https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 28 ஜூலை, 2017

அடையாளமாதல் - 141 * இடப்பிழை *

ஶ்ரீ:





பதிவு : 141 / 214      தேதி :- 28 ஜூலை 2017

* இடப்பிழை *


இயக்க பின்புலம் - 67
அரசியல் களம் - 40





வெகு கால என்னுள் விவாதங்களை ஏதோ ஒன்று நிகழ்தியபடியே இருந்தது ,அதன் பிரத்யேக கேள்விகள் அதற்கான சமாதானங்கள் என பேசி பேசி  ஒரு புள்ளியில், இதில் தொடர்ந்து கட்டப்பட்டிருப்பது வீண் என தோன்றியது. என்னை கலைத்துக்கொள்ள  என் தொழிலில் மும்முரமாக இருக்க துவங்கினேன். என் பிற வேலைகளில் ஏற்பட்ட ஈடுபாடு ஏறக்குறைய நடந்தவைகளை மறக்கடித்தது .முன்பே இதே மனநிலைக்கு வந்திருந்த போதுதான் பாலனின் தூத்துக்குழு என்னை சந்தித்தது . இது போன்ற தீவிர சிந்தனைக்கு உள்ளானதால், மறுபடி இதலிருந்து வெளிவர நிறைய நேரம் தேவைப்படவில்லை . முழுவதுமாக விடுபட இருந்த நேரத்தில்தான் ,கனகராஜ் சேகர் என்னை சந்தித்து சொன்னது என்னை பற்றியெரிய செய்தது, நான் என்னிடம் சொல்லிக்கொண்ட  எந்த சமாதானமும் செல்லுபடியாவில்லை, எண்ணி எண்ணி என்னை கட்டி வைத்திருந்த அனைத்து தடைகளைம் ஒரு நொடியில் தகர்ந்து போனது ! ஊழ் என்பதை தவிர பிறிதொன்றென தோன்றவில்லை . பாலன் அந்த விழாவிற்கு முன்பாக , அனைவரையும் அழைத்து நடத்திய கூடுகை நான் பாலனுக்கு பெரிய துரோகம் செய்ததாகவும் , இந்த விழா முடிந்த பிறகு நான் முற்றிலும் இளைஞர் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்படுவேன் என சொன்னார், என்றான்.


எனக்கு புரியவில்லை, நண்பர்களை விரோதிகளாக்கிக் கொள்வதில் என்ன லாபம்இது எந்த சூழ்தலில் சேர்த்தியென தெரியவில்லை . இதைப்போல எதோ ஒன்றை அவர் வெகு விரைவில் சொல்லப்போகிறார் என எனக்குள் ஒன்று தொடர்ந்து சொல்லியபடி இருந்தது . சேகர் எதையும் முன்னுரையுடன் பேசும் பழக்கமுள்ளவன். நான் அவனிடம்  "நீட்டி முழக்காது விஷயத்தை சொல்லு" , என்றதும். அவன் தயங்கி மெள்ள சொன்னது. நான் தில்லியில் இருந்தபோது , பாலனை திரும்பவும் தலைவராக கொண்டுவருவதற்கு எதிர்ப்பு செய்ததாகவும்  .இது சம்பந்தமாக வைத்திலிங்கத்துடன் பேச நேரம் கேட்டதாகம் , கமலக்கண்ணன் மற்றும் தாமோதரனிடம் பாலன் சொன்னதாக சொன்னான். .எனக்கு  இது ஒரு  இளிவரலைப்போலதான்  இருந்தது . நான்எப்போது சொன்னார்என்றதற்குதில்லியில் இருந்து வந்த சில நாட்களில், என்றான். முதலில் எனக்கு இவன் ஏதோ உளறுகிறான் என தோன்றியது , சிலமணி நேர விசாரிப்பில் அவன் சுழன்று சுழன்று  மறுபடியும் இங்கு தான் வந்து  நின்றான் . தில்லியில் வைத்திலிங்கத்தை சந்திக்க நேரம் கேட்டேன் இதுதான் அந்த ஒற்றைப்புள்ளி தகவல் , நான் சிரித்துக்கொண்டேன். சமீப கலாமாக கமலக்கண்ணன் , தாமோதரன் இருவரும் பாலனுக்கும் பெரிதும் முரண்பட்டிருந்தனர் ,அதை தில்லியிலும் பார்த்தேன்.சுப்பாராயன் குழு என்னை வந்து பார்த்தது, பேசியது அவர்களுக்கு ,நான் சொன்ன பதில் எல்லாம் அவர்களுக்கு தெரிந்திருந்தில்  ஆச்சர்யப்பட ஒன்றில்லை .அது ரகசியமாக நடந்த விஷயமுமில்லை . பலரை சந்தித்து அவர்கள் வாங்கிவந்த தீர்மானம் ஒன்றும் ரகசியமாக வாங்கப்பட்டதல்ல .ஒருநாள் இல்லை ஒருநாள் அது நிச்சயம் அவர்களை  பாலனுக்கு எதிராக திருப்பும்


கமலகண்ணனின் அனுகுமுறை பிறருக்கு அவர்மீது வருத்தமிருந்திருக்கலாம் , ஆனால் அதை கசப்பு எனகிற நிலைக்கு உந்தியது பாலனின் தொடர்  காழ்பு. இப்போது அதைப் போன்ற ஒன்றை என்மீது நிறுவப்பார்கிறார் .அதை பாலன் சொன்ன நேரம் அதுவும் புரிந்துக்கொள்ளக்கூடியதே. அவர்களை இந்த விழாவிற்கு ஈடுபாடுடன் செயல்படுத்த எதையாவது பேசியிருக்கலாம் . ஆனால் நான் என் முதல் விஷயமாக சொன்னது என்னை அவரின் அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது எனபது ஓர் அடிப்படை புரிதல் அதை அவர்கள் ஏற்றதினால்தான் நான் தில்லிக்கு வந்ததே


கனகராஜ் சேகர் சென்றவுடன் எனக்கு பல காலமாக பொருந்தாத பல முனைகளை இப்போது முயன்றால் இணைக்க முடியும் என தோன்றியது , நமக்குள் விவாதிக்கப்படுவது  ஒரு நதிப்பெருக்கு அந்த நீர் ஒழுக்குடன் பயணிக்கும்போது அது எங்கு கொண்டு விடுகிறதோ அதுவே அடையவேண்டிய இடம் . முன் முடிவெல்லாம் இதில் எடுக்க கூடாது. என் வழக்கமான சிந்தனைவழிமுறை இது. அது என்னை  ஒருபோதும் கைவிட்டதில்லை


பாலன் என்னை தனக்கு அடுத்த தலைவராக வர விழைந்தது , விடமுடியாத நிர்பந்தத்தின் அடிப்படையில் , அவர் பதவியை விட்டுவிலக்கியது சண்முகத்திற்கு நெருக்கடிகொடுக்க , பாலனின் அனைத்து நடவடிக்கைகளுக்கு  பின்னணியில் கிருஷ்ணமூர்த்தி இருந்திருக்க வேண்டும் .  இதைப்போன்ற   பெரிய முடிவெல்லாம் அவரால் சுயமாக  எடுக்கமுடியாது . அவர் ஒருபோதும் தன் பதவியை இழக்க விரும்பாதவர் . அநேகமாக இந்த நகர்வு இரண்டு கட்டத்தில்  நிகழ்ந்திருக்க வேண்டும்.


முதலில் , சண்முகத்திற்கு நெருக்கடி. அது அவரை பதவி விலக வைக்கும் என்கிற கணக்கு தவறிப்போனது . சண்முகம் என்ன காரணத்தினாலோ , தனது வழமையான அறத்தை மீறி இதில் நிலைக்க விரும்புகிறார்.இதற்கான தருக்க நியாயம் அவருக்கு கிடைத்திருக்கலாம் . தில்லில் அவரை மாற்றும் வாய்ப்பு மிகக்குறைவு என்கிற உண்மை அவர்களுக்கு அதன் இரண்டாம் கட்டத்தில் விளங்கியிருக்கலாம் . பாலன் எக்காலத்தும் இந்தபதவியை இழக்க விரும்பவில்லை , ஆனால் தில்லியில் எதிர்பாராத திருப்பமாக ஏதாவது நிகழ்ந்தால் மாற்று திட்டம் அவசியம் , என்கிறபோது தனக்கு பின் வரப்போகிறவர் ஒரு சப்பையாக இருக்க வேண்டும். நான் அவர் மீது மரியாதை உள்ளவன் , எனக்சிகாண சில சுந்தந்திரங்களை , எவர்பொருட்டும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்பது பாலனுக்கு தெரியும். நான் செய்ய விழைவதை தர்க்க ரீதியாக முன்னெடுத்து பேசவும் செய்வேன் . பாலனின் சங்கடம் இதுவாகக்கக்கூட இருந்திருக்கலாம்.

என்னை தேர்ந்தெடுக்க நேர்ந்தது, சிந்தனை போக்கில்  பிற்காலத்தில அவரை குழப்பியடித்தது  மிக பிழையான முடிவு . பாலன் இந்த முடிவிற்கு வருவதற்கு இரண்டு காரணம் இருக்கலாம் . பதவியை இழந்து தான் பைத்தியமாய் திரிந்ததாக அவரது வாக்குமூலம் தில்லியில் என்னிடம் சொன்னது . அது தான் அவரது உண்மைநிலை . பின் இந்த அரசூழ்ந்தலுக்கு பின் தன் குழுவின் பலகீனம் , தில்லியில் சண்முகம் பெரிய எதிர்ப்பை உருவாக்கி அதற்கு வேறு தலைவரை கொண்டு நிறுத்தியிருக்க வேண்டும் . இந்த சந்தர்ப்பத்தில் , சப்பையாக யாரையும் நிறுத்தமுடியாது . என்னை நிறுத்துவதுதான் அவருக்கு சரியானது , மேலும் கமலக்கண்ணனுக்கு தன்னளவில் பலகீனமானவர் , அமைப்பும் அவரை ஏற்றுக்கொள்ளாது . பின் எப்போதோ நான் அவருக்கு எதிரியாக திரும்பும் வாய்ப்பை அவர் எங்கோ நினைத்திருக்க வேண்டும். தனக்கு சரியானதை ஏன் விரோதமானதாக நினைக்கத்துவங்கினார் . யார் அவரை குழப்பியது. அந்த முடிவே நிர்பந்ததந்தின் அடிப்படையில் எழுந்ததாக இருந்தாலன்றி . இதைப்போல  முன்னுக்குபின் முரணாக ஒன்றை எடுக்கமுடியாது . நல்ல விஷயம் கூட வைத்த இடம் சரியில்லையெனில் அது உபயோகத்தில் வராது. பாலன் அதை உணரும்போது எல்லாம் கடந்துவிட்டிருந்தது 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்