https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 13 ஜூலை, 2017

அடையாளமாதல் - 124 *அறைகூவலை நோக்கி *.

ஶ்ரீ:





*அறைகூவலை நோக்கி *
இயக்க பின்புலம் - 51
அரசியல் களம் - 36



நீண்ட நேரம் மூளையை சொடுக்கிய விளையாட்டு முடிவிற்கு வந்தது. வருவதை எதிர்கொள்ளும் பக்குவமும் அதை கடந்து செல்லுதலுமே இப்போதைக்கானது.

நான் விமானத்தில் செல்வதை காட்டிலும் அனைவருடன் ரயிலில் சென்றால் , நிலவும் குறைந்தபட்ச முரணையாவது கலையலாம் என தோன்றியது . ஆனால் அத்தால் எந்த பயனும் விளையப்போவதில்லை . கமலக்கண்ணனும் முருகேசனும் ஏறக்குறைய எனக்கு எதிரான நிலைக்கு கைகோர்த்துவிட்டிருப்பார்கள் . முதல்வருடன் பயனிக்க இருக்கும் செய்தி இந்நேரம் அவர்களை உளமெரியச்செய்திருக்கும் . இரண்டு இரவு ,ஒரு பகல் தூரம் பயணம் , அவர்களுடன் பேச நிறைய நேரம் இருக்கும். அது அதே அளவிற்கு எதிர்பாராத எல்லைக்கு இட்டு செல்லும் வாய்ப்புகளும் அதிகம் . அவர்கள் உன்னை முற்றாக ஒதுக்கினார்களேயானால் , அது மனவலி மிகுந்ததாக இருக்கும் . தில்லியில் அதிலிருந்து வெளிவருவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்காமல் காரியங்கள் வேகவேகமாக நடக்கும்போது ,விபரீதமான மனவழுத்தத்திற்கு ஆளாக நேரலாம் . அவர்களை விலக்கி விமானத்தில் செல்வதுதான் எல்லாவற்றிக்குமானது . மேலும் நகர்த்தல்களை நிகழ்த்துபவர்கள் மத்தியில் இருப்பதுதான் உனக்கு சரியானது . நண்பர்களை பாண்டி சென்றுகூட சமாதானப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.ஆனால் இது அப்படியல்ல .

 அடுத்த மூன்று நாட்களுக்கு தேவையான முடிவுகள் எட்டப்பட்டதாக தோன்றியதும், நிம்மதியாக பூஜை அறைக்கு சென்று சிறிதுநேர தியானத்திற்கு பின் உறங்கச்சென்றேன் .

அன்றுக் காலை வந்த முதல் செய்தி பாலனிடமிருந்து .மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டால் மாலை 4:00 விமனப்பயணத்திற்கு சரியாக இருக்கும் எனவே -12:30 மணிக்கெல்லாம் பாலன் அவரது வீட்டிற்கு வர சொல்லியிருந்தார் , அங்கிருந்து ஒன்றாக முதல்வரின் இல்லத்திற்கு பின் , அங்கிருந்து விமான நிலையம் செல்லலாம் என . நான் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யத்துவங்கினேன் . ஒரு வாரத்திற்கு தேவையானது எடுத்துவைத்துக்கொண்டேன்மிக தாமதமாக காலை உணவு எடுத்துக்கொண்டதால் மத்திய உணவை வழியில் எங்காவது பார்த்துக்கொள்ளலாம் என நன்பகல் 12.00 மணிக்கே பாலன் வீட்டை அடைந்தேன் . அவர் மத்திய உணவு எடுத்துக்கொண்டிருந்தார் . என்னை பார்த்ததும் சாப்பிட்டதை விசாரிக்க நான் வழியில் பார்த்துக்கொள்கிறேன் என்றதும் . அவர் முதல்வரின் அணிவகுப்பில் வண்டிகளை எங்கும் நிறுத்தும் வழமையில்லை உனக்கு தெரியாதா,என்று கேட்டுவிட்டு அவரது மனைவியை கூப்பிட்டு எனக்கும் சாப்பாடு இருக்குமா என்றார்.

அவரது மனைவி எனக்கு ஆவலுடன் இலை போட்டார், எனக்கு சங்கோஜமாக இருந்ததால் மறுத்துப்பார்த்தேன் . அவர் உறுதியாக இருந்தார் . பாலன் எனக்கு தெரிந்து யாரையும் ஒரு உபச்சாரத்திற்குகூட சாப்பிட சொல்ல மாட்டார் . இரவில் அவரை தனிமையில் பேசுவதற்கு சென்ற இத்தனை வருடங்களில் பலர் பார்க்க வெளியில் அமர்ந்து சப்பாத்தி சாம்பார் என சாப்பிடுவது கூட , சில சமயங்களில் சர்ச்சையானதுண்டு . நான் சாப்பிட்டு முடித்து இலை எடுக்க போனபோது அவரது மனைவி அன்புடன் வேண்டாம் என்றார் சரியாக 12:30 மணிக்கு என்காரில் முதல்வர் இல்லத்திற்கு வந்து சேர்ந்தோம் . அவர் சில அரசாங்க காரியமாக பேசிக்கொண்டிருக்க காலம் கடந்த படி இருந்தது 4:00 மணி பயணத்திற்கு 1:00 மணிக்கு கிளம்புவதே தாமதம் மணி 1:30 ஆகிவிட்டது . ஓர் விதமான நெருடலுடன் காத்திருக்க. வைத்திலிங்கம் வெளியே வந்தார் . என்னைப்பார்த்ததும் அளவான புன்னகை , கிளம்பலாம் என்றதும் நான்கு ஐந்து கார்கள் ,முன்னால் பாதுகாப்பிற்க்கான வண்டி .சிறிது நேரத்தில் பயணம் துவங்கியது . எனக்கு அரசாங்க கார்களின் அணிவகுப்பில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை . உற்சாகமாகவே இருந்தது . முதல்வர் அவரது வண்டியில் ஜீவரத்தின உடையார் ஏறிக்கொண்டார் .நானும் பாலனும் என்வண்டியில் வேறு சில அரசாங்க அதிகாரிகள் முதல்வரின் செயலர் தனி வண்டி .இப்படி.

முதல்வரின் தணிப்பாதுகாப்பு அதிகாரி எங்கள் வண்டியில் ஏறிக்கொண்டதால் வழிமுழுக்க அவர்கள் போக்குவரத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதும், புதுவைத்தாண்டியதும் தமிழக காவல்துறை பொறுப்பேறர்பதும் ,அவர்கள் எல்லை வந்ததும் விலகி அடுத்த எல்லையில் இன்னொரு வண்டி ,அதை கைமாற்றிக்கொள்வதும் சில மணித்துளிகளில் முன்னே சென்ற பாதுகாப்பு வண்டி பொறுப்பேற்பதும் ,இறங்கி அரசு மரியாதையாக வழிவிடுவதுமாக . புது அனுபவமாக இருந்தது . இதற்கிடையே சென்னை விமானநிலைய பாதுகாப்பு அறைக்கு புதுவை முதல்வர் கிளம்பிவிட்டதையும் , சிறிது தாமதம் ஏற்படலாம் என்றதும் . விமானத்தை அதுவரை நிறுத்திவைக்கும் உத்தரவை அவர் தன் கீழுள்ள அதிகாரிகளுக்கு இடுவதை வயர்லெஸ் மூலமே கேட்க முடிந்தது . அதிகாரம் - அது முற்றிலும் வேறு ஒரு உலகை பிரதிபலிப்புகள்  அங்கு அனுசரிக்கப்படும் முறைமைகள் வேறுவகையானவைகள் . நான் இங்கு இன்னும் சந்திக்க இருக்கும் கசப்புகளை மகிழ்வுகளும் அரசியலில் மட்டுமே கணக்கிடைப்பவைகள் . நாங்கள் சென்னை விமான நிலையத்தை அடையும்போது மாலை சரியாக 3:55 . என்னால் இதை நம்ப முடியவில்லை அதன் சீரான வேகத்தால் இதனை சீக்கிரம் அடைந்திருக்கமுடியாது. அது எந்த சிக்னலுக்கும் நிற்கவில்லை , மேலும் போக்குவரத்து நெரிசலில் சிக்காது காவல் துறையினர் அதை ஒருங்கியிருந்தார்கள்.


விமானம் புறப்படத்தயார் நிலையில் இருந்தது , வண்டிகள்  தனி வழியாக , விமான ஓடுதளத்தை நோக்கி வேகமெடுக்க விமானநிலைய கட்டுப்பாட்டறை வண்டி நாங்கள் எங்கும் சிக்காதபடி நெறிப்படுத்தினார்கள் . நாங்கள் விமானத்தில் படிகள் வழியாக உள்புகும் நேரத்திற்குள் எங்களுடைய அனைத்து பெட்டிகளின் விமான வயிற்றுப்பகுதியில் ஏறியபடி இருப்பதை பார்க்கமுடிந்தது . விமானத்தில் முன் பகுதியில் எங்களுக்கு இருக்கை ஒருங்கியிருந்தது . பிஸ்னெஸ் கிளாஸ் என்பதால் சீட்டுகள் அகலமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது . நான் இதற்க்கு முன்னர் சில முறை விமானத்தில் பயணம் செய்திருந்த போதிலும் . இது நினைவை விட்டு அகலாத ஓர் அனுபவமாகவே இன்னும் இருக்கிறது . ஏன் அரசியல் வாதிகள் பதவியில் நீடிக்க எந்த அளவிற்கும் போகிறார்கள் என இப்போது புரிகிறது . இவை அரசாங்க நெறிகளில் வருவதால் . பெரும் கோடீஸ்வரர்களுக்குக்கூட . இந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை . இந்த அதிகாரத்தின் நஞ்சு உடலெங்கும் பரவுவதை நான் சிறிது சிறிதாக உணரலானேன் . அரசியல் அதிகாரம் அழைக்கிறது , சென்று பெறுவதைத் தவிர்க்க இயலாது . அது காட்டிய பாதைகளில் சென்று கொண்டிருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...