https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 19 ஜூலை, 2017

வெளியை நிறைத்த சொற்கள்.

ஶ்ரீ:

பதிவு :205 தேதி :-19 ஜூலை 2017


வெளியை நிறைத்த சொற்கள். 





"கோருவன அனைத்தையும் அளிக்கும் தெய்வம் அது.
ஆனால் முழுமுதல் தெய்வம் அல்ல.
பெருவெளியின் வெறுமையை நிறைத்துள்ளது
சொல்லப்படாத சொல்.
அச்சொல்லில் ஒரு துளியை அள்ளி
பொருளும் உயிருமாக்கி அளிக்கின்றனர்
பிரம்மனும் விண்ணோனும் சிவனும் அன்னையும். 
கலியால் அவ்வண்ணம் சொல்லள்ள இயலாது.
இங்குள்ள ஒன்றை எடுத்து உருமாற்றி
நமக்களிக்கவே இயலும்.
துலாவின் மறுதட்டிலும்
நம்முடையதே வைக்கப்படும்”

பெருந்தெய்வங்கள் அருந்தவம் பொலிந்த பின்னரே
கனிபவை.
அத்துடன் நம் ஊழும்
அங்கு வந்து கூர்கொண்டிருக்கவேண்டும்.
பிராபதிக்கும்  பொருந்தும்  போலும்  இது .

அடங்காத பிரமிப்பை ஏற்படுத்திய சொற்கள் ஆப்தவாக்கியம் போல தொடர்ந்து தாக்கிய படியே இருக்கிறது.கரு வண்டு போல பக்கத்தில் பறந்தபடியே இருக்கிறது சற்று அஞ்சி கையால் விரட்டினால் இன்னும் ஆக்ரோஷமாக அனுகி வருவதாக படுகிறது. என்ன வேண்டுமோ செய்துகொள் எனக் கண்களை மூடிக்கொண்டால் அது விலகிவிடுகிறது . ஆனால் அவ்வண்ணம் இப்போது செய்ய இயலாது . எனக்கு இது இன்னும் நான் எதிர்நோக்கும் புரிதலை நிகழ்த மறுக்கிறது 
அந்தப் புரிதலின் வாசலில் கைகூப்பி நிற்கிறேன் . பலவற்றை வாசிக்கும்போதே கடந்து செல்வது போலே இதையும் கடந்து தொலைத்திருக்கலாம் , ஆனால் இது கடந்து வைப்பதை விட்டு , உருக்கி எடுக்கிறது , ஏதோ உணர்ந்தது போல உணர்ந்ததைப் புரிதலுக்கு எடுக்க படாதபாடு படுகிறேன். 
இந்தமூன்றும் வாசித்த நாளாய மனதில் தங்கியவை. சொல்லப்படாத சொல் பெறுவெளியை நிறைத்துள்ளது அதிலிருந்து ஒரு சிறு துளியை அள்ளி பொருளும் உயிர்காக்கி அளிக்கின்றன என்கிற தகவல் "புரிதலின் " வாசில் காத்துக்கிடக்கிறேன் . இந்த விதைப்போல காய்ந்து கிடக்கிறேன் ஒருசிறு துளி நீருக்காக , நான் ஊற்றுவதால் அவை முளைத்து விடுவதில்லை பேரளுளெனும் மாமழையின் சிறு துளி அதை விரியச்செய்து விடும் . வெண்முரசு ஒருநாள் சிறு மழையாக பெய்துவிடும் என்கிற நம்பியிருக்கிறேன்.
ஆணவத்தை அழியென ஏன் விண்ணுலக தெய்வங்கள் முதல் ஞானியர்வரை மனித்திரளை நோக்கி அறிவுறுத்தியபடி இருக்கிறார்கள் . நான் ஆணவத்துடன் திரிந்தால் இவர்களுக்கென்ன இழப்பு . வாழதலே உண்ணுவதும் உறங்குவதுமே அந்த ஆணத்தின் உந்துதலில் சிறு துளி தானே , 
ஆணவம் ஒரு உணர்வு மட்டிமே கருத்தல்ல என்கிறது நீர்கோலம் கருத்திற்கு விளக்கமும் மாற்றும் உண்டு என்பதால் அது உரையாடக்கூடும் என்பதாலா . உணர்வுகளை கருத்துக்களாக்கினால் அந்த உண்மை புரிகிறது . ஆணவமென்பது மூடிய செவி புதுக்கருத்துக்களை நுழையவிடுவதில்லை .
புரிதலே ஞானமெனப்படுகிறது . இப்புவியில் சொல்லப்பட்டவை கேட்பவர் தன் முயற்சின் பயனாக அடைவது . பெறுவெளியில் நிறைத்துக்கிடக்கும் சொற்கள் ஆழ்மனப்படிவத்துடன் உரையாடுபவை சொல்லப்பட்ட நொடியில் அதன் பலத்தினாலேயே புரிதலை கொடுத்துவிடுகின்றன போலும் ஒரு மின்னலின் ஒளியென , வானம் கிழிந்து அதற்கப்பாலுள்ள பெறுவெளிச்சத்தை கணம் காட்டி பின் பதறி சரிசெய்து விடுகிறது .சிறு நொடிப்பொழுதில் மின்னி பருபொருளை காட்டி மறைக்கின்றன .
இன்னும் தவித்தபடி இங்கேயே கிடக்கிறேன் , கைகொடுப்பாருளரோ? இல்லை திரு.முத்துலிங்கம் சொன்னது போல “எழுத்தாளர் எழுதாத ஒன்றைக் கண்டுபிடிப்பதே வாசகருக்கும், பத்திரிகைக்காரருக்கும் வேலையாயிற்று ” என்பது போலா?.........


கிருபாநி அரிகிரிஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்