https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 20 ஜூலை, 2017

அடையாளமாதல் - 133 * தருணங்களின் இணைவு *

ஶ்ரீ:



பதிவு: 133/ 206 தேதி:  : 20 ஜூலை 20017


* தருணங்களின் இணைவு *



இயக்க பின்புலம் - 59
அரசியல் களம் - 39



புதுவைக்கு திரும்பும் போது ,சேகரிடம் நான் வேறெதுவும் பேசவில்லை , அவர் என்னிடம் சென்னையில் வேறு வேலை இருக்கிறதா . இருந்தால் முடித்துவிட்டு செல்லலாம் என்றார்  . எனக்கு ஒரு வேலைதான் , அது முடிந்தது . அதனால் விளைவதைப்பற்றிய கவலை என்னை சூழாது என்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் . நான் எனக்கு பெரிய எதிரியாக கருதுவது சதா எனக்குள் ஒன்று  எனக்கெதிராக எழுந்து நான் பிழை பிழையென என எதிர்த்து விவாதிப்பது . நான் இந்த உலகில் ஒன்றை வெறுப்பதென்றால்  அது  இதைத்தான் . யதார்த்தத்தில் நான் நிறைய மனிதர்களை பார்த்திருக்கிறேன் . சோராது ஓடிக்கொண்டிருப்பார்கள். வெற்றி தம் முயற்ச்சியில் விளைவது என்று  , ஆனால் அதற்கு காலம் துணைக்கவேண்டும் . என் வாழ்க்கையில் அநேகம் பார்த்தாகிவிட்டது . எதனிடமும் மன்றாடுவது என்னால் முடியாது என்றானபின் , மனிதர்கள் இதில் எங்கு வருகிறார்கள்  . இது எனது  அகம்பாவமல்ல .

தெரிந்து ஒரு தவறு ஒருவருக்கு நான் செய்ததில்லை . நான் என்னையறியாத முயற்சியில் ,அதற்கு நான் காரணமில்லை அல்லது தெரிந்து நடக்கவில்லை என நான் சொல்வதை  , கேட்பவர் மறுப்பாரேயானால் . அவரிடம் எக்காலத்தும்  நான் மன்றாடுவதில்லை .உன் கோணத்தில் நான் குற்றவாளி எனில் நீ அங்கேயே இரு . என்னுலகில்   அவருக்கு இடமில்லை . ஒருநாள் அதன் உண்மை தெரியவரும் , அது வெளிவராமலேயே போனால் கூட , யார் என்ன செய்ய இயலும் , ஊழ் அதை ஏற்றுக்கொண்டு வாழுதலே  முறை .அவ்வளவே . நான் ப்ரபத்தியில் நம்பிக்கை உள்ளவன் . எனினும்  விண்ணுலக தெய்வத்திடமே நான்  மன்றாடுவதில்லை எனும்போது மனிதர்களிடம் அதை நான் யோசிக்கப்போவதில்லை . “கிருஷ்ணப்பிரேமி"   நான் மிக உயர்வாய் மதிக்கும் ஆன்மீகப்பெரியவர் .அவர் சொல்வார்பக்தியைகூட எதற்கும் பணியாது கம்பீரமாய் பண்ணவேண்டும்” என்று  

என்னால் ஆனதை முயற்சித்துவிட்டேன் . இதன் பலன் அதன் ஊழின் படி நடக்கும் . ஒருவித விரக்தி மனப்பான்மையுடன் புதுவை வந்து சேந்தேன் . மூப்பனார் வராமல் போனால் யார் என்னை என்ன கேட்டுவிட முடியும் , இதை சாதித்தேயாக வேண்டும் என யாரும் எனக்கு கட்டளை இட முடியாது . நான் அதற்கு காட்டுப்படவேண்டிய அவசியத்தில் இல்லை . புதுவை வந்து சேரும் வரை சேகர் என்னிடம் ஏதும் பேசவில்லை , எனது மனநிலையை படித்துவிட்டிருப்பார் என் நினைக்கிறேன்அவர் சொன்ன இடத்தில் அவரை இறக்கி விட்டுவிட்டு நான் வீடு வந்து சேர்த்தேன் . பலவித மனோநிலை பலவித நிகழ்வுகள் என்னுள் நிழலாடியது . என்னத்தேடி பாலன் தூது குழு வந்தது , நான் தில்லி சென்றது. பாலனுக்கு நீட்டிப்பு கிடைத்தது , இவை எல்லாவற்றையும் தாண்டி பாலனின் உதாசீன மனோநிலை . என்னை கடுமையாக பாதித்தது .கொந்தளிப்பாகவே அன்று முழுவதும் கழிந்தது


