட்டு அனைத்திலும் தப்பி பிழைத்தவர்


அவரை புதுவைக்கு அழைத்து விழா என்றதும் வைத்திலிங்கம் பல வித அரசியல் நகர்வுக்கு திட்டமிட்டார் . அதுபற்றி அவர் விரிவாக என்னிடம் பேசிக்கொண்டேயிருந்தார் , தில்லியின் புறப்படும் நாள் நான் மிக உற்சாகமாக இருந்தேன் , ஒரு பெரிய சிக்கலிலிருந்து வெளிவந்த விடுதலை உணர்வு . வெகு நாட்களாக மனதை அழுத்திக்கிடந்த மேகம் விலகியது போல  ஆறுதலாக இருந்தது . ஆனால் என் அரசியல் வாழ்வை அது புரட்டிபோடப்போகிறது என் நான் உணராதது வினோதம் . தலைமைக்கு உதவுவதாக வந்து இதில் சிக்கிக் கொண்ட என் ஊழின் திட்டம் பிறிதொன்றாக இருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்