https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 9 ஜூலை, 2017

அடையாளமாதல் - 121 *நிஜத்தின் நெருடல் * .

ஶ்ரீ:

*நிஜத்தின் நெருடல் *


இயக்க பின்புலம் - 48
அரசியல் களம் - 35




நான் பாலனை சென்று பார்பதை தவிற்த்தேன் . அது நிர்பந்தம் காரணமாக  வைத்திலிங்கத்தை சந்திக்கும் வாய்ப்பை கொடுத்துவிடலாம் என்பதால் . திங்கட்கிழமை மாலை எனக்கு பாலனிடமிருந்து அழைப்புவந்தது . முதல்வரின் செயலாளரை உடனே சந்திக்க சொல்லி . நான் சங்கடத்துடன் செயலாளரை சென்று சந்தித்தேன் அவர் என்னிடம் இன்னும் இரண்டு நாளில் தில்லி செல்லும்படி இருக்கும் , ஒரு குழுவாக நிறையபேர் இங்கிருந்து ரயிலில் கிளம்புகிறார்கள் நீ அவர்களுடன் வருகிறாயா எனக்கேட்டர் . நான் அப்படியே வருகிறேன் என்றேன் . ஆனால் அங்கிருந்து  இருந்த முதல்வரின் தனி அதிகாரி அது சரிவராது முதல்வர் இவரையும் ஜீவரத்திண உடையார் பாலன் அணைவருக்கும்  விமானத்தில் செல்வதற்கு ஏற்பாடு செய்யச்சொன்னார் என்றார்.அனைவருக்கும் அரசாங்க செலவிக் பயணசீட்டு எப்படியெடுக்கமுடியும் என்றார் , எனக்கு வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன் .அப்போது அவர் சிறிது யோசனைக்குப்பின் இல்லை அது சரியாகவராது நேரம் நாள் ஏதாவது மாறினால் குழப்பம் வந்துவிடும் நாங்கள் எடுத்துவிடுகிறோம் நீ அதற்கான தொகையை ட்ராவல் ஏஜெண்டிடம் கொடுத்துவிடு என்றார்

வீடு வந்தபோது நான் ஏற்பாடு செய்திருந்த பிரமுகர்களின் சிலர் எனக்கென தேடிவந்தவரகள் ,வீட்டில் நான் இல்லை என்றதும் அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள் . நான் இன்னும் அப்பாவிடம் இதுபற்றி சொல்லவில்லை . அப்பா மிக நாகரீகமாக அவருக்கும் தெரியுமென்பது போல பேசிக்கொண்டிருந்திருப்பார் என நினைக்கிறேன் . வந்திருந்தவர்கள் என்னிடம்முதல்வரை எப்போது பார்க்கலாம்என்றவுடன், நான் சங்கடத்துடன் தில்லிப் பயண ஏற்பாடுகளை பற்றி சொன்னதும், எனக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பிகிச்சென்றனர் . அப்பா ஒன்னும் பேசாதே எழுந்து மாடிக்கு சென்றுவிட்டார் . அவருக்கு உடம்பு ரொம்ப மோசமாகி சென்னை மலர் மருத்துவமணியில் இருந்து திரும்பி அநேகமாக ஒருவருடம் இருக்கலாம் . நான் அவரது அறைக்கு சென்றபோது ஏதோ வாசித்துக்கொண்டிடுந்தார்

நான் போய் நின்றதும்என்ன தில்லிக்காஎன்றார் . நான் எல்லாவற்றையும் விபரமாக  எனக்கிருக்கும் நிர்பந்தம் உள்பட சொன்னேன் . அவர்இது அரசியல் எனக்கு கருத்து சொல்ல ஒன்றுமில்லை . உனக்கு எது சரியாக படுகிறதோ அதை செய்என்றார் . நான் நிம்மதி பெருமூச்சுடன் சாப்பிட கீழே வந்தேன் . அதற்குள் கட்சியிலிருந்தோ யாரோ வந்திருக்கிறார்கள் என தங்கை சொன்னாள் 

நல்லவேளையாக பூங்காவனம் வந்திருந்தார் . அவரைபற்றி இதுவரை எதையும் சரியாக பதியவில்லை. என் அரசியில் அதி முக்கிய தருணத்தின் ஒரு சாட்சியாக நிற்பவர். பூங்காவனம் ஒரு அலாதியான குணாதிசியம் உள்ளவர், குள்ளமான உருவம் வயது ஐம்பதுகளின் இறுதியில் இருந்தார். இதுவே ஓர் தமாஷ் . இயக்க சட்டப்படி முப்பத்தைந்து வயதிற்குமேல் உள்ளவர்கள் இதில் நீடிக்கமுடியாது . தலைவர்களாக உள்ளவர்களுக்கு மட்டும் ஐந்து வருடம் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது . வடஇந்தியாவில் வயதைப்பற்றிய கேள்விமுறைகள் எதுவும் கிடையாது . பாலன் நாற்பதுகளின் இறுதியில் இருந்ததால் தான் அவரது ராஜினாமாவிற்கு நீட்டிப்பை பற்றிய சிக்கல் எழுந்தது