என்னுடனான பாலனின் அணுகுமுறை திடீரென மாறக்காரணமென்ன , நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதற்கு என்மனசாட்சி பிரமாணம் . பின் பாலனின் பார்வை மாறி விட்டதா . என்னவாக இருக்கும் .என்னக்காரணம். இருந்தால் இரண்டு . ஒன்று; ஏதோ  நான் செய்தது அவர் பார்வையில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிடுக்கலாம் . அது என்னது எனத்தெரித்தால் அன்றி நான் செய்யக்கூடுவது ஒன்றில்லை, இரண்டாவது : எல்லாரிடமும் ஒரு காலத்தே அவருக்கு வரும் உதாசீன மனப்பான்மை என்மீதும் வந்திருக்க வேண்டும் . எல்லாவற்றையும் விடுத்து முழு மனதுடன் இரவு பகல் பாராது உழைத்துக்கொண்டிருக்கும் என்மீது உதாசீனமான எண்ணம் இருக்கூடும் என்பதே என்னை பற்றி எரியச்செய்தது  . விழா முடியட்டும் , இதற்கு ஒரு முடிவு கட்டியாகவேண்டும் மனம் கொந்தளித்தபடி இருந்தது . உறக்கமில்லாத இரவாக அன்று கடந்து சென்றது.


அடுத்த நாள் காலை 6:00 மணி இருக்கும், தங்கை எனக்கு தொலைபேசி அழைப்பு,யாரோ "சேகர்" என்றார் . நேற்றிரவு துக்கமின்மை நிறைய ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தது. சோர்வாக   தூக்கம் இன்னும் மிச்சமிருக்கிறது. ஒல்லி சேகராக இருக்கும் ,இவன் ஏன் என்னை காலையிலேயே அழைக்கிறான் , ஏழும்போதே எரிச்சலுடன் , சென்று அதே மன நிலையில்யார்என்றதும் . இது சந்திரசேகர் என்றார்  . நான் சட்டென புலண்களை அடைந்து கூர்ந்தேன் . “இன்று  காலை ஏதாவது வேலை இருக்கிறதா , "சின்னவர்" நேற்று இரவு  கூப்பிட்டிருந்தார் .மதியம் 11:00 மணிக்கு கும்பகோணத்தில் இருக்க வேண்டும்என்றார் . நான் சட்டென கலைந்து . “ ஏதாவது விசேஷமாக உண்டா"  என்றேன் ஒரு சிறிய ஆவலில் . சேகரும் தனக்கும் புரியவில்லை , சின்னவர் எதையும் தொலைபேசியில் சொல்வதில்லை  .நான்உங்களை வரச்சொன்னாராஎன்றதும்இல்லையில்லை உங்களையும் அழைத்துவரச்சொன்னர்என்றார் . பழைய தேக்க  உணர்வுகள் காணாமலாகிவிட , காலை 7:30 மணிக்கெல்லாம் புறப்பட்டோம் 

என்னையும் வரச்சொன்னார் என்பது பயணத்திற்கு வேகத்தையும் , உள்ளுக்குள் சிறு நெருடலையும் கொடுத்தது . நான்பேசிய மொழியை அவர்களால் ஜீரணிக்கவியலாது போயிருக்கலாம் .ஆனால்  நான், நிஜம். முறைமை சொல்லெடுத்து பேசுவது அந்த வயதில் எனக்கு  எண்ணக்கூடியதில்லை . மன சமநிலையற்று உழன்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்மூச்சு முட்டி சுவாசிக்க முடியாததை போல, காற்றை எதிர்ப்பார்த்தவன் , எனக்கு எங்காவது ஒரு காற்றவாரியாவது திறக்க வேண்டிய நிர்பந்தம்

சேகர் என்னிடம் மிக ஜாக்ரதையாக சொல்லெண்ணிப் பேசத்துவங்கினார் . அன்று சொன்னதில் தவறென ஒன்றில்லை ,ஜமீன்தார் பாணி அரசியலில் இருந்து அவர்கள் இன்னும் வெளிவரவில்லை , எப்படி எடுத்துக்கொண்டார்கள் என தெரியவில்லை என்றவுடன் , மெல்லிய சீற்றமாக என்னுள் அச்சொல் சுழலத்துவங்கியது . என் சிக்கலே இதுதான் அப்படிப்பட்ட தருணங்கள் . சரியான பேசுமொழியோ , பொருளோ கிடைத்து ,கேட்பவர் அத்தனையையும் தவறவிடாது எதிர் வாதம் வைக்கக்கூடியவராகவும் இருந்தால், ஒரு நல்ல சமநிலையுடைய கலவையைப் போல, அது ஒரு உற்சாகம் போல . மனம்  புரண்டபடி இருக்கும் .


நான் நிதானமாக என்னுடைய எண்ணத்தை வைக்கத்துவங்கினேன் மெள்ள என்  உஷ்ணத்தை வெளிப்படுத்தும் சாளரம் திறந்தது . எனக்கு இப்போது கருத்துக்களால் அவரை குதறுவது நோக்கமல்ல , ஆனால் என்னை தொகுத்துக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பமாக ,அதை பார்த்தேன் , இந்த சேகர் மொண்ணையல்ல . அவர் எங்கள் அரசியலிலும்  இல்லை ,நண்பர் மாத்திரமே . மேலும் ஒற்றைப்படையான கருத்துக்களை வளர்த்துக் கட்டிக்கொண்டு அதன் நடுவில் வாழும் நத்தையைப் போல ஊரும் பிறவியல்ல , என்பது எனக்கு பேசும்  விடுதலையை தந்தது .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்