பூங்காவனம் முதிர் வழுக்கையும் நரைமுடியுமாக கதர் சட்டை கலர் பேண்டு எப்போதும் ஒரு ஜோல்னா பைசகிதமாக, மிகவும்  வினயமாக பழகும் சுபாவமுள்ளவர் . எந்த வேலையும் தேடிக்கொள்ளாது ,மிக திட்டமிட்ட குடும்பமாக வாழ்வியலை கொண்டவர் . ஒரு வருடத்தை நான்காக பறித்து மூன்று மூன்று மாதங்களாக சில வேலைகளை செய்வதனூடாக தன் வாழ்க்கை அற்புதமாக அமைத்துக்கொண்டவர் .சாப்ட்பால் அஸோஸியேஷன் செயலராக விளையாட்டு வீரர்களை நாட்டின் பல பாகங்களுக்கு அழைத்து செல்வதும் , காப்பிய கழக செயலர் என இலக்கிய விழாக்கள் நடத்துவது , மூன்றுமாதம் அரசியல் மூன்று மாதம் பட்டாசுக்கடை நடத்துவது இதுதான் அவரது வருடாந்திர வேலைகள் . இரண்டு பெண் ஒருப்பையன் அனைவரும் சிறுவர்கள் . இதில் பாட்டாசுக்கடையில் கிடைக்கும் நல்ல வருமானத்தை கொண்டு கௌரவமாக குடும்பம் நடத்தினார். அடுத்த வருட குடும்ப செலவிற்கு அடுத்த தீபாவளி . அவரின் கைசெலவிற்கு மற்ற மூன்றிலிருந்தும் ஏதோ ஒருவகையில் காசுப்பார்த்தார் . பலர் அவரை பலவாறு குறை சொன்னாலும் . பெரிய ஏமாற்றுக்கார்ராகவோ தப்பான நபராகவே என்னால் அவரை இதுவரையிலும்கூட பார்க்க இயலவில்லை . எனக்கு மிக வேண்டியவராகவே எப்போதும் இருந்துவந்தரிக்கின்றார்.

அவரின் பிள்ளைகள் நல்ல மதிநுட்பம் மிக்கவர்களாக உணர்ந்திருக்கிறேன் . மிக சந்தோஷமான குடும்பம். என்னிடம் ஏதற்காகவும் கைநீட்டியதில்லை . எல்லாவற்றிலும் ஒரு கோட்பாடுண்டு அவருக்கு . அந்த நேரத்தில் அவர் வந்திருந்தது மிக ஆறுதலாக இருந்தது . எனக்கு யாரிடமாவது இதைப்பற்றி பேச வேண்டும் . வழக்கமான குழுதான் இப்பொது தீர்மானவேலையில் ஒன்றிணைந்து செயல்பட்டுக்கொண்டிடுக்கிறார்கள் . அவர்களிடம் பகிர்வது மற்றுமொரு விவாதம்போலாகிவிடும் , சரியாக வராது, தவிரவும் அவர்களில் சிலரை அழைத்து பேசுவது மற்றவர்களுக்கு வருத்தமளிப்பதாகவும் , தனிக்கூட்டு சதி என்றுகூட சந்தேகிக்க வாய்ப்புள்ளது . குழுவாகக்கூட்டி பேசுவதை காட்டிலும் அனர்த்தம் பிறிதொன்றில்லை .


பூங்காவனம் மிகுந்த சந்தோஷத்துடன் என்னைத் தழுவி தன்னுடைய வாழ்த்தை சொன்னார் . நீண்ட நேரம் பொதுவான அரசியல் சம்பந்தமாக பேசியிருந்துவிட்டு ,நான் மெள்ள என் மனச்சிக்கலை அவரிடம் சொன்னேன், யாருடனும் பகிர்ந்துக்கொள்ளவேண்டாம் என்கிற அடைப்புக்குறியுடன் . எக்கோணத்தில் பார்த்தாலும் இதில் உள்ள ஒரு சிறு இடக்கரடக்கல் ஒரு வீர்யமுள்ள விசையைப்போல எதையும் எதனுடனும் பொருந்த விடாது செய்வதின் பின்னனியை விளக்க விளக்க பூங்காவனம் தன் நிலையழிதலை உணரத்தொடங்கினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